சிக்கனம்

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

மின்சார தட்டுப்பாடு இன்று எல்லா ஊர்களிலும் மிகவும் பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கு மக்களாகிய நாமும் ஒரு விதத்தில் காரணம்தான். எதுவுமே அளவுக்கு அதிகமாய்( அனாவசியமாய்) பயன்படுத்தும்போது அதன் தேவை அதிகரித்துகொண்டேதான் போகும்.
நாம் ஓர் அறையில் அமர்ந்துகொண்டு இருப்போம். ஆனால் வேறு அறைகளில் லைட், ஃபேன், டிவி போன்றவை தேவையில்லாமல் உபயோகத்தில் இருக்கும். நம்முடய அலட்சிய போக்கினால் அதனுடய தேவை அதிகமாகிறது. அதன் பலன் இது போன்று மின்சார தட்டுப்பாடு
போன்ற வழிகளில் நாமே அதற்கு பலியாகிறோம்.

இது மட்டுல் அல்ல, நம் அலட்சிய மற்றும் அனாவசியத்தால் தண்ணீர், எரிபொருள் (கேஸ்) போண்றவற்றின் தேவைகளும் அதிகரித்துகொண்டேதான் போகிறது. இது நம்மை மட்டுமின்றி நம்முடய வருங்கால சந்ததிகளையும் பாதிக்கும். நம்மால் முடிந்த அளவு பணம், பொருள் மட்டும் அல்ல இது போண்ற விசயங்களையும் அவர்களுக்காக சேர்த்து வைப்போம்.

பணம், சேர்த்து வைத்தாலே இதை எல்லாம் வாங்கிக் கொள்ளலாம்தான். ஆனால், இன்று நம்மிடம் இருக்கும் வசதி நாளை நம்மிடம் இல்லாமல் போகலாம். எந்த ராஜவும் எல்லா நாளும் ராஜாவாக இருப்பதில்லை, எந்த பிச்சைக்காரனும் எல்லா நாளும் பிச்சைக்காரனாக இருபபதில்லை.

இல்லத்தரசிகளான நம் அனைவரினாலும் முடிந்த அளவு இது போன்ற விசயங்களில் எந்த அளவு சிக்கனம் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

- கேஸ் பயன்படுத்தும்போது, முடிந்தளவு சிறிய அடுப்பை பயன்படுத்தலாம்.
- ஒரு அறையில் வேலை முடிந்தவுடன் அந்த அறைகளில் உள்ள லைட், ஃபேன் போன்றவற்றை உடனுக்குடன் ஆஃப் செய்யும் பழக்கத்தை கொண்டுவரவேண்டும்.
- வீட்டில் இருக்கும் பெண்கள் முடிந்தபொழுது துணிகளை வாஸிங் மேஷினில் போடாமல் கைகளினாலே துவைக்கலாம். உடலுக்கும் நல்ல எக்சர்சைஸ்.
-பாத்திரம் கழுவும்போது அனைத்து பாத்திரங்களையும் தொய்த்துவிட்டு பின்னர் குழாயை திறந்துவிட்டு கழுவலாம். அவ்வாறில்லாமல் ஒவ்வொரு பாத்திரமாக தொய்த்து கழுவிக்கொண்டிருந்தால் தண்ணீர் நிறைய செலவாகும்.

இன்னும் பல பல சிக்கன தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்திகொண்டு நாமும் நம் சந்ததியினரும் பயன்பெறுவோம்.

சின்ன சின்ன அலட்சியங்கள் நாளடைவில் பெரிய பெரிய துயரங்கள்.

ஹாய் அமுதா நல்ல தகவல் நாம் சிக்கனம் செய்ய தொடங்கினால் எல்லாம் சேமிப்பாக மாறும் எதுல சிக்கனம் செய்யனுமோ அதுலதான் சிக்கனம் செய்யனும் சில பேர் சிக்கனம் எனும் பேரில் சாப்பட்டு விஷயத்தில் ரொம்ப சிக்கனமாக் இருப்பார்கள் அது தவறு இல்லையா எதையும் ரொம்ப வீணாக்க்காமல் சமைத்து சாப்பிடலாம் இன்னும் நிறைய சருத்துக்கள் சிக்கனத்தை பற்றி நம்து அனுபவமுள்ள தோழிகள் பகிர்ந்து கொண்டு எங்களை போன்ற இளைய தலைமுறைக்கு வழி வகுக்குமாறு கேட்டுகொள்கிறேன் எப்படி எல்லாம் சிக்கனம் செய்யலாம் எதுல செய்ய்லாம் ?சொல்லுங்கள் தோழிகளே

ஹாய் அமுதா..
உங்களோட தலைப்பு முற்றிலும் எல்லோரும் சிந்தித்து செயல்ப்பட வேண்டிய தலைப்பு தான்.சின்ன சின்ன விஷ்யமா இருந்தாலும் அதோட அவசியம் ரொம்பவே பெருசு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் அமுதா
உங்களுக்கு முதலில் என் நன்றிகள். நானே இதபத்தி எழுதனும்னு நெனச்சுருந்த நீங்க அரம்பிசுடீங்க. நல்ல விஷயத்த யாரு சொன்ன என்ன?
நான் நெறைய சொல்லணும் கரண்ட் சிக்கன படுதரத பத்தி.
நாம டிவி பாத்து முடிச்சான்ன ரிமோட்-ல டிவி-ய ஆப் பண்ணிட்டு டிவி சுவிட்ச்-ச ஆப் பண்ண மாட்டோம். அதுல தேவ இல்லாம கரண்ட் வேஸ்ட் ஆகுது.
அப்பறம் ஒரு சில எடத்துல ஸ்ட்ரீட் லைட் ஆப் பண்ணாமலே இருக்கும். அத பாத்துட்டு நம்ம ஆளுங்க கண்டுக்கவே மாட்டங்க. ஒரு கால் பண்ணி சொள்ளலாம்னே தோணாது. அப்பறம் பூமி வெப்பமாகுதுன்னு போலம்புனா என்ன பிரயோஜனம்?
ஸ்ட்ரீட் லைட் அதிக வாட்ஸ் அந்த லைட்-களோட வாட்ஸ்-ச கொறச்சு கம்மியான வாட்ஸ் இருக்க லைட்-ட போட்டங்கன்ன ஓரளவுக்கு வெப்பத தடுக்கலாம். அப்பறம் ரொம்ப முக்கியமானது இந்த கட்சி கூட்டம் பாராட்டு விழா அது இதுன்னு ஆயுரம் இருக்கு அதுல யூஸ் பண்ணற லைட் அப்பப்பா என்ன ஹீட் அத கொஞ்சம் கொறச்சுட்டு பகல்ல நடத்துனா ரொம்பவே கரண்ட்-ட மிச்சம் பண்ணலாம்.
அப்பறம் இத சொன்னன யாரும் என்ன திட்டாதீங்க. எல்லாரு வீட்டுலையுமே ஒன்னு சாமி போட்டோ இல்ல எறந்தவங்க போட்டோ கண்டிப்பா இருக்கும். அதுல கண்டிப்பா லைட்-ம் எறிஞ்சுட்டே இருக்கும். அத கொஞ்சம் வேணுங்கும் போது மட்டும் போட்டு மத்த நேரத்துல ஆப் பண்ணுனா நெறைய கரண்ட் மிச்சம் பண்ணலாம்.
பிரிட்ஜ்-ஜ ஒரு நாளுல உள்ள என்ன பொருள் இருந்தாலும் ஒரு மணி நேரம் ஆப் பண்ணி வெக்கறதால பொருளும் கேட்டு போகிறது இல்ல கரண்ட்-ம் மிச்சம் ஆகும்.
கேரளா-ல எல்லா சேனல்ஸ்-ளையும் கரண்ட் மிச்சம் பண்ண என்னன்ன பண்ணனும்னு அப்பப்ப ஒரு சின்ன add குடுப்பாங்க அதமாரி நம்ம தமிழ்நாடு-ளையும் பண்ண நல்லாருக்கும்.
வாஷிங்-மெசின்ல துனிகள துவைக்கரவங்க அதுல தண்ணி-ய நாமளா எடுத்து ஊத்தி ரொம்ப நேரம் வாஷ் ஆகர டைம்-ம கொறைக்கலாம் அதனால எந்த ப்ரோபலம்-மும் ஆகாது மெசின்னுக்கு.
எப்பவும் நாம சமைச்சு முடிச்சன்ன சிலின்டர்-ர ஆப் பண்ணறதால எப்பவும் எரியறத விட ஒரு வாரம் ஜாஸ்தியா எரியும்.
செல்போன் சார்ஜ் பண்ணும்போது பகல்-ல பண்ணுங்க, ஏன்னா பாட்டரி புல் ஆனாலும் நாம தூங்கரதால அப்படியே விட்டுருவோம் அப்ப கரண்ட் வேஸ்ட் ஆகும்.
லேப்டாப் யூஸ் பண்ணும்போது சார்ஜ் கம்மி ஆகும் போது மட்டும் போட்டுட்டா அதோட லைப்-ம் ரொம்ப நாளைக்கு இருக்கும் கரண்ட்-ம் கம்மியா ஆகும்.
மோட்டார் போட்டு சம்ப்-கு தண்ணிய மேல எடுக்கும் போது சம்ப் நெரஞ்சன்ன ஆட்டோமாடிக்-கா ஆப் ஆகர மாரியோ இல்லன்ன அலாரம் சத்தம் வர மாரியோ செட் பண்ணிட்டா தண்ணி நெறஞ்சு போய் வேஸ்ட் ஆகாது கரண்ட்-ம் மிச்சம் ஆகும்.
இப்படி பண்ண எதோ நம்மால முடிஞ்ச வரைக்கும் கரண்ட்-ட மிச்சம் பண்ணலாம்.
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

Sorry I don't have time to write in Tamil as i am working, typing in Tamil is taking long time for me , so sorry my dear friends

Saving Tips:
1) Use all vegetables in Fridge & then buy new ones, think of receipe to use those vegetable rather than buying vegetables for receipes which we can save vegetable going wasted & reduce is taste too.
2)when it rains water can be stored in Syntex bigger cans & can be reused for watering plants, cleaning vehicles or other areas which don't need very clean water.
3) if you have time spend time is planting Vege gardens rather than spending time in watching harmful serials etc
4) after cooking for cleaning stove first use Unwanted little little cloths to wipe out oils, dirt etc , then use good cloth, so that it will save time, cleaners, water ect, also unwanted cloths can be reused.
5) for cleaning everything unused or unwanted cotton cloths can be used which is really good, after using for some time we can bury it which will decompose, thanks

hai farvin, ramya karthik, lathavinee & sathyaguhan

thanks to all. u are telling good and useful tips.

we are execting more and more from our arusuvai friends.

friends please follow those tips as much as you can for our family, successivegenerations and country.

thanks a lot for all.

தோழிகளே

குறிப்புகள் வழங்குவதில் எதற்கு சிக்கனம்.

முதலில் நமக்கு அடம்பர தேவை அவசிய தேவை எது என்பதை நன்கு தெரிந்து கொல்ல வேன்டும்.அடிகடி சேலை ,துணி வகைகள் எடுப்பதை தவிர்க்க வேன்டும்.முடிந்தால் அடிகடி கடைக்கு செல்வதை தவிரகலம். மாத வருமனதில் கன்டிபாக எதாவது சேமிப்பு செய்ய வேண்டும்.அக்கம் பக்கதில் எதை வாங்கினாலும் நாமும் உடனே போட்டிகாக வாங்க கூடாது. நம் குடும்ப வருமானதை கருதில் கொல்ல வேண்டும். நமக்கென்று ஒரு லட்சியட்தை வைத்து அதர்க்காக பணம் சேர்கக வேண்டும். நீரை சிக்கனமாக செலவிட்டால் எதையுமே சிக்கனமாக செலவிடலம் என்று முன்னோர்கள் கூருவர்.
anbudan
valarmathi


இதெல்லாம் எங்க ஊரு “சிக்கன சின்ன சாமியின் சி(ரி)றப்பான யோஜனைகள்.’’

1 காத்தால சுருக்க ஸ்னானம் பண்ணிட்டு மொட்ட மாடில பக்கத்தாது ஸ்பிலிட் ஏசி மிஷ்ன்ல வர காத்துல தலை முடிய காய வெச்சுடனும்.

2. பக்கதாத்துக்கு போய் அவாளோட ஏசி தான் ஒசதினூ புகழ்ந்து பேசிண்ட்டேருந்தேள்னா அவா தலை கால்புரியாம ஒங்களை ஏசில ஒக்கார வெச்சு
டிஃபன், காஃபி யெல்லாம் கொடுத்து நன்னா கவனிச்சுப்பா.

இன்னும் வரும்...................................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

its true.my wishes

மாமி நீங்க ரொம்ப நல்லவாளா இருக்கேளே !!!நான் உங்கள பாக்கணும்போல ஆசையா இருக்கு ....???உங்க அட்ரச சொல்லுங்கோ !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்