சாலை விபத்துகள் - இந்தியா முதலிடம்

இரண்டு நாட்களுக்கு முன்னே தினமலர் செய்திகள்ல படிச்ச விசயம், உலகில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடுன்னு இந்த முறை இந்தியா பட்டம் வாங்கியிருக்கு. இதுக்கு முன்னே சீனா தான் அந்த இடத்துல இருந்திருக்காம். இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய விசயம். எதுவோ என்னவோ.. பர்ஸ்ட் வந்துட்டோம்ல ன்னு மார் தட்டிக்கலாம். எங்க யாரை குறை சொல்றதுன்னு தெரியாத அளவுக்கு, எல்லாமே இங்க தப்புத் தப்பா இருக்கு.

இந்த விசயத்துல அரசாங்கத்தை அதிகம் குறை சொல்ல முடியலை. சாலை விதிகள் எல்லாம் சரியாத்தான் இருக்கு. ரோடு வசதி அதிகம் இல்லேன்னாலும், ஒரு கவனிக்க வேண்டிய விசயம் என்னன்னா, நல்லா இருக்கிற ரோட்டுலதான் அதிகம் விபத்துக்கள் நடக்குது. ரோடு சரியில்லேன்னா, ஓட்டுறவங்க எல்லாருமே ஓரளவுக்கு ஜாக்கிரதையாத்தான் ஓட்டுறாங்க. விபத்துக்கள் அதிகம் நடக்கிறது, நல்ல ரோட்டிலதான். இப்போ பிரச்சனை ஓட்டுறவங்க கிட்டத்தான் அதிகம் இருக்கு.

ஃப்ளைட்ல மொத்தமா 160 பேர் இறந்தப்ப உலகமே வருத்தப்பட்டுச்சு. ஆனா, இங்கே தினமும் நூத்துக்கும் மேலே சாலை விபத்துல இறந்துக்கிட்டு இருக்காங்க. சாலை விபத்து செய்தி இல்லாத பேப்பரும் இல்லை. நாளும் இல்லை. கிட்டத்திட்ட ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட்லயும் குறைஞ்சது ஒரு விபத்தாவது நடக்குது. நமக்குன்னு எதுவும் பாதிப்பு இல்லாத வரைக்கும் இது எல்லாம் வெறும் செய்தியாவே போயிடுது. இதுக்கு யார் என்ன செய்யமுடியும்னு தெரியலை..

சரி, விசயத்திற்கு வருகிறேன்..

நேற்று நமது செல்வி அக்காவின் (இரண்டாவது) மகள் வந்த பஸ் விபத்துக்குள்ளாகி, அதில் அவருடைய கை எலும்பு முறிந்துவிட்டது. வேறு காயங்கள் இல்லை. கை மட்டும் கம்பியில் மாட்டிக்கொண்டு விட்ட நிலையில், மக்கள் கூட்டம் மேலே விழுந்ததினால், கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இப்போது சென்னையில் அறுவை சிகிச்சைக்காக சேர்த்து இருக்கின்றார்கள். சென்ற மாதம்தான் இவருக்கு இதே போல் பேருந்தில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது.

செல்வியக்கா தற்போது சென்னையில் இருக்கின்றார்கள்.. திங்கட்கிழமை பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால், உங்கள் அனைவரின் ப்ராத்தனைகளை அவர் வேண்டியுள்ளார். விரைவில் அவரது மகள் குணமடைந்து வீடு திரும்ப உங்கள் பிராத்தனைகளையும், வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

அன்பு செல்வி மேடம்,

ஆபரேஷன் நல்லபடியாக நடந்து, உங்கள் மகள் சீக்கிரமே குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

எங்களால் செய்யக் கூடிய உதவி ஏதேனும் தேவைப்பட்டால், தயக்கமின்றி தொடர்பு கொள்ளுங்கள், முடிந்ததை செய்ய காத்திருக்கிறோம்.

தைரியமாக இருங்கள், எல்லாம் சரியாகி விடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பின் செல்வி அக்கா, உங்கள் அன்பு மகள் வெகு விரைவில் பூரண குணமடைந்து விடுவார். உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
வாணி

செல்வி அக்கா,

உங்கள் மகள் சீக்கிரமே பூரண குணம் அடைய நான் இறைவனை வேண்டுகிறேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

செல்வி அம்மா உங்கள் மகள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்

அன்பு செல்வி,

மகள் விபத்துச் செய்தி அறிந்து மிகக் கவலையாக இருக்கிறது. அறுவை சிகிச்சை நல்லபடி நடக்கவும் மகள் விரைவில் குணம் பெறவும் என் பிரார்த்தனைகள்.

அன்புடன் இமா

தகவலுக்கு நன்றி அட்மின்.

‍- இமா க்றிஸ்

அன்பு செல்வி மேடம்,

ஆபரேஷன் நல்லபடியாக நடந்து, உங்கள் மகள் சீக்கிரமே குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

அன்பு செல்விக்கா, மகளுக்கு அறுவை சிகிச்சை நல்ல படியாக நடக்கவும், விரைவில் குணமடையவும் என்னுடைய ப்ராத்தனைகள். மனம் கலங்காதீர்கள் செல்விக்கா. மகள் குணமடைந்த நல்ல செய்தியுடன் விரைவில் எங்களை சந்தியுங்கள்.

அன்புடன்
வானதி

அன்பு சகோதரி செந்தமிழ் செல்வி: முதலில் உப்பு கொண்டு சுற்றி போடவும்(மருதாணி ரொம்ப அழகா வைக்ககூடாது).

விரைவில் குணமடைய தினமும் ஹீலிங் செய்கிறேன். நீங்களும் கற்றதை பயன்படுத்தவும். (Only local cleansing of the upper arm-200 time x 3 to 5 times a day)

முடிந்த வரை மஞ்சள் நிறம் அவர் கண்களில் அதிகம் படுமாறு அவருக்கும், மற்றவர்களும் உடையணிந்தால் எலும்பு விரைவில் கூடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அறுசுவையின் அனைத்து அன்புள்ளங்களூம், வலையுலக அன்புள்ளங்களும் செய்யும் பிராத்தனை கண்டிப்பாக விரைவில் குணமடைய செய்யும்.

பி.கு: அன்பு சககோதரர் அட்மின் பாபுவின் கூட்டு பிராத்தனை பதிவுக்கு நன்றி

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு செல்வி அம்மா அறுவைசிகிட்சை நல்லபடியாக நடந்து அக்கா குணமடைந்து விரைவில் வீடு திரும்ப என் குடும்பத்தின் வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்.

Viraivil gunam adaiya iraivanidam vaendugiren.Insha allah.Pirana sigichai enna naanum saigirene.Villaku veergala.Please.Healing patri kooravum.

nisarbanu

மேலும் சில பதிவுகள்