அட்மின் ஸார்,
எனக்கு HTML ஓரளவுக்கு தெரியும் கீழே நான் குடுத்துள்ள வெப்சைட்டில் இந்த மாதிரியான HTML Tagging jobs ஜாப்ஸ் செய்யலாமா? இந்த வெப்சைட் நம்பகமானதா தயை கூர்ந்து உதவவும்
http://www.datanetjob.com/html-tagging-projects.html
HTML Tagging jobs பற்றி மேலும் விவரங்கள் தெரிந்தால் கூறவும்
நம்ப வேண்டாம்
நீங்கள் கொடுத்துள்ள தளத்தின் முதல் பக்கத்தை பார்த்ததுமே நல்ல அபிப்ராயம் வரவில்லை. தாங்கள் யார், அலுவலகம் எது, எங்கிருந்து பணியாற்றுகின்றார்கள் என்ற எந்தவித விபரமும் இல்லாமல் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல், என்ன செய்கின்றோம் என்பதை இரண்டு வரிகளில் கொடுத்துவிட்டு, பக்கம் முழுதும் விளம்பரங்களை கொடுத்து இருக்கின்றார்கள். இதில் இருந்தே அவர்கள் நோக்கம் தெரிகின்றது.
நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டால், டேட்டா எண்ட்ரி செய்வதற்கு முதலில் உங்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கேட்பார்கள் என்று எண்ணுகின்றேன். அப்படி பணம் கேட்கும் எந்த தளத்தையும் நம்ப வேண்டாம்.
சிம்பிளான விதிகள்.
1. அலுவலக முகவரி, யார் என்ற விபரம் இல்லாமல் வரும் இதுபோன்ற தளங்களை நம்பவேண்டாம்
2. ஒரு பக்கம், இரண்டு பக்கங்கள் மட்டும் உள்ள, பிஸினஸ் வாய்ப்புகள் தரும் இணைய தளங்களை நம்பவேண்டாம்.
3. நீங்கள் வேலை செய்ய, உங்களிடம் ஒரு தளம் முன் பணம் கேட்கின்றதா? நம்பவே நம்பவேண்டாம்.