மாமியார்களுக்கோர் மரியாதை

இந்த பதிவு பார்க்கும் போது பலர் என்னை திட்டலாம். நமக்கு வில்லியே மாமியார் தான். அவங்களுக்கு மரியாதையா?
என் அகராதியிலே எனக்கு பிடிக்காத வார்த்தையே அது தான் அப்டின்டு நீங்க திட்டுறது தெரியுது. என்ன பண்ணுவது? ஆங்காங்கே விதி விலக்கு போல சில நல்ல மாமியாரும் இருக்க தான் செய்கிறார்கள். அப்படி பட்ட மாமியார் உங்களுக்கு கிடைத்தால் அது வரப்பிரசாதம் தான் இல்லையா?
அப்படி யாருக்காவது நல்ல மாமியார்கள் இருக்கிறார்களா?
இருந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
எந்த விசயத்தில் பிடிக்கும்? அவர்களிடம் உங்களுக்கு பிடித்த விசயம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

யாரும் பதிவு கொடுக்க வில்லையானால் நம் நாடு எந்த அளவில் உள்ளது என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது தான்.வேறு என்ன செய்வது?

இத்தனை உறுப்பினர்கள் உள்ளோம். யார் யாருக்கெல்லாம் அந்த பாக்கியத்தை இறைவன் அளித்துள்ளான் என்று பார்க்கலாம்?

அன்புடன்,
ஆமினா

ஹாய் amina assalamu alaikum நல்ல தலைப்பு.எல்லா மாமியாரும் நல்லவர்கள்தான் சில சமயங்களில்,சில சூழ்நிலைகளில் மாறிவிடுகிறார்கள்.(ஐஸ் வைப்பதற்காக சொல்லவில்லை)என் மாமியாரின் plus என்றால் நல்லா சமைப்பார்கள் நாங்கள் 3மருமகள்+1 பொண்ணு.ஆனால் நாலு பேரையும் ஒரே மாதிரிதான் பார்ப்பார்.
எல்லா மனுஷனுக்கும் positiveவும் இருக்கும் negativeவும் இருக்கும் negative விட்டு positivai எடுத்துக்கொள்வோமே.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

என் மாமியாரும் அப்படி தான். நாங்கள் 4+3 மகள் எல்லாரையும் அவர் சரிசமமாய் நடத்தும் விதமும் எல்லா குழந்தைமேலும் காட்டும் ஒரே மாதிரியான பாசமும் அவர் மேல் இருக்கும் மரியாதையை மேலும் மேலும் உயர்த்துகிறது.

திருமணாகி 5 மாதத்தில் நான் தனி குடித்தனம் போக அடம் பிடித்த போது வீட்டில் எல்லோரும் திட்டினார்கள். மாமியார் மட்டும் '' அந்த பொன்னுக்கு பிடிக்கலைன்டா ஏன் கட்டாயப்படுத்துறீங்க? இது ஒன்னும் ஜெயில் கிடையாது. யாரும் யாரையும் கட்டாயபடுத்த உரிமை இல்லை. என தனியாக போக அனுமதித்தார்.

நான் மாசமாக இருக்கும் போது என் மருமகளுக்கு நான் தான் பிரசவம் பார்ப்பேன் என்று 6 மாதம் முதல் என் அருகிலே இருந்து பார்த்துக்கொண்டார்.
எனக்கு ஆப்ரேஷன் தான் செய்யனும் என்று டாக்டர் சொல்லுவதை கேட்டு நான் அழும் போது அவரும் சேர்ந்து அழுதது, ஆறுதல் சொன்னது இன்னும் என் கண் முன் நிற்கிறது. ஆப்ரேஷன் பண்ணிய பிறகு தேவையான அனைத்து பக்குவமும் செய்தார்.
கல்யாணம், குழந்தைக்கு பிறகு எதுக்கு படிப்பு என்று எல்லாரும் சொல்லும் போது, படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு முக்கியம் என்று சம்மதித்தார்.

எந்த ஒரு கண்டிப்பும் கிடையாது. இத்தனை மணிக்கு தான் எந்திறிக்கனும், இந்தந்த வேலைகளை பார்க்கனும் என்று சட்டம் போட மாட்டார்.
ஒரு தோழி மாறி பழகுவார்.

60 வயசு ஆகுது அவங்களுக்கு.
அவங்க இளமை காலத்தை ரொம்ப கேலி பண்ணுவோம். ''இவங்க அந்த கால ஐஸ்வர்யா ராய்" என்று சில சமயங்களில் அவங்க முன் பாடுவதும் உண்டு. பல சமயங்களில் எனக்கு தோழியாய், தாயாய், குருவாய், அவதாரம் எடுத்துள்ளார்.(அவங்க மாமியார் அவங்கள ரொம்ப கொடுமை படுத்தியதால் அப்போதே சபதம் எடுத்தாராம்)

அவங்கள மாறி ஒரு மாமியார் கிடைத்ததற்க்கு நான் போன ஜென்மத்தில் கண்டிப்பாக மகா புண்ணியம் தான் பண்ணியிருந்துருப்பேன்.

ஸ்கூலில் சொல்லி குடுத்த ஆங்கில பழமொழிக்கு இப்போது தான் அர்த்தம் புரிகிறது.

OLD IS GOLD.............

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

OLD IS ALWAYS GOLD
hai arusuvai friends,
my mother inlaw is now 64 years old. i always admire her.
she is always busy and she never hesitates to do the household work or outside work.
except one thing,.i.e., she will talk openly.sometimes it will hurt i love her for all other qualities.If she comes to knows that we like something any eatables, dress or books she will do or buy.she knows very well my likes and dislikes. so i am lucky to have her as my inlaw.
ennai kettaal mamiyarukku eppavume o poduven.
cheers,
vidyavasudevan.

anbudan

ஒரு பெண் எவ்ளோ lucky-நு அவளுக்கு வர்ற husband and மாமியார் வச்சே சொல்லிடலாம்... அந்த வகைல நான் double lucky... என் மாமியார் அவ்ளோ நல்லா என்ன பாத்துகிறாங்க... என்ன அவங்க மக மாறி தான் treat பண்ணுவாங்க... Am really very lucky to have my மாமியார்...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

'மாமியார்' எனும் உறவுக்கோர் விதி உள்ளதா? அதற்கு விலக்கும் இருக்கிறதா? ;)

//யாரும் பதிவு கொடுக்க வில்லையானால் நம் நாடு எந்த அளவில் உள்ளது என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது தான்.வேறு என்ன செய்வது?// அதனை இந்த இழை ஒன்றை வைத்து மட்டும் முடிவு செய்து விட முடியுமா என்ன!! ;)

//எந்த விசயத்தில் பிடிக்கும்? // நிறைய இருக்கிறது. சொல்ல ஓர் பதிவு போதாது.

என் மாமியார் பற்றி முன்பே இங்கு சில இழைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். ஒரு அன்புத் தேவதை அவர். நாட்டை விட்டு வெளியேறியதில் எங்களுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு இவர்களது அருகாமைதான் என்பேன்.

எதைச் சொல்வது எதை விடுவது! சுய நலமில்லாத அன்பு இவர்களது. குடும்பத்தார் மட்டுமல்லாமல் இவரைத் தெரிந்த மற்றவர்கள் கூட இதை ஆமோதிப்பர். இவரை மனம் நோக வைப்பவர்களைக் கூட மன்னித்து உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர். இவரது நல்ல குணங்களைச் சொல்வதானால் ஒரு புத்தகமே எழுதலாம்.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது. பொருத்தமாக உடுத்திக் கொள்ளும் அழகு. சேலை அணியும் நேர்த்தி. எதையும் ஆர்வமாக அறிந்து கொள்ளும் குழந்தைத்தனம். தன்னால் முடியாத போதும் மற்றவர்களுக்கு உதவும் குணம். யாரையும் தவறாக நினைக்காத மனம். விசாலமான மனப்பான்மை. சட்டென்று யாரோடும் ஒட்டிக் கொள்ளும் குணம். நிறைய எழுதலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சில விடயங்களை மட்டும் சொல்லிவிட்டுப் போகிறேன்.

என் மாமியாருக்கு நான் எப்போதும் செல்லப் பெண். ;) என்னைப் பற்றி அவர் பலரிடம் பெருமையாகப் பேசி இருக்கிறார் என்பது மற்றவர்கள் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். நான் செய்த எந்த வேலைகளுக்கும் தடை சொன்னதில்லை. மாறாக எல்லாவற்றுக்கும் ஆதரவாக இருந்திருக்கிறார்.

மணமான புதிதில் என் கை நகங்கள் அழுக்காகி விடும் என்று வேலைகளை இழுத்துப் பொட்டுக் கொண்டு செய்வார். தோசை சுட்டால் சுடச் சுடக் கட்டி எடுத்துக் கொண்டு நான் கற்பித்த பாடசாலைக்கு வருவார். (அவர் சுடும் தோசை அப்படி மெத்தென்று இருக்கும்.) அதிபர் 'உங்களுக்கென்ன, குடுத்து வச்சனீங்கள்,' என்பார்.

மூத்த மகன் பிறந்த சமயம் ஒரு மாதகாலம் வைத்திய சாலையில் இருக்கவேண்டி வந்தது. நான் பழைய நிலைக்கு மீளப் பல மாதங்கள் ஆயிற்று. என் தாயாரும் அந்தச் சமயம் சிறிது உடல் நலமில்லாது இருந்தார். மாமிதான் தன் வீட்டு வேலைகளோடு என்னையும் என் குழந்தையும் பத்திரமாய்ப் பார்த்துக் கொண்டார். நான் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருந்த ஒவ்வொரு சமயத்திலும் இவர் ஆதரவு ஓர் பெரிய மனத் தைரியம்.

நான் அவர்களை மாமி என்று அழைப்பது இல்லை. சிறு வயது முதலே அவர் பெயரையும் சேர்த்து அன்னமாமி என்று தான் அழைப்பேன். சிலர் இதைப் பற்றிக் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் மாமி எதுவும் சொல்ல மாட்டார்.

என்னை மட்டும் அல்ல, தன் எல்லா மருமக்களையும் தன் பிள்ளைகள் போலப் பிரியமாக நடுத்துவார். அவர் ஒரு நல்ல தாய். நல்ல பாட்டி. நல்ல ஆசிரியை. நகைச்சுவை உணர்ச்சி அதிகம். வாழ்க்கையின் ஒவ்வொரு தினத்தையும் ரசித்து வாழ்ந்தவர். இப்போதோ, எண்பத்துநான்கு வயதுக் குழந்தை.

2005 ம் ஆண்டு மார்கழியில் நியூசிலாந்துக்கு அழைப்பித்தோம். நடக்க இயலாத நிலையிலும் எங்களைப் பார்க்கும் ஆசையில் புறப்பட்டு வந்து விட்டார். ஆறு வாரங்கள் எங்களோடு தங்கினார். ஊர் சுற்றியது சக்கர நாற்காலியில் தான் என்றாலும் தானும் சந்தோஷமாக இருந்து எங்களையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தி விட்டுக் கிளம்பினார். அதற்கு முதல் நாள் இரவு திடீரென்று 'தம்பி, விசாவை இன்னும் ஒரு கிழமை நீடிக்கக் கேக்க எல்லாதா? நான் ஜெயாம்மாட பிறந்தநாளுக்கு நிண்டிட்டுப் போறனே,' என்கிறார்.

தெரிந்த மொழிகள் இரண்டு. ஒன்று தமிழ், இரண்டாவது புன்னகை. இப்பொது இரண்டாவது மொழி முதலாவது இடத்தில் மாறி இருக்கிறது.

நினைவில் வருவது எல்லாம் எழுத ஆசைதான். படிக்கும் உங்களுக்குப் பொறுமை போய்விடும். ;) சமீபத்தில் வீட்டாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். பிண்ணணியில் மாமியின் குரல் கேட்டது, 'நாட்டிற்குச் சமாதானம் வேண்டும்,' என்று அடிக்கடி சொல்கிறாராம்.

என்னை அம்மா என்று கூப்பிட்டுக் கதைப்பார். எனது மாமியார் திருமதி, லூர்துமேரி ஜோண்பிள்ளை, திருகோணமலை புனித வளனார் கல்லூரியிலும் பின்பு புனித மரியாள் கல்லூரியிலும் தமிழாசிரியையாகப் பணியாற்றி இளைப்பாறியவர். மட்டுநகரிலும் சிலகாலம் கடமையாற்றி இருக்கிறார். பாசத்துக்கு இன்னொரு பெயர் லூர்து டீச்சர். அவர் மருமகள் என்பது எனக்கு எப்பொழுதும் பெருமைதான்.

‍- இமா க்றிஸ்

ஆமினா எப்படி இருக்கீங்க...?
எத்தனையோ விஷயங்களை பற்றி இந்த அருசுவையில் கலந்துரையாடி இருக்கின்றோம்.ஆனாலும் ஒரு சில விஷயங்கள் தான் நச்சென்று இருக்கும்.
அது போன்று தான் நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த பதிவும்.மிகவும் நல்ல விஷயம்.
ஒரு பெண்ணுக்கு மிக பெரிய பொக்கிஷம் அவளின் புகுந்த வீடு என்பது நூற்றுக்கு நூறு உண்மையே....அந்த பொக்கிஷம் எனக்கும் அமைந்ததாகவே நான் கருதுகின்றேன்.
எனது மாமியாரும் எனது அம்மாவிற்க்கு சமம் என்ற மனநிலையில் தான் என் புகுந்த வீட்டிற்க்கு காலடி எடுத்து வைத்தேன்.அதே போல் தான் நானும் என் மாமியாரும் நானும் கடந்த பத்து வருடங்களாக இருந்து வருகின்றோம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒலிவு மறைவு இல்லாமல் தோழிகளை போல் உரையாடி கொள்வோம்.எனது கணவர் கூட அடிக்கடி விளையாட்டாக அவர் அம்மாவிடம் சொல்லுவார்.”நீ மாமியார் பதவிக்கே வேஸ்ட்டு மா.”அப்படின்னு.
எனது நாத்தினார் கூட நாங்க பேசி அரட்டை அடிச்சுட்டு இருக்கிறதை பார்த்தா,மாமியார் மருமகள் மாதிரியா பேசிட்டு இருக்கீங்கன்னு சொல்லுவாங்க.
அப்படிதான் நாங்க பழகிக்கிட்டு இருக்கோம்.அவர்(மாமியார்) எனக்கு எங்கள் குடும்பத்தில் முழு சுதந்திரமும் கொடுத்து இருக்கின்றார்.
நான் கடவுளிடம் வேண்டுவதெல்லாம் இதே போல் கடைசி வரை நாங்கள் இருக்க வேண்டும் என்பதுதான்.
என்ன மாமியாரை எனது அருகிலேயே நிரந்தரமாக வைத்து கொள்ள முடியவில்லயே என்ற வருத்தம் தான் இருக்கின்றது.
இன்னும் என் மாமியாரை பற்றி சொல்ல எவ்வளவோ இருக்கின்றது.ஹூம்...ஆனால் என்னால் டைப் செய்ய தான் இயலவில்லை.
நல்ல விஷயமாக மாமியரை பற்றி சொல்ல சந்தர்ப்பங்கள் தந்த ஆமினா உங்களுக்கு எனது நன்றிகள் பல.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா பாராட்டிற்கு மிக்க நன்றி.

இந்த இழை தொடங்கும் போது யாரும் பதிவு கொடுக்க மாட்டார்கள் என்று தான் உண்மையில் நினைத்தேன். கலந்துக்கொண்டதர்க்கு மிக்க நன்றி
எந்த ஒரு செய்திதாளை புரட்டும் போதும் மாமியார் கொடுமை பற்றி ஏதாவது செய்தி வந்துக்கொண்டே தான் இருக்கிறது. நம் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் போது நமக்குள் ஒரு திருப்தி வரும் இல்லையா?
அந்த செய்திகளை பார்க்கும் போது ''அப்பா நான் தப்பித்தேன் என பெருமூச்சு விடுவோம் இல்லையா?

என்னை பொருத்த வரை 10ல் 1 ஆளுக்கு தான் மாமியார் அம்மாவாகும் பாக்கியம் கிட்டும்.

நம் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வதால் நிறைய பேர் திருந்தலாம் இல்லையா?(மாமியார்களை மட்டும் குறை கூறவில்லை. மருமகள்கள் கூட திருந்த வாய்ப்பு உண்டு. நாம் இனிமேல் இப்படி தான் நடந்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் சிறு விதை தூவ முயற்சி செய்யலாமே?
என்ன சொல்றீங்க?

இன்னும் நிறைய பேர் பதிவு குடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.
பதிவு குடுத்தவர்களும் மீண்டும் மீண்டும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்..........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அவ்வளவு தானா?
ஏன் அடுத்து யாரும் வரவில்லை?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஒவ்வொருவர் பெண்களின் வாழ்க்கையில் திருமணம்தான் திருப்புமுனை சரிதானே.என் திருமணத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல குணம் உள்ள அம்மா கிடைத்திருக்கிறார்.அதற்கு ஆண்டவனுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் அவர்களுக்கு ஒரு நல்ல மருமகளாக அல்ல மகளாக இருக்கும் பாக்கியத்தை இறைவன் அளித்தற்க்கு கோடானகோடி நன்றிகள்.

மேலும் சில பதிவுகள்