திருடர்கள் ஜாக்கிரதை

இன்றைய செய்திதாளில்:
பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணின் கேன்பேக்கை ப்ளேடால் கீறி 3500 ரூபாய் பணத்தையும் ஏடிஎம் கார்டையும் திருடிவிட்டு திருடன் தப்பியோட்டம். ஏடிஎம் கார்டில் இரகசிய குறியீட்டெண் இருந்ததால் அதில் உள்ள பணம் 77000 ரூபாய் எடுத்துள்ளான்.

இது போல் பல குற்றங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கிறது.
நாம் என்ன செய்யலாம்?
இது போல் குற்றங்களை நாம் சந்திக்காமல் இருக்க என்னன்ன வழிமுறைகளை கையாளலாம்?

அன்புடன்,
ஆமினா.

ஏடிஎம் கார்டு உபயோகிப்பவர்கள் முடிந்த அளவுக்கு ரகசிய குறியீட்டு எண்ணை எங்கும் எழுதி வைக்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக கார்டில். கார்டு தொலைந்து போனது என்று தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பாங்க்குடன் தொடர்பு கொண்டு உடனடியாக கார்டை கான்செல் செய்ய வேண்டும். இதனால ஏடிஎமில் உள்ள பணம் பறி போகாமல் இருக்கும்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

உண்மை சம்பவம்:
நான் நிறைமாதமாக இருந்ததால் என் அம்மா என் வீட்டில் 3 மாதம் தங்கியிருந்தார். இதை நோட்டமிட்டுக்கொண்டிருந்த திருடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளான். காலையில் விசயம் அறிந்து போனோம். அம்மா மட்டும் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் அம்மா வீட்டில் பணமும் நகையும் வைக்கும் பழக்கமற்றவர். பேங்கில் லாக்கரில் நகை வைத்ததால் தப்பித்தது. பாவம் திருடன் தான் ஏமாந்து போயிருப்பான்.

ஒவ்வொரு முறையும் செய்தியில் இவ்வளவு நகையும் இவ்வளவு ரொக்க பனமும் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை பார்க்கும் போது மக்கள் ஏன் இவ்வளவு மதிப்புள்ள பொருளை வீட்டில் வைக்கிறாங்கன்டு தோணும்.
தேவைக்கு தகுந்த நகையை மட்டு போட்டு மீதியை பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கலாமே!!!!!
குறிப்பிட்ட குறைந்த அளவு தொகை மட்டுமே செலுத்தி நம் பொருளை பாதுகாக்கலாமே?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் திருநெல்வேலியில் படித்துக்கொண்டு இருக்கும்போது தாழையூத்து நன்பர்கள் என்னுடன் சிலபேர் படித்து வந்தார்கள். அவர்கள் ஊரில் திருடர் உலா அதிகமிருந்தது. தினமும் நமது நன்பர்கள் அதைப்பற்றி வகுப்பறையில் விவாதிப்பார்கள் அப்போது காதில் விழுந்த ஓர் சம்பவம்....
அன்று அந்த ஊரில் யாரோ வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். வரும்போதே நம்ம ஊர் திருடனுக்கு தேவைப்படுமென நினைத்து அந்த 21’’ SONY COLOR TV ஐ வாங்கியிருப்பார்கள் போல. ஆம்..அவர் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கியவுடன் திருடனுக்கு வாசனை தெறிந்து யோசனை செய்ய ஆரம்பித்திருக்கிறான். யோசனை செய்தவன் கூட்டாளியுடன் ஆலோசனையும் செய்து அன்றிரவே களத்தில் இறங்கிவிட்டான். அவனுக்கு அந்த ஊர் திருட்டு தொழில் பழகிப்போனா ஊராச்சே அதனால்அவ்வூரை அவன் விலகிப்போவானா, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்தும் கூட அவன் அதை நிராகைத்திருகிறானாம் (இதெல்லாம் பின்னாளில் தெரிய வந்த விஷயங்கள்) ஓகே கம் டூ தி பாய்ண்ட்..இரணடு பேரும் சென்று ஒருவன் வீட்டுக்குள் புகுந்து டிவி யை தூக்கிட்டு வர மற்றொருவன் காவலுக்கு தின்னையில் கூலா தம்மடிச்சுகிட்டு காவல் இருந்திருக்கிறான். ஒரு திருடனின் பாதுகாப்பில் மற்றொரு திருடன் தன் வேலையை செய்கிறான். (ஒரு திருடன் பாதுகவலனாக பனிபுரிவது ஒரு முரன்பாடான சூழ்நிலைதான், சில நேரங்களில் இவ்வாறான வினோதங்கள் நடக்கும்). ரெண்டு பேரும் டிவியுடன் தெருவில் நின்றுகொண்டு அங்குவிலாஸ் போயிலையை மென்றுகொண்டே அங்குமிங்கும் ஒரு பார்வை, கன்னில் அகப்பட்டது ஒரு போர்வை. எதிர் வீட்டு தின்னயில் உள்ள அந்த போர்வையை எடுத்துப்பார்த்தால் ஒரு சைக்கிள், அதைப்பார்த்தவுடன் அந்த இருட்டிலும் பட்டுனு அவர்களுக்கு முகம் பிரகாசமானது, அந்த டிவியை கொண்டுபோக உதவுமேனு எடுத்துக்கொண்டார்கள். சைக்கிளில் வைக்கும்போது ஒரு கிரிப் தேவைப்படும் எனவே இந்த போர்வையும் தேவைப்படும், மயிலுக்கே போர்வை கொடுத்த பரம்பரையாச்சே நம்ம பரம்பரை அதனால் மனுசனுக்கு தராமலா போயிரும்
அதுனால போர்வயை எடுத்துக்கொண்டால் கொவிச்சுக்க மாட்டாங்க நினைச்சு போர்வையையும் உருவிக்கொண்டார்கள்.
விடிந்தவுடன் வீட்டில் காலை செய்தி பார்க்க டிவி இல்லை, ஆனால் செய்தி அவர்கள் வீட்டிலேயே இருந்திருக்கிறது, அதுவும் திடுகிடும் செய்தி டிவி யைக்கானோம் என்று. அந்த காலை வெளிச்சத்தில் கூட வீட்டுக்கரர்கள் முகம் இருண்டு விட்டது. கூடவே எதிர் வீட்டு தின்னையில் சைக்கிள் இல்லை என்ற செய்தியையும் கேட்டவுடன் டிவி பறிகொடுத்தவர்க்கு கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்திருக்கு, சைக்கிள் பறிகொடுத்தவர்க்கு டிவி போனதால் கொஞ்சம் ஆறுதல், இப்படித்தான் அந்த தெருவில் அண்டைவீட்டார் ஒருவருக்க்கொருவர் ஆறுதலா இருப்பாங்களாம், இது ஒரு மாறுதலான ஆறுதலாகவே உள்ளது. அந்த டிவிக்காகவே எதிர்வீட்டு சைக்கிளயும் ஓட்டிக்கொண்டு போனது கொஞ்சம் ஒவர்தான் இல்லையா?

கீழே உள்ளது உண்மை சம்பவம் இல்லை
நீதிபதி : ஏற்கனவே திருடிய அதே கடையில் மீண்டும் திருட சென்றீரே ஏன்
திரு.திருடர்: ஐயா திருடிவிட்டு திரும்புபோது அந்த கடையின் முகப்பில் ”நன்றி மீண்டும் வருகனு!” அப்படினு எழுதிருந்திருந்தாங்க அவங்களே மதிச்சு கூப்பிடும்போது போகலேனா மரியதை இல்லையே அதான் போனோம், நாங்க ஒன்னும் மரியாதை தெரியாதவங்க இல்லைங்கய்யா நீங்களும் மரியாதையா எங்களை வெளியே விட்டுருங்க, இன்னைக்கும் குவைத்ல இருந்துன் அந்த ஊருக்கு ஆள் வருதாம்.
அன்புடன்
ஆஷிக்

நாம் ரோட்டில் நடந்து போகும் போது பின்னாலிருந்து வரும் டூ வீலரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.பின்னாலிருந்து வேகமாக வந்து நம் செயினை பிடித்து அறுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இதனால் நம் வுயிருக்கே ஆபத்தகிவிடுகிறது.
என் பக்கத்துக்கு வீட்டில் வுள்ளவர்களுக்கு இதுபோலாகியது.திருடர்கள் வேகமாக வந்து கழுத்தில் ஏதோவொன்றை தடவிவிட்டு செயினை பிடித்து இழுத்திருக்கிறார்கள் அது அவர்கள் கைக்கு சிக்காமல் போகவே ஒரு அடி அடித்துவிட்டார்கள்.அவர்கள் தடவிய மருந்து கழுத்து மரத்து போகக்கூடியது.ஒருநாள் பூராவும் அந்த பெண் வலியால் வேதனைப்பட்டார்.அதனால் பின்னல் வாகனங்கள் வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் நண்பர்களே

உண்மை தான் சுந்தரி அர்ஜூன். இது போல் நிறைய விசயங்கள் எங்கள் ஊரிலும் நடந்துள்ளது. தாம்பரம்த்தில் ஒரு மூதாட்டி தனியா செல்லும் போது இது போல் தான் காதில் உள்ள தோடை பறிக்க நினைத்திருக்கிறான். பாட்டி சுதாரித்துக்கொண்டார். நகை என்னவோ தப்பியது தான் ஆனால் காது அறுந்துவிட்டது. காது அருந்த நிலையிலேயே காவல் நிலையத்துக்கு சென்று கம்ப்ளைன்ட் கொடுத்ததா நியூஸ் பேப்பரில் படித்தேன்.(அக்கா தாம்பரம் என்பதால் அவளும் உறுதி செய்தாள்.)

நாம் வெளியூருக்கு செல்வது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த சந்தர்ப்பத்தை தான் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி வெளியூர்க்கு செல்லும் போது அண்டை வீட்டாரிடம் சொல்லிவிட்டு சென்றால் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும். அப்படி இல்லை என்றால் அந்த நேரத்தில் மட்டும் நகை பணத்தை பேங்க் லாக்கரில் வைக்கலாம். பயம் இன்றி பயணம் செய்யலாம்.

அவ்வாறு நெடு நாள் வெளியூருக்கு சென்றால் அருகில் இருக்கும் காவல் நிலையத்திடம் தெரிவித்தால் இரவில் வீட்டு பக்கம் ரோந்துக்கு வரும் போது காவலாக இருப்பார்கள். ஆனா இந்த முறை எத்தனை காவல் நிலையங்கள் பின்பற்றுகின்றனர் என்று தெரியவில்லை.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரோட்டில் போகும் போது,வெளியில் போகும் போது எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஏதோ ஓரளவுக்கு பேசிட்டோம்:)
அடுத்ததாக, இன்று நம்மில் பலர் தனியாக வசிக்கும் சூழ்நிலையில் உள்ளோம். தனியாக இருக்கும் போது நீங்க என்னன்ன பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறீர்கள்? எப்படி தான் வீட்டுக்கு பூட்டு போட்டாலும் வருபவன் வரதான் செய்கிறான். சான்றாக கத்தி முனையில் துணிகர கொள்ளை அப்படியெல்லாம் செய்தி தாளில் படிக்கிறோம்.
என்னன்னலாம் செய்யலாம்?
என்னன்னலாம் செய்ய கூடாது?
சகோதரிகள் சொன்னால் கண்டிப்பாக மற்றவர்களுக்கு அது பயனாய் அமையும்.உங்க டிப்ஸ் கொடுங்க:-))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பெண்கள் தனியாக வீட்டில் வசிக்கும் போது பின் பற்ற வேண்டியவை .முதலில் அண்டை வீட்டாருடன் நல் உறவை கொண்டு இருக்க வேண்டும்.நமது இல்லத்திற்கு தினமும் வரும் cylinder போடுபவர் ,பால் கொடுப்பவர்,காய்கறிக்காரர்,இப்படி வருபவர்கள் யாராக இருந்தாலும் வாசல் வரை மட்டும் அனுமதி தாருங்கள் .மேலும் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் மிகுதியான பணத்தை வங்கி இல் லாக்கர் இல் வைக்கலாம் .வீட்டின் கதவுகளில் சிறிய ஓபன் வைத்து கதவின் அப்புறம் உள்ளவர்கள் நமக்கு அறிமுகமானவர்களா என் பார்த்த பின் கதவை திறக்கலாம் .புதியவர்கள் வந்தால் எந்த துறை சார்ந்தவர்கள் என் சொல்கிறார்களோ அதற்கான அடையாள அட்டை ய் கேட்கலாம். மேலும் வசதி இருந்தால் சிறிய கேமரா பொருத்தலாம் .aபாய மணி ய் நமது இல்லத்தில் பொருத்தலாம்.மேலும் நமது செல் போன் இல் அவசரத்திற்கு தொடர்பு கொள்ள என்று காவல் துறை ,அருகில் உள்ளவர்களின் என்னை பதிவு சித்து வைக்கலாம். இன்னும் சொல்கிறேன் மீண்டும். சௌமியன்

மேலும் சில பதிவுகள்