hai admin and friends

ஹாய் அட்மின் மற்றும் தோழிகளே,

நான் உங்க கிட்ட முதல் தடவையா பேசரேன்,இதுக்கு முன்னாடி 1 வெப் சைட் அட்ரஸ் ரம்யா கார்த்திக் குடுத்து இருந்தாங்க clickindia.com நினைக்கிறேன் அதுல CAPTCHA JOBS 1 இருந்தது,Captcha job உண்மையானதா/இல்ல ஏமாத்து வேலையா?தெரிஞ்சா சொல்லுங்களேன்?அதுல பீஸ் எதுவும் கேட்க்கலை,பாங்க் அக்கவுண்ட் நம்பர் மட்டும் கேட்டு இருக்காங்க,அதைவைத்து ஏமாத்துவாங்களா?யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்க பிளீஸ்

Captcha jobs உண்மையானதாக இருக்கலாம். ஆனால், நேர்மையானதா என்பதுதான் கேள்விக்குறி. Captcha என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு,

சில தளங்களில், உதாரணமாக மெயில் அக்கவுண்ட் கிரியேட் செய்யும்போது, வெரிப்பிகேசனுக்காக, கடைசியில் ஒரு சிறிய சைஸ் இமேஜில் சில எழுத்துக்கள் வரும். அதை நீங்கள் அப்படியே டைப் செய்ய வேண்டும். அதை சரிபார்த்த பின்புதான் உங்களுடைய பதிவு ஏற்றுக்கொள்ளப்படும். இதனை ஏன் வைத்துள்ளார்கள்?

சில spammers, கிறுக்கர்கள் ஸ்கிரிப்ட் மூலம் வேண்டுமென்றே ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் மெயில் அக்கவுண்ட் ஓபன் செய்வார்கள். ஒரு காலத்தில் இந்த பிரச்சனைகள் எல்லாம் இருந்தன. இப்படி Captcha கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சனைகள் குறைந்தது. ஸ்க்ரிப்டினால் இமேஜில் கொடுத்திருக்கும் எழுத்துக்களை படிக்க முடியாது.

மெயில் அக்கவுண்ட் என்றில்லை. இந்த Captcha வை பல இடங்களிலும் பயன்படுத்துகின்றார்கள். அதன் ஒரே நோக்கம், Spammers ஐ கண்ட்ரோல் செய்வதுதான்.

இனி ஸ்கிரிப்ட் மூலம் இதை செய்ய முடியாது என்ற நிலையில், இப்போது அதற்கு ஆட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். எத்தனையோ எண்ட்ரிகள் கொடுத்தால், இத்தனை டாலர் என்றெல்லாம் சொல்கின்றார்கள். அவர்கள் டாலர்கள் கொடுப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இந்த வேலை ஏதோ ஒரு கெட்ட காரியத்திற்கு துணை போகும் வேலைதான். அதை செய்ய வேண்டுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

இன்னொன்று, இணையத்தில் இது குறித்து வரும் feedbacks எதுவும் பாஸிட்டிவாக இல்லை. இதனை நடத்துபவர்கள் பல்வேறு பெயர்களில் வந்து அதைப் பற்றி பெருமையாக எழுதும் பதிவுகளைப் பார்த்து ஏமாற வேண்டாம். நிறைய பேர் இதற்காக நிறைய நேரம் செலவழித்து, பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கின்றார்கள்.

ஹாய் அட்மின்
ரொம்ப நன்றி அட்மின்(பாபு)அவர்களே,வேறு எந்த மாதிரியான ஆன்லைன் வேலைகள் நம்ப தகுந்த மாதிரியும் ஓரளவு வருமானத்தையும் தரும் என சொல்ல முடியுமா?உங்க பதிலுக்காக ஆவலுடன் இருக்கிறேன்

அஞ்சலி

இதைப் பற்றி பெரிசா எழுதணும். அது இப்ப முடியாது. நான் எழுதறதை படிச்சா நிறைய பேருக்கு கோபம்கூட வரலாம். ஒரு கட்டுரை எழுத ஆரம்பிச்சு பாதியிலேயே நிக்குது. அதை பிறகு வெளியிடுறேன்.

ஒரு உண்மைய நீங்க எல்லாரும் புரிஞ்சுக்கணும். உண்மையா ஆன்லைன்ல சம்பாதிக்கிறதுக்கான வழிகள் ரொம்பவும் குறைச்சல். அப்படி இருக்கிற கொஞ்ச வழிகளும் அவ்வளவு ஈசியான வழிகள் இல்லை. நிறைய கஷ்டப்படணும்.

ஏமாற்று வழிகள் நிறைய இருக்கு. ஆனா, அது எதுவுமே நிரந்தரம் இல்லை. சில வேலைகள்ல ஆரம்பத்துல பணம் கிடைக்கும். கடைசியில ஏமாந்து இருப்போம். இல்லேன்னா, நாம ஒர்க் பண்ணினதுக்கு நமக்கு கிடைச்சது, வெறும் சோளப்பொரி அளவுதான் இருந்திருக்கும்.

எனக்கு தெரிஞ்ச அளவில் இணையத்தில் நடக்கிற ஏமாற்றுகள் பற்றியும், இருக்கிற ஒன்று ரெண்டு உண்மையான சம்பாத்திய வழிகள் பற்றியும் பிறகு எழுதறேன்.

டியர் பாபு(அட்மின்)நான் துபாயில் இருக்கிறேன்,எனக்கும் வீட்டில் இருந்து கொண்டு வேலை பார்க்க ஆசை,இங்கு இருந்து கொண்டே வேறு நாடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கலாமா/எனக்கு கணித பாடம் 13 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு எடுக்க ஏதாவது வழி இருக்கிறதா?

மேலும் வெப் டிசைன் ஏதாவது செய்து கொடுத்து சம்பாதிக்கலாமா?அல்லது மெயில் ஐடி கிரியேஷன் வேலைகள் இருந்தால் தயவு செய்து கூறமுடியுமா?உங்களின் பதிலுக்காக
ஆவலுடன் காத்திருகிறேன்

Hi manju.

eppadi irukeenga? nan ungaluku pudhiya arimugam.ungaluku oru nalla idia sollatuma.dubaila dress romba vilai adhigam illaiya so indiala irundhu nalla dress kondu vandhu sale pannugalen.ungaluku velila poga kastamna sila idangalil pesi vachtu avangaluku sale pannalam illaiya.ladysku mattum pannunga appo saftyavum irukkum.

anbudan,
Ruby

மேலும் சில பதிவுகள்