ஒயர் பூ ஜாடி செய்வது எப்படி? பாகம் - 2

தேதி: May 31, 2010

5
Average: 4.4 (12 votes)

 

ஒயர்(ஆரஞ்சு நிறம்) - ஒரு பாக்கெட்
கலர் பூக்கள் - ஒரு பாக்கெட்
ஸ்டவ் பர்னர் - ஒன்று
கத்திரிக்கோல்

 

இதேப் போல் மீண்டும் மூன்று வரிசைகள் போட்டுக் கொள்ளவும்.
மீண்டும் ஒவ்வொரு ஒயரையும் தனித்தனியாக பிரித்து 60 கோதுமை முடிச்சி போடவும். இதே போல 3 வரிசைகள் போட்டுக் கொள்ளவும்(அந்த வரிசையையும் சேர்த்து மொத்தம் 3 வரிசை).
மூன்று வரிசை முடிந்ததும் 60 ஒயரையும் பத்து பத்தாக பிரித்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
முடிச்சி போட்டு வைத்திருக்கும் ஏதேனும் ஒரு முடிச்சி ஒயரை அவிழ்த்து அதன் முதல் ஒயரை மடக்கி, இரண்டாவது ஒயரை மடக்கி வைத்திருக்கும் முதல் ஒயரை சுற்றி பிடித்துக் கொள்ளவும்.
மடித்த முதல் ஒயரில் கீழே இருக்கும் பகுதியை(ஒயரை) மேலே எடுத்து வைத்து சுற்றி வைத்திருக்கும் இரண்டாவது ஒயரை எடுத்து மடக்கிய முதல் மேல் பகுதியில் உள்ள துளையில் விடவும். இரண்டு ஒயரையும் சரிசமமாக பிடித்து இழுக்கவும்.
இதைப் போல முதல் வரிசைக்கு ஐந்து பட்டன்களும் இரண்டாவது வரிசைக்கு 4 பட்டன்களும் மூன்றாவது வரிசைக்கு 3 பட்டன்களும் அடுத்து 2 மற்றும் ஒன்று என்று முடித்து விடவும். இந்த பட்டன்களை பிரித்து வைத்த முதல் பத்து ஒயர்களில் மட்டும் போட்டுக் கொள்ளவும்.
பட்டன்கள் போட்ட பிறகு எல்லாவற்றிலும் இருக்கும் மற்ற ஒயர்களை பட்டனின் பின்புறம் ஏதாவது ஒரு பட்டனில் படத்தில் உள்ளது போல் சொருகி விடவும்.
சொருகிய ஒயரை, ஒயர் கூடைகளுக்கு கைப்பிடி பிண்ணுவது போல் முக்கால் பாகம் வரை பிண்ணிக் கொள்ளவும்.
கூடையின் அடிப்பாகம் வரை பிண்ணிய பிறகு மீதம் இருக்கும் ஒயர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து எல்லா ஒயரையும், முன்பு ஒயர் சொருகிய இடத்திற்கு நேராக உள்ள ஓட்டையில் விட்டு நடுப்பாகம் வழியாக வெளியே எடுக்கவும். அப்போது தான் பார்க்க கைப்பிடிப் போல் இருக்கும். இதைப் போல மற்ற எல்லா பத்து பத்து ஒயர்களையும் கைப்பிடி போல் செய்து உள்ளே விடவும்.
எல்லா ஒயரும் சேர்ந்து மேலே நடுப்பகுதியின் வழியாக வந்திருக்கும். அதை ஒன்றாக சேர்த்து ஒரு நூலைக் கொண்டு கட்டவும். பிறகு தேவையில்லாதவற்றை கத்தரிக்கோலால் நறுக்கி விடவும்.
அந்த ஒவ்வொரு ஒயரிலும் சிறிய ப்ளாஸ்டிக் பூக்களை சொருகி வைத்து அலங்கரிக்கவும்.
ஸ்டவ் பர்னரை கொண்டு செய்யக்கூடிய ஒயர் பூ ஜாடி தயார். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கி செய்து காட்டியவர் திருமதி. தனலெட்சுமி அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

romba nallayirukku pa.ithellam enga kaththukidenga? enakkum intha mathiri workkukum romba thuram pa. supper pa

all is well

intha arusuvai vazhiyaga nan niraiya kathukiten. first i'm thanks for this website and sir. babu. romba allaka irrukiu intha flower basket. ithe wire kondou periya koodai seivadhou therinthal phadathuden phodunkalen please please.

yanaku 10 years, low pressure irruku. athanal, ithai poakka yathavadhu vazhi irruka?

shagila

அழகாக இருக்கிறது. பாராட்டுகள்.

பூக்கூடை அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் தனலட்சுமி.
அழகான குறிப்புகளைத் தேடிக் கொடுக்கும் அறுசுவைக் குழுவினர்க்கும் என் பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

பூ ஜாடி மிக அழகு,அதற்கு கைபிடி போல் பின்ன வேண்டும் என சொன்னீங்களே,எப்படி என சொல்லவும்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta