பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?"

ஹெல்லொ வனிதா மேடம்!எப்படி இருக்கிங்க?கவிசிவா ஆளையே காணோம்?ஓகே.நானே நடுவராய் இருக்கிறேன்.நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சகோதரி ஆயிஸ்ரீ மேடம் தந்த"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா?இல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதா?"என்பதுதான்.இதில்
எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டக்கொள்கிறேன்.குறிப்பாக வனிதா,ப்ரியா,டிவ்யா,இளவரசி,இலா,இமா,யோகரானி,ஜயலக்ஷ்மி,ஆமினா முஹம்மத்,எரிக்,கவிசிவா,மேடம் எல்லோரும்,இன்னும் என்னோடு போன பட்டிமன்றத்தில் கலந்த எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறேன்

எதிர் அணி லஞ்சம் கட்டாயமாயிடுச்சுன்னே சொல்றாங்க... உண்மை தான் ஆனா அதுக்கு பிள்ளையார் சுழி போட்டது நாம (மக்கள்)'னு தான் நாங்க சொல்றோம்.

பள்ளியில் விடும் குழந்தையை நல்லா பார்த்துக்க சொல்லி ஆயாம்மா'கு பணம்.
ஹாஸ்பிடலில் பேஷன்ட்டை பார்த்துக்க வார்ட் பாய், நர்ஸ்'கு பணம்.
ஹோம் டெலிவரி உணவு கொண்டுவருபவருக்கு கையில் 10, 20 குடுப்பது'னு எதுக்கு அவங்களுக்கு சம்பலம் குடுக்கறாங்களோ அந்த வேலையை அவங்க நல்லா செய்ய நாம பணம் குடுத்து பழகிட்டோம். இப்போ அவங்க யார் குடுப்பாங்களோ அவங்களுக்கு தான் நல்லா செய்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே நாளாகுது... ஓடி வாங்க தீர்ப்போடு!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பஞ்சாயத்து போர்ட்டில் இருந்து மாநகராட்சி வரை உள்ள.....ஏன் அதற்க்கும் மேல் உள்ள அமைப்புகளில் மக்கள் கொடுக்க முன் வரவில்லை என்றாலும் லஞ்சம் கொடுத்தால் தான் அவர்களின் வேலையை செய்கிறார்கள்.லஞ்சம் வாங்குபவர்கள் எல்லாம் ரோசக்காங்களாச்சே. நாய்க்கு எலும்பு தூக்கி போடுற மாறி பணத்த போட்டா வேல செய்ய மாட்டாங்க. அதற்க்கு பதிலாக "செலவுக்கு வச்சுக்கோங்க, கொழந்தைக்கு கொடுங்க, சாப்பாட்டு செலவுக்கு இந்தாங்க, அட சும்மா வச்சுக்கோங்க" இப்படிலாம் நம்ம கெஞ்சி நடிச்சு அவங்களுக்கு கொடுத்தாதான் வாங்குறாங்க.இது எதிரணியிணர்க்கு நாமே முன் வந்து கொடுப்பது போல் தோன்றுகிறது போலும்.
இன்றைக்கு பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் வாங்காம வேல செய்றது இல்ல. நாம கொடுக்க வேண்டியதே இல்ல. அவங்களே கேப்பாங்க.கொடுத்தாகனும். மறுத்தால் பின் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்கனும்.

அரசு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே லஞ்சம் கொடுக்காம நிறைவேறுவதில்லை.லஞ்சம் வாங்குறதுக்காகவே அவங்க அந்த திட்டங்கள் கொண்டுவர்ர நிலமைக்கு இந்த அதிகாரிகள் தள்ளிட்டாங்க.
நல்ல பல திட்டங்களும் இவர்களால் சாகடிக்கப்படுகிறது.லஞ்சத்தினால் பல திட்டங்கள் கிடப்புலையே இருக்கு.
ஆகவே நடுவர் அவர்களே லஞ்சத்தை வளர்த்தது மக்கள் இல்லை. அவர்கள் மீடு திணிக்கப்பட்டது தான் உண்மை.
உங்கள் நல்ல தீர்ப்புக்கு காத்திருக்க்றேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தீர்ப்புக்கு முன்னால் லஞ்சம் பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும்.என்னை பொருத்தவரை ....நாகரீகமான அன்பு என்பது நட்பு.அநாகரீகமான அன்பு என்பது காமம்.நாகரீகமான முறையில் நன்றி தெரிவித்தல் அன்பளிப்பு.அநாகரீகமான முறையில் நன்றி தெரிவித்தல் அது லஞ்சம்.

லஞ்சம் திணிக்கப்பட்டதா?வளர்க்கப்பட்டதா என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது "கோழியிலிருந்து முட்டை வந்ததா?முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதுதான்.அமேரிக்காவில் ஒரு ஹோட்டலில் சாபிட்ட பிறகு 15% டிப்ஸ் கொடுக்க வேண்டுமாம்.அது கட்டாயம் இல்லை.இருந்தாலும் அவர்கள் கொடுத்து(கெடுத்து)விடுவார்களாம். MODE டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கயின் ஒரு கட்டுரையில் கொடுத்த புள்ளி விபரம் பின்வருமாறு....

அரசியல்வாதிகள்-98%
போலிஸ்-97%
அரச்சாங்க ஊழியர்கள்-88%
வக்கீல்கள்-80%
பேங்க் ஊழியர்கள்-69%
நீதிபதிகள்-66%
பத்திரிக்கையாளர்கள்-66%
ஆசிரியர்கள்-43%
பொது மக்கள்-38%
(இத்தனை சதவீதம் அவர்கள் லஞ்சத்தில் ஈடுபட்டதாய் புள்ளிவிபரம் கொடுத்துள்ளது.)
புள்ளிவிபரம் மேல் எனக்கு நம்பிக்கையில்லை.
இந்த தீர்ப்பை படிக்கின்ற எல்லொரையும் ஒன்று கேட்டு கொள்கிறேன்!நீங்கள் எங்காவது ஹோட்டலில் உணவருந்த சென்றால் டிப்ஸ் கேட்க்கும் பையனைப் பார்த்து கேவலமாக கருத வேண்டாம்.ஏனென்றால் ஒரு அரசியல்வாதி மற்றும் அரசு ஊழியர்களுக்கும்,அந்த பையனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.அந்த பையன் காரியத்தை முடித்த பிறகு பணம் கேட்கிறான்.அரசியல்வாதிகள் முன்பாகவே கேட்கிறார்கள்.சரியா?

ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..

'குழந்தையின் தலை முதலில்
பாதி வரும்
பணம் கொடுத்த பின்புதான் மீதி வரும்"

மேஜைக்கடியில் யாருக்கும் தெரியாமல் கொடுப்பது பட்டும் லஞ்சமில்லை.லஞ்சம் என்ற போர்வையில்...அளவுக்கு அதிகமாக பணம் வசூழிப்பது...பொருட்களை லஞ்சத்திற்க்கு பதில் பரிசளிப்பது...இவை எல்லாமே லஞ்சம் என்ற பன்றிக்கு பிறந்த குழந்தைகள்தான்!

இன்னும் வரும்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

லஞ்சம் என்பது நமது கலாச்சாரமல்ல.இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் லஞ்சத்தின் பாதிப்பு அதிகம்.(சில வருடங்களுக்கு முன்பு ஏழாவது இடம்.இப்போது முதழாவது இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை.)அதில் பெரும்பங்கு அரசியல்வாதிகளுக்கும்.அரசு ஊழியர்களுகும் உண்டு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.அது மட்டும்மல்ல.பல ஆண்களுக்கும் அதில் பங்கு உண்டு.ஆண்கள் என்றவுடன் நீங்கள் ஆச்சரியம் அடையவேண்டாம்.வரதட்சணை என்பதும் பன்றிகுட்டியின் குழந்தைதானே!சௌதி அரேபியாவில் பெண்களை பெற்றவர்கள் சந்தோசம் அடைவார்கள்களாம்.ஏனென்றால் ஆண்கள்தான் அங்கு பெண்களுக்கு விருப்பப்பட்டதை கொடுத்து திருமணம் செய்துகொள்ளவேண்டும்.இங்கு அப்படி அல்ல.ஒரு கவிஞன் சொன்னது போல் ஒரே நாளில் ஏழையாவது பெண்ணோட தந்தைதான்.அது திருமணத்தில்தான்.

புள்ளிவிபரம் அடிப்படையில் லஞ்சம் திணிக்கபட்டதுதான் என்று சுழபமாக தீர்ப்பு சொல்லி ஒதுங்கிவிடலாம்.ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் இதில் குற்றவாளிகள் இல்லை.பொது மக்களும்தான்.அதிலும் பணம் படைத்த சில மனிதர்களாலும்தான்.

எங்கு லஞ்சம் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்லதேவையில்லை.காற்றுக்கு அடுத்தபடியாக எங்கும் நிலைத்திருப்பது லஞ்சம்தான்.இனி வருங்காலங்களில் உணவு,உடை,இருப்பிடம் அடுத்ததாக அடிப்படை தேவைகளில் லஞ்சம் என அரசாங்கமே முன்வந்து அறிவிக்கலாம்.
சரி அரசியல்வாதிகள்தான் குற்றவாளிகலென்று வைத்துக்கொள்வோம்.குற்றத்தை சூழ்நிலையின் காரணமாகவோ,பேராசையினாலோ,அவசத்தேவையினாலோ செய்யும் மக்கள் குற்றவாளிகள் இல்லையா? இந்திய அரசியல் சாசனம் குற்றம் செய்தவனுக்கும்,குற்றம் செய்ய துணை போனவர்களுக்கும் சேர்த்துதானே தண்டனை வழங்குகிறது.
இதில் கேவலமான ஒரு விசயம் என்னவென்றால் உதவி கூட வியாபாரமாகி போனது இந்த காலக்கட்டத்திதான் என்பது கவலைக்குறிய விசயம்.

ஆகவே லஞ்சம் என்பது திணிக்கப்பட்டதும்,வளர்க்கப்பட்டதும்தான் என்பதே இந்த நாட்டாமையோட தீர்ப்பு!..பசுபதி..எட்றா..வண்டிய....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆஹா நாட்டாமை படா எஸ்கேப்பூ... :). எப்படியோ ரெண்டு அணியும் ஜெயிச்சிடுச்சு சந்தோஷம்.
பங்கு கொண்ட எல்லா தோழிகள் மற்றும் நடுவருக்கு வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே..

எங்களுக்குள்ளே நல்லா திரிய பத்த வெச்சு இப்படி கடைசியில நல்ல புள்ளயாட்டம் தீர்ப்பு சொல்லிடீங்களே...
ஹ்ம்ம்.. கவி வனி..இதென்ன நியாயம் கேளுங்க..

ஆனா உண்மையா நம்ம அமினாவ பாராட்டியே தீர வேண்டும்.சிங்கிளா நின்னு சமாளிச்சுடாங்களே.. வாழ்த்துக்கள் அமின்...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

திணிக்கபட்டதால்தானே வளர்க்கப்பட்டது என்பவர்களுக்கும்,வளர்க்கப்பட்டுதான் பின்பு திணிக்கப்பட்டது என்பவர்களுக்கும் ஒரு கேள்வி.எப்படி பார்த்தாலும் அது தப்பில்லையா?
வளர்த்தது யாராய் இருந்தாலும் திணிக்கப்பட்டது மக்கள்மீதுதான்.திணிக்கப்பட்டது மக்கள்மீதுதான் என்றாலும் வளர்த்ததும் மக்களில் ஒரு சிலர்தான்.
எய்ட்ஸ் வாங்குவதும்,கொடுப்பதும் எப்படி தவறோ,அதுபோல லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறுதானே கவி,ரம்யா,வனிதா அக்கா?இதில் எஸ்கேப்பும் இல்லை....வேற ஏதுவும் இல்லை.
சரி வனிதா அக்கா..கவிசிவா அவர்களுக்கு ஒரு கேள்வி....நீங்கள் நடுவராக இருந்தால் எப்படி தீர்ப்பு அளித்திருப்பீர்கள்?எனக்கு தெரியபடுத்துங்கள்.அதை பற்றி அறிய ரொம்ப ஆவலாக உள்ளேன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆஹா!!! என்னா உஷாரா எஸ்கேப் பார்த்தீங்களா??? சரி பரவாயில்லை, எப்படியோ இரண்டு அணியும் ஜெயிச்சதால விட்டுடலாம். ;) ரம்யா கண்ணு... உடும்மா... ஏதோ சின்ன புள்ள பயந்துகிட்டு எஸ்கேப் ஆகுது !!! ஆனாலும் ஆமினாவ பாராட்டணும்.... அணியில் எல்லாரும் வந்து வந்து போனாலும், அவங்க மட்டும் நின்னு பதில் குடுத்தாங்க. பட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள் பல. நீங்க பங்குபெருவதால் தான் பட்டி வெற்றியடையுது. மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

கவிசிவா பாவம் தம்பி... இங்க வந்து மாட்டி விடுறீங்க... அவங்க விரும்பினா தாராளமா சொல்லலாம். ஆனா இப்பவே சொல்லிடறேன், அவங்க தீர்ப்பு எப்படி இருக்கும்'னு தெரிஞ்சுக்கலாம், யாரும் அதுக்கு எதிர் வாதம் செய்ய வேண்டாம். அப்பறம் அதுக்கு ஒரு பட்டி நடக்கும். ;) என் தோஸ்த்து கவிசிவா பாவம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//வாழ்த்துக்கள் அமின்...//
வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!!

//நம்ம அமினாவ பாராட்டியே தீர வேண்டும்.சிங்கிளா நின்னு சமாளிச்சுடாங்களே//
//ஆனாலும் ஆமினாவ பாராட்டணும்.... அணியில் எல்லாரும் வந்து வந்து போனாலும், அவங்க மட்டும் நின்னு பதில் குடுத்தாங்க.//
நல்லா சொன்னீங்க போங்க!
இப்பதான் குளுக்கோஸ் ஏத்துட்டு வரேன்.யோசிச்சு யோசிச்சு எனர்ஜியே கொறஞ்சு போச்சு.வனிதா மேடம்,ரம்யா மேடம்,கவிசிவா மேடம் ரொம்ப தாங்க்ஸ். நீங்கள் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு பேசிற்க்க முடியாது.

தீர்ப்பால என் கணவர் தான் ஏமாந்து போயிட்டாரு. லஞ்சம் வளர்க்கப்பட்டது தான் ஜேய்க்கும்டு சவால் விட்டாரு. நானும் அதை தான் நெனச்சேன். லாஸ்ட் நேரத்துல எல்லாமே மாறி போச்சு.

ரொம்ப தேங்க்ஸ் அண்ணா!!!!
எல்லாரையும் சமமா நெனச்சு என்கரேஜ் பண்ணதுனால தான் நாங்க இப்படி பேச முடிந்தது. எங்கள இந்த அளவுக்கு பேச வச்சதே உங்க பாராட்டுக்கள் தான்.!!!!!!!!

அன்புடன்,
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்