உதடு மற்றும் பற்கள் அழகு

உதடு பற்கள்Beauty tips

உதடு மற்றும் பற்கள்

இந்த வாரம் உதடுகள், பற்களின் பராமரிப்பையும், சிறப்பாக அவற்றை அழகுப் படுத்திக் கொள்வதையும் பார்ப்போம். உதடுகளை இதழ்கள்னு பூவோட சம்பந்தப்படுத்தி சொல்லும்போதே அது எவ்வளவு மென்மையான பகுதின்னு நமக்கு தெரியும். நம்ம உடம்பில் வேர்க்காத பகுதி உதடுகள்தான். உதடுகளுக்கு என்ன பெரிய கவனிப்பு தேவை, சும்மா வெடிப்புக்கு வேசலின் தடவினா போதாதான்னு கேட்கலாம். ஆனால் முகம் அழகாய் தெரிய உதடுகளின் வனப்பும் ஒரு முக்கிய காரணம். தனித்தனியா முகத்தில் ஒவ்வொரு பார்ட்ஸையும் கவனிக்க நம்மால முடியுமான்னு தோணும். தனித்தனியா கவனிக்க தேவையே இல்லை. நம்ம தினசரி வேலைகளிலேயே உதடுகளை பராமரிச்சுக்கறதுக்கான வழிகளும் இருக்கு.

காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். அதேபோல் முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும். ஏற்கனவே கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.

உதடு மட்டும் அழகா இருந்தால் நிச்சயம் போதாது. பற்களும் அழகாக, சுத்தமாக இருப்பது அவசியம். அழகான இதழ்கள் விரித்து நாம் சிரிக்கும் சிரிப்பை இன்னும் வசீகரமாக காட்ட பற்களின் பராமரிப்பு மிகவும் அவசியம். தினமும் பல்துலக்குவதோடு Floss செய்வதும் அவசியம். பற்களை வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 30 வயதிற்கு பிறகு பற்களின் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப்போதும் பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடு கால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து காப்பாற்றும்.

Teeth care

இடைவெளி ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது. கால்சிய சத்து நமக்கு உடம்பில் ஒரே நாளில் ஏற்படும் விஷயமல்ல. அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்று ஆகும். அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கறை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும். பல் இடுக்கில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டால் எக்காரணம் கொண்டும் டூத் பிக், சேப்டி பின் என்று உபயோகிக்காமல் முடிந்த வரை Floss உபயோகித்து நீக்க வேண்டும். இடைவெளி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான, மெலிதான Floss உபயோகிக்க வேண்டும். மேலும் ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் அடிக்கடி செய்வதால் பல் கூச்சம் ஏற்படும். எனவேதான் அதனை அடிக்கடி செய்து கொள்ளக்கூடாது. டூத் பிரஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.

ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். ரூட் கேனால் ட்ரீட்மெண்ட் அல்லது புதிதாக பல் பொருத்தும்போதோ முடிந்த வரை பல் கேப்பை(cap) நமது மற்ற பல்லின் நிறத்திற்கு சரியாக பொருந்துமாறு தேர்ந்தெடுத்து அதனையே பொறுத்த வேண்டுமென்று பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம். சில்வர், கோல்ட் என்று தனியாக தெரிவதைவிட இப்படி செராமிக்கில் பல் நிறத்துக்கே கேப் போட்டுக் கொண்டால் வித்தியாசம் தெரியாது. பற்களை அழகுப் படுத்திக் கொள்வதைவிட மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வாய்துர்நாற்றத்தை தடுப்பது. ஏனெனில் பலருக்கு தனது வாய் துர்நாற்றமடிக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் இருக்கும். இவர்கள் தானாக செக் செய்து கொள்வதைக் காட்டிலும் ( தானாக கண்டுபிடிக்க தெரியாமல் இருப்பவர்கள்) குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைத் துணை போன்றவர்களிடம் கேட்பது நல்லது. இதற்காக வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால் நமக்கு தெரியாமல் அடுத்தவர் நம்மைக் கிண்டல் செய்ய நாமே காரணமாகி விடுவோம்.

வெளியில் அழகு படுத்திக் கொள்வதைக் காட்டிலும், துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருப்பதே அவசியம். சாப்பிட்ட பிறகு கிராம்பு மெல்வது கூட நல்ல பலனைத் தரும். அதிக சூடான, குளிச்சியான பொருட்களை பல்லில் படாமல் சாப்பிடுவதும் நல்லது. எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், ஆபிள் சிடார் வினிகர் போன்றவற்றை கூட ஸ்ட்ரா கொண்டு பல்லில் படாமல் குடித்தால் பற்கள் பாதுகாக்கப்படும். இப்போது பிரஷ்ஷிலேயே டங்க் க்ளீனர் வைத்து வந்திருக்கிறது. அதனைக் கொண்டே ஈறுகளையும் மசாஜ் செய்து விட முடியும். இரவு உறங்கும் முன் பல் துலக்கும் பழக்கம் குழந்தைகளாக இருக்கும்போதே பழக்கிவிட வேண்டும். மவுத்வாஷ் உபயோகிப்பதைக் காட்டிலும் தினமும் இரு வேளை பிரஷ் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது.

Lips

இப்போது அழகுப்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக்கப் போடும் நாட்களில், எக்காரணம் கொண்டும் கண்ணிற்கு அதிக மேக்கப்பை போட்டு விடாதீர்கள். அது மேக்கப்பை கெடுத்துவிடும். உதடுகளுக்கு மேக்கப் போடுவது சுலபமாக செய்யக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும். மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும். லிப் ஷேப்பை மாற்றுகிறேனென்று, லிப் பென்சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுகளின் உள்ளே அல்லது வெளியே உள்ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாக காட்டி விடும்.

உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும். முதலில் லிப் பென்சில் கொண்டு ஷேப் வரைந்த பிறகு, லிப்ஸ்டிக் போடுங்கள். இப்போது லாங்க் ஸ்டே லிப்ஸ்டிக்குகள் பல நிறங்களிலும், தன்மையிலும் கிடைப்பதால் லிப்ஸ்டிக் போடும் முன்பு உதடுகளுக்கு பவுடர் அடிக்க தேவையில்லை. லாங்க் ஸ்டே உபயோகிக்காதவர்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் இருக்க ஒரு முறை பவுடர், பிறகு லிப்ஸ்டிக், பிறகு மேலே ஒரு பவுடர் கோட்டிங், பிறகு லிப்ஸ்டிக் என்று மூன்று கோட்டிங் வரை கொடுக்கலாம். இதுவும் நீண்ட நேரம் லிப்ஸ்டிக்கை அழியாமல் வைத்திருக்கும்.

Lipsticks

லிப்ஸ்டிக் போட்ட பிறகு அதிகம் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருப்பதும் லிப்ஸ்டிக்கை கரையாமல் வைத்திருக்கும். லிப்ஸ்டிக் போட்டு 1 அல்லது 2 நிமிடங்கள் கழித்து லிப்கிளாஸ் போட்டால் நன்றாக ஸ்மூத்தாக இருக்கும். சின்னதாக இருக்கும் உதடுகளை பெரிதாக காட்ட லிப் பென்சில் உபயோகித்து ஷேப் மாறுவதைக் காட்டிலும் ப்ளம்ப்பி லுக் தரும் லிப் ஸ்டிக்குகள் உபயோகிக்கலாம். இந்த வகை லிப் ஸ்டிக்குகள் உதடுகளை கொஞ்சம் பெரிதாக்கி காட்டும். லிப் லைனர் டார்க் கலரிலும், லிப் ஸ்டிக் அதைவிட கொஞ்சம் லைட்டான கலரிலும் உபயோகிப்பது அழகான லுக்கைத் தரும். ஆனால் இதையே மாற்றி லிப் லைனர் லைட் கலரிலும், லிப் ஸ்டிக் டார்க் கலரிலும் போட்டால் நன்றாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். Gloss வெரைட்டி சின்ன வயதுக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். லிப்ஸ்டிக் ஷேடு பற்றி அறிய ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் என்னுடைய" இந்திய முகங்களுக்கேற்ற மேக்கப் ப்ராடக்ட்ஸ் என்ற பதிவினை பாருங்கள். கொஞ்சம் மாடர்ன் மற்றும் பெப்பி லுக்கிற்கு லிப்ஸ்டிக், லிப் லைனர் இரண்டுமே ஒரே நிறத்தில் Matt finish ல் போட்டால் பார்க்க நேச்சுரலாக இருக்கும். சிம்ரன், கேத்தரீனா கைஃப் போன்றவர்கள் இந்த வகை டெக்னிக்கில் லிப்ஸ்டிக் அப்ளை செய்திருப்பார்கள். ஆனால் லிப் க்ளாஸ் போடாமல் இருந்தால்தான் இந்த லுக் வரும்.

அடுத்த வாரம் அடுத்த பாகம்

Comments

Nice tips deva ellarukum nalla usefula irukkum thanks to give the tips

rspriya28

வழக்கம் போல சூப்பர் டிப்ஸ் தேவா. அசத்துறீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல டிப்ஸ்..இந்த floss செய்ய ஓரல் பி பயன்படுத்தறேன்..அது எல்லா பற்களுக்கும் நடுவில் போவதில்லை...வேறு எதுவும் மென்மையான/தரமான ப்ராண்டு சொல்ல முடியுமா?

சூப்பரா சின்ன விஷயங்களை கூட நுணுக்கமாக சொல்லி கொடுப்பது அருமை..
தலைமுடியில் கடைசியா ஒரு பதிவு போட்டிருக்கேன் அதுக்கு நேரமிருந்தால் பதில் போடவும்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்க தலைமுடி பற்றின பதிவுக்கு உடனடியா பதில் சொல்ல முடியாம போயிடுச்சு. சாரி. இங்கே ஆபிசில் ட்ரெயினிங், மீட்டிங் னு சரி பிசி இந்த வாரம். நிச்சயம் விரைவில் பதில் எழுதிடறேன். நீங்க Colgate Total Floss வாங்கி உபயோகிச்சு பாருங்க. நான் Reach, Colgate னு வாங்கி பிடிக்காம இப்ப இந்த பிராண்டுதான் வாங்கறேன். இதுதான் எனக்கு தெரிஞ்சு ரொம்ப மெலிசா இருக்கு. மத்த எல்லாமே நூல் மாதிரி இருக்கும். இது மட்டும் பேப்பர் கலந்த மாதிரி வெள்ளையா இருக்கும். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

dear deva madem,

nice tips regarding lips.. i have one doubt.. my lips is pink one only.. last year i visited Europe tour, bcos of sun my lips bcome bit white in 3 places now its very ugly.. how to bring back my lips pink like before.. please help me.. nowadays iam using sun screen lip stick so its not affecting.. but i have bring back my lips to own colour.. give me nice tips madem.. please help me..

கடைகளில் French Manicure set என்று பார்த்திருக்கிரேன். அதை பற்றி தெரிந்தவர்கள் சொல்லவும் Please...

God is good! All the time!

Hello DEVA அக்கா!
என்னுடைய உதடு சின்ன வயதுல light pink colour-ல இருந்தது 15 ,16 வயதுல dark pink colour aa மாரியது அதுக்கு பிரகு மேல் உதடு மட்டும் கருப்பா மாரிடுத்து கீழ் உதடு still pink colour ஆகவே இருக்குது (நான் எதுவுமே use பன்னாமலே colour மரிருச்சு) இந்தblack colour அ மாத்த ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க please

lips la beetroot thaduvunga colour marirum try pannunga

டிய‌ர் தேவா,
எப்ப‌டி இருக்கிங்க‌? சிறிய இடைவேளைக்கு பிற‌கு அறுசுவைக்கு இன்றுதான் வர கொஞ்சம் நேரம் கிடைத்தது. உங்களோட அடுத்தடுத்த‌ அழகு டிப்ஸ்களையும் படித்தேன். ரொம்ப‌ அருமையா, தெளிவா சொல்லி இருக்கிங்க தேவா! பொறுமையா மீண்டும் படித்து எனக்கு முடிந்ததை ஃபாலோ பண்ணிப்பார்க்கிறேன். நன்றி!.

தேவா, உங்களிடம் ஒரு கேள்வி. முன்பு ஒரு த்ரெட்டில், நமக்கு கால், கைகளில் இருக்கும் முடி அகற்ற எபிலேட்டர் பெஸ்ட் என்று சொல்லி இருந்திங்க. (அந்த த்ரெட்‍ஐ இன்னும் தேடிட்டு இருக்கேன், கிடைக்கவே இல்லை!) என் பெண்ணுக்கு, கை, கால்களில் சிறு சிறு ரோமங்கள் இருக்கு தேவா. அவளுக்கு கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் போன்ற மாதிரியான உடல் முடி அகற்றும் பவுடர் எதுவுமே சிறு வயதில் போட முடியவில்லை‍ ‍‍ அவளின் எக்ஸீமா பிரச்சனையால். (உங்களிட‌ம் ஏற்கனவே இதைப்பற்றி சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்.) அப்ப நான் அப்படி செய்தது ச‌ரிதான் என்று தெரிந்தாலும், இப்ப எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. காரணம், இப்ப சிறுசிறு ரோமங்கள் தெரிவதால். இப்ப ஏதாவது செய்து பார்க்கலாமா? பலன் கிடைக்குமா தேவா? உங்களுக்கு தெரிந்தால் சஜஸ்ட் பண்ணுங்கள். எனக்கு தெரியும், அவள் பெரியவளானதும் எத்தனையோ முறைகள், முடியை நீக்கிவிட இருக்கு, எதுவும் வருத்தப்பட வேண்டாம் என்று. ஆனால், இப்ப விஷயம் என்னவென்றால், அவ‌ளுக்கு அன்டரார்மில் ஒன்றிரண்டு முடியிருப்பதால், ஸ்லீவ்லெஸ் ட்ரெஸ் போட‌ கொஞ்ச‌ம் கூச்ச‌ப்ப‌டுகிறாள். எபிலேட்டர் வைத்து என் பெண்ணுக்கு எடுத்து விடலாமா?! இல்லை, வேற‌ எதுவும் பெஸ்ட் மெத்த‌ட் இந்த‌‌ பிர‌ச்ச‌னைக்கு இருக்கா, கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ள் தேவா. பத்து வயதுதான் ஆகிறது என்பதாலும், பின்னாளில் எதுவும் பிரச்சனை வந்துவிட கூடாதென்பதாலும், எனக்கு ஒரே பயம். இந்த பிரச்சனையை எப்படி, எங்கு கேட்பது என்று ரொம்ப குழம்பி இன்று இங்கே கேட்கிறேன் தேவா. உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் வனிதா, உங்களோட பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நீங்க எல்லா பீல்டுலேயும் கலக்கறீங்க. என்னாலதான் எல்லா பதிவுலேயும் பாராட்டு தெரிவிக்க முடியாமல் போயிடுது. தாமதமான பதிலுக்கு சாரி சொல்லிக்கிறேன்.வீட்டில் குட்டீஸ் எல்லாரும் நலமா? அம்மா, தங்கை எப்படி இருக்காங்க? மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.டேக் கேர்.

ஹாய் ப்ரியா, உங்களோட அன்பான பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ஹாய் ninjupappu, உங்களோட லிப்ஸ் பேச்சஸ் போறதுக்கு நீங்க தினமும் காலையில் எழுந்ததும் லிப்ஸ்க்கு லேசா ஸ்க்ரப்பிங்கும், பிறகு அடிக்கடி க்ளிசரினும் அப்ளை செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதால் அந்த பேச்சஸ் நீங்கி விடும். பன்னீரும் தடவலாம். இது எல்லாவற்றையும் விட பாலாடை மிக நல்ல பலன் தரும். லிப் ஸ்டிக் அதிக நேரம் உதடுகளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். லிப்க்ளாஸ் உபயோகமும் இந்த பேச்சஸ் நீங்கும்வரை வேண்டாம்.வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக லிப்ஸ்டிக்கை பேபி ஆயில் மூலம் ரிமூவ் செய்து பாலாடை தடவுங்கள். மீண்டும் உதட்டின் நிறம் மாறிவிடும்.

ஹாய் Indian, பிங்க் லிப்ஸ் மறைவதற்கு அதிகமான டீ, காப்பி குடிப்பதும், சூரிய ஒளி உதட்டின் மீது படுவதும் கூட காரணமாக இருக்க முடியும். நல்ல வைட்டமின் E ஆயிலை தடவுவது இப்படி நிறம் மாறிவிட்ட உதடுகளுக்கு நல்ல மருந்து. அதைவிட பன்னீர் ரோஜாவின் இதழ்களின் சாறு மிகவும் நல்லது. நல்ல நிறம் கொடுக்கும். மஹேஷ்குமார் சொன்னதுபோல் பீட்ரூட் சாறும் தடவலாம். லிப் க்ளாஸ், லிப்ஸ்டிக் போன்றவை தரமானதாக தேர்ந்தெடுங்கள். அதிகமான லிப் க்ளாஸ், வாசலின் உபயோகம்கூட உதடுகளை கறுக்க வைக்கும்.

ஹாய் சுஸ்ரீ, எப்படி இருக்கீங்க? நீங்க உங்க பொண்ணோட சென்சிட்டிவ் ஸ்கின் பத்தி சொன்னது நல்லாவே ஞாபகம் இருக்கு. ஏன்னா என் பையனுக்கும் கூட கஸ்தூரி மஞ்சள் தடவி அப்படி ஒத்துக்காம போயிருக்கு. உங்க பொண்ணுக்கு இப்ப 10 வயசுதான் ஆகுது. அதனால்தான் எனக்கு ஹேர் ரிமூவிங் சஜஷன் கொடுக்க ரொம்ப யோசனையா இருக்கு. ஆனால் அவளோட ப்ராப்ளத்தை புரிஞ்சுக்க முடியுது. சின்ன பெண்ணின் சருமம் ரொம்பவே மென்மையா இருக்கும். நான் இங்கே உங்களுக்கு ஏற்ற ஹேர் ரிமூவிங் முறைகளைப் பற்றியும் சொல்கிறேன். நீங்களே யோசிச்சு எது சரின்னு முடிவு பண்ணுங்க. இனிமேல் முடி வளருவதை முற்றிலும் குறைக்க முடியாது. இயற்கை முறையில் சரியான வைத்தியமும் இல்லை.

ஹேர் ரிமூவிங் க்ரீம் போன்றவை உபயோகிப்பது இந்த வயதிற்கு உகந்தது அல்ல. ஹெர்பல் க்ரீம்கள் இருந்தாலும், ஹேர் க்ரீம் போட்டு துடைக்கும்போது ஸ்கின் ரொம்பவே பாதிப்படையும். அதுவும் குழந்தைகள் சருமத்தில் கருமை நிறத்தினை உண்டு பண்ணவும் கூடும். எபிலேட்டர், வேக்சிங் இரண்டுமே அவளுக்கு மிகவும் வலி தரக்கூடிய விஷயமென்றாலும் வேக்சிங் ஒரே முறை வலியில் முடிந்துவிடும். எபிலேட்டர் கொஞ்சம் கொஞ்சமாக முடியை அகற்றுவதால் வலியைக் கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும். அவள் வயதிற்கு நீங்கள் அதனை எதிர்பார்க்க முடியாது. வேக்சிங் செய்வதாக இருந்தால், வேக்சிங் ஸ்ட்ரிப்ஸாக வாங்கி உபயோகித்தால் ஹைஜீன் தொந்தரவு இருக்காது. மேலும் உபயோகிப்பது எளிது. ஆனால் எப்போது வேக்சிங் செய்வதாக இருந்தாலும், செய்யப் போகும் இடத்திற்கு நன்றாக பேபி பவுடர் அப்ளை செய்துவிட்டு , பிறகு ஸ்ட்ரிப் யூஸ் செய்ய வேண்டும். வேக்சிங் செய்த உடனேயே, பேபி ஆயில் கொண்டு அங்கே ஒட்டியிருக்கும் வேக்ஸை அகற்ற மெதுவாக தடவி,பேபி லோஷனை நன்றாக மசாஜ் செய்து துடைத்து விடுங்கள். எபிலேட்டருக்கும் இதே முறையினை கடைபிடியுங்கள். இது மிகவும் முக்கியம். ஏனென்றால் ஸ்கின் இழுபடுவதால், தொய்வாகாமல் எப்போதும் ஸ்கின்னை இளமையுடன் வைத்திருக்க இந்த விஷயங்களை செய்வது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் வயது ஆகும்போது ஸ்கின்னில் சுருக்கம் ஏற்பட்டுவிடும். இது எல்லாவற்றையும்விட ஒன்றிரண்டு முடிகள் மட்டுமென்றால் நீங்களே த்ரெட்டிங் செய்துவிடலாம். அது இன்னமும் சுலபம். ஆனால் அதற்கும் பவுடர், க்ரீம் அப்ளை செய்வது அவசியம். எதுவும் சந்தேகம் இருந்தால் தெரிவியுங்கள்.

தேவா எப்படி இருக்கீங்க,பையன் சுகமா?

தேவா, என் அக்கா ஒருவருக்கு உதட்டின் இருபக்கங்களிலும் (சிரித்தால் கோடு போல விழும் இடத்தில்) கருப்பாக இருக்குனு சொன்னாங்க, அந்த கருமை போக என்ன வழி, ரொம்ப நாளா என்னன்மோ செய்தாங்க ஒன்னும் பிரயோஜன‌மில்லை..ஏதாவது வழி சொன்னிங்கனா அவங்களும் சந்தோஷபாடுவாங்க, நானும் கொஞ்சம் சந்தோஷமா இருப்பேன்!! (அவங்க நல்லா சமைப்பாங்க:))

ஹாய் தேவா,
ரொம்ப ஆவலா, காலைல முதல் வேலையா உங்க பதில் இருக்கா என்றுதான் பார்த்தேன்!. நிச்சயமா நீங்க என்னை சந்தோஷப்படுத்திட்டிங்க, தேங்ஸ் தேவா! உங்க பையன் நலமா?! உங்களுக்கு நல்ல ஞாபகசக்தி தேவா!!

ஆமாம், ஹேர் ரீமூவிங் க்ரீம் போட எனக்கும் சங்கடமாக இருந்தது, ஏனென்றால் நான் ரொம்ப நாளா (காலேஜ் படிக்கும் காலத்தில்) அந்த மெத்தட்தான் ஃஃபாலோ பண்ணேன், இப்ப அன்ட்ரார்மில் ஸ்கின் கலர் கருப்பாக நிறம் மாறிவிட்டது, அதுக்கு இனிதான் ஏதாவது வீட்டு வைத்தியம் செய்து பார்க்கனும். :) எபிலேட்டர் ஏன் யோசிச்சேன்னா, அதில் செய்யும்போது, பிறகு வளரும் முடிகள் எல்லாம் ரஃபா இல்லாம, சாஃப்ட்டா வரும் என்று நீங்க எங்கோ சொன்னதா ஒரு நியாபகம், அதனாலதான். ஆனால், நான் எபிலேட்டர் இதுவரை யூஸ் பண்ணி பார்க்காததால், அதிலே எந்த அளவு வலி இருக்கும் என்ற விஷயம் எனக்கு தெரியாது, அதுவும் சின்னபெண்ணுக்கு, எப்படி இருக்குமோ என்று ஒரு பயம். (எனக்கு ஒரு எபிலேட்டர் வாங்கி அதை உபயோகப்படுத்தி பார்க்கனும் என்று, ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்கேன். பார்க்கலாம்.) அதான் உங்களிடம் கேட்டுக்கிட்டேன் தேவா. நீங்களும் என் சந்தேகத்தை நல்லா விளக்கமா எழுதி சொல்லி இருக்கிங்க. ரொம்ப நன்றி. நீங்க சொல்வதை வைத்து பார்க்கும்போது, அதுவும் சும்மா ஓரிரண்டு முடிகளுக்கு என்பதால், த்ரெட்டிங்கே சரி என்று நினைக்கிறேன். ஆனால் என்ன? இப்ப தெரெட்டிங் செய்வது எப்படின்னு நான் கத்துக்கனும்! இதுவரை ட்ரை பண்ணியது இல்லை, எனக்கு ஐபுரோக்கு பார்லர்தான் போவேன். சோ, ஹவ் டு டூ த்ரெட்டிங் வீடியோஸ் தேட தொடங்கிவிட்டேன்! :) மீண்டும் ரொம்ப நன்றி தேவா.

ஏற்கனவே பதிவு பெரிசா போய்கிட்டு இருக்கு, ஆனால் இன்னும் ஒரே ஒரு கேள்வி இருக்கு தேவா. இதுவும் என் பெண்ணுக்குதான். அவளுக்கு மூக்கின் மேல் (மூக்கு, கன்னத்தை தொடும் இடுக்கில்) ஒரு கருப்பு புள்ளி ஃபார்ம் ஆகி இருக்கு. மச்சம் போல‌ இருக்கு பார்க்க, ஆனா கரும்புள்ளியா தெரியுது. இதுக்கு என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் தேவா?! உங்களோட அழகு குறிப்புகள் பவுடர் பொருட்கள் வாங்கி, எல்லாம் சேர்த்து கலந்து வைத்திருக்கேன். வாரம் ஒரு முறை அவளுக்கு முகத்தில் போட்டு கழுவ செய்கிறேன். வேற என்ன பண்ணலாம் தேவா? அப்படியே, அவளுக்கு தினமும் காலை, மாலை என முகம் கழுவும் பழக்கத்தை கொண்டுவர விரும்புகிறேன். (முகம் எப்பவும் கொஞ்சம் டல்லாக இருப்பது மாதிரி இருக்கு, இப்ப கரும்புள்ளி வேற வந்திருச்சி! :( இப்ப காலையில் ப்ர‌ஷ் பண்ணும்போது, வெறும் நீரினால் முகம் கழுவுகிறாள். அதுக்கு பதில் எந்த மாதிரியான பேஸ் வாஷ் யூஸ் பண்ணலாம், ஏதாவது கிட்ஸ் ஸ்கின்க்கு சூட்டபிள் ஆகிற மாதிரியான சோப்/பேஸ் வாஷ் ரெக்கமண்ட் பண்ணுங்கள் தேவா. மீண்டும் நன்றி.

அன்புடன்
சுஸ்ரீ

Thanks a lot deva madem.. I'll try this easy way.. once again thanks a lot madem...

ஹாய் தேவா மேடம் எப்படி இருக்கீங்க?
பேசி நாளாச்சு போங்க....
முகத்திற்க்கு அழகு சேர்ப்பதில் ஒன்று உதடு.அதற்க்கான டிப்ஸை அழகான முறையில் சொல்லி இருக்கின்றீர்கள்.முக்கியமாக பற்கள்.
இது எல்லாமே எல்லோருக்கும் மிகவும் உபயோகமானதே.நானும் ரூட் கெனால் ட்ரீட்மெண்ட் செய்திருக்கின்றேன்.பல்லின் ஒரிஜினல் தோற்றத்திலேயே(கடவாய் பல்)கேப் போட்டு இருக்கின்றேன்.இரண்டு வருடங்கள் ஆக போகின்றது.இது வரை ஏதும் செக் செய்து கொள்ளவில்லை.
அது ஒன்றும் பிரச்சனை இல்லையே.....இது வரை ஏதும் வலி,தொந்தரவு என ஏதும் இல்லாததால் இந்த அலட்ச்சியம் அவ்வளவுதான்.
நல்ல நல்ல விஷயங்களை தரும் தங்களுக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தேவா மேடம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் தேவா மேடம் உங்கள் குறிப்புகள் ரொம்ப உபயோகமா இருக்கு,
facial பண்ணும் போது face pack போட மஞ்சள் மற்றும் சிலது சேர்த்து
அரைக்கனும்னு அறுசுவைல குறிப்பு படிச்சு இருக்கேன் அது இப்போ இல்லை,
அது நீங்க் வச்சுருந்தால் கொஞ்சம் அனுப்புங்க...
நிஷா

Live every moment

உங்க அக்காவிற்கு வந்திருக்கும் அந்த உதட்டுப் பக்க கருமையான சுருக்கங்களை முற்றிலும் நீக்குவது என்பது இயலாது. ஆனால் தெரியாத வண்ணம் மறைக்க முடியும். L'Oreal அல்லது Olay வின் Anti Wrinkle க்ரீமை வாங்கி தினமும் இருவேளை தடவி வந்தால் சுருக்கங்கள், கருமை மறைந்துவிடும். இப்படி க்ரீம் வாங்கும்போது Anti Ageing டைப் க்ரீமாக இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். இது தவிர அந்த இடங்களை அடிக்கடி தேய்க்காமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். வைட்டமின் E ஆயிலைக் கொண்டும் மசாஜ் செய்யலாம். இவை தவிர, உங்கள் அக்கா அதிகம் வெயிலில் செல்லாத ஒரு வாரமாக தேர்ந்தெடுத்து, அந்த ஒரு வாரம் மட்டும் தினமும் Retinol A க்ரீமை தடவி வந்தால் அந்த கருமை நிற தோல் உரிந்து விடும். புதிதாக தோல் கருமை இன்றி இருக்கும். ஆனால் இந்த க்ரீம் உபயோகப்படுத்தும் போது எக்காரணம் கொண்டும் வெயிலில் செல்லக்கூடாது. நல்லா கருமை நீங்கி சரியானதும் அக்காவை சந்தோஷமா விருந்து சமைக்க சொல்லி ஒரு வெட்டு வெட்டுங்க. அப்படியே இங்கே எனக்கும் ஒரு பார்சல்.

உங்க பொண்ணுக்கு வந்திருக்கும் கரும்புள்ளியை நீக்க, ஸ்கின் டாக்டரைப் பார்ப்பதே நல்லது. மிகவும் அவசியமும் கூட. ஏன் இப்படி கரும்புள்ளி வந்தது என்ற காரணத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு இப்படி சிறு வயதில் வரும் கரும்புள்ளிகள் என்ன செய்தாலும் போகாது. லேசர் முறையில் நிரந்தரமாக நீக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.அதுவும்கூட பெரிய பெண்ணாகியதும் செய்தால் போதும். நல்ல ஒரு நிபுணரிடம் சென்றுதான் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும். உங்கள் பெண்ணுக்கு தினமும் இருவேளை முகம் கழுவ ஜான்சன் பேபி ஃபேஸ் வாஷை உபயோகப்படுத்துங்கள். மைல்டாக இருக்கும். இது தவிர, முகம் பளிச்சென்று இருக்க தலை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தலை வறண்டாலும் முகம் பொலிவிழக்கும். முகத்திற்கு தயிர் கலந்த பேக்கை தினமுமே போட்டு விடலாம். ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை குளிக்கும் முன்பு தடவி ஊறவைத்துப் பிறகு குளிக்க வைக்கலாம்.
Note: த்ரெட்டிங் செய்ய வராவிட்டால் பிளக்கரைக் கொண்டும் முடியினை நீக்கலாம்.ஆனால் ஒன்றிரண்டு முடிகளுக்கு மட்டுமே பிளக்கர் சரிவரும். முடி அகற்றும் குறிப்புகள் உள்ள லிங்க் இதுதான்.
http://www.arusuvai.com/tamil/node/9059

தங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றி. வருடம் ஒரு முறையேனும் பற்களை செக்கப் செய்து கொள்வது நல்லது. ரூட் கெனால் ட்ரீட்மெண்ட் செய்து கொண்ட பிறகு இது மிகவும் அவசியம். இப்படி செக் செய்து கொள்வதன் மூலம் சில பிரச்சணைகளை வரும் முன் காக்கலாம். வலியிலிருந்தும் தப்பலாம். இது தவிர ரெகுலராக தினமுமே Floss உபயோகிப்பது அவசியம். இதன் மூலம் பல் இடுக்கில் உணவுத் துகள்கள் சேராமல் பறகள் ஆரோக்கியத்துடன் இருக்கும். ரூட் கெனால் ட்ரீட்மெண்ட் செய்த்ததும் பிரச்சணையின்றி இருக்கும்.

இதுதான் அந்த லிங்க்
http://www.arusuvai.com/tamil/node/3677

ஹாய் தேவா,
நான் REVLON colorstay stick type lipcolor வாங்கினேன்,, என் பிரைச்சனை இது தான் ஒரு மணி நேரம் தான் உதடு காயாமல் இருக்கு, பிறகு கலர் உதட்டில் நிறம் மாறிவிடுகிறது மேலும் அபயே காய்ந்து போய்விடுகிறது.. நீங்க இந்த பதிவில் சொன்ன மாதிரி moisturising lotion போட்டேன்.. கலர் மாறியதே தவிர. உதடு காய்ந்து போய்விட்டதுஇதற்கு தீர்வு என்ன ?? கொஞ்சம் சொல்லுங்களேன்.. அதிக பணம் போட்டு
வாங்கினேன்.. ஆபீஸ் ல சொன்னாக.. பலர் கு நல்லா இருக்கு .... எனக்கு தான் இந்த பிரச்னை.. lipcolor maarama melum lips kaayamal irukka uthavungalen

உங்க பிரச்சணைக்கு நீங்கள் கல்ர்ஸ்டே லிப்ஸ்டிக்குடன் அதற்கு பொருத்தமான லிப் கிளாஸ் உபயோகிக்காமல் இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன். கலர்ஸ்டே போன்ற லிப்ஸ்டிக்குகள் வாங்கும்போது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை இங்கே சொல்கிறேன். நீங்கள் லிப்ஸ்டிக் வாங்கும்போது அதே நிறத்தில் உள்ள லிப் கிளாஸ் வாங்குங்கள். லிப்ஸ்டிக் போட்டு 2 நிமிடம் கழித்து லிப்கிளாஸ் உபயோகியுங்கள். இதனை ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு அடிக்கடி ஒரு கோட்டிங் லேசாக கொடுக்கலாம். இந்த எக்ஸ்ட்ரா கோட்டிங் கூட நீங்கள் தண்ணீர் குடிப்பது, காபி,டீ அருந்துவது, சாப்பிடுவது போன்றவற்றால் பளபளப்பான ஈரப்பதம் போகாமல் இருப்பதற்குதான். எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் இருந்தால் நிச்சயம் லிப்ஸ்டிக் அழியாமல் அழகாக இருக்கும். ஆனால் அது முடியாது என்பதால்தான் இந்த எக்ஸ்ட்ரா கோட்டிங் தேவைப்படுகிறது. கலர் மாறி தோற்றமளிப்பதற்கும் அதுவே காரணம். லிப்ஸ்டிக் அப்ளை செய்த பின்பு சாப்பிடாமல், உதட்டை அழுத்தி மூடாமல் இருந்துப் பார்த்தால் இதனை எளிதாக தெரிந்துக் கொள்ளலாம். ஏனென்றால் அப்போது லிப்ஸ்டிக் முதலில் போட்ட நிறத்திலேயே நிச்சயம் ஈரப்பதம் மாறாமல் இருக்கும். அதுவும் தவிர நீங்கள் வாங்கின லிப்ஸ்டிக் மேட் பினிஷாக இருந்தால் எப்போதுமே பளப்பளப்பாக இருக்காது. க்ளாசி லிப்ஸ்டிக்தான் பளபளப்பாக இருக்கும். நீங்கள் வாங்கியிருக்கும் கலர்ஸ்டே எந்த வெரைட்டி என்றும் பாருங்கள்.

தேவா ரொம்ப நன்றி, நீங்க சொன்ன க்ரீம் வாங்கி ட்ரை பண்ண சொல்றேன்.
அப்படியே நானும் கொஞ்சம் விருந்துக்கு அடி போடறேன் :) உங்களுக்கும் சேர்த்து :).

டியர் தேவா மேடம் நான் இதுதான் உங்களுடன் பேசுவது முதல் தடவை.ஆனால் உங்களின் எல்லா பதிவுகளையிம் தவறாமல் படிப்பேன்.
என் மாமா பொண்ணுக்கு முகவாய் அதாவது மேல்,கீழ் வாய்பகுதி (உதடுகள் அல்ல)மட்டும் முகத்தை விடவும் சற்று கருமையாக உள்ளது.இதற்கு என்ன கிரிம் பயன்படுத்தினால் சரியாக இருக்கும்.அவள் தற்சமயம் பேர் அண்ட் லவ்லி பயன்படுத்தி வருகிறாள்.வயது 27தான் ஆகிறது.இதற்கு Lorel anti wrinkle கிரிம் பயன்படுத்தினால் நல்லதா?.
தேவா என் இந்த சந்தேகங்களை தீர்த்து வைங்களேன்.

உங்களுடைய உடனடி பதில் கு நன்றி தேவா,
நீங்க சொன்ன மாதிரி நான் லிப் க்ளோஸ் வாங்குறேன்.. எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் இந்த மாட்டே பினிஷ்(matte finish) னா என்ன? மேலும் எனக்கு அங்க அங்க ப்ளக் பட்செஸ்(black patch) இருக்கு . i bought olay regnerist serum அதை எப்போ எப்படி உபயோகிப்பது நு சொல்லுங்களேன்.. என்ன நு தெரியல .. நான் மேக்கப் போட்ட கொஞ்ச நேரத்துல ஒரு மாதிரி சொர சொர பா வேர்க்குரு மாதிரி இருக்கு.. அதை எப்படி போக்குவது.. நெறைய கேட்கிறேன்.. சிரமத்துக்கு மன்னிக்கவும்.. நானும் நினைப்பேன் ..அவங்களுக்கு நெறைய வொர்க் இருக்கும் .. அதனால கூகுளே பார்ப்போம்னு .. ஆனா உங்க பதில் எனக்கு பொருந்துது.. should we apply sun screen and then foundation or vice versa.. lipcolor colorstay nu solraga.. why after drinking water it goes away..

எப்படி இருக்கீங்க? நீங்க உங்க மாமா பொண்ணுக்கு இருக்குன்னு சொன்ன பிரச்சணை இந்தியாவில் குறிப்பா தமிழ்நாட்டில் உள்ள நிறைய பேருக்கு இருக்கு. இதுக்கு ஆண்டி ரிங்கிள் க்ரீம் எந்த விதத்திலும் உதவாது. இப்படிப்பட்ட ஸ்கின் டிஸ்கலரேஷன் அல்லது தோல் நிறம் சில இடங்களில் மட்டும் வேறு நிறத்தில் உள்ளவர்களுக்கு தயிர் கலந்த பேஸ் பேக்கை தினமும் போட்டு ஊறவைத்து முகம் கழுவுவதுதான் மிகச்சிறந்த மருந்து. க்ரீம் என்றால் Fade out தான். இதுதான் ஸ்கின்னில் அன் ஈவன் கலரை நீக்கும். இது ஒரு வகை பிக்மெண்டேஷன் போன்றதுன்னு சொல்லலாம். அதனால்தான் இதுக்கு பிக்மெண்டேஷன் க்ரீம்ஸ் நல்ல பலனைத் தரும். பேர் அண்ட் லவ்லி பத்தாது. தயிரை விட சிறந்த மருந்து இதுக்கு இல்லைனுதான் சொல்வேன். தயிருடன் எலுமிச்சை, பன்னீர் மற்றும் நான் என்னுடைய பயனளிக்கும் குறிப்புகள் பகுதியில் சொன்ன பொடி சேர்த்து உபயோகிக்கலாம். பொடி தயாரிக்க முடியாவிட்டால் கடலைமாவு கூட போதும். இது தவிர குளிக்க செல்லும் முன் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை குறிப்பாக வாயை சுற்றி மசாஜ் செய்வதும் மிகவும் நல்லது.

எரிக் சொன்ன மாதிரி எனக்கும் கூட இருக்கு.... நீங்க சொல்லியிருக்க பொடி இங்க என்னால தயாரிக்க முடியாது... பொருட்கள் கிடைக்காது.... தயிர் வெச்சு வேற என்ன பேஸ் பேக் போடலாம்னு சொல்லுங்களேன்..... Fade out க்ரீம் என்பது என்ன...? அப்புறம் ரொம்ப சில்லியா இருக்கும் இந்த டவுட்... எந்த தயிர் வேணாலும் யூஸ் பண்ணலாமா....? என் வீட்டில் skimmed yogurt or low fat yogurt தான் வாங்குவேன்....

வித்யா பிரவீன்குமார்... :)