கல்லூரி மற்றும் ஸ்கூல் தோழிகளை சந்திக்க ஆவல்!

நான் கிரேஸ்ரவி என்னுடைய ஓல்ட் பெயர் நாகி பிறந்த வூர் தஞ்சாவூர்.குந்தவை நாச்சியார் கல்லூரியில் 86 -89 எகாநோமிக்ஸ் ஆங்கில வழி படித்தேன்.என்னுடன் படித்த தோழிகள் யாராவது இந்த அறுசுவையில் மெம்பராக இருந்தால் தொடர்பு கொள்ளவும்.அறுசுவை மெம்பர்களுக்கு இப்படி ஒரு ஆசை இருந்தால் இதன் மூலம் உங்கள் தோழிகளையும் அழைக்கவும்

காயத்ரி,லக்ஷ்மி, தேவி, கௌரி,சசிகலா,ஜெசிந்தா,மீனா, யாராவது அருசுவைய பார்கிறீங்கள! ஓடி வந்து பதில் போடுங்க, அறுசுவை மெம்பெர்ஸ் யாருகாவது என் தோழிகள் யாராவது தெரிந்தால் சொல்லுங்கப்பா!

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

neenga ean ennaia unga frinda nenaikka koodaathu.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அறுசுவையில் வருபவர்கள் எல்லோரும் நல்ல தோழிகள் தான்.அறுசுவை மூலமாக பழைய தோழிகளை சந்திக்கலாமே! என்ற ஆவலில் தான் இப்படி ஒரு பதிவு போட்டேன். இதன் மூலம் புது தோழி கிடைத்ததற்கு நன்றி

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய் தோழிகளே,
எல்லாரும் நல்லாருகீன்களா, நான் சென்னை சூளைமேடு-ல ஜெய் கோபால் கரோடியா கேர்ல்ஸ் hr sec ஸ்கூல்-ல 1996 to 2002 வரைக்கும் படுச்சன். இப்ப இருக்கறது பழனி-ல. பழனிக்கு வந்தது 2003-ல. என் friends யாராது இங்க இருந்தா என்ன காண்டக்ட் பன்னுங்கடீ. சாரி டீ போடறதுக்கு. எல்லாம் ஒரு உரிமைல தான். ஹி ஹி ஹி. என் friends பெயர்கள்:
6th டு 8th - அனிதா(பியுட்டி).
- ராஜலக்ஷ்மி
- தேவி
- ரஷியா பேகம்.
யாஸ்மின்-நு ஒரு friend இருந்தா அவ ஒரு பிரச்சனையை-ல எங்கள எல்லாம் விட்டு நிரந்தரமா போய்ட்டா. அவல எப்பவும் எங்க ஸ்கூல் குரூப் போடோவ பாக்கும் பொது நெனச்சுக்குவேன். அவ ஆத்மா சாந்தி அடையணும்னு வேண்டிக்கரன். அவல இந்த நேரத்துல நெனக்க வெச்ச அறுசுவைக்கும் grace அம்மாக்கும்(அம்மா-நு சொல்லலாமில்லையா? ஏன்னா நான் பிறந்ததே 85 ல தான்) ரொம்ப ரொம்ப நன்றி. அவ நெனப்பு என்னைக்கும் என் மனசுல ஒரு எடத்துல இருக்கும். மிஸ் யு டா யாஸ்மின்.
9th 10th - ஸ்ரீதேவி
- கீதா
- ஜெயந்தி
- சஹிதா ஜைனப்
- பிருந்தா தேவி
11th 12th - பாலா
- மஞ்சு
- அமுதா
- தர்ஷினி
- மோகனப்ரியா
- குணசுந்தரி
அப்பறம் நான் வொர்க் பண்ணும் பொது நெறைய friends இருந்தாங்க ஆனா எனக்கு ஒருத்தி தான் ரொம்ப பழக்கம். அவ பேரு அனிதா இப்ப அவ எங்க இருக்கா என்னனு தெரில அறுசுவை மூலமா எனக்கு இவங்கல்லாம் மறுபடியும் கெடச்சா ரொம்ப சந்தோஷ படுவன். என் லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்குன்னு நெனக்கரன் எல்லாரும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க. ப்ளீஸ்ஸ்ஸ்......
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத போது தெரியும்.
அன்புடன்
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் க்ரேஸ்ரவி!
ரொம்ப நல்ல தலைப்பினை ஆரம்பிச்சிருக்கீங்க.
எனக்கு தெரிந்த ஒருபெண். ஆனா, நேரில் பார்த்ததில்லை. அவர்களை பார்க்கனும்னு ரொம்ப ஆவலாய் இருந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தி, அவங்க இறந்திட்டதா தகவல் கிடைத்தது.
ஒருவேளை அவர்களின் தோழிகள் யாராவது இருந்தால் தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.
பெயர் மைதிலி. ஊர். ஈரோடு அருகில் பெருந்துறை. பிராமின் பெண்.
அவர்கள் வயது இப்போது இருந்தால் 36 இருக்கும்.திண்டல்மலையில் இருக்கும் ஒரு கல்லூரில் படிச்சாங்க.

chatrapatti school la patichavanga yaravathu iru kingala pa?

all is well

அப்பா இப்பதான் பதிவு சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.லதா என்னை அம்மானு கூப்பிட தவறில்லை என்னுடைய அக்கா,அண்ணன் பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கிறார்கள்.ஆனால் நான் எப்போதும் சந்தோசமாக இருப்பதால் சிறியவளாக தெரிவேன். எனக்கு 12 வயதில் ஒரு மகள் தான் இருக்கிறா.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய் கீதா நல்ல தலைப்புன்னு சொன்னதுக்கு நன்றி. நீங்களாம் நெறைய பேசும்போது நானும் பங்குகொள்ள ஆவலாக இருக்கும். நெட் கார்டு போட்டு பண்றதால டைம் இல்லாம இருந்தது. இப்ப 2 மாதம் இரண்டு பேர் சேர்த்து நெட் எடுத்திருப்பதால் கொஞ்சம் ஆவல் வந்திருகிறது, நீங்க சொன்ன தகவல் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. எனக்கும் ஒரு தோழி காலேஜ் படிக்கும்போது இருந்தாள். திருமணம் ஆகி கொழந்தைகள் எல்லாம் இருக்கும் வரை தொடர்பு உண்டு. இப்போது அவளைக்குறித்து அடிக்கடி சில காரியம் எனக்கு தோன்றுகிறது ஆனால் யாரிடமும் கேட்க முடியவில்லை. அதனாலதான் இந்த பதிவை போட்டேன். கடவுளுக்கு சித்தமானால் அவளைபற்றின தகவல் கிடைக்க வாய்பிருக்கிறது.நானும் குவைத்தான்.முன்பு ஒருமுறை உங்களோடு தொடர்பு கொண்டிருக்கிறேன். நினைவு இருக்கிறதா?

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய் grace மாம்
நீங்க 86 - 89ல கல்லூரி படிச்சதா சொன்னீங்களே அதனால எப்படியும் பெரியவங்களா இருப்பீங்கன்னு தான் அம்மா-நு சொல்லலாம்னு கேட்டேன். அதுவும் இல்லாம எனக்கு அம்மா இல்ல அதனால பெரியவங்க யார பாத்தாலும் அம்மா-நு தான் கூப்பிடுவேன். எனக்கும் ரொம்பல்லாம் வயசாகல ஜஸ்ட் 25 தான். சோ நான் உங்கள அம்மான்னே கூப்டறேன். இல்லனா அக்கா-நு கூப்டவா? ரிப்ளை மீ.
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத போது தெரியும்.
அன்புடன்
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எப்படி சொன்னாலும் பிரச்சினை இல்லப்பா! பதிவுக்கு பதில் போட்டு நம்ப பேசுவதே ஒரு சந்தோசம். எனக்கும் 40 வயது ஆகி விட்டது.என் அக்கா,அண்ணன் பிள்ளைகளுக்கு பிள்ளைகள் வந்து என்னை பாட்டி என்றே சொல்லுகிறார்கள்

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

மேலும் சில பதிவுகள்