வனிதாக்கு உதவி வேணும் !!!

வனிதா அம்மா சிம்னி (chimney) வாங்கணுமாம். வீட்டு அடுப்படிக்கு. அதனால எந்த ப்ராண்ட் வாங்கலாம், எது நல்லா இருக்கும், என்ன விலை வரும், மெயின்டனன்ஸ் சுலபமா... போன்ற தகவல்களை பயன்படுத்துறவங்க சொல்லுங்க ப்ளீஸ்.

காலைல இருந்து அறுசுவைல கேட்க சொல்லி பாடா படுத்திட்டாங்கப்பா எங்க அம்மா... இப்போ தான் நியாபகம் வந்து கேக்குறேன். சீக்கிரமா வந்து கருத்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
நலமா? குழந்தைகள் நலமா?
இப்ப தான் உன் பதிவுக்கு பதில் போட வந்தேன். சீக்கிரம் என்ற வார்த்தையை பார்த்து இங்கு வந்தேன்.

நான் சன்ஃபிளேம் சிம்னி வைத்துள்ளேன். நன்றாகவே இருக்கு. பிரெஸ்டிஜும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. வீட்டு உபயோகம்னா 7000 ரூபாய் அளவுக்கு போதும். மாதம் ஒரு முறை பிளேட்டை கழட்டி சோப் வாட்டரில் ஊற வைத்து கழுவணும். கெரோசின் தொட்டு துடைக்க பிசுப்பு போய் விடும். சிம்னி போடுவதால், மற்ற இடங்கள் எண்ணெய் பிசுப்பு வராமல் இருக்கும். புகை வரும் போது தொண்டை கமறாமல் இருக்கும். வேஸ்ட் என்று சொல்ல முடியாது. நான் போடும் போது நிறையப் பேர் வேஸ்ட் என்று சொன்னார்கள். எனக்கு உபயோகமாகத்தான் இருக்கு.
வேறு ஏதும் தகவல் வேண்டும் என்றால் சொல்லவும்.

அன்புடன்,
செல்வி.

தெரிஞ்ச வகையில்,

Faber brand கொஞ்சம் காஸ்ட்லியா இருந்தாலும், நிறைய மாடல்ஸ் கிடைக்கும். ப்ராண்ட் ரொம்ப பாப்புலர். கொடுக்கிற காசுக்கு quality இருக்கும். Glen, Kaff இதெல்லாம்கூட சிம்னிக்கு பெயர் போன ப்ராண்ட்ஸ் தான். நம்ம லோக்கல் sunflame la கூட சீப்பா கிடைக்குது. பாரீஸ் பக்கம் போனீங்கன்னா (நம்ம கார்னருங்க.. அந்த பாரீஸ் இல்ல), அங்க ஒரு ஸ்ட்ரீட்ல புதுப் புது ப்ராண்ட் நேம்ல லோக்கல் ஐட்டம்ஸ் எல்லாம் கொஞ்சம் சீப்பா கிடைக்கும். அதெல்லாம் நமக்கு வேண்டாம். :-)

அப்புறம் சிம்னிக்கும் ஏசி மாதிரியே, ரூம் சைஸ், என்ன மாதிரி ஸ்டவ் இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் ரொம்ப முக்கியம். அதெல்லாம் வச்சுதான் என்ன கெப்பாசிட்டியில சிம்னி போடலாம்னு முடிவு பண்ண முடியும். நாம பயன்படுத்துற ஸ்டவ், சமைக்கிற சமையல் இதை பொறுத்து மெயிண்டனன்ஸ் தேவைப்படும். பொதுவா நம்ம சமையல் எல்லாம் புகையும், எண்ணெய்யும் மேலெழும்புற சமையல். சிம்னியை டெய்லி தொடைக்கலேன்னா, எண்ணெய் பசையா இருக்கும். அதனால எந்த ப்ராண்டா இருந்தாலும் after sale support நல்லா இருக்கான்னு பாத்து வாங்குங்க. எனக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் வீட்டுல Faber யூஸ் பண்றாங்க.

எங்க வீட்டுல என்னன்னு கேக்குறீங்களா.. எங்க வீட்டு கிச்சன்ல electric chimney யோட தாத்தா exhaust fan தான் இன்னமும் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்காரு. :-)

செல்வி... நலமா இருக்கீங்களா??? நாங்க நலம். தகவலுக்கு மிக்க நன்றி. ஏதேனும் சந்தேகம் வந்தா உங்களுக்கு ஒரு போனை போட்டுடறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அண்ணா... நானும் இந்த ப்ராண்ட் பற்றி கேள்விப்பட்டேன்.. ஆனா என்ன விலை வரும் அண்ணா?? தெரிஞ்சா சொல்லுங்களேன். அப்பறம்.. இப்போ நம்ம வீட்டிலும் தாத்தா தான் இருக்கார். அவருக்கு ஓய்வு குடுக்கலாமா'னு தான் அம்மா பார்த்துட்டு இருக்காங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிறைய ரேஞ்ச்சுல இருக்கு. இந்த லிங்க்ல பாருங்களேன்..

http://shopping.bhaskar.com/brands/WO-Brands-W109O-Brands-shopping-W116O/Faber/Electric_Chimneys.html

அண்ணா... தகவல் எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருந்தது. மிக்க நன்றி அண்ணா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நானும் சிம்னி வாங்கணும் நீங்க அம்மா வீட்ல எந்த வகை சிம்னி போட்டிங்க..எப்படி இருக்கு..அடுப்பு புதுசு வாங்கணும் மூணு பர்னர், நாலு பர்னர் எது okvaa இருக்கும்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி.... ஹிஹிஹீ... பாபு அண்ணா கிட்ட அலோசனை கேட்ட பின் எங்க வீட்டிலும் சிம்னியின் தாத்தா எக்ஸாஸ்ட் ஃபான் தான் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு இருக்கார் ;)

அவர் தான் நம்ம ஊர் சமையலுக்கு சரியான ஆளுன்னு முடிவு பண்ணிட்டேன்.

அடுப்பு கேட்டீங்களே... இது நியாயமான விஷயம். ;) அடுப்பு நீங்க அப்படியே மேலே வைக்கும் வகை வாங்க போறீங்களா? இல்ல... அடுப்பு தின்டில் பொருத்தும் வகை வாங்க போறீங்களா? அடுப்பு திண்டில் ஃபிக்ஸ் பண்ற வகை என்றால், ஒவ்வொரு அடுப்புக்கும் எவ்வளவு இடைவெளி இருக்குன்னு கவனிங்க. சிலர் இதை கவனிக்காம வாங்கி ஃபிக்ஸ் பண்ணிட்டு 4 அடுப்பில் ஒரு நேரத்தில் 2 தான் பயன்படுத்த முடியும்ன்ற நிலை வந்துடும். இடம் போதாது, ஒன்னு வெச்சா பக்கத்தில் இன்னும் ஒன்னு வைக்க கஷ்டமா இருக்கும். அதனால் உங்க வீட்டு அடுப்பு திண்டின் அளவை பொறுத்து முடிவெடுங்க.

ரெடி மேட் அடுப்பா அப்படியே பழைய கால ஸ்டைலில் வாங்கி வைக்குறதுன்னா இப்போ இருக்க மாடல்ஸ் பார்த்த வகையில் நமக்குலாம் 3 அடுப்பு வசதியாவும் இருக்கும், போதுமானதாவும் இருக்கும். ஸ்பேஸ் கிடைக்கும், பெரிய பாத்திரங்கள் கூட 3 வைக்கலாம் ஒரே நேரத்தில். அடுப்பு தின்டு சின்னதா இருந்தாலும் இதுவும் அகலம் கம்மி என்பதால் எங்கும் பொருந்தும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்