சாக்லெட் பேப்பரில் ஒரு அழகிய வால் ஹேங்கிங்

தேதி: June 11, 2010

4
Average: 3.9 (19 votes)

 

அட்டை
ஐஸ்க்ரீம் ஸ்டிக் - 54
உல்லன் நூல்
சாக்லெட் பேப்பர்ஸ்
பெவிக்கால்
பேப்பரிக் பெயிண்ட்
பென்சில்
கத்திரிக்கோல்
கோல்டன் லேஸ்

 

அட்டையை 33 செ.மீ நீளம், 23 செ.மீ அகலம் என்ற அளவில் செவ்வக வடிவில் வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
அட்டையில் பெவிக்கால் தடவி முதலில் 27 ஐஸ்க்ரீம் குச்சிகளை வரிசையாக ஒட்டிக்கொள்ளவும். 2வது வரிசையாக அதன் பக்கத்தில் மீதமுள்ள 27 குச்சிகளையும் ஒட்டி நன்கு காயவிடவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகள் அட்டையில் நன்கு ஒட்டி கொண்டதும், படத்தில் உள்ள பெண் உருவத்தை முதலில் பென்சிலால் வரைந்துக் கொள்ளவும். பிறகு சாக்லெட் பேப்பரின் நிறத்துக்கேற்ற உல்லன் நூலை எடுத்துக் கொள்ளவும். ஸ்கர்ட்க்கு மெரூன் நிறமும், டாப்ஸ்க்கு நீலநிறமும் எடுத்துக் கொண்டு வரைந்த அந்த உருவத்தின் ஒரங்களில் பெவிக்கால் தடவி அவுட்லைன் போன்று இந்த நூலை ஒட்டி விடவும். முகம், கைக்கு வெள்ளைநிற உல்லன் நூலும், தலைமுடிக்கு கருப்புநிற உல்லன் நூலையும் ஒட்டிக்கொள்ளவும்.
பிறகு சாக்லெட் பேப்பரை கொசுவம் வைப்பது போல் சிறிது சிறிதாக மடிக்கவும். மடித்த பேப்பரை இரண்டாக மடித்து கத்திரிக்கோலால் நறுக்கி அதன் ஏதேனும் ஒரு முனையில் ஸ்டாஃப்ளர் பின் போட்டு கொள்ளவும். (சாக்லெட் பேப்பரின் டிசைனை பொறுத்து ஸ்டாஃப்ளர் பின் போடவும்).
மெரூன் நிற உல்லன் நூல் ஒட்டிய ஸ்கர்ட் பகுதியில் ஸ்டாஃப்ளர்பின் செய்து வைத்துள்ள சாக்லெட் பேப்பரை கீழிலிருந்து 4,3,2 என்ற வரிசையில் படத்தில் உள்ளது போல் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும். கடைசியில் ஒரு முழு சாக்லெட் பேப்பரை கொசுவம்போல் மடித்து, அதனை இரண்டாக மடித்து அதன் மேல்முனையில் ஸ்டாஃப்ளர்பின் செய்துக் கொள்ளவும். இப்போது இதனை அம்பர்லா போல் நன்றாக விரித்து, இரண்டு சாக்லெட் பேப்பருக்கும் மேலே வைத்து பெவிக்கால் தடவிக் ஒட்டிக்கொள்ளவும்.
இப்போது இடைவெளி தெரியும் பகுதியில் ஸ்டாஃப்ளர்பின் செய்த சாக்லெட் பேப்பரை தலைக்கீழாக வைத்து ஒட்டிக் கொள்ளவும். ஸ்கர்ட் பகுதியில் சாக்லெட் பேப்பர் ஒட்டுவதற்கு மொத்தம் 8 பேப்பரும், டாப்ஸ் பகுதிக்கு 3 பேப்பரும் தேவைப்படும்.
நீலநிற உல்லன் நூல் ஒட்டிய டாப்ஸ் பகுதிக்கு ஃப்ளையின் நீலநிற சாக்லெட் பேப்பராக எடுத்துக் கொண்டு அதனையும் கொசுவம் போல் மடித்து கால் இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கி ஸ்டாஃப்ளர்பின் போட்டு கொள்ளவும். இந்த பேப்பரை டாப்ஸ் பகுதி முழுவதும் இடைவெளி தெரியாமல் ஒட்டவும்.
முகம் மற்றும் கைக்கு வெள்ளைநிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
பெயிண்ட் காய்ந்ததும் கறுப்பு பெயிண்டால் படத்தில் உள்ளது போல் கண், புருவம் வரைந்துக் கொள்ளவும். வாய் பகுதிக்கு சிவப்பு பெயிண்ட் செய்துக் கொள்ளவும். தலைமுடிக்கு கறுப்பு உல்லன் நூலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒட்டிக்கொள்ளவும். கொண்டைப்பகுதியில் சிறிய பூப்போல் வைப்பதற்கு ஆரஞ்சு நிற உல்லன் நூலை அரை இன்ச் அளவு எடுத்துக் கொண்டு, அதனை கொசுவர்த்தி போல் சுருட்டி கொண்டையில் பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும். பார்ப்பதற்கு சிறிய பூ வைத்தது போன்று இருக்கும். பிறகு க்ரீன் கலர் சாக்லெட் பேப்பரை விசிறி போல் செய்து கைப்பகுதியின் அருகே வைத்து ஒட்டி விடவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகள் ஒட்டிய அட்டையின் அடியில் அதன் அகலத்துக்குகேற்றவாறு கோல்டன் லேஸை நறுக்கி பெவிக்கால் தடவி ஒட்டிக்கொள்ளவும். அட்டையின் மேல் முனையின் நடுவில் சிறிய துளையிட்டு 3 செ.மீ அளவில் உல்லன் நூலை கோர்த்து முடிச்சுப் போட்டு கொள்ளவும்.
சாக்லெட் பேப்பரை கொண்டு செய்யக்கூடிய ஒரு எளிமையான வால் ஹேங்கிங் இது.
இந்த வால் ஹேங்கிங் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

செண்பகா,
அழகு கைவேலை.
கடதாசி... "மிட்டாய்க்கடைல" கடத்தினதா? ம். நடத்துங்க. ;)

‍- இமா க்றிஸ்

நடத்துங்கவா... ம்ம்.. நான் என்னத்த சொல்றது.. இப்படி நீங்க எல்லாம் உற்சாகப்படுத்துறேன்னு உசுபேத்திவிட்டு, இப்ப இங்க எல்லாரும் வால் ஹேங்கிங் ஸ்பெஷலிஸ்ட் ஆயிட்டாங்க. வேஸ்ட்ல க்ராப்ட் செய்யறேன், உபயோகமில்லாத பொருளை அலங்காரப் பொருளா மாத்துறேன்னு, ஆபிஸ் சுவர் முழுக்க கலர் கலரா கட்டித் தொங்கவிட்டிருக்காங்க..

என்னைக்கு நான் அசந்து தூங்குற நேரம் பார்த்து, ஆயில் பெயிண்ட் அடிச்சு ஆணியில மாட்டப் போறாங்களோ தெரியல.. என்னைக்காவது ஒருநாள், நீங்களும் செய்யலாம் பகுதியில, "அழகிய கொரில்லா செய்வது எப்படி?" ன்னு டைட்டில் வந்தா, அன்னைக்கு எனக்காக எல்லாரும் ரெண்டு சொட்டு கண்ணீர் விடுங்க.. :-(

கிராஃப்டுக்கு என்று இன்னொரு ஆபிஸ் கட்டுங்க. ;)

//என்னைக்கு நான் அசந்து தூங்குற நேரம் பார்த்து, ஆயில் பெயிண்ட் அடிச்சு ஆணியில மாட்டப் போறாங்களோ தெரியல..// ம். மூளைசாலிகள் எல்லாம் ஒரே மாதிரித்தான் யோசிக்கிறீங்க. இது செபா அடிக்கடி சொல்லும் வசனம். ;))
அது சரி... தூங்குவீங்களா நீங்க!! ;)

‍- இமா க்றிஸ்

செண்பகா... எதுவுமே செலவில்லாம எப்படி அழகழகா செய்யணும்'னு உங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கணும். :) ரொம்ப சூப்பர்.

அண்ணா... //என்னைக்கு நான் அசந்து தூங்குற நேரம் பார்த்து, ஆயில் பெயிண்ட் அடிச்சு ஆணியில மாட்டப் போறாங்களோ தெரியல.. என்னைக்காவது ஒருநாள், நீங்களும் செய்யலாம் பகுதியில, "அழகிய கொரில்லா செய்வது எப்படி?" ன்னு டைட்டில் வந்தா, அன்னைக்கு எனக்காக எல்லாரும் ரெண்டு சொட்டு கண்ணீர் விடுங்க.. // - ஹஹஹா... நினைச்சு நினைச்சு சிரிச்சேன். வீட்டில் எல்லார்கிட்டையும் சொல்லணும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் எல்லாரையும் வாசிக்கவே வச்சுட்டேன் வனி. ;))

செண்பகா... நீங்க யாருக்கும் பயப்படாம தொடருங்க உங்க நற்பணியை. நாங்க இருக்கோம் சப்போர்ட்டுக்கு. ;)))

‍- இமா க்றிஸ்

பாப்பி கை வண்ணம் மிக அழகு. எப்படி தான் குட்டிய வைத்து கொண்டு செய்ய முடியுதோ.

வால் ஹேங்கிங் ரொம்ப அழகாக இருக்கு

//என்னைக்கு நான் அசந்து தூங்குற நேரம் பார்த்து, ஆயில் பெயிண்ட் அடிச்சு ஆணியில மாட்டப் போறாங்களோ தெரியல.. என்னைக்காவது ஒருநாள், நீங்களும் செய்யலாம் பகுதியில, "அழகிய கொரில்லா செய்வது எப்படி?" ன்னு டைட்டில் வந்தா, அன்னைக்கு எனக்காக எல்லாரும் ரெண்டு சொட்டு கண்ணீர் விடுங்க.. // ஹிஹி

Jaleelakamal

Hai senpaga. nenga seira pomai elllam roma super. na oru varamatha intha website parkaren. rompa usefula iruku.thanku senbaga.

செண்பகா எப்படித்தான் உங்களுக்கு கற்பனைகள் இப்படியெல்லா
விரிகிரதோ. எல்லாம் அட்மின் சார் கொடுக்கும் ஊக்கத்தினால்தானே?
ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
இதைபடித்தா, உடனே அட்மின் மறு பதிவு போட்டு விடுவாரே?

hello senbaga. eppidi senbaga ungalukum matum super supera thondu. oru vela room potu yosipingala. kuraintha silavil super pa. nanum try pantren. vera painting desings seithu kaminga senpaga.

அய்யோ நான் ஏன் இதைப்பார்த்தேன். என்னால சிரிக்க முடியலை ஏன் இப்படி. எனக்கு வயிறு வலிக்குது சிரிச்சே. எனக்கு நம்ம அட்மின் அண்ணாவிடம் பிடிச்சதே இந்த நகைச்சுவை ஆற்றல் தான். செண்பகா நீங்க ரொம்ப லக்கி.

முதல்ல உங்க கிட்ட சாரி சொல்லனும் செண்பகா.உங்களுக்கு குழந்தை பிறந்தது எனக்கு லேட்டா தான் தெரியும். அட்மின் அண்ணாவிற்க்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லலாம்னா 6 மாசம் கழிச்சா பண்ணுவாங்கன்னு தப்பா நினைச்சுப்பாங்களோன்னு நான் பண்ணலை. உங்க பாப்பா ரொம்...ம்ப அழகு. பாப்பாவுக்கு என் முத்தத்தை கொடுங்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

very superub sister

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta