சிறந்த பொய் சொல்றவங்களுக்கு.......

ஹாய் தோழீஷ்
மறுபடியும் லதாவினீ. இன்னிக்கு நான் என் கணவர்கிட்ட ஒரு பொய் சொல்லி மாட்டிக்கிட்டேன். அப்பறம் அதுக்கும் ஒரு பொய் சொல்லி வழிஞ்சத நெனச்சா எனக்கே சிரிப்பா வருது. அதான் உங்கலுக்கும் எனக்கு ஏற்பட்ட மாறி ஏதாச்சு நடந்துருக்கான்னு கேக்கலாம்னு வந்தேன். வாங்க தோழீகளே வந்து உங்க அனுபவத்த சொல்லுங்க..... சிறந்த பொய் சொல்றவங்களுக்கு நம்ம அட்மின் அண்ணா பொய்யுல் புலவி பட்டம் தருவாங்க சோ எல்லாரும் வந்து அனுபவத்த சொல்லுங்க........

அட்மின் பாபுன்னா
உங்ககிட்ட கேக்காம இந்த த்ரெட் ஆரம்பிச்சுட்டென், அதான் உங்களவே பட்டம் குடுக்க சொல்லிட்டேன்... என்ன அண்ணா குடுத்தரலாமா பொய்யுல் புலவி பட்டம்?...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அடடா... நான் பொய்யே சொன்னதில்லயே... இப்படிலாம் பட்டம் குடுப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா ஒன்னு ரெண்டு சொல்லி இருக்கலாம். என்ன செய்ய... பரவாயில்ல விடுங்கப்பா... நமக்கு விளையாட்டுக்கு கூட யோசிச்சு பொய் சொல்ல தெரியல. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா

உங்கள பாராட்டனும் வனிதா. இப்ப வரைக்கும் ஒரு பொய் கூடவா சொல்லல??? ஆச்சரியமா இருக்கு... நான் ஸ்கூல்-ல படிக்கும் போது நெறய பொய் சொல்லிருக்கேன். ஆனா இப்பலாம் பொய் சொல்றதே இல்ல எப்பவாது வினீட்ட மட்டும் சொல்லுவன்.
சரி பரவால்ல விடுங்க வனிதா உங்களுக்கும் ஒரு பட்டம் குடுத்தரலாம்.
என்ன பட்டம் தெரிமா?
அரிச்சந்திரி நல்லாருக்கா??????
அட்மின் அண்ணாட்ட கேட்டுடு குடுத்தரன் சரிங்கலா?????

----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொளுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அட்மின் அண்ணாக்கு.....

அண்ணா நம்ம வனிதாக்கு இந்த பட்டம் குடுதரலாமா?
அரிச்சந்திரி வனிதா...
கோச்சுக்காதீங்க வனிதா...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் தோழீஸ்

என்னங்க இங்க நடக்குது, நான் இந்த த்ரெட் ஆரம்பிக்கும் போது எல்லாரும் போட்டி போட்டுட்டு வந்து நான் அந்த பொய் சொன்ன இந்த பொய் சொன்ன அப்படின்னு சொல்லுவீங்கன்னு நெனச்ச ஆனா வந்த ஒருத்தரும் நான் பொய்யே சொன்னதில்ல அப்படின்னு ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டு போய்ட்டாஙக..... ச்ச போங்கப்பா உப்பு காரம் இல்லாத சாம்பார் மாறி ஆயுடுச்சு..... ஆகமொத்தம் இங்க யாருமே பொய் சொல்லாத அரிச்சந்திரிகள் தான்னு நான் நம்பறேன்... பைத்தியம் எப்பவுமே தான் பைத்தியம்னு ஒத்துக்காது நான் ஒத்துக்கிறேன் நான் பெரிய பொய்யில் புலவின்னு...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அட்மின் அண்ணா.....

நீங்க எங்க இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்... வந்து பொய்யில் புலவி பட்டத்தை எனக்கே தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... ஹி ஹி ஹி..... நன்றி தோழிகளே.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் லதா...

நானும் குட்டி குட்டி பொய் சொல்வேன்.. ஆனா எனக்கு அது பிரச்சனையா முடிஞ்சா தான் சீனு ஆயிரும்.. ;-).. சில தேவையான இடத்துல சொல்லிதான் ஆகனும்.. மத்தவங்களுக்கு ப்ராப்ளம் இல்லாமாரி..அப்றம் நிதானமா உண்மைய சொல்லி புரிய வெச்சுகனும்...அப்டி சமாளிக்கா முடிஞ்சா சொல்லாலாம்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Poi solluvadu avvalavu sulabam illai. Nama poi sonna namma mugame katti koduthudume .Enna sariya thozhi kagale.Vendumanal poi pesuvadu phonil pesum podu sollalam.Veetil irundu kitte vera yaravadu phone avanga illainnu vena sollalam.

nisarbanu

பொய் சொன்னதா பொய் சொன்னா பட்டம் உண்டா?

அன்புடன்,
இஷானி

ஹாய் தோழிகளே

போன வாரம் வந்த தினத்தந்தி இளைஞர் மலர்-ல படிச்ச செய்தி...

யார் அதிகம் பொய் சொல்கிறார்கள்?
இப்படி ஒரு போட்டி வைத்தால் ஆண்கள்தான் ஜெயிப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. புளுகு மன்னர்களை பற்றிய இந்த ஆய்வை லன்டனை சேர்ந்த அறிவியல் அருங்காட்சியகம் நடதியது. இதில் ஆண்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 பொய் சொல்கிரார்கள் என்று தெரியவந்துள்ளது. பெண்கலும் உத்தமம் கிடையாது. அவர்கள் ஒர் நாளைக்கு இரு வேளைகளில் பொய் சொல்கிரார்கள்.
நீங்கள் பொய் சொல்வீர்களா? என்று கேட்டதர்க்கு பெண்கள் 82% ஒப்புக்கொண்டார்கள். ஆண்கள் 70% பேர் தான் ஒப்புக்கொண்டார்கள். பெண்கள் பொதுவாக வெளியும் சாப்பிட்டால் வீட்டில் வாய் திறக்க மாட்டார்கள் என்பது தான் அவர்கள் சொல்லும் பொய் என்று தெரியவந்தது. ஆனால் ஆண்களின் பொய்பட்டியல் கொஞசம் நீளமானது.
‘செல்போனில் சிக்னலே கிடைக்கல, நான் என் வேளையை பாத்துட்டு இருந்தென் கவனிக்கல, நான் சிக்னல்ல மாடிகிட்டேன், சாரி உன்ன ரொம்ப மிஸ் பன்ரன், நீ ரொம்ப ஒல்லி அயுட்ட, இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்’, இதெல்லாம் ஆண்கள் சொல்லும் பொய்பட்டியல். இவற்றில் பெரும்பாலான பொய்கள் தன் மனைவியுடம் சொல்லப்படுகிறது என்கிறது ஆய்வு...

எப்படி இருக்கு... இத படுச்சன்ன தான் எனக்கு நிம்மதியே ஆச்சு...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்