கரப்பான் பூச்சிகளை ஒழிக்க என்ன செய்வது.....?

நான் Saudi Arabia-ல் வசித்து வருகிறேன்.... என் சமையலறையில் சின்ன சின்ன கரப்பான்பூச்சிகள் நிறைய இருக்கிறது.... வாரம் இரண்டு முறை அத்தனையும் துடைத்து எடுத்து ஸ்பிரே அடித்து சலித்து விட்டது.... சமைக்கும் இடம் என்பதால் அடிக்கடி spray அடிக்கவும் பயமாக இருக்கிறது......

தயவு செய்து ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்......

வித்யா கரப்பான் பூச்சி ஒழிக்கறதுக்கு பத்தி சில டிப்ஸ் இந்த லிங்கல இருக்கு பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/3309
http://www.arusuvai.com/tamil/node/6305

சகோதரியே! நான் துபாயில் வாசிக்கிறேன். இங்கும் இதே தொல்லைதான். ஓர் எளிய வழி. கேரம் போர்ட் பவுடர் (போரிக் ஆசிட் பவுடர்), பால் பவுடர், சிறிது சர்க்கரை இவை மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குலைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சமையல் அறையில் பல இடங்களிலும் வையுங்கள். ஒரு வாரத்தில் எதுவுமே இருக்காது. மற்றபடி, பூச்சி மருந்து வகைகளெல்லாம் ஒரு பயனும் கிடையாது.

Vinoja ரொம்ப நன்றி..... 2 link-மே useful la இருக்கு.....

வித்யா பிரவீன்குமார்... :)

அப்துல் அண்ணா ரொம்ப நன்றி.... கண்டிப்பா செய்து பார்த்துடறேன்.....

வித்யா பிரவீன்குமார்... :)

brother thank you for your nice & easy tips, i will use it in my home & i give a reply to you.

எல்லாம் மிக்ஸ் செய்து வைத்த ஒரு நாளில் உருண்டை காய்ந்து விடுகிறதே..... அதை அப்படியே விட்டு ஒரு வாரம் பிறகு மாற்றலாமா.... அல்லது காய்ந்தவுடன் மாற்றி விட வேண்டுமா....?

வித்யா பிரவீன்குமார்... :)

சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.... Please....

வித்யா பிரவீன்குமார்... :)

nanum saudi than ennaku athey pbm than irunthathu ,nanum antha urundai ellam try panni parthuten oru useum illai karapanku super marunthu onnu oiruku atha na inga bhatkal kadaila than vangunen,neinga saudila yenga irukeinga ,antha marunthoda name eluthuren MEI ZHANG QUING ethu than antha marunthoda name enn asiripa iruka but nallamarunthu golden color packetla iurkum unga veetuku pakathila ulla chinna supermarketla kidaikum kettu parunga nite atha lesa ella edathilaium pottu vidunga pillainga kaila paturama puchi ellam seythu vilunthu kidakum.try this.

வித்யா நான் கரப்பான்பூச்சி தொல்லைக்கு Baygon 24hours Roach killer உபயோகிக்கறேன். இப்போது தொல்லையே இல்லை. ஒரு பாக்கெட்டில் 6 சின்ன சோப் சைசில் கெப்ச்யூல்கள் இருக்கும். அவற்றை கரப்பான் பூச்சி அதிகம் வரும் இடங்களில் வைத்து விட்டால் கரப்பான் பூச்சிகள் அழிந்துவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றினால் போதும். சூப்பர்மார்க்கெட்டுகளில் தேடிப்பாருங்கள் கிடைக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஃபிரிசில்லா...... நானும் கோபார் தான்... எந்த கடைல வாங்கனும் னு சொல்லுங்க... ரொம்ப கடுப்பா இருக்கு... நான் உருண்டை ட்ரை பண்ணினேன்... அது ஒரே நாளில் காய்ந்து விட்டது... ஒரு வாரமா உடம்பு சரியில்லாம கொஞ்சம் சரியா க்ளீன் பண்ண முடியல... இப்போ பார்த்தா ரொம்ப அதிகமாயிடுச்சு... என் வீட்டுகாரர் என்ன எங்க பார்த்தாலும் பூச்சியா இருக்குனு சொல்றார்.. எனக்கு கஷ்டமா இருக்கு....

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்