பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?"

ஹெல்லொ வனிதா மேடம்!எப்படி இருக்கிங்க?கவிசிவா ஆளையே காணோம்?ஓகே.நானே நடுவராய் இருக்கிறேன்.நான் தேர்ந்தெடுத்த தலைப்பு சகோதரி ஆயிஸ்ரீ மேடம் தந்த"மக்கள் தம் வேலைகள் சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதால் லஞ்சம் வளர்ந்ததா?இல்லை மக்களிடையே அது திணிக்கப்பட்டதா?"என்பதுதான்.இதில்
எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு கேட்டக்கொள்கிறேன்.குறிப்பாக வனிதா,ப்ரியா,டிவ்யா,இளவரசி,இலா,இமா,யோகரானி,ஜயலக்ஷ்மி,ஆமினா முஹம்மத்,எரிக்,கவிசிவா,மேடம் எல்லோரும்,இன்னும் என்னோடு போன பட்டிமன்றத்தில் கலந்த எல்லோரும் கலந்து சிறப்பித்து தருமாறு வேண்டிக்கொள்கிறேன்

ஷேக் - நடுவராக பொறுப்பெடுத்து பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள்.
தீர்ப்பும் மிகவும் நன்றாகவே உள்ளது. ஒரு பக்கமாக தீர்ப்பளித்து அதே பக்கம் உள்ளம் குறைகளையும் விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். நீங்கள் சொல்வது சரியே என்றாலும், வாதிட வந்தவர் அனைவரும் நீங்கள் எண்ணியது போலே நினைத்திருந்தால் யாரும் வாதிட வந்திருக்க மாட்டார்கள்.

தானே முன்வந்து நடுவராக நின்று நல்ல முறையில் தீர்ப்பையும் எழுதியமைக்கு பாராட்டுக்கள். ஆனாலும் நீங்க கவிசிவா கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கக் கூடாது :-) தினமும் வந்து இவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொருத்தரின் (ஒருத்தரின்) கேள்விக்கும் பதிலடி கொடுத்து வாதிட்டவர்களைப் பார்த்து - நீங்க எந்த கட்சின்னு கேட்ட மாதிரி இருக்கு.

கவிசிவா - ரொம்ப நல்லா வாதிட்டீங்க. நிறைய இடங்களில் சமூகத்தின் மேல் உள்ள அக்கறையும் கோபமும் தெரிந்தது. பட்டிமன்றத்தின் opening batsman இவங்கதான்னு சொல்லலாம். இவங்க இல்லாத பட்டிமன்றம் உப்பில்லாத பண்டம் மாதிரி.

ரம்யா - கருத்துக்களை ரொம்ப தெளிவா சுருக்கமா சொல்றீங்க. உணர்ச்சி வசப்படாம நல்லா எழுதுறீங்க. அடுத்த நடுவரா இருக்க முழுத்தகுதி உள்ளவங்க நீங்க

வனிதா - அறுசுவை அறிந்த கலக்கல் ராணி. அம்மா சமையல்ல கொஞ்ச நாளா சாப்பிட்டுட்டு இருக்கிறதுனால சந்தோஷமா மற்ற விசயங்கள்ல புகுந்து விளையாடிட்டு இருக்காங்க. நல்லா வாதிட்டீங்க. கவிசிவா -வையும் ரம்யா-வையும் தூண்டி விட்டு தூண்டி விட்டு உங்க அணியை நல்லா வாதாட வைச்சீங்க. உங்க அணி தோற்றிருந்தா கவிசிவா கிட்டயும் ரம்யா கிட்டயும் அடி வாங்குறது நீங்களாதான் இருந்திருக்கும்.

அமினா - இவங்கள பத்தி குறிப்பா சொல்லியே ஆகணும். இந்த பட்டிமன்றம் முழுவதுமாக, எந்த தடங்களும் இல்லாம நடந்ததுன்னா, அது உங்களால மட்டும்தான்னு சொல்லலாம். தனி ஒரு ஆளா ரொம்ப அருமையா வாதாடினீங்க. போராடினீங்கன்னே சொல்லலாம். மனமார்ந்த வாழ்த்துக்கள் (லஞ்சத்தினால ரொம்ப பாதிக்கப்பட்டிருபீங்கன்னு நினைக்கிறேன்...)

யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதுவல்ல நோக்கம்.

அன்புடன்,
இஷானி

ஆமினா சகோதரிக்கு என் தனிப்பட்ட மனமார்ந்த நன்றிகள்பல.வனிதா அக்க சொன்னதுபோல அடிக்கடி வந்து பதிவு போட்டது நீங்கள் மட்டும்தான்.உங்கள் பங்களிப்புதான் அதிகம்.நானும் முதலில் உங்கள் கண்வர் சொன்னதைதான் நினைத்தேன்.ஆனாலும் மக்களும் தவறு செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
குற்றம் செய்தது,செய்வது யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே!நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இஷானி மேடம் நன்றி.உங்களை எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை.சரிதான் நீங்கள் இடையில் தீடீரென வந்தீர்கள்.அதனால் மறந்திருப்பேன்.நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.தீர்ப்பு என்பது ஒரு பக்கம்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை.அதுமட்டும் ஒரு பட்டிமன்றதீர்ப்பின் இலக்கணமும் இல்லை.எது நடைமுறைக்கு உகுந்ததோ,யதார்த்த வாழ்க்கைக்கு சாத்தியமோ அதைத்தான் தீர்ப்பாக சொல்லமுடியும்.எத்தனையோ லியோனி பட்டிமன்றத்தில் நானும் இதுபோன்ற தீர்ப்பை கேட்டிருக்கிறேன்.
(அய்யோ..கருத்து கூட பட்டிமன்றமாகிவிடுமோ?)
இஷானி மேடம் நீங்கள் சொன்னது யார் மனதையும் புன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை.நானும் அதைப்ற்றி சிந்திக்கவே இல்லை.வைரமுத்து சொன்னது போல்"கல்லை காயபடுத்துவதா சிற்ப்பியின் நோக்கம்?"நீங்கள் சிற்பி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

//அருமையா வாதாடினீங்க. போராடினீங்கன்னே சொல்லலாம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்//
பாராட்டுக்கு மிக்க நன்றி இஷானி.
இந்த எபிசோட்ட விடாம பாக்குற ரசிகைன்டு நெனைக்கிறேன். எல்லார் பத்தியும் இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க!!!!!!!!!

(லஞ்சத்தினால ரொம்ப பாதிக்கப்பட்டிருபீங்கன்னு நினைக்கிறேன்...//
உண்மை தான் இஷானி. நான் முதலில் கூறிய கதை "கணவனை இழந்த பெண்-எங்க அம்மா.
ஓட்டுனர் கோர்ட் கேஸ்ன்டு அலஞ்சது-எங்க அப்பா(அவங்க இறப்பு சான்றிதழ் கேக்க போன போது தான் டாக்டர் கதை)
இரயில் பயணம் உண்மை சம்பவம் தான்.
இன்னும் விட்டுற்ந்தா நெறைய கதை(கதையல்ல நிஜம்) சொல்லிருப்பேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இஷானி... மிக்க நன்றி. உங்களை தான் ரொம்ப மிஸ் பண்ணிட்டோம் இந்த பட்டியில் நீங்களும் இனி தொடர்ந்து பங்குபெற வேணும். எங்களுக்காக. :)

//உங்க அணி தோற்றிருந்தா கவிசிவா கிட்டயும் ரம்யா கிட்டயும் அடி வாங்குறது நீங்களாதான் இருந்திருக்கும்// - ச ச... அதெல்லாம் இல்லை. நம்ம கவிசிவா'வும் நானும் கூட்டணியா இதுவரை எத்தனை பட்டியில் தோத்து போயிருக்கோம்... ;) [இப்ப கொஞ்ச நாளா தான் அதிசயமா ஜெயிக்கிறோம்]. ரம்யா, கவிசிவா இரண்டு பேருமே நல்ல பிள்ளைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவைப் பட்டிமன்றத்திற்கும் மேடைப் பட்டிமன்றத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அங்கு பேச்சாளர்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவர்கள். இங்கு தலைப்பும் அதைக் கொண்டு செல்லும் விதமும் மட்டுமே வாதிடுபவர்களை வரவழைக்கும். தீர்ப்பு இரு பக்கமும் இருக்கும் பச்சத்தில் அடுத்தமுறை வந்து வாதிடும் ஆர்வம் மன்ற உறுப்பினர்களிடையே குறைய வாய்ப்புள்ளது. தீர்ப்பின் மேல் உள்ள ஈர்ப்பும் ஆர்வமும் குறைந்துவிடும். மேடைப்பட்டிமன்றங்களில் நீங்கள் கவனித்திருக்கலாம், தீர்ப்பின் மேல் எந்த பேச்சாளருக்கும் ஆர்வமே இருக்காது. வென்றாலும் தோற்றாலும் ஒரே மாதிரி இருப்பார்கள். ஏனெனில் அங்கு தீர்ப்பு முன்பே முடிவு செய்யப்பட்டது (வாதங்களும், பதில் வாதங்களும் தான்). அங்கு அதன் குறிக்கோளே மக்களை மகிழ்விப்பது மட்டுமே. அதுவும் இப்போதுள்ள பட்டிமன்றங்களில் நகைச்சுவை மட்டுமே உள்ளது. நிறைய முறை சிலர் தலைப்புக்கு சம்பந்தமே இல்லாததை பேசிவிட்டு அமர்வதைக் காணலாம். இங்கு பட்டிமன்றத்தில் கலந்து கொள்பவரின் ஆர்வத்தை அதிகரிக்க தீர்ப்பின் சுவை மிக முக்கியம். தீர்ப்பு ஒரு பக்கமாக இருக்கும்போது சுவை அதிகம். நீங்கள் சரியான முறையில் எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த விமர்சனம். தவறாக எண்ண வேண்டாம்.

இதையே ஒரு பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம் போல் உள்ளது :-)

அன்புடன்,
இஷானி

நடுவர் அவர்களே,

எல்லோரையும் நன்றாக உற்சாகப் படுத்தி, பங்கு பெற வைத்து, இப்போ ஒரு பொதுவான நல்ல தீர்ப்பு சொல்லியிருக்கீங்க, நன்றிகள் பல.

நடுவருக்கும் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நிங்கள் சொல்வது சரிதான்.ஆனாலும் என் கண் முன்னால் நகைச்சுவை என்பது தெரியவில்லை.நியாயம்,யதார்த்தம் இவை மட்டுமே இருந்தது.இனிவரும் பட்டிமன்றங்களில் வேண்டுமானால் அதை பின்பற்ற முயற்சி செய்கிறேன்!என்னை பொருத்தவரை மக்களும்,அரசாங்கமும்,அரசாங்க ஊழியர்களும் குற்றவாழிகள்.இதி பெரிய காமெடி என்னவென்றால்..என் மனக்கண்ணின் முன்னால் இது ஒரு பஞ்சாயத்து போலதான் காட்சியளித்தது.நான் நாட்டாமை.தீர்ப்பை சொல்லிவிட்டேன்.
லஞ்சம் என்கிற இந்த ஒரு விசயத்தில் மட்டும் என்னால் ஒரு பக்கமாய் தீர்ப்பு சொல்ல இயலவில்லை.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ரொம்ப நல்லாவே பட்டிமன்றத்தை நடத்தினீர்கள். அவ்வளவு எளிதாக தீர்ப்பு சொல்லக்கூடிய தலைப்பு அல்ல இது. உங்கள் தீர்ப்பு நிச்சயம் லஞ்சத்தை ஒழிப்பதில் எல்லா தரப்பினருக்கும் பங்கு உள்ளதை சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. எங்கு அது தொடங்கப்பட்டிருந்தாலும் அதை ஒழிப்பது பொதுமக்களிடமிருந்தே தொடங்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அனைவரின் கூட்டு முயற்சி மட்டுமே எதிர்பார்க்கும் பலனைத் தரும்.

அன்புடன்,
இஷானி

ஐயோ இஷானி ரொம்பவே புகழ்றீங்க. எனக்கு வெட்கமா இருக்குது. பட்டிமன்ற தோழிகள் பலரை இப்போ இந்தப்பக்கம் பார்க்க முடியலை. அவங்க முன்னாடி நான் எல்லாம் ஜுஜூபி.

ரொம்ப நன்றி இஷானி. உங்கள் பாராட்டுக்கள் இன்னும் ஆர்வத்தோட பட்டிமன்றத்தில் கலந்துகணுங்கற எண்ணத்தை உருவாக்கியிருக்கு. அடுத்த பட்டியில் நீங்களும் கலக்குவீங்கன்னு எதிர்பார்க்கிறோம் :)

அமினா உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். கடைசிவரை விடமாட்டேன்னு வாதாடுனீங்க. தொடர்ந்து வரும் பட்டிகளிலும் கலக்குங்க.

சகோ ஷேக் நடுவர் தீர்ப்பு எழுதிய பின் மீண்டும் வேறொரு தீர்ப்பு எழுதப்படக்கூடாது என்பது அறுசுவை பட்டியின் எழுதப்படாத விதி. அதனால் நான் தீர்ப்பு எப்படி எழுதியிருப்பேன்னு என்னால் சொல்ல முடியாது (சிக்கல்ல மாட்டாம தப்பிக்கறதுக்கு எப்படீல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு).
கவி விடு ஜூட்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்