How to download youtube videos

உங்களில் யாருக்காவது youtube videos எப்படி download பண்ணுவது என்று தெரியுமா. நான் youtube site போய் பார்த்தேன் எதுவும் சரி படவில்லை. உங்களில் யாராவது download பண்ணி இருந்தால் எப்படி பண்ணீர்கள் என்று சொல்லுங்கள்

மோசில்லா பைர்பாக்ஸ் இல் " டௌன் லோட் ஹெல்பர் "ஐ ஆட் ஆன் தொகுப்பாக சேர்த்து கொள்ளவும். செய் முறையும் விளக்கப்பட்டுள்ளது .

RealPlayer உங்க சிஸ்டம்ல இன்ஸ்டால் பண்ணி இருந்தா வேற எந்த Special software தேவை இல்லை.
youtube ல கிளிப்ஸ் play ஆகும்போது இகான் ந அதன் மீது நகர்த்துங்க அபோ டோவ்ன்லோட்னு கோர்நேர்ல காமிக்கும் அதன்மீது ஒரு கிளிக் பண்ணவும்.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

நான் youtube downloader பயன்படுத்துகின்றேன். இது ஃப்ரீ சாப்ட்வேர்தான். இங்கே கிடைக்கிறது.

http://download.cnet.com/YouTube-Downloader/3000-2071_4-10647340.html

Hai அட்மின் அண்ணா ரொம்ப நன்றி நீங்கள் கொடுத்த லிங்க் போய் download பண்ணிட்டேன் ஆனால் அதுக்கு அப்புறம் எப்படி proceed பண்ணுவது என்று தெரியவில்லை.

Keep smiling....

நீங்கள் யூட்யூப் டவுன்லோடரை ஓபன் செய்தீர்கள் என்றால், அதில் முதலில் Enter video URL என்று இருக்கும். அதில் நீங்கள் டவுன்லோடு செய்யவிருக்கும் யூட்யூப் பட URL ஐ கொடுக்க வேண்டும்.

அதாவது முதலில் நீங்கள் எந்த யூ ட்யூப் வீடியோவை டவுன்லோடு செய்ய இருக்கின்றீர்களோ அதை ஓபன் செய்யுங்கள். அப்போது அந்த பக்கத்தில் address bar ல் தெரியும் முகவரிதான் அதனுடைய URL. அதை நீங்கள் செலக்ட் செய்து காப்பி செய்தாலே போதும். அந்த முகவரி, டவுன்லோடரில் மேலே வந்துவிடும். இல்லையென்றால் நீங்கள் மேலே அந்த இடத்தில் பேஸ்ட் செய்யலாம். அதன் பிறகு ஓக்கே கொடுங்கள்.

அதற்கு முன்பு, Download options என்று இருப்பதற்கு மேலே ஒரு சிறிய போல்டர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் எந்த போல்டரில் ஸ்டோர் செய்ய விரும்புகின்றீர்களோ அதை செலக்ட் செய்து கொள்ளவும் (Set your default downlod folder). இல்லையென்றால், அந்த வீடியோ எங்கே ஸ்டோர் ஆகி இருக்கின்றது என்பதை தேட வேண்டிவரும்.

ஹாய் அட்மின் அண்ணா ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொன்ன மாதிரியே வீடியோஸ் டவுன்லோட் செய்தேன் சூப்பரா வொர்க் அவுட் ஆகுது. Thank u once again.

Keep smiling....

அட்மின் அவர்களே,
நான் இதை ட்ரை செய்தேன்
மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வணக்கம். நான் யு-ட்யுப் வீடியோவை டவுண்லோட் செய்ததில் வீடியோவிற்கு பதிலாக பாட்டு மட்டும் பதிவானது.winamp format please tell me how to download video. i follow your procedeure. thankyou.

டவுன்லோடு செய்வதற்கு நான் மேலே சொல்லி உள்ள முறைதான். அது ஒரு சிம்பிள் டூல். அதில் பெரிதாக ஆப்சன்ஸ் எதுவும் கிடையாது. URL மட்டும் கொடுத்தால் போதுமானது. ஏற்கனவே சொன்னது போல் எந்த போல்டரில் டவுன்லோடு ஆக வேண்டும் என்பதை முன்கூட்டியே சரி செய்து கொள்ள வேண்டும். இதைத் தவிர சொல்லும்படியான விசயங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

winamp format என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பது கொஞ்சம் குழப்புகின்றது. லேட்டஸ்ட் winamp அல்லது video files play ஆவதற்குரிய plugins/codecs இருந்தால்தான் winamp ல் வீடியோ பார்க்க இயலும் என்று எண்ணுகின்றேன். winamp ற்கு என்று தனி பார்மேட் இருப்பதாக தெரியவில்லை. நீங்கள் டவுன்லோடு செய்ததை வேறு ஏதேனும் வீடியோ ப்ளேயரில் ப்ளே செய்து பாருங்கள். இல்லையெனில் நீங்கள் டவுன்லோடு செய்துள்ள ஃபைல் என்ன பார்மேட்டில் உள்ளது (ஃபைல் டைப் என்ன) என்பதை இங்கே தெரிவியுங்கள்.

நீங்கள் http://keepvid.com/ முயற்சி பண்ணுகள்.....சிம்பிள் ஆனது

மேலும் சில பதிவுகள்