பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?"

ஹெல்லொ வனிதா மேடம்!எப்படி இருக்கிங்க?கவிசிவா ஆளையே காணோம்?ஓகே.நானே நடுவராய் இருக்கிறேன்.நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சகோதரி ஆயிஸ்ரீ மேடம் தந்த"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா?இல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதா?"என்பதுதான்.இதில்
எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டக்கொள்கிறேன்.குறிப்பாக வனிதா,ப்ரியா,டிவ்யா,இளவரசி,இலா,இமா,யோகரானி,ஜயலக்ஷ்மி,ஆமினா முஹம்மத்,எரிக்,கவிசிவா,மேடம் எல்லோரும்,இன்னும் என்னோடு போன பட்டிமன்றத்தில் கலந்த எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறேன்

ஆமினா மேடம்.நீங்கள் சொல்வது சரிதான்.ஆனாலும் யார் மனதையும் காயம்படும்படி ஏதும் சொல்லவேண்டாம்.இது பொதுவான களம்.எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.ஆகவே மொகனரவி மேடம்..ஒரு அணிபக்கம் சேர்ந்து உங்கள் பதிவுகளை இங்கே தாருங்கள் நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆமினா... பட்டிமன்றத்தில் இதுவரை பலர் பார்வையாலராக மட்டும் இருந்தது உண்டு. வந்து அதை மட்டுமே சொல்லிவிட்டு போகிறவர்களும் உண்டு. நான் சொல்வது புதிதாக இணைந்தவர்களை அல்ல, மூத்த உறுப்பினர்கள் கூட அப்படி வருவது உண்டு. அப்படி இருக்கும் பட்சத்தில் மோகனா ரவி அவர்கள் பதிந்த பதிவுக்கு இப்படி ஒரு பதில் தேவை இல்லாதது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை தவிர்த்துவிட்டு போயிருக்கலாம். பட்டிமன்றத்தை பொருத்தவரை நடுவருக்கு முழு உரிமை. அவர் அந்த பதிவை பார்த்தும் பதில் சொல்லாமல் விட்ட பிறகு நாம் இங்கு பேசுவது தவறு. பட்டிமன்றத்தில் அனைவரும் கருத்து தெரிவிக்க அனுமதி உண்டு(ஏதேனும் ஒரு அணிக்கு), தீர்ப்பு தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. இங்கு பதியப்படும் கருத்துகளை நடுநிலையாக பேசும் உரிமை நடுவருக்கும், அட்மினுக்கும் மட்டுமே. என்னுடைய இந்த பதிவே இங்கு தப்பு தான். நான் பதிவிட்டதுக்கு காரணம் ஆவலோடு வந்த ஒரு உறுப்பினரை இப்படி யாரும் பேசிவிட கூடாது, பல மாதங்கள் போராடி தான் பட்டி மீண்டும் துவக்கபட்டது, இங்கு தேவை இல்லாத மன கசப்பு, பிரெச்சனைகளை அனுமதிக்க இயலாது என்பதால் தான். தப்பா நினைக்காதிங்க... பலர் விரும்பி ஒன்று சேர்ந்து நடத்தினால் தான் பட்டிக்கு அழகு... யாரையும் யார் வார்த்தையும் காயப்படுத்திவிட கூடாது. ஒரு தோழியாக என் கருத்தை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன். மிக்க நன்றி.

மோகன ரவி... நீங்க தொடர்ந்து பட்டியில் பங்கு கொண்டு உங்க கருத்தை ஏதேனும் ஒரு அணிக்கு சாதகமாக பதிவு செய்யுங்கள். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

நடுவரின் கவனத்துக்கு... இந்த பதிவுகளை இத்துடன் முடித்து கொண்டு, பட்டியை தொடருங்கள். தேவை இல்லாத பிரெச்சனைகள் பட்டியின் அழகை இழக்க செய்யும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்காவிற்க்கு,
யாரும் இங்கு தவறாக எதையும் சொல்லவில்லை.புதிதாய் வந்தவர்களுக்கு சில விசயங்கள் தெரியாது.எனக்கே தெரியாது.ஏனென்றால் எனக்கு இது இரண்டாவது பட்டிமன்றம் மட்டுமே.நாம் எடுத்து சொன்னால் எல்லோரும் கேட்டுக்கொள்வார்கள்.
எல்லாம் நன்மைக்கே!வழக்கம்போல் உங்கள் பதிவுகளை இங்கே தொடருங்கள்!ஆமினா.மோகனரவி..மேடம் இந்த பிரச்சனையை இதோட மறந்துவிடலாம்..நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன ஆச்சு?வனிதா அக்கா!ஆமினாள் சகோதரி!பட்டிமன்றம் இன்னும் முடிய வில்லை.தொடர்ந்து உங்களது பதிவுகளை இங்கே தாருங்கள்.இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு.!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

@@@@//இன்று லஞ்சம் குடுக்க மாட்டேன், என் வேலை தாமதமானால் பரவாயில்லை, அப்படியும் ஆகா விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்ல ஆரம்பித்தால்...!!! நாடும் திருந்தும், நாமும் திருந்துவோம்//

தலை போகும் பிரட்சனை. கேக்கும் பணம் இல்லை என்பீரா?@@@

அப்படி என்னங்க தலைபோகும் பிரச்சினை? எல்லாவற்றையும் கடைசி நிமிடத்திற்கு தள்ளிவைத்து விட்டு இன்னைக்கே என் காரியம் ஆகவேண்டும்னு மக்கள் நினைப்பதால்தான் லஞ்சம் வளர்ந்தது.

யாரோ ஒருத்தவங்க கொடுத்ததால்தான் மற்றவர்கள் மீது லஞ்சம் திணிக்கப்பட்டதுன்னு எதிரணியினர் சொல்றாங்க. அந்த யாரோ ஒருவர் யாருங்க. வேறு உலகத்தில் இருந்து குதித்தவரா? அவரும் பொதுமக்களில் ஒருவர்தானே! அவரைப் போன்றவர்களால்தான் லஞ்சம் வளர்ந்ததே!

///இவன்கிட்ட நான் இன்னைக்கு கையெழுத்து வாங்கினா தான் நாளைக்கு அதை சேர்க்க முடியும். "நான் தரமாட்டேன். அங்கே சொல்லி குடுப்பேன்; இங்கே கம்ளைன்ட் பண்ணுவேன்டு" சொல்வீரா?///

நிச்சயமா சொல்லமாட்டேன். ஆனா அதன் பின் அந்த லஞ்சப்பணத்தை எப்படி மீட்பதுங்கற விஷயமும் தெரியும்.லஞ்சம் வாங்கினவனை எப்படி உள்ள தள்றதுன்னும் தெரியும். இந்த தைரியம் பொறுப்புணர்வு மக்களிடம் வேண்டும். அது இல்லாமல் ஏதோ என் வேலை முடிஞ்சுதே அப்படீன்னு போய்கிட்டு இருந்துட்டு அப்புறம் அய்யோ என் மீது லஞ்சம் திணிக்கப்படுகிறதேன்னு சொல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

இது எப்படித்தெரியுமா இருக்கு...ரோட்டோரமா தேமேன்னு ஒரு கல்லு கிடக்கும். நாம கவனிக்காம போய் அதுல கால இடிச்சுக்கிட்டு நாம என்ன சொல்லுவோம்னா "கால்ல கல்லு இடிச்சிடுச்சு". ஏதோ அந்த கல்லு நாம வர்றத பார்த்து வேணும்னே ஓடிவந்து காலை இடிச்சமாதிரி சொல்லுவோம். சரி கல் இடிச்சிடுச்சு அதை அப்புறப்படுத்துவோம்னு நினைப்போமா? மாட்டோம் நம்ப பாட்டுக்கு காலை தேய்ச்சு விட்டுட்டு போய்கிட்டே இருப்போம். பின்னாடி வர்றவரும் அந்த கல்லில் போய் இடிப்பார். அவரும் காலை தேய்ச்சுகீட்டு போய்கிட்டே இருப்பார். இதையெல்லாம் பின்னாடி பார்த்துக்கிட்டு இருப்பவர் இந்த இடத்தில் இப்படி கல்லில் இடிப்பதும் பின்னர் காலை தேய்த்து விடுவதும் ஏதோ சம்பிரதாயம் என்று நினைச்சுகிட்டு அவரா காலை இடிச்சுக்கிட்டு தேய்ச்சு விட்டுட்டு போவார். இது தொடர் கதையாகி விடுகிறது.
இப்ப சொல்லுங்க ஒவ்வொருவரும் அந்த கல்லில் போய் இடித்துக் கொள்வது அந்த கல்லின் தவறா இல்லை கண்மூடித்தனமான மக்களின் தவறா? இது போலத்தான் லஞ்சமும் மக்களால் ஆரம்பிக்கப்பட்டு மக்களாலேயே வளர்க்கப் படுகிறது.

//அந்த ட்ராபிக் போலிஸின் அடுத்த கேள்வியே " அங்கே கட்டுனா 500 இங்கே கட்டுனா 100" என்பது அனைவரும் அறிந்ததுதான். கட்டாம கோர்ட், கேஸ்ன்டு அலைய சொல்வீரா?

இப்படியாக லஞ்சம் தினிக்கப்பட்ட பின் தான் வழக்கம் என்பதை அறிந்து மக்களும் கொடுக்கிறார்கள்.//

கோர்ட்டில் போய் 500ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்ற சட்டத்தை பொதுமக்கள் மதிக்க மாட்டார்களாம். ஆனால் லஞ்சம் எங்கள் மீது திணிக்கப்படுகிறதுன்னு கோஷம் போடுவாங்களாம். நல்ல கதையா இருக்குங்க உங்க நியாயம். லஞ்சம் கொடுப்பவனும் குற்றவாளிதங்கற எண்ணம் பொதுமக்களிடம் இல்லாதது மட்டுமல்ல அது நியாயம்தான் வழக்கம்தான்னு சால்ஜாப்பு சொல்லும் மக்களால்தான் லஞ்சம் வளர்க்கப்படுகிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க கவிசிவா வாங்க. நல்லா பதில் குடுத்திருக்கீங்க. :)

ஒரு உண்மை சம்பவத்தை நான் இங்க சொல்ல ஆசை படறேன். என் தங்கை ஒரு முறை ஹெல்மட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் போன போது ஒரு ட்ராஃபிக் போலீஸ் நிறுத்தி பணம் கேட்டிருக்கிறார். அவளும் கையில் 100 ரூபாயை குடுத்துவிட்டு அவர் பெயரை பார்த்து கொண்டு வீடு வந்தாள். தந்தையிடன் சொன்ன போது நேராக மேலிடத்தில் சொல்லி அடுத்த நாளே சம்பந்த பட்டவர் வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டார். அவரிடம் என் தந்தை சொன்னது ஒன்று தான்... "நீங்க யார்கிட்ட பணம் கேட்டீங்கன்னு முக்கியமில்லை, நியாயமா ஹெல்மட் இல்லாம வந்தது அவ தப்பு தான், ஆனா சார்ஜ் ஷீட் எழுதாம கைல 100 வாங்கிட்டு அனுப்பினது தப்பு. சார்ஜ் ஷீட் எழுதி அவளை 500 கட்ட வெச்சிருந்தா இன்னைக்கு இப்படி நிக்க வேண்டி இருக்காது."னு.

இப்படி நடவடிக்கை எடுத்ததால் இனி அவர் எங்கும் கை நீட்ட யோசிப்பார். என் மேல் தப்பு இருக்கு, 500 குடுக்குறதுக்கு 100 குடுத்தது மேல் தான்னு நம்ம நினைச்சா அவங்க திருந்த வாய்ப்பில்லை.

நியாயமா நடந்துக்குறவங்க இருக்காங்க நாட்டில். நம்ம தான் எல்லாரும் ஒரே மாதிரின்னு நினைச்சு பணத்தை காட்டறோம். அதனால் தான் இருக்க 1, 2 நல்லவங்களையும் கெட்டவங்க ஆக்கறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பணம் படைத்த யாரோ ஒருவரால் தான் அப்படி கொடுக்க முடியும். நடுத்தர மக்களாலும், ஏழை மக்களாலும் கொடுக்க முடிவதில்லை.//

ஆம் நாங்களும் பணம் படைத்த சிலர் லஞ்சத்தை உருவாக்கியதால் ஏற்பட்ட பிரச்சனை என்றுதான் கூறுகிறோம். பணம் படைத்த மக்கள் தங்கள் தேவையை உடனே போட்டியின்று முடிக்கவே லஞ்சத்தை பயன்படுத்துகின்றனர். அதை அனுபவிக்கும் அதிகாரி விரலுக்கு ஏற்ற வீக்கம் போல அந்தந்த மக்களிடம் லஞ்சம் பெறுகிறான். இது மக்களால் வளர்க்கப்பட்டது இல்லயா ?

//அரசு பள்ளிகளில் மாணவ,மாணவிகளால் சரளமாகாஅங்கிலம் பேச முடிவதில்லை. தன் குழந்தையும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை எந்த பெற்றோருக்கு தான் வராது?
கல்வி தரம் குறைவு இல்லை தான். அடிப்படை வசதிகள் மிக மிக குறைவு.//

ஒன்று மட்டும் படிக்கக்கூடிய குழந்தை எங்கு இருந்தாலும் படிக்கக்கூடும்.நுனி நாக்கில் ஆங்கிலம் இந்த சூழலில் வேண்டும்தான் என்றாலும் ஆங்கிலம் என்பது அறிவு இல்லை. தான் நினைப்பதை மற்றவருக்கும் புரியவைக்கும் எல்லா மொழியையும் போல ஒன்றுதான்.இதில் பள்ளிக்கூடத்தின் பங்கும் பெரும் அளவு இருந்தாலும் நம்மை சுற்றியுள்ள சூழலில் முக்கியமாக உள்ளது.

//எதுக்கு ரூல்ஸ்ன்டு ஒன்னு போடனும்? அப்பறம் ஏன் அதை அவர்களே மீறனும்?பணம் பறிக்க தானே!!!
ரூல்ஸ் மீற முடியாது.தேவையா இருந்தா உன் புள்ளைய வேற ஸ்கூல்ல சேத்து விடுன்டு சொல்லலாமே. எப்படிய்யாவது பணம் பறிக்க வேண்டும் என்பதால் தானே ரூல்ஸ் என்ற பெயரில் மக்களிடம் லஞ்சம் பறிக்கின்றனர்.//

இதில் தன் காரியத்தை சாதிக்க லஞ்சத்தை வளர்த்துதானே விடுகிறோம்.நீங்கள் கூறுவதை போல யாரோ ஒருவனால் வளர்க்கப்பட்ட லஞ்சத்தால் தான் அனைவரும் லஞ்சத்தை திணித்துக்கொண்டு உள்ளனர்.

முதலில் திணிக்கப்பட்டதாக இருந்தாலும் ஒருவன் லஞ்சம் கொடுப்பதினாலே தானே அவன் அனைவரிடமும் எதிர்பார்க்கின்றான். ஒருவனாவது அவனை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிவிட்டால் மீண்டும் எப்படி அவன் எதிர்பார்ப்பான்?

வனிதா கூறியதை போல எத்தனை பேர் எதிர்த்து போராடுகின்றனர்? ஏதோ 100 ஓ அல்லது 200 ஓ குடுத்தால் நம் வேலை முடிந்தது என்றுதானே நினைக்கின்றனர். அவரது உறவினர் செய்த காரியத்தை போல கணிசமான மக்கள் செய்தாலே கணிசமான முறையில் லஞ்சம் ஒழியும் இல்லயா?..

ட்ராஃபிக் போலிஸ் லஞ்சம் கேட்பதால் தான் நாங்கள் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்று கூறுபவர்கள், எத்தனை பேர் பணம் குடுத்து பாரு ஒத்துக்கொள்வான் என கூறி இருப்போம்.

ஏன் அத்தனை நியாயமாக இருந்தால் ... லைசன்ஸை மறந்துவிட்டேன். அதற்கு லஞ்சம் எல்லாம் கொடுக்கமாட்டேன்.. நீ சட்டப்படி செய்.. நானும் சட்டப்படி பார்த்துக்கொள்கிறேன் என எத்தனை பேர் கூறுகின்றனர். அங்கே போனால் 500/- அலைச்சல் அதனால் போலிஸ் கேக்கும் முன்னரே பணம் எடுத்து கொடுக்கதானே நினைக்கிறார்கள்.

இப்படியே அனைவரும் கூற எப்படி அவன் லஞ்சத்தை எதிர்ப்பார்ப்பான்? திணிக்கப்படுகிறது திணிக்கப்படுகிறது என கூறுவதெல்லாம் சும்மா சாக்கு. நாம் வளத்துக்கொண்டுதான் உள்ளோம்.. நான் நினைத்தால் என் மீது திணிக்கமுடியாது என கம்பீரமாக கூறமுடியுமா? சிலவற்றை தியாகம் செய்துதான் சிலவற்றை பெறமுடியும். தியாகம் செய்ய முடியாதவர்கள் லஞ்சத்தை வளர்த்துக்கொண்டு மட்டுமே இருப்பார்கள்.

அந்த லஞ்சத்தினால் பயனும் பெற்று கடைசியில் கடங்காரன் இந்த வேலையை முடிக்க இத்தனை வாங்கிவிட்டான்..அய்யோ என்மேன் லஞ்சத்தை திணித்துவிட்டான் என கூறவேண்டியது

லஞ்சத்தை நம்மிடம் கேட்கும் போது நாம் சுயநினைவில் தானே உள்ளோம். பின் எப்படி திணிக்கப்பட்டது என கூறமுடிகிறது. அப்படி லஞ்சம் கொடுத்து ஒன்னும் என் காரியத்தை சாதிக்கத் தேவையில்லை என போக வேண்டியதுதானே.

என் வாதமேல்லாம் லஞ்சம் திணிக்கப்பட்டது எனக் கூறி நாமே வளர்த்து தேவையான காரியத்தையும் சாதித்து பின் குறை ஏன் கூற வேண்டும் என்பதுதான்..
எனவே லஞ்சம் என்பது மக்கள் அறிந்தே வளர்த்துகொண்டு இருக்கும் ஒன்றுதான்.
நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருவேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஒரு ஓட்டுனரிடம் போலிஸ் ஒருவர் லஞ்சம் கேக்கிறார். நான் கோட்டில் கட்டிக்கொள்கிறேன் என்று சொன்னதும் அவர் வண்டியை ஸ்டேஷனுக்கு எடுத்து செல்கிறார்கள். அடுத்த நாள் பணம் கட்ட கோர்ட் போனபிறகு தான் தான் மீது தேவை இல்லாமல் சம்மந்தம் இல்லாத வழக்குகளில் பெயர் சேர்த்திருப்பது தெரிந்தது. ஏழையால் என்ன செய்ய முடியும்.
எல்லா வழக்குகளில் இருந்து விடுபட 2 மாதம் தேவைபட்டது. வழக்கு முடிந்து வண்டி எடுக்க போனால் கேப்பாரற்று கிடந்த வண்டி சில பாகங்கள் சூறையாடப்பட்டது.
தேவை இல்லாமல் 2 மாதம் அலைச்சல், தேவை இல்லாத வழக்குபதிவு மீது அபராதபணம், வண்டியின் பழுது.
இது ஒரு உதாரணம். நாம் பணம் கொடுக்க மறுத்தால் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை இப்படி தான் காட்டுகின்றனர்.
சாமானிய மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புனர்வு இருப்பதில்லை. படித்தவர்களோ சட்டத்தின் துளைகளை அறிந்துள்ளனர். நீ எனக்கு இதை கொடுத்தாதான் இதை செய்வேன் என்கிறார்கள். மறுத்தால் தான் அறிந்த சட்டம் வைத்து பழிவாங்குகிறார்கள்.

லஞ்ச ஒழிப்புதுறை என்ற ஒன்று இருப்பதை எத்தனை பேருக்கு தெரியும்?
காவல் துறை நம்பர் 100, ஆம்புலன்ஸ் நம்பர் 108 அப்டின்டு பப்ளிசிட்டி பண்றாங்க. லஞ்ச ஒழிப்பு துறை நம்பர ஏன் கொடுக்கிறது இல்லை. மக்கள்கிட்ட இன்னும் நாம் லஞ்சம் பறிக்க வேண்டியது நிறைய இருக்குன்டு நினைக்கும் போக்குதானே?
அந்த மாறி ஒரு துறை எங்கே இயங்குதுன்டே தெரியல. நாங்களும் இருக்கோம்டு எப்பவாவது ஒரு நியூஸ் போடுவாங்க. அதோட அவ்வளவு தான். மாட்டுனவங்க அடுத்த நாள் பாத்தா அதே ஆபிஸ்ல இருப்பாங்க.மாட்டி கொடுத்த நாம் தான் அடுத்து என்ன நடக்குமோன்டு உயிரை கையில் பிடிச்சுட்டு பயத்தில் மூழ்கி இருப்போம்.
நான் லஞ்சம் கொடுப்பதை சரி என்று சொல்ல வில்லை. அது மக்கள் மீது திணிக்கப்பட்டது என்பது தான் என் வாதம். அந்த லஞ்சத்தை நாம் கொடுக்க மறுத்தால் நம் மீது அதிகாரத்தை திணிக்கின்றனர்.
லஞ்சம் வாங்குகிறவர்கள் தொடர் சங்கிலி போல் செயல்படுகிறார்கள். இவர் லஞ்சம் கேக்குறார்ன்டு அங்கே சொன்னா அவரும் லஞ்சம்
வாங்குபவர் என்றால் என்ன செய்ய முடியும்?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அது போல் தான் இந்த பணம் பறிக்கும் ஒருவகை திருட்டான லஞ்சமும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

/அந்த லஞ்சத்தினால் பயனும் பெற்று கடைசியில் கடங்காரன் இந்த வேலையை முடிக்க இத்தனை வாங்கிவிட்டான்..அய்யோ என்மேன் லஞ்சத்தை திணித்துவிட்டான் என கூறவேண்டியது//
லஞ்சம் கொடுத்த பிறகு வேலையை முடிக்கிறாங்க. தான் பணம் போச்சேன்டு கவலைபடுறது தப்பு இல்லையே. ஏன்னா நாங்களா லஞ்சம் கொடுக்கல. அவங்க வற்புருத்தி கேட்டு கொடுத்ததனால் சம்பாதித்த பணம் போச்சேன்டு கவலைபடுறோம்.அவ்வளவுதான்.

//ஒன்று மட்டும் படிக்கக்கூடிய குழந்தை எங்கு இருந்தாலும் படிக்கக்கூடும்.நுனி நாக்கில் ஆங்கிலம் இந்த சூழலில் வேண்டும்தான் என்றாலும் ஆங்கிலம் என்பது அறிவு இல்லை//
உங்கள் குழந்தையை அரசு பள்ளிகளில் சேர்ப்பீர்களா?
எத்தனை பேர் இப்படி முன்வருவார்கள்?
"நம்ம ஆசைபட்டது தான் படிக்க முடியல. நம்ம பிள்ளைகளையாவது ஆங்கில பள்ளில சேத்துவிடனும்டு குழந்தை கருவில் இருக்கும் போதே கற்பனை செய்து விட்டு அதற்காக கஸ்ட்டப்படும் பெற்றோர்கள் தான் இப்போது அதிகம். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களும் லாபம் சம்பாதிக்கின்றனர். அவங்க கேக்கலன்டா நாம ஏன் பைத்தியம் மாறி சம்பாதித்த பணத்தை அவர்களுக்கு கொடுக்க போறோம்.?
அவர்கள் நம்மிடம் கேட்டது திணிப்பதற்க்கு சமம்.வளர்ப்பது இல்லை.

//இதில் தன் காரியத்தை சாதிக்க லஞ்சத்தை வளர்த்துதானே விடுகிறோம்.//
அது எப்படிங்க ரூல்ஸ்ங்குற பேருல அவங்க நம்ம கிட்ட கேட்டது லஞ்சம் திணிப்பு இல்லையா? அவங்களோட குறிக்கோளே பறிக்குறது தானே? இப்படியொரு குருக்குவழி அவங்க காட்டாம இருந்தா மக்களும் அந்த வழில பயணம் செய்திருக்குமாட்டார்கள்.

எனவே நடுவர் அவர்களே!!!!!!!!!!!
மக்கள் லஞ்சம் வளர்க்கவில்லை. அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்பது தான் உண்மை.

மீண்டும் வாதத்துடன் வருவேன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்ன வனிதா,சிவா,ரம்யா மேடம்!இப்படியா வந்து மொத்தமா தாக்குதல் நடத்துவிங்க?சொல்லிவச்சி வாரிங்களா?எதிரணி இப்ப ரொம்ப பலமா இருக்கு.எதிர் தாக்குதல் மறுபடியும் எப்பவும் வரலாம்...உஷார்....உஷார்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்