பட்டர்ஃப்ளை கார்விங்

தேதி: June 3, 2010

5
Average: 4.3 (10 votes)

 

சிறிய கேரட்
கத்தி
கூர்மையான கம்பி (வரைவதற்கு)
வெஜிடபிள் பீலர் (vegetable peeler)

 

பட்டர்ஃப்ளை கார்விங் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கேரட்டை சமமான இரண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.
இப்போது கேரட்டின் மேல் பாகம் துண்டை மட்டும் எடுத்து நீளவாக்கில் இரண்டு துண்டாக நறுக்கி வைக்கவும். அதில் ஒரு துண்டு கேரட்டை மட்டும் எடுத்து பீலரை கொண்டு மெல்லியதாக சீவவும்.
இதுப்போல் ஒரே அளவாக, மெல்லியதாக கேரட்டை சீவி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை படத்தில் உள்ளது போல் சேர்த்து வைத்து கூர்மையான முனையுடைய கம்பியால் பட்டர்ஃப்ளையின் இறக்கைகளை வரைந்துக் கொள்ளவும். வரைந்த பகுதியை தவிர மற்ற பாகத்தை கத்தியால் வெட்டி எடுத்து விடவும்.
மீதமுள்ள கேரட் துண்டில் சிறிது தடிமனான துண்டாக நறுக்கி எடுத்து கொண்டு, தலையுடன், உடல் பாகம் சேர்ந்து வருவது போல் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். பட்டர்ஃப்ளையின் உணர்கொம்புகள் மெல்லியதாக குச்சிப்போல் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு இறக்கைகளின் மேல் முனையில் உணர் கொம்புகளை வைத்து, அதன் மேல் உடற்பகுதியை வைக்கவும்.
பிறகு இறக்கைகளில் படத்தில் உள்ளது போல் சிறிது இடைவெளிவிட்டு மூன்று மூன்று துளைகள் போட்டுக் கொள்ளவும்.
கேரட்டை கொண்டு மிகவும் எளிமையாகவும், சுலபமாக செய்யக்கூடிய பட்டர்ஃப்ளை கார்விங் இது.
இந்த பட்டர்ஃப்ளை கார்விங் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் செண்பகா... ரொம்ப அழகுங்க. ஒரே பீஸ்'ல செய்தீங்கன்னு நினைச்சேன், 2 பீஸ் ஒன்னு போல் வெட்டி இருக்கீங்க. சூப்பரா இருக்கு. மாலே போன பிறகு பார்ட்டிக்கு பயன்படும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

senbaga akka, migavum arumaiyana butterfly .nan arusuvaiku poothidu. muthalil news paper kondu craft seithinga. ippa vegetables. ninga seiethu kattiya paper wall hanging, paravai koondu , jewels box itheyellam nanoom seithu parthein . romba allaka vanthadu. simply super akka.

shagila

ஹை! வண்ணத்துப்பூச்சி. அழகா இருக்கு செண்பகா.
செய்து பார்த்துப் படம் அனுப்பினா இங்க போடுவீங்களா?

செண்பகா மேடம் உங்க பட்டர்ஃப்ளை கார்விங் ரொம்ப அழகாகவும், ஈசியாவும் இருக்கு. நான் இந்த கார்விங் செஞ்சு பார்த்துட்டு சொல்றேன். இன்னும் இதுமாதிரி பல கிராஃப்ட் சொல்லி கொடுங்க.

காரட் ப்ட்டர்ப்ல் ரெம்ப நாள் இருக்குமா

எப்படி இருக்கிங்க? வாவ் உங்க கைவினையிலும், கார்விங்கிலும் அசத்திட்டிங்க. இது நாம் அன்றாடம் உபயோகிக்கும் கத்தியில் செய்யலாமா, இல்லை இதற்க்கு ஏதாவது ஸ்பெஷல் கத்திகள் இருக்கா?
குட்டி பாப்ப எப்படி இருக்கா?

ஹாய் வனிதா/ஹாய் செண்பகா... ரொம்ப அழகுங்க./ என்னையதான் சொன்னீங்க:) உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. பார்ட்டியில் செய்து அசத்துங்க:)

senbagababu

எப்படி இருக்கீங்க? என்னுடைய எல்லா க்ராஃப்டையும் பாராட்டியதற்கு நன்றி. நீங்க செய்து பார்த்த க்ராஃப்ட்டை போட்டோ எடுத்து அனுப்புங்களேன். அறுசுவையில் வெளியிடலாம்:)

senbagababu

புனிதா எப்படி இருக்கீங்க? என்னை பாராட்டியதற்கு நன்றி. என்ன புனிதா இப்படி சொல்லிட்டீங்க. செய்து பார்த்து போட்டோ அனுப்புங்க போட்டுடலாம். வேண்டும் என்றால் உங்க போட்டோவையும் அனுப்புங்க அதை சேர்த்து போட்டுடலாம். நாங்களும் பார்ப்போமுல:)

senbagababu

பாராட்டிற்கு நன்றி. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க. உங்க பதிலை எதிர் பார்க்கிறேன்.

ஹாய் பொன்குரு எப்படி இருக்கீங்க. உங்களிடம் முதல் முறையாக பேசுகிறேன் உங்க பெயர் வித்தியாசமா நல்லா இருக்கு. என்னை பாராட்டியதற்கு நன்றி. இந்த பட்டர்ஃப்ளை ப்ரிட்ஜில் வைச்சிருந்தால் ஒரு நாள் இருக்கும்.

நன்றி விஜி எப்படி இருக்கீங்க? குழந்தைகள் எப்படி இருக்காங்க. பாப்பா ரொம்ப நல்லா இருக்கா. கார்விங் செய்வதற்கு என்றே நிறைய டூல்ஸ் இருக்கு. ஆனா நான் தினமும் வீட்டில் உபயோகபடுத்தும் கத்திய வைத்து தான் செய்தேன்.

senbagababu

கிண்டல் பண்றீங்க செண்பகா. விரைவில் படம் அனுப்பி வைக்கிறேன். பார்த்துப் பயந்து விடப் போறீங்க.

செண்பகா,மிகவும் எளிமையாக,நேர்த்தியாக,அழகாக பண்ணியிருக்கீங்க....!!!
பாராட்டுக்கள்...இன்னும் இதுபோல நிறைய பறக்கவிடுங்க அறுசுவையில..

இந்த பட்டர்ப்ளையை நவீனாவுக்கு விளையாட குடுத்தீங்களா?:-)

இல்ல சாப்பிட்டுட்டாளா? :-)

பாராட்டுக்கள்..:-
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரொம்ப அழகு,அதெப்படி அதனோட அண்டென்னாவை இவ்வளவு அழகாக வளைச்சீங்க,சூப்பர்.கார்விங் செய்யும் பொழுது உபகரணங்களை கவனமாக பயன்படுத்தவும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

It is very good.pls tell me how to delivery my favorite notes.

Hello Akka , Neega Romba alaga pannirukinga akka,
Unga creativity ku oru oh podallam ... innum try pannunga... u will be getting better and better ....

Pls i don't know how type in tamil pls help me.. how to write in tamil...

Frineds .....

Thankyou ..

GayathriElango
Be Happy

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta