அறுசுவை அறிமுகம்.

தோழிகளே!
நம் நட்பினை மீண்டும் மீண்டும் திரும்பி பார்ப்பது இனிமை தான் அல்லவா?
நம்மை இணைத்த அறுசுவை என்னும் இப்பாலம் நமக்கு முதலில் அறிமுகம் ஆனது எப்படி?
ஒவ்வோருவரும் சற்று பின்னோக்கி சென்று உங்கள் இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே?

ஏற்கனவே இதுபற்றி ஒரு த்ரெட் வந்திருப்பதாக நினைவு. அங்கு நான் சொன்னதையே இங்கும் சொல்கிரேன். என் மிக நெருங்கிய தோழி மூலம் தான்
எனக்கு அருசுவை அறிமுகம் ஆனது.அதுவும் யூசர் நேமுக்கும், பாஸ் வேர்டுக்கும், ரொம்பவே முயற்சி பண்ண வேண்டி வந்து கடைசில அட்மின்
சாரின் உத்வியினால் முட்டி மோதி என்னை உள்ளே நுழைத்து விட்டதில் என்
தோழிக்குதான் முழு பங்கு உள்ளது. ஆனா என்ன வேடிக்கைனா என்னை உள்ள
அனுப்பிட்டு அவ வெளில போயிட்டா. இப்பல்லாம் அறுசுவைல கலந்துக்கவே
மாட்றா.அவ, மும்பைலயும், நான் பூனாலேயும் இருக்கோம். தினமும் அவ
கூட ஒரு அரை மணி நேரமாவது போன்ல பேசி ஆகணும் எனக்கு.இத்த்னைக்கும்
அவ்ளுக்கும் எனக்கும் வயது வித்யாசமும் மிக அதிகம்.ஆனாலும் வாடி, போடின்னு பேசிக்கர க்ளோஸ்னெஸ்.அறுசுவைல செர்ந்தது முதல் என்க்கு மிக நிரைய நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. எந்தோழியும் தினமும் அறுசுவையை சைலண்ட் ரீடராக பார்த்து, படித்து ரசித்தும் வருகிராள்.
எங்களின் போன் பேச்சில் மாக்ஸிமம் பேச்சு அறுசுவை பற்றிதான் இருக்கும்.எவ்வளவு விதமான நல்ல விஷயங்க்ள் தெரிந்துகொள்ளமுடிகிரது. அதுமட்டு மில்லாமல் நம்மையும் தயக்க மின்றி எழுத வைத்து உற்சாகப்டுத்துகிரது.தேங்க்ஸ் டு அறுசுவை டீம் காரர் களுக்கு. தங்களின் எண்ணங்களை ஆர்வ்முடன் சுவையாக எழுதிவரும் (வருங்காலஎழுத்தாளகளுக்கும்.) மிக, மிக நன்றி.

நான் நானாவே தான் வந்தேன்... ரொம்ப நாள் பெயர் பதிவு பண்ணாம சுத்திகிட்டு இருந்தேன் சமையல் குறிப்பு மட்டும் பார்த்துகிட்டு. சந்தர்ப்பவசமா ப்ரெக்னன்ட் லேடி ஒருத்தர் கேட்ட கேள்விக்கு உதவி செய்ய பதில் சொல்லவே பெயர் பதிவு செய்தேன். அப்பறம் அப்படியே மன்றம் அது இதுன்னு தலையை உள்ள விட்டாச்சு. ;) எப்போ வந்தேன் ஏன் வந்தேன்னு எப்படி வந்தேன்னுலாம் இப்போ யோசிக்குறது இல்ல... வர வேண்டிய இடத்துக்கு சரியா வந்திருக்கேன். ஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Ithanai naal enaku theriyave theryadu. Naanaga than kandu pidithen. Thozigal yarum illada enaku arusuvai ye naala thozhi

nisarbanu

என்னை உங்கள் தோழியா ஆக்கிக்குறீங்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் ஒரு வார பத்திரிக்கையில் 2 வருடத்துக்கு முன் பார்த்ததாக ஞாபகம்.அப்போது கம்ப்யூட்டர் இல்லாததால் விளையாட்டுத்தனமா மொபைல் இன்டர்நெட்டில் பண்ணி பண்ணி நொந்து போனதுதான் மிச்சம். 10 நாட்களுக்கு முன்பு தான்
கம்ப்யூட்டருடன் நெட் கனெக்சன் வந்தது. முதல் வேலையே மனதில் பதிந்து போன பெயரான அறுசுவை.காம் என்பதை கூகுலில் ஷர்ச் செய்து கண்டுபிடித்து விட்டேன்.பெயர் பதிவு செய்து சமையல் பக்கமே சரணம் என்று கிடந்த என்னை உங்கள் பட்டிமன்றம் சிவப்பு கம்பளம் போட்டு அழைத்தது. அடுத்ததடுத்து 2 முறை என் பெயரை சொல்லி நீங்கள் அழைக்கையில் நம் பெயரும் கம்ப்யூட்டர்ல வருதேன்டு மொத்த பகுதிக்கும் வலம் வருகிறேன்.(நாங்களெல்லாம் கடைசி பென்ச் ஸ்டூடாக்கும். சும்மா பதில் மட்டும் தான் போடுவோம்)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

2 வருடங்களுக்கு முன்பு என் தங்கை அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாள்.அவள் தான் எனக்கு அருசுவை இனையதளத்தை பற்றி சொன்னாள்.இப்போ 1 அரை வருடகாலமாக தான் உருப்பின்ராக இருக்கிறேன்.

ஹாய் நஸ்ரின்பானு அஸ்ஸலாமு அழைக்கும் எப்படி இருக்கீங்க என்னையும் உங்கள் தோழிய ஆக்கிக்குறீங்களா? என் பெயரும் நஸ்ரின் பானுதான்

அன்புடன்
நஸ்ரின் கனி

யாரும் யாரை வேண்டாலும் ப்ரெண்டா ஏத்துக்கோங்க. ஆனா எல்லாரும் என்னைய உங்க ப்ரெண்டா ஏத்துக்கோங்க ப்ளீஸ்.(ஏதாவது புரிதா?)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

புரியுது,புரியுது...

ஹாய் அமினா...

சமீபத்துல நான் ஒரு வாசகம் படிச்சேன். ரொம்ப புடிச்சு இருந்தது. நட்புக்கு என்னைக்கும் மரணம் இல்லன்னு. நட்பு என்னைக்கும் இனிமையானது.

அதேமாறி தான் எனக்கும் அருசுவைக்கும் இருக்கற நட்பு...

நான் முதன்முதலா அருசுவைக்குள்ள வந்தது வடகரி எப்படி பன்ரதுன்னு பாக்கதான், அப்பறம் அப்பப்ப வர அரம்பிச்சுட்டேன்... இப்ப தினமும் வராம இருக்க முடியரதில்ல. ரொம்ப நன்றி அருசுவைக்கும் அட்மின் அண்ணாக்கும் உங்களுக்கும்....

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்