என் பெற்றோருக்கு 60-வது கல்யாணநாள்

என் உயிர் தோழிகளே,
என் பெற்றோருக்கு 60-வது கல்யாணநாள் வருகிறது. அவர்களுக்கு நாங்கள் 5 பெண்பிள்ளைகள் என் பெற்றோர் அவர்கள் வாழ்வை தியாகம் செய்துதான்
எங்களை படிக்க வைத்து நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.ஒவ்வோரு பெற்றோரும் தன் பிள்ளைகள் திருமணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.நானும் அப்படித்தான் என் பெற்றோரின் ஆரம்ப கால திருமணம் எப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டும் என்று ஒரு graphics video ஆக அவர்களுக்கு குடுக்கலாம் என்று நினைக்கிறேன்.அதற்கு என்ன செய்யலாம் என்ன software use பண்ணலாம் என்று ஒரு idea குடுங்க please friends.இதை வேறும் ஒரு இழையாக மட்டும் நினைக்காமல் என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.

என்றும் அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

மாணிக்கவள்ளி,

உங்க ஐடியா ரொம்ப நல்ல இருக்கு. எனக்கு இத எப்படி பண்றதுன்னு தெரியாது. எனக்கும் எங்க அம்மா அப்பா 60 வது கல்யாணத்துக்கு ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு தோணுது. உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடச்ச எனக்கும் சொல்லுங்க ப்ளீஸ்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்