கூட்டாஞ்சோறு

தேதி: June 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (11 votes)

 

அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
கத்தரிக்காய் - ஒன்று
வாழைக்காய் - 3 " துண்டு
முருங்கைக்காய் - 3 துண்டு
கொத்தவரங்காய் - 5
சேனை (YAM) - 100 கிராம்
வெள்ளரிக்காய் - 100 கிராம்
காரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
அரைக்க 1:
வத்தல் மிளகாய் - 7
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 7
அரைக்க 2:
தேங்காய் - ஒரு மூடி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் - 2


 

காய்கறிகளை அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கி வைத்துக் கொள்ளாவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
மிக்ஸியில் வெங்காயம், மிளகு, வர மிளகாயை போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் சீரகத்தை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறிகளை போட்டு இரண்டு முறை கிண்டி விட்டு அரைத்து வைத்திருக்கும் வெங்காய, வரமிளகாய் அரைப்பை போட்டு ஒரு கொதி விடவும்.
அரிசி பருப்பை கழுவி குக்கரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் காய்கறிகளை போட்டு தேவைக்கு உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கீரையை போடவும். கீரை வதங்கியவுடன் தேங்காய் அரைப்பை போட்டு கிளறவும். குக்கரில் ஸ்டீம் போனவுடன் திறந்து தாளித்து வைத்திருக்கும் கீரையை போட்டு கிளறவும்.
கீரையை சேர்த்த பின்னர் பத்து நிமிடம் மிக குறைந்த தீயில் குக்கரை மூடி வெயிட் போடாமல் வைக்கவும்.
சுவையான சத்தான கூட்டாஞ்சோறு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நானும் இதுபோல் ஓரிருமுறை செய்திருக்கிறேன்..ஆனால் அடிக்கடி செய்வதில்லை...நல்ல குறிப்புங்க..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்திரா அக்கா அப்படியே நம்ம ஊர் குறிப்பா கொடுத்து அசத்தறீங்களே! அம்மா கையால் சமீபத்தில்தான் கூட்டாஞ்சோறு சாப்பிட்டேன். இப்பவும் சாப்பிடணும் போல இருக்கு . ஒரு பார்சல் ப்ளீஸ் :)

முட்டை தீயல் குறிப்பும் கொடுங்களேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் இந்திரா உங்களின் இந்த ரெசிப்பி பார்க்கவே ரெம்ப கலர்புல்லாக இருக்கு.கண்டிப்பாக செய்துபார்த்துட்டு பதிவு பண்றேன்.உங்களின் மாம்பழ புளிசேரி இன்னும் செய்து பார்க்க முடியவில்லை.நல்ல மாம்பழமா கிடைக்கல.ஒருவாட்டி வாங்கினது சுத்தமா இனிப்பே இல்லை.சிக்கிரமாக வாங்கி செய்து பதிவு பண்றேன்.

அன்பு இளவரசி,
எனக்கு பிடித்த நாஞ்சில் நாட்டு உணவுகளில் இதுவும் ஒன்று. போகும் போதெல்லாம் அம்மாவின் மெனுவில் இதுவும் ஒன்று. உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
அன்பு கவி,
ஊரிலிருந்து எப்போ வந்தீங்க?
முட்டை தீயல் குறிப்பு கொடுக்கிறேன். நிச்சயமாக பார்சல் அனுப்புகிறேன். நம்ம ஊர் தேங்காய் முதல் காய்கறி வரை ருசி வேறு தான் . அந்த ருசியை எதிர் பார்க்க முடியாது. ஆனாலும் சாப்பிடலாம்.பாராட்டுக்கு நன்றி கவி.
அன்பு எரிக்,
இப்ப தான் நல்ல மாம்பழம் இங்கேயும் வருகிறது . லுலுவில் மாம்பழ சீசன் ஆரம்பித்து உள்ளார்கள். உங்களுக்கும் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Save the Energy for the future generation

இந்திரா மேடம்
சிறு வயதில் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு சென்றால் என்னுடைய cousins மற்றும் நானும் சேர்ந்து வெளியில் உள்ள அடுப்பில் மண் பாத்திரத்தில் இந்த சாதம் செய்வோம் எல்லா காய்கறியும் தோட்டத்தில் எடுப்போம் மறக்கவே முடியாது இப்போ நீங்க இதை அழகான குறிப்பாக தந்து இருக்கீங்க
கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் மலரும் நினைவுகள் வந்து விட்டது

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு கவிதா,
நாங்களும் சின்ன பிள்ளைகளாக இருக்கும் போது பண்ணுவோம். ஆனால் தோட்டமெல்லாம் கிடையாது. ஒவ்வொருவரும் ஒரு ஒரு சாமான் கொண்டு வந்து செய்வோம். வாயில் வைக்க முடியாம இருந்தால் கூட ரொம்ப நன்றாக உள்ளது என்று சொல்லிக் கொண்டு சாப்பிடுவோம். எதிரணியை வெறுப்பேற்றுவதற்காக. மலரும் நினைவுகளோடு செய்து பாருங்க. நன்றி.

Save the Energy for the future generation

இந்திரா மேடம்,
இன்று இந்த சாதம் தான் செய்தேன் நான் முருங்கை கீரைக்கு பதிலாக flat leaf ஸ்பினச்,உருளை,காரட்,கத்தரிக்காய் ,பீன்ஸ் சேர்த்தேன்.மிகவும் அருமையாக இருந்தது நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா