தேதி: June 7, 2010
உல்லன் நூல் - விரும்பிய நிறங்கள்
மெட்டல் வளையல்கள் - 7
பெவிக்கால்
கோல்டுநிற சம்கி
வளையல் நிலைமாலை செய்வதற்கு உபயோகித்து வேண்டாம் என்று வைத்திருக்கும் பழைய மெட்டல் வளையல்களை எடுத்து கொள்ளவும். க்ளாஸ் வளையலாக இருந்தால் தடிமனான வளையல் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். மெல்லிய க்ளாஸ் வளையலாக இருந்தால் நூல் சுற்றும் பொழுது வளையல் உடைந்து விட வாய்ப்புள்ளது.

விரும்பிய நிறங்களில் உல்லன் நூலை எடுத்து ஏதேனும் ஒரு வளையலில் முடிச்சு போடவும். பிறகு நூலை வளையல் ஒரங்கள் முழுவதும் சுற்றி கொண்டே வரவும். கடைசியில் ஆரம்பித்த இடம் வந்ததும் அந்த இடத்தில் முடிச்சுப்போட்டு கொள்ளவும்.

பிறகு அந்த நூலை வளையலின் ஓரத்தில் கால் இன்ச் இடைவெளிவிட்டு வளையலின் முன்னும், பின்னும் சுற்றவும். கடைசியிலும் கால் இன்ச் இடைவெளி விட்டு ஒருமுறை நூலை வளையலின் ஒரத்தை சுற்றி எடுத்து கொள்ளவும். முதலில் இடைவெளிவிடாமல் சுற்றினால் நூல் சுற்றி முடிந்த பிறகு நழுவி வந்து விடும்.

சுற்றிய நூலை எதிர்புறமாக படத்தில் உள்ளது போல் சுற்றவும். இதற்கும் இடைவெளிவிட்டு சுற்றும்பொழுது முன்பு சுற்றிய நூல் அந்த இடைவெளியை மறைத்தது போல் இருக்கும். நூல் சுற்றி முடியும் இடத்தில் பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.

இதுப்போன்று விரும்பிய நிறங்களில் 7 வளையல்களில் நூலை சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

உல்லன் நூல் சுற்றிய வளையலின் ஓரத்தை சம்கியால் அலங்கரிக்கவும். அதன் நடுவே உங்க பிடித்த வார்த்தைகளின் எழுத்தை கோல்டுநிற சம்கியை கொண்டு பெவிக்கால் தடவி ஒட்டவும். இதில் WELCOME என்ற வார்த்தைக்காக ஏழு வளையல்களில் நூல் சுற்றி சம்கியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இப்போது உல்லன் நூலை உங்கள் கதவுநிலையின் அளவுக்கு தகுந்தபடி அளந்து நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின நூலின் அளவு போல் இன்னும் ஐந்து நூல் நறுக்கி வைக்கவும். இப்போது இந்த எல்லா நூலையும் சேர்த்து மேல் முனையில் முடிச்சுப்போடவும். இந்த ஆறு நூலையும் இரண்டு இரண்டாக பிரித்து ஜடை பிண்ணுவது போல் பிண்ணி முடிக்கவும். இதேப் போல் இன்னுமொன்று செய்துக் கொள்ளவும்.

ஜடை போல் பிண்ணிய இந்த நூலை நீளவாக்கில் வைக்கவும். அதன் கீழே ஒரே அளவாக இடைவெளிவிட்டு மற்றொரு நூலை வைக்கவும். இந்த இரண்டு நூலின் மீது சம்கியால் அலங்கரித்த வளையலை படத்தில் உள்ளது போல் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.

இதுப்போல் ஏழு வளையல்களையும் இடைவெளிவிட்டு ஒட்டி ஒரு நாள் முழுவதும் காயவிடவும். கடைசியில் ஜடைப்போல் பிண்ணிய இரண்டு நூலையும் சேர்த்து முடிச்சுப்போட்டு கதவுநிலையில் மாட்டி விடவும். சுலபமாக செய்யக்கூடிய வளையல் நிலைமாலை தயார். இந்த நிலைமாலை குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர்கள் செல்வி. பத்மா, ரேவதி அவர்கள்.

Comments
azakana malai
sister pathma , revathi intha malai migavum azakaka ulladu ellimayagaum irrukku. only one doubt, vallaiyal wall hanging seium boodu yappadi kuruvi seirthu seivadu? bathil poadavum please.
tamil type yappadi seivadhu yendru theriyavillai. manniqavum sister.
shagila
பத்மா & ரேவதி
பத்மா & ரேவதி,
நிலைமாலை அழகாக இருக்கிறது. பாராட்டுகள். எப்படி இப்படி யோசிக்கிறீங்க!
பத்மா மற்றும் ரேவதி மேடம் ,
பத்மா மற்றும் ரேவதி மேடம் ,
ரொம்ப அழகாவும் நேர்த்தியாவும் இருக்கிறது
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
valthu
super ungaluku nala ethirakalam iruku
பத்மா, ரேவதி
பத்மா, ரேவதி... இப்படிலாம் யோசிக்கவே எனக்கு தெரியாது!!! சிம்பிலா சூப்பரா யோசிக்கறீங்க. வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹைய் பத்மா,எனக்கு ரெம்ப
ஹைய் பத்மா,எனக்கு ரெம்ப பிடிச்சிருக்க்கு,எனக்கும் இப்ப ரெம்ப செய்யனும்பொல இருக்கு,thanks
hai, I tried this Nelamalai
hai,
I tried this Nelamalai and successfully completed
Thanks for the info
சிம்பிள்.
பத்மா, ரேவதி அவர்களுக்கு. சிம்பிளாக நாலே நாலு
சாமான்களை வைத்து எவ்வளவு அழகான நிலைமாலை.
சூப்பெர் கைவேலைகள் செய்து அசத்துகிரீர்கள்.
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
vallayal mallai
Vallayal malai very good hand work