பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?"

ஹெல்லொ வனிதா மேடம்!எப்படி இருக்கிங்க?கவிசிவா ஆளையே காணோம்?ஓகே.நானே நடுவராய் இருக்கிறேன்.நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சகோதரி ஆயிஸ்ரீ மேடம் தந்த"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா?இல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதா?"என்பதுதான்.இதில்
எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டக்கொள்கிறேன்.குறிப்பாக வனிதா,ப்ரியா,டிவ்யா,இளவரசி,இலா,இமா,யோகரானி,ஜயலக்ஷ்மி,ஆமினா முஹம்மத்,எரிக்,கவிசிவா,மேடம் எல்லோரும்,இன்னும் என்னோடு போன பட்டிமன்றத்தில் கலந்த எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறேன்

/////3.உதாரணத்துக்கு குழந்தைகிட்ட ஒரு வேலை கூறும் போது கூட ஒரு சாக்லேட் வாங்கி கொடுப்பேன் ..போய் பால் வாங்கி வா. லவ் லெட்டரை பாஸ் பண்ணவதில் இருந்து நாம் சிறிய சிறிய பொருளையும் லஞ்சமாக கொடுத்து வளர்ப்பதும் மக்கள் தான்.இதுதானே நாளடைவில் வளர்ந்து உள்ளது.

4.லஞ்சத்தை கொடுத்து காரியத்தை சாதித்து அதை அனுபவிப்பதும் மக்களே..

5. ஏங்க நீங்க சொல்கிறமாதிரி, தேவையில்லாத வேலையை இழுத்துப் போட்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக நடுத்தர வர்கத்தினரே லஞ்சத்தைகொடுத்து காரியத்தை சாதிக்க நினைக்கும் போது, பணம் படைத்தவன் ஏன் முன் வந்து லஞ்சத்தை கொடுக்க நினைக்கமாட்டான். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை போல அவனவன் வருமானத்திற்கு ஏற்ப லஞ்சத்தை கொடுத்து காரியத்தை சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

6. ஒன்றுமில்லை ஒரு கேஸ் சிலிண்டரை சப்ளை செய்பனுக்கு இரண்டோ பத்தோ சேர்த்து கொடுத்து பழக்கப்படுத்தி சப்ளையை ரெகுலர் செய்துகொள்வதும் குடும்ப தலைவிதான் ...இல்லனு சொல்லுங்க பாப்போம்.

7.நமக்காகவே லஞ்சத்தை வளர்த்து... திணிக்கப்பட்டதால் தான் வளர்ந்தது எனக் கூறுவது எந்தவிதத்தில் நியாயம்.?////

ரம்யா மேடம் வாங்க வாங்க.மறுபடியும் வந்து கலக்கிட்டிங்க.

எனக்கு இப்பவே தலை சுற்றுகிறது.எதிரணிக்கு இன்னும் பலம் சேர வில்லை.வரவங்க எல்லோருன் கவிசிவா அணிக்கே போராங்க.என்னப்பா இது நியாயம்?ம்ம்ம்ம் ஆமினா ஒன் மேன் ஆர்மியா? கலக்குங்க பா

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்பு மக்களே உங்கள் அறியாமையால் தான் லஞ்சம் வளர்க படுகிறது . ஒரு பக்கம் பணம் பிடித்த முதலைகள் வளர்கிறார்கள் .மறுபக்கம் ஏழை மக்கள் ஒரு சலுகை பெற வேண்டுமெனில் அதற்கு லஞ்சத்தை அழ வேண்டி உள்ளது.பெண்ணின் திருமணதிருக்கு
அரசு சலுகை அளித்துள்ளது . அனால் அதற்குக் லஞ்சம் அளித்தால் தான் அந்த சலுகை கிடைக்கும் . ஏழை மக்கள் தங்கள் மகளின் திருமண கடனை அடைக்க உதவியாக இருக்குமே என்று அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க வேண்டி உள்ளது.மக்களிடம் மனிதாபிமானம் குறைந்து விட்டது.ஏழை என்றும் பாராமல் லஞ்சம் வசுளிகின்றனர். இந்தியா முன்னேற வேண்டும் என்றால் AIDS போன்ற கொடிய நோயான லஞ்சம் ஒழிய வேண்டும் .அரசு ஊழியர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும்.ஏழை மக்கள் மேல் இறக்கம் காட்டி அவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகையை பெற உதவ முன் வர வேண்டும்.பணம் படைதவரால் தர இயலும் அனால் ஏழை மக்களால் தர இயலும என்று சிந்திக்க வேண்டும்.கட்டாயத்தின் பேரிலே லஞ்சம் வளர்கபடுகிறது. அன்புடன்
வளர்மதிநாகராஜன்

லஞ்சம் வளர்க்கப்பட்டது என்பதே என் வாதம். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதறகான procedure என்ன? என்னென்ன formality பண்ணனும் எந்தெந்த டாகுமெண்ட் தேவைப்படும் அப்படினு யாரும் இப்பலாம் யோசிக்குறது இல்ல யார பார்த்தா வேலை சீக்கிரம் முடியும், அவங்களுக்கு எவ்வளவு சம்திங் கொடுத்தா அத சீக்கிரம் முடிச்சி குடுப்பாங்க இப்படி தான் எல்லாரும் யோசிக்குறாங்க.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டிபடி தான் வேலை கொடுப்பார்கள். முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிந்து வைத்து விட்டு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நமக்கு சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த அலுவக அதிகாரிக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து தங்களுடைய நம்பரை முதல் வரிசையில் வரும்படி செய்துக் கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் பரிட்ச்சை எழுதிவிட்டு ரிச்ல்ட்காக காத்திருந்து ரிசல்ட் வந்ததும் பாஸ் ஆனால் சந்தோஷம் இல்லை என்றால் அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்வோம் என்று இருந்தனர் மாணவர்கள். ஆனால் இப்போ அப்படி இல்லையே paper chasing ஒவ்வொரு பேப்பருக்கும் ஒவ்வொரு தொகை நிர்ணய்க்கப்பட்டு பேப்பர் திருத்தும் இடத்தில் போய் லஞ்சம் கொடுத்து பாஸ் போட சொல்வது என்று ஆகிவிட்டது. இதை யாருமே மறுக்க முடியாது இல்லை என்று சொல்லுங்க பார்ப்போம்.
அது ஏங்க சின்னதா ஒரு அட்டஸ்டட் வாங்க போனா கூட அந்த அதிகாரிக்கு அவங்க கேட்கலாலுமே நாமலே 50 அல்லது 100 கொடுத்துட்டு வந்துடுறோம். இப்ப அதுவே அவங்களுக்கு தொழிலா போச்சு அவங்க வேலை செய்து சம்பதிக்கரத விட அவங்க கையெழுத்து நிறைய சம்பாதிக்குது.
தங்களுடைய பிள்ளைக்கு ஒரு நல்ல பள்ளியில் சீட்டு வாங்க வேண்டுமா உடனே டொனேஷன்ங்குற பேருல ஏதாவது ஒரு தொகையை கொடுத்து சீட்டு வாங்கி விடுவது.
ரேஷன் கடை ஆரம்பித்து பாஸ்போர்ட் ஆபிஸ் வரை எல்லாமே லஞ்சம் தான். மக்கள் தங்கள் வேலை சீக்கிரம் முடிய வேண்டும் என்பதற்காக வளர்த்து விட்டு விட்டனர்.

நன்றி வளர்மதி நாகராஜன் மேடம்.நீங்கள் அறுசுவைக்கு புதிது என்று நினைக்கிறேன்.உங்கள் வருகைக்கு நன்றி!நன்றி!
////எல்லாரும் யோசிக்குறாங்க.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டிபடி தான் வேலை கொடுப்பார்கள். முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிந்து வைத்து விட்டு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நமக்கு சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த அலுவக அதிகாரிக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து தங்களுடைய நம்பரை முதல் வரிசையில் வரும்படி செய்துக் கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் பரிட்ச்சை எழுதிவிட்டு ரிச்ல்ட்காக காத்திருந்து ரிசல்ட் வந்ததும் பாஸ் ஆனால் சந்தோஷம் இல்லை என்றால் அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்வோம் என்று இருந்தனர் மாணவர்கள்.////
தேவி சுரெஷ் மேடம்.ரொம்பநாளா பட்டிமன்றத்தில் உங்களை காணோம்?
அருமையாக உங்கள் வாதத்தை தொடங்கியுள்ளீர்கள்.உங்கள் வருகைக்கும் நன்றி.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

//அது ஏங்க சின்னதா ஒரு அட்டஸ்டட் வாங்க போனா கூட அந்த அதிகாரிக்கு அவங்க கேட்கலாலுமே நாமலே 50 அல்லது 100 கொடுத்துட்டு வந்துடுறோம்//
ஒத்துக்கிறேன்.

நீங்க கொடுக்கலைன்டா அவன் போட மாட்டேங்குறானே! என்ன செய்வீங்க?
அந்த அதிகாரிக்கு கூட தெரியும்"யார் நமக்கு பணம் குடுப்பார்கள். யாருக்கு கையெழுத்து போடலாம். யாருக்கு போட கூடாது " என்று அவன் அறிந்துள்ளான். அவன் எதற்க்காக அலைய வைக்கிறான் என்று புரிந்துக்கொண்டு மக்களும் குடுக்கின்றனர்.

அதே கையெழுத்து வாங்க நீங்க அங்கே போய் நின்று பாருங்க. நீங்கள் பணம் கொடுத்தா தான் போடுவான். . அவன் உங்களை அலைய வைப்பதிலேயே நீங்கள் நொந்து வெந்து போய்ர்வீங்க.அவனின் நோக்கம் பணம் பறிப்பது மட்டுமே. ஒன்னு நீங்களாக குடுக்கனும். குடுத்தா வாங்கி கையெழுத்து போடுவான். இல்லைன்டா "நாளைக்கு வாங்க. ஸ்டாம்ப் வீட்ல வச்சுட்டு வந்துட்டேன்" அப்டின்டு சொல்லுவான்.

ஸ்கூலில் டீசி வாங்க போயிருந்தேன். அலுவலக ஊழியர்களிடம் 1 வாரம் வரை அலைந்து கெஞ்சியும் கொடுக்கவில்லை.ஹெட் மாஸ்டர் வரல; பைல் கண்டுபுடிக்க முடியல" இப்படியாக அலைய வைத்தார்கள்.
அதில் வேலை பார்த்த தலைமை ஊழியர் என் கல்லாவில் ஒரு 200 ரூபாய் வை. உனக்கு நான் ரெடி பண்ணி தரேன்டு சொன்னார். பணத்த வச்ச வேகத்திலே, அவரே துணை தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தார்.

நீங்க பணம் கொடுக்க முன் வரவில்லையென்றாலும் கூட கொடுக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி நம்மை கொடுக்க வைக்கும் வித்தை அவனுக்கு தெரியும்.

(அவன்/ இவன் என்று பேசுவதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் லஞ்சத்தை மக்களிடம் வாங்கும் அந்த கடைனிலை/மிருக பிறவிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.)

மறுமுறையும் வருவேன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா தங்கைக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது.....நமக்கு யார் பிடிக்கைவில்லையென்றாலும் அல்லது எதிரியாக இருந்தாலும் அவர்களை நாம் தரக்குறைவாக பேசக்கூடாது என்பது என் என்னம்.உங்களுக்கு அட்வைஸ் பன்னுவதாக என்னவேண்டாம்.நீங்கள் தனியாக நின்று வாதாடுனீர்கள் ஆரம்பத்தில்.உங்களுக்கு திறமை இருக்கிறது.மேலும் நீங்கள் சில விசயங்கள் எடுத்துக்கூறிய விதமும் அருமை.உங்களது பங்களிப்பிற்க்கு எனது நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கலக்குங்க ரம்யா... நான் சொல்ல வேண்டிய பதிலை ரம்யா சொல்லிட்டாங்க. :) காத்திருப்பீங்கலா, போராடுவீங்களா, கம்ப்ளைன்ட் செய்வீங்களா இப்படியே யோசிச்சுகிட்டு இருந்தா என்னைக்கும் எதுவும் மாறாதுங்க. ட்ராஃபிக் கந்தசாமி (பெயர் சரி தானானு தெரியல) இப்படிலாம் யோசிச்சு போராடுறதை நிருத்தல... இன்னும் அவர் வழியில் அவர் போறார். நாமும் துனிஞ்சு நின்னா நிச்சயம் காலம் சிறப்பாக அமையும்.

ஒரு ஏழையிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்டார்கள் என்று அவர்களின் மேலதிகாரியிடம் புகாரிட்டு அந்த ஏழைகள் நியாயம் வாங்கிய கதை உண்டு. அது கதை அல்ல... நிஜம்.

அன்று வெள்ளையன் சுட்டுடுவான், உள்ள போட்டுடுவான்னு பயந்து, எல்லாருகும் அடங்கி தானே போறாங்க நமக்கென்னனு ஒதுங்கி போயிருந்தா இன்று நமக்கு இந்த சுதந்திர இந்தியா இல்லை. அப்படி தான் எல்லாமே!!! லஞ்சம் கேட்டா குடுப்பேன், எனக்கு வேலை ஆகணும், என்னால அலய முடியாதுன்னா... காலத்துக்கும் குடுத்துட்டே இருக்க வேண்டியது தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ட்ராஃபிக் கந்தசாமி என்ன சாதிச்சாரு. ஒரு கேஸ் போட வேண்டியது. 2 மாசம் ஜெயில்ல இருக்க வேண்டியது.இப்படியே காலம் தல்ல வேண்டியது தான். அவர் நல்லவர் தான். நல்லவனுக்கு ஏதுங்க காலம்?
ஒத்து மொத்தமா எல்லாரும் திருந்துனா தான் லஞ்சத்தை அழிக்கமுடியும்.யார் வருவா?
அந்த காலத்துல நிறைய நல்லவங்க இருந்தாங்க. போராட்டத்துக்கு வந்தாங்க. இப்ப யாராவது வருவாங்களா?
ஏன்னா ஒவ்வோருவரும் ஏதாவது ஒரு விசயத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
யார் கையும் இங்கு சுத்தம் இல்லை.
எப்போது அரசங்கம் ஏழைகளுக்கு புது சலுகை வழங்கும் என்று எதிர்பார்க்கும் அரசியல்வாதிகள் அதிகம். அந்த சலுகைகளை அவங்க கிட்ட சேக்குரதுக்கு இல்ல. அத சாக்கா வச்சு பணம் பறிக்க.

இங்கே நிறையா பேர் அதுக்கு தான் அலைகிறார்கள்.

மக்களிடம் லஞ்சம் தினிக்கும் மக்கள் தான் இங்கே அதிகம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யாரு. ஒரு படத்துல சேவல் மாதிரி கூவி கூவி அடிப்பாரே அவுரா.

முதல்ல உங்க ரெண்டு பேர் மேலயும் ஒரு கேஸ் போடணும். அவர் ராமசாமி-ங்க.

அன்புடன்,
இஷானி

வாங்க இஷானி மேடம்.குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் சிலரும் இருக்கிறார்கள்.எனினும் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்