ஒயர் பூ ஜாடி செய்வது எப்படி? பாகம் - 1

தேதி: May 31, 2010

5
Average: 4.6 (7 votes)

 

ஒயர்(ஆரஞ்சு நிறம்) - ஒரு பாக்கெட்
கலர் பூக்கள் - ஒரு பாக்கெட்
ஸ்டவ் பர்னர் - ஒன்று
கத்திரிக்கோல்

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒயரை 1 3/4 மீட்டர் அளவு அளந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதே அளவில் இன்னும் 30 ஒயர்களை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஒயரை எடுத்து சரிபாதியாக மடக்கிக் கொள்ளவும். மடக்கிய பகுதியை பர்னரின் பெரிய பகுதியின் வழியாக உள்ளே விட்டு பிடித்துக் கொள்ளவும். அடியில் இருக்கும் ஒயரை எடுத்து மேலே மடக்கி பிடித்திருக்கும் ஒயரின் உள்ள துளையில் விட்டு இழுத்து இறுக்கமாக முடிச்சுப்போட்டது போல் செய்துக் கொள்ளவும்.
இதை போலவே நறுக்கி வைத்திருக்கும் மற்ற 29 ஒயரையும் பர்னரை சுற்றிலும் வரிசையாக போட்டுக் கொள்ளவும்.
30 ஒயர் வெட்டிய பிறகு மீதம் இருக்கும் ஒயரை சுற்று ஒயராக எடுத்துக் கொள்ளவும். பர்னரில் சுற்றிய 30 ஒயரில் ஏதேனும் ஒரு ஒயரின் மேல், சுற்று ஒயரின் முனையை வைத்து இடது கையால் பிடித்துக் கொள்ளவும்.
சுற்று ஒயரை ஒரு முறை மடக்கி பிடித்துக் கொள்ளவும். அதன் நடுவில் இருக்கும் துளையின் வழியாக முதல் ஒயரை விட்டு இழுக்கவும்.
இப்போது இரண்டு ஒயரையும் சமமாக இழுத்து இறுக்கமாக ஆக்கிக் கொள்ளவும். இந்த முடிச்சுக்கு கோதுமை முடிச்சு என்று பெயர்.
மீண்டும் சுற்று ஒயரை மடக்கி அதன் துளையின் வழியாக இரண்டாவது ஒயரை விட்டு இழுக்கவும். முன்பு சொன்னது போல் இரண்டு ஒயரையும் சமமாக இழுத்து இறுக்கமாக ஆக்கிக் கொள்ளவும். இதே போல் 30 ஒயரிலும் பிண்ணிக் கொள்ளவும்.
முதல் வரிசை முடிந்த பிறகு, அடுத்து இரண்டாவது வரிசை போடவும். அதாவது மீண்டும் 30 ஒயரிலும் இதை போல கோதுமை முடிச்சி போட வேண்டும். அதன் பின்னர் இதை போல் மூன்றாவது வரிசையும் போட்டுக் கொள்ளவும்.
மூன்று வரிசை முடிந்ததும் மொத்தம் 60 ஒயர் இருக்கும், அதில் 30 ஒயர்களை தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டு அதில் ஒவ்வொருன்றிலும் கோதுமை முடிச்சி போடவும்.
இதே போல தனித்தனியாக பிரித்து வைத்து 7 வரிசைகள் போடவும்.
7 வரிசைகள் போட்ட பிறகு தனித்தனியாக இருக்கும் ஒவ்வொரு ஒயரையும் இரண்டாக சேர்த்து கோதுமை முடிச்சிப் போடவும். இதன் தொடர்ச்சி பாகம் - 2 ல் உள்ளது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta