எங்க ஊரு.. எங்க சமையல்.. புதிய பகுதிக்கு உங்கள் உதவி தேவை

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கிறது. ஒரே மாதிரியான உணவு என்றாலும் ஒரு சிலரது தயாரிப்புகள் மிகவும் ருசியாக இருக்கிறது. இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமான பல்வேறு உணவு வகைகளைப் பற்றி தகவல் அறிந்து, அவற்றை தயாரிக்கும் முறைகளை நேரில் சென்று படம் எடுத்து அறுசுவையில் வெளியிட இருக்கின்றோம். இந்த ஊர் பயணத்தில் சமையல் மட்டுமில்லாது அந்த ஊரில் பிரபலமான உணவு விடுதிகள், சுற்றுலா தளங்கள், இதர சிறப்புகள் இவற்றை பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டி "எங்க ஊரு.. எங்க சமையல்" என்ற புதிய பகுதியில் இதனை வெளியிட இருக்கின்றோம். இதற்காக அறுசுவை டீம் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் செல்லவிருக்கிறது. டீம் என்றவுடன் கிரிக்கெட் டீம் போல் பதினோரு நபர்களை கணக்கிட்டுவிட வேண்டாம். அதிகப்பட்சம் இரண்டு பேர் அல்லது தனி ஒரு நபர்தான். :-)

அறுசுவை நேயர்கள் கிட்டத்திட்ட தமிழகத்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் இருக்கின்றார்கள். உங்கள் ஊரில் உங்கள் அம்மா, பாட்டி, சகோதரிகள், அத்தை, சித்தி என்று உறவினர்கள் யாரேனும் சிறப்பாய் சமைப்பவர்களாய் இருந்தால், அவர்களை நேரில் கண்டு, அவர்கள் சமையலை படம் எடுத்து, அவர்கள் விரும்பினால் அவர்களையும் படம் எடுத்து அறுசுவையில் வெளியிட விரும்புகின்றோம். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், தமிழக எல்லைக்குள் எந்த பகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும் நகரங்களைவிட சிறிய நகரங்கள், கிராமங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

உங்கள் ஊருக்கு, உங்கள் இல்லங்களுக்கு நாங்கள் வருவதை நீங்கள் விரும்பினால் எங்களுக்கு தெரிவிக்கலாம். அப்படி நாங்கள் வரும்பட்சத்தில், நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டியவை..

உங்கள் ஊரில் பிரபலமான அல்லது உங்களுடைய சிறப்பு உணவு ஏதேனும் ஒன்றை தயாரித்து காட்ட வேண்டும். சாதாரண பொருட்களைக் கொண்டு செய்யும் உணவாக இருந்தால் போதுமானது. பொருட்கள் வாங்க செலவு செய்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கும்பட்சத்தில் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம். அந்த உணவு தயாரிப்பினை போட்டோ எடுத்து அறுசுவையில் வெளியிட எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இது தவிர உங்கள் ஊரில் உள்ள சிறப்புகள் குறித்து எங்களுக்கு தகவல்கள் தரவேண்டும். மற்றபடி எங்களுக்கு சாப்பாடு எல்லாம் தயாரிக்க வேண்டாம். நாங்கள் சாப்பிட மாட்டோம் :-)

எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றார்கள், எந்த ஊர்களில் இருந்து, எந்த மாவட்டத்தில் இருந்து அதிக அழைப்பு வந்துள்ளது என்பதைப் பொறுத்து எங்களது பயண திட்டத்தை வகுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டம் செல்லலாம் என்பது எங்களது திட்டம். எப்படி வரவேற்பு உள்ளது என்பதைப் பொறுத்து மற்ற முடிவுகள் எடுக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

சகோதரி லதாவிநீ,

இதுதான் நான் சொன்ன மேட்டர். உங்க ஊருக்கு எப்ப வரலாம்னு சொல்லுங்க.. :-)

அட்மின் பாபுன்னா
அண்ணா இவ்வளவு தான் மேட்டரா? நான்கூட என்னவோ ஏதோனு பயந்தே போய்டேன். சீக்ரமாவே சொல்ரன் நீங்க எப்ப வரணும்னு, ஆனா நீங்க கண்டிப்பா வரணும். இங்க எனக்குன்னு யாரும் இல்ல, சோ இங்க நான் மட்டும் தான் அதனால என்ன ஐடெம் பண்ணலாம்னு இப்பவே யோசிக்கரன். எங்க அட்மின் அண்ணாக்கு ஸ்பெஷல்-லா சமைச்சு போடனுமில்ல.....
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அன்பு சகோதரர் பாபு,
எங்க வீடு சென்னை சின்னமலை சந்திப்பில் உள்ளது. நீங்க தாராளமாக வரலாம். நாங்கள் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை அங்கு இருப்போம். நீங்கள் வருவதை முன்கூட்டியே சொன்னால் நாங்கள் வீட்டில் இருப்போம்.( இந்தியா வந்தால் முழுநேரமும் ஊரை தான் சுற்றுவோம்) ஒரு வேண்டுகோள் : நாங்கள் சமீபத்தில் நாகர்கோவிலில் ஒரு கல்யாணத்திற்கு வந்திருந்தோம். அங்கு இரவில் சாதத்துடன் ஒரு தீயல் போட்டார்கள். முதலில் சாப்பிட மாட்டோம் என்று சொன்ன என் பசங்க ஒரு பிடி பிடிச்சிட்டு வந்தாங்க. நீங்கள் அந்த ஊருக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் , முடிந்தால் இந்த சமையல் குறிப்பை அறிந்து வெளியிடவும். நன்றி

Save the Energy for the future generation

உங்க அன்பிற்கு மிக்க நன்றி. வீடுகள்ல சாப்பிடுறதுக்கு நாங்க குடும்பத்தோட பிறகு வர்றோம். அப்ப விருந்து வைச்சு அசத்துங்க. :-) இங்க சொல்லி இருக்கிற பயணம் சாப்பிட வர்றதுக்கு கிடையாது. நிஜமாவே சொல்றேன். வீடுகள்ல சாப்பிட மாட்டோம். உங்க ஊர்ல அல்லது பக்கத்துல உள்ள ஹோட்டல்கள்ல எது பிரபலம்னு பார்த்து அங்க சாப்பிட போறோம். ஏன்னா, இந்த ட்ரிப்பிலேயே ஹோட்டல்ஸ் பற்றின டீட்டெயில்ஸ்ம் கலெக்ட் பண்ண போறோம். அதனால முடிஞ்ச அளவுக்கு ஹோட்டல்ஸ்ல சாப்பிட்டு அதைப் பற்றி விமர்சனம் எழுதணும்.

நீங்க சமைக்கிறதை ஒரு ஸ்பூன் டேஸ்ட் பண்ணி மட்டும்தான் பார்ப்போம். வழக்கமா எங்கே படம் எடுக்கப் போனாலும் அதைத்தான் செய்வோம். சாப்பிடுறது இல்லேங்கிறதை ஒரு பாலிஸியாவே வச்சிருக்கோம். :-) அப்புறம், வகை வகையா சமைக்கிறது பத்தியெல்லாம் திட்டம் போடவே வேண்டாம். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, உங்க ஊர்ல பிரபலமான அயிட்டம், அல்லது உங்களோட ஸ்பெஷல் இந்த மாதிரி ஏதேனும் ஒரே ஒரு அயிட்டம் செஞ்சு காமிச்சா போதும். என்னோட ஸ்பெஷல்னு சொல்லி சாதாரண சாம்பார், ரசம் எல்லாம் செஞ்சு காமிக்ககூடாது. :-)

பொது மன்றத்தில அழைப்பு கொடுக்க விரும்பலேன்னு ஒருத்தர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தாரு. நானும் அதை முன்னமே சொல்லணும்னு நினைச்சேன். உங்க ஊர் தகவலை இங்க வெளியிட்டு அழைப்பு விடுக்க விருப்பம் இல்லாதவங்க, arusuvaiadmin@ ஜிமெயில் டாட் காம் க்கு மெயில் பண்ணலாம்.

அண்ணா... நல்ல விஷயம்!! ஆனா எங்க ஊர் கிராமம், ஒன்னும் ஸ்பெஷல்'னு சொல்லும்படியான சமையல் கிடையாது... :( அதைவிட வருத்தம் இன்று வரை எங்க ஊருல ஒரு டீ கடை தவிர வேறு உணவுவிடுதி கிடையாது. அவ்வளவு கிராமம் அது. கேட்டா கூழ் செய்து காட்டுவாங்க. ம்ம்... எங்க ஊருக்கு நான் வேறு காரணம் சொல்லி தான் உங்களை அழைக்க முடியும். அது எங்க ஊர் கோவில் திருவிழா. கும்பாபிஷேகம் எப்பன்னு முடிவானதும் சொல்றேன், எல்லாரும் வாங்க. புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா. நல்லபடியா உங்க முயற்சி வெற்றி அடையட்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின் பாபு அவர்களே...
நல்ல முயற்சி.. நன்றி.. வனிதா சொன்ன மாரி இங்கேயும் சூப்பரா ஒன்னும் இல்ல.. ஆனா நான் சொன்ன ஆசாரி பாகம் செய்ய அம்மாகிட்ட கேக்றேன். என்ன ஒன்னு சாப்டு பாத்துட்டு (ஒரு பீஸ்தாங்க) இதே டேஸ்ட நான் வேற பேர்ல சாப்டுருக்கேன்னு சொல்லீட்டிங்கனா ... ;-).. ஏனா பள்ளிபாளையம் சிக்கன் தான் ஆசாரி பாகம்னு சிலர் சொல்லி நான் கேட்டு இருக்கேன் .. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

rajapalaiyam pakkam vantha ananda hotal& muthu kadai parotta& kurma suppara irukkum

all is well

ராஜபாளையம் ஆனந்தா ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கேன். அங்க சாப்பிடுறதுக்குன்னே ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து நாலு பைக்ல ஒரு பெரிய கோஷ்டியே போனோம். :-)

http://www.arusuvai.com/tamil/node/158

இந்த குறிப்புல இருக்கிற போட்டோ, அங்க எடுத்ததுதான். முத்து கடை பரோட்டா சாப்பிட்டு பார்க்கலை. அடுத்த முறை ட்ரை பண்றேன்.

என் புகுந்த ஊரான காரைக்காலில் "காரைக்கால் அல்வா கடை "ரொம்ப ஃபேமஸ்.திருநெல்வேலி அல்வாக்கு அடுத்தது காரைக்கால் அல்வாதான். முடிஞ்சா போய் டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு வாங்க!

என்பிறந்த ஊர் தஞ்சாவூர். அங்கே புகைவண்டி நிலையம் அருகில் உள்ள பாம்பே sweetstall அசோகா மிகவும் நன்றாக இருக்கும் .அல்லது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவையாறு sweetstall கடையிலும் இந்த அசோகா ரொம்ப பிரபலம். முடிந்தால் போய்வாருங்கள்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

மேலும் சில பதிவுகள்