கேப்சிகம் இறால் ஃப்ரை

தேதி: June 4, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (9 votes)

 

இறால் - 25
கேப்ஸிகம் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெள்ளை நல்ல மிளகு - 2 தேக்கரண்டி
எலுமிச்சை - ஒன்று
ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
ஆயிஸ்டர் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி(optional)
அஜினோமோட்டோ உப்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 3
உப்பு - தேவைக்கு


 

இறாலை சுத்தப்படுத்தி அதனுடன் வெள்ளை மிளகு, எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், நசுக்கிய பூண்டு மற்றும் கேப்ஸிகம் போட்டு வதக்கவும்.
பாதி வதங்கியவுடன் அஜினோமோட்டோ உப்பு, சாஸ், மிளகாய் தூள், உப்பு போட்டு இறாலையும் சேர்க்கவும்.
இறால் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.
சுவையான கேப்சிகம் இறால் ஃப்ரை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு அட்மினுக்கு,
என் இந்த குறிப்பை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

Save the Energy for the future generation

உங்கள் இறால் கேப்சிகம் ஃப்ரை பார்க்கவே அழகாக இருக்கிறது. என் கணவருக்கு இறால் மிகவும் பிடிக்கும். செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

Receipe is very well presented as well as the photos. We try will try and let you know results - Kumar

அன்பு சங்கரி,
உங்கள் கணவருக்கு செய்து கொடுங்க . கண்டிப்பாக அவருக்கு பிடிக்கும்.

Save the Energy for the future generation

அன்பு குமார்,
நீங்க இதை முயன்று பாருங்கள். உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

Save the Energy for the future generation

அக்கா எப்படி இருக்கீங்க? குறிப்புகளா கொடுத்து அசத்திட்டீங்க போங்க! இப்பதான் ஒவ்வொண்ணா பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னும் நிறைய கொடுங்க ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்.
நாலைக்கு மார்க்கெட்டில் ப்ரான் வாங்கிட்டு வந்து இதை செய்யப்போறேன். நிச்சயமா நல்லாத்தான் இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவி,
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கவி. ஊருக்கு போயிட்டு நல்ல குறிப்புகளோடு வருகிறேன். முட்டை தீயல் குறிப்பு ரெடி. சீக்கிரமாக அனுப்புகிறேன்.

Save the Energy for the future generation