பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?"

ஹெல்லொ வனிதா மேடம்!எப்படி இருக்கிங்க?கவிசிவா ஆளையே காணோம்?ஓகே.நானே நடுவராய் இருக்கிறேன்.நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சகோதரி ஆயிஸ்ரீ மேடம் தந்த"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா?இல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதா?"என்பதுதான்.இதில்
எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டக்கொள்கிறேன்.குறிப்பாக வனிதா,ப்ரியா,டிவ்யா,இளவரசி,இலா,இமா,யோகரானி,ஜயலக்ஷ்மி,ஆமினா முஹம்மத்,எரிக்,கவிசிவா,மேடம் எல்லோரும்,இன்னும் என்னோடு போன பட்டிமன்றத்தில் கலந்த எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறேன்

ட்ராஃபிக் கந்தசாமி (பெயர் சரி தானானு தெரியல) - இஷானி நான் தான் முதல்லயே சொல்லிட்டனே பெயர் சரியானு தெரியலன்னு. நமக்கு அக்கம் பக்கம் இருக்கவங்க பெயரே தெரியல அவரை பற்றி தகவலாது தெரியுதேனு சந்தோஷபடுங்கப்பா. எப்படியோ சொல்ல வந்த மேட்டர் சரியா??? ;) [சரியா பெயர் சொன்னதுக்கு மிக்க நன்றி]

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனிதா அக்கா.பரவாயில்லை விடுங்க.யானைக்கும் அடிச் சறுக்கும்.அதை சுட்டிக்காட்டிய இஷானி மேடத்திற்க்கு நன்றி.நான் செய்யவேண்டியதை செய்திருக்காங்க.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன வனிதா அக்கா யாரையும் காணோம்?நான் வேண்னா ஏதும் பணம் கொடுக்கனுமா?சாரி லஞ்சம் கொடுக்க்கனுமா?இன்று யாரும் சரியான பதிவுபோடவில்லை,ஆமினா தங்கை வேற காணோம்?இளவரசி மேடம்,கவிசிவா,எரிக் யாரும் இன்னும் வரல.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நடுவர் அவர்களுக்கும், பங்கு கொள்ளும் அனைவருக்கும் வணக்கம்.

இரண்டு பக்கத்திலும் மிக அழுத்தமாக, மறுக்கவே முடியாத அளவுக்கு வாதங்களை வைத்திருக்கிறார்கள்.

இருப்பினும் எனக்குத் தோன்றும் சில கருத்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.

லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஆனால் அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த ஒரு சின்ன விஷயம் கூட நடப்பதில்லை.

அரசாங்க வேலைகளில் வேலை கிடைப்பதற்கு, இட மாற்றலுக்கு, பதவி உயர்வுக்கு, சம்பள உயர்வுக்கு என்று லஞ்சம் வாங்காமல் எதுவும் நடப்பதில்லை.

இதுவே தனியார் நிறுவனங்களில் ட்ரான்ஸ்பரன்ஸி எனப்படும் வெளிப்படையான செயல்பாடு இருக்கிறது. இங்கே பதவி உயர்வு, இட மாற்றம் இதெல்லாம் பிரச்னையாக ஆவதற்குக் காரணம் ஈகோ போன்ற காரணங்கள் இருக்குமே தவிர, நிச்சயம் லஞ்சம் காரணம் இல்லை.

ஆர்.டி.ஓ. அலுவகங்களில் நேரடியாகப் போய் என்ன வேலை நடக்கும்? ரெஜிட்ரார் அலுவகங்களிலும் இதே கதைதான்.

அரசாங்க ஊழியர்களைப் பற்றி லஞ்சப் புகார் கொடுத்தால், நமக்குதான் மேலும் வில்லங்கம். அவங்கதான் அங்கங்கே ஆள் வைத்து இருக்காங்களே. யாருங்க சொந்தக் காசில சூனியம் வச்சுக்க தயாரா இருக்காங்க?

இதுவே தனியார் அலுவலகத்தில் யாரும் தைரியமாக தன்னுடைய கருத்தை சொல்ல முடியும். அங்கேயும் அடிதடியாக ஆகி விடுமோ என்ற அளவுக்கு விவாதம் அனல் பறக்கும். ஆனால், சுமுகமான ஒரு முடிவு கிடைக்கும். கம்பெனியின் முன்னேற்றம்தான் அங்கு முதல். அதற்கும் மேல் -”வேலைக்கு வருவதற்கே சம்பளம் சரியாகிப் போச்சு, மேற்கொண்டு கிம்பளம் வேண்டும்” என்றால் - ‘நீங்க இவ்வளவு சிரமப்பட்டு ஆஃபீஸுக்கு வர வேணாம், வீட்டிலேயே இருந்துகோங்க’ என்று சொல்லி விடுவார்கள்.

லஞ்ச ஒழிப்பு இலாகா என்று ஒண்ணு இருக்கு -- ஆனா -- இருக்கற மாதிரி தெரியலையே.

பாராட்டைக் கேட்டு மயங்காதவர்கள் இருப்பார்கள், ஆனால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றால் பயப்படாதவர்கள் யார்? அந்த அளவுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் நிச்சயம் லஞ்சம் வாங்க மாட்டார்கள். எங்கே - லஞ்சம் வாங்குபவர்களை கண்டும் காணாமலும் விட்டால்தானே அந்த லஞ்சப் பணத்தில் பங்கு கிடைக்கும், மேலும் நான் செய்யற தப்பை நீ கண்டுக்காதே, அதே போல நீ என்ன செய்தாலும் அது உன் பாடு என்ற மனப்பான்மைதானே இங்கே.

ரமணா படத்தில் வருவது போல பயம்தான் லஞ்சத்தை ஒழிக்க சரியான கருவி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஹா ..ஆமினாவின் அணி சீதாலக்ஷ்மி மேடத்தின் வருகையால் பலம் பெற்றுவிட்டது.இனி கலக்கல் ஆரம்பம்....வழக்கம்போல் தனது பதிவுகளால் "திணிக்கப்பட்ட அணிக்கு பலம்"சேர்த்துள்ளார்.எதிரணி அடுத்து எந்த ஏவுகனையுடன் வருகிறது என பார்க்கலாம்....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இந்த தனி மரத்தை தோப்பாக்கிய சீதா லெட்சுமி மேடத்திற்கு மிக்க நன்றி. அடுத்து எதிரணி பேசுனதுக்கு அப்பறம் மீண்டும் வாதத்துடன் வருகிறேன் நடுவர் அவர்களே!!!!!!!!!!

தீர்ப்பு வரும் வரை வாதாடுவேன்
ஆமினா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உதாரணம் 1 - கப்பல்ல இருக்குற பையனுக்கு கடுதாசி போடணும்னு ரொம்பநாளா நெனைச்சிகிட்டு இருந்தேன். இப்ப நீ எழுதி கொடுத்ததுல ரொம்ப சந்தோசம். நீ மவராசனா இரு. இந்தா காபித்தண்ணி குடிக்க எட்டணா வச்சிக்க.

உதாரணம் 2 - அம்மா, நீங்க பாத்த பிரசவத்துல எம்பொண்ணும் பேரனும் சொகமா இருக்காங்க. இது எந்தோட்டத்துல விளைஞ்சது. உங்களுக்குதான் மொதல்ல கொடுக்கணும்னு கொண்டு வந்தேன். மறுக்காம வாங்கிக்க தாயி.

இந்த ரெண்டு உதாரணங்களிலும் ஏதாவது தவறு இருக்கிறதா சொல்லுங்கள். அவங்க நல்லவங்கதான். தனக்கு ஒரு உதவி செய்தவருக்கு பிரதிபலனா தன்னால முடிஞ்சத 'அன்பளிப்பா' கொடுத்தாங்க. தபால்காரரோ அல்லது மருத்துவரோ அதை வாங்க மறுத்திருந்தா கொடுக்க நினைத்த இருவருமே கட்டாயம் சங்கடப்பட்டிருப்பார்கள். இங்கு அந்த அன்பளிப்பு அவர்கள் அன்பின் வெளிப்பாடு.

அன்பளிப்பில் சுகம் கண்ட ஊழியர்கள் பின்னாளில் அதனை எல்லோரிடத்திலும் 'திணித்தார்கள்'. இது கட்டாயப் படுத்தப்பட்டு லஞ்சமாக மாறி இப்போது தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. திணிக்கப்படவில்லை என்று வாதாடுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். லஞ்சம் திணிக்கப்படவில்லையெனில் - ஊழியர்கள், கொடுப்பவர்களிடம் வாங்கிவிட்டு, கொடுக்க முடியாதவர்கள், கொடுக்க விருப்பமில்லாதவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை விதிமுறைகளுக்கு மாறாமல் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் லஞ்சம் திணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

மக்களில் சிலர் முறைதவறி காரியத்தை சாதித்துக்கொள்ள லஞ்சம் கொடுத்து பழக்கப்படுத்திவிட்டனர் என்ற விவாதம் முற்றிலும் சரியானது அல்ல. கூர்ந்து கவனித்தால் இதை செய்பவர்கள் 'பெரும்பாலும்' பிரிதொரு இடத்தில் லஞ்சம் வாங்குபவர்களாக அல்லது தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். சாதாரண மக்கள் கட்டாயத்தின் பேரில் மட்டுமே லஞ்சம் கொடுக்கின்றனர்.

அன்புடன்,
இஷானி

ஷ்.ஷ் ஷ் அப்பாட...ஒரு வழியா ஆமினாவின் அணி பலம்பெற்றுவிட்டது.கீதாஜி,இஷானி,வளர்மதி நாகராஜன்,சீதாலக்ஷ்மி,மேடம் இவர்களின் வரவால் "திணிக்கப்பட்டது அணி பலமடைந்துவிட்டது.இனி பாருங்க கச்சேரிய!(ஆமினா!நீங்க தனி மரம் என்று யார் சொன்னது?)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன எதிரணியின் படை எங்கே?கவிசிவா,யோகரானி,வனிதா,எரிக் மேடம் எல்லோரும் என்ன பன்றிங்க?பட்டிமன்றம் அவ்வளோதானா?இப்பதான் சூடு பிடிச்சிருக்குன்னு சந்தோசப்பட்டேன்.ம்ம்ம்ம்ம் வாருங்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒரு முறை:

அன்று மாலை தான் லக்னோவில் இருந்து சென்னைக்கு(சென்ரல்) வந்து அடுத்த ட்ரைன் இன்னும் 2 மணி நேரத்தில் என்பதால். என் அம்மாவும் குழந்தையோட, பையையும் தூக்கிக்கொண்டே வேகமா போய் அடுத்த ட்ரைனையும் புடிச்சுட்டேன்.(சென்னை எக்மோர் டூ இராமேஸ்வரம்) . முன்பதிவு செய்தும் கன்பார்ம் ஆகாததால் சீட் மட்டும் குடுத்தாங்க.

அம்மா ஹார்ட் பேசன்ட். TTR கிட்ட முதலில் பயணம் செய்த டிக்கெட்டையும்,என் அம்மா பற்றி விசயத்தை சொல்லியும், என் குழந்தை தூக்கத்திற்க்கு அழுகுவதை காட்டியும் "யாராவது வரலைன்டா எங்கிட்ட சொல்லுங்க. என் அம்மாவுக்கு ஒரு பெர்த் மட்டும் போதும்" என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே 2 ஆண் பயணிகள் அன்ரிசர்வ் டிக்கெட் வாங்கி பெர்த்துக்கு கெஞ்சினார்கள். டி.டி.ஆர் திட்டிக்கொண்டு இருக்கும் போதே நான் என் சீட்டில் வந்து உக்கார்ந்துவிட்டேன்.5 மணி நேரமா காத்திருந்து அவர் ஒரு பதிலும் சொல்லாததால் அவரை தேடி நான் போனேன். போகும் வழியில் கெஞ்சிக்கொண்டு இருந்த அந்த இரு பயணிகளும் தனி தனி பெர்த்தில் படுத்திருந்தார்கள். TTRரிடம் அவர்களை பற்றி நான் கேட்ட போது என்னை திட்ட ஆரம்பித்துவிட்டார். வேறு வழியின்றி மீதம் இருக்கும் 8 மணி நேரத்தையும் என் குழந்தையை தோளில் சுமந்துக்கொண்டே கழித்தேன்.

அவருக்கு தேவை பணம். அதை யார் கொடுக்கிறார்கலோ டிக்கெட் வாங்காம ஏறினாலும் பெர்த் கிடைக்கும். பரிதாபத்திற்க்கு அவரின் அகராதியில் பொருள் இல்லை.

நான் அந்த பணத்தை கொடுத்திருந்தால் எனக்கும் பெர்த் கொடுத்திருப்பார். பணம் பறிப்பது தான் அவரின் முதல் நோக்கம். பயணிகளே தானாகவே வந்து பணம் கொடுக்கணும் என்ற சூழ்னிலையை உருவாக்குகிறார். அதனால் தான் பயணிகளும் கொடுக்கின்றனர். இது வளர்ப்பது அல்ல. தக்க சூழ்நிலையை உருவாக்கி மக்களிடம் பறிப்பது. திணிப்பது.

(பி.கு: அதே ரயிலில் அதிக முறை பயணம் செய்திருக்கேன். நல்லவர்களையும் பார்த்திருக்கிறேன். லஞ்சம் பறிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்