சிப்பி

சிப்பி வாங்கி வைத்துள்ளேன். ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியவில்லை. எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எப்படி சமைக்க வேண்டும்? யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.

இது வரை நானும் செய்தது இல்லை இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கு உதவும்
கிளீன் செய்ய:http://www.youtube.com/watch?v=_J7Yys9yj6Y
சமையல் குறிப்பு:http://www.youtube.com/watch?v=m44mrMx2z4c
http://www.youtube.com/watch?v=7SmxMlDn1Qc&feature=related
http://www.youtube.com/watch?v=b7b9Sa4K99I

என்றும் அன்புடன்,
கவிதா

கதீஜாவின் இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவும். முதலாவது குறிப்பில் கதீஜா மட்டி சுத்தம் செய்யும் முறையையும் விளக்கி இருக்கிறார், பாருங்கள்
http://www.arusuvai.com/tamil/node/3838 மட்டிக்கறி
http://www.arusuvai.com/tamil/node/3906 மட்டி அடை

மட்டியில் மண் இருக்குமானால் கொதி நீரில் போடுமுன் மண்போக ஓரிரு முறை அலம்பி எடுங்கள்.

கொதிநீரில் போட்ட மட்டி வாய்பிளந்ததும் ஒரு சிறிய கரண்டியால் சதைப் பகுதியைச் சுலபமாகச் சுரண்டி எடுக்கலாம்.

மட்டி ஓட்டில் அதிகம் பாசி இருந்தால் அது நல்லதாக இராது. அவற்றை விலக்கி விடுவது நல்லது. அது போல கொதிநீரில் போட்டும் வாய் பிளக்காமல் இருப்பவற்றையும் தவிர்ப்பது நல்லது. இவை சேகரிக்கும் சமயம் உயிரோடு இருந்திராது. ஒருமுறை என் சாமோவன் தோழியுடன் உல்லாசப் பயணம் போய் இருந்தோம். மட்டி சேகரிக்கக் காட்டிக் கொடுத்தார். கூடவே இந்தக் குறிப்புகளையும் சொன்னார்.

‍- இமா க்றிஸ்

கவிதா,
மிகவும் நன்றி. நீங்கள் குடுத்த லிங்க் நன்றாக இருந்தது. சமைத்து பார்த்து சொல்கிறேன்.

இம்மா,
ரொம்ப நல்ல லிங்க்ஸ். ரொம்ப தேங்க்ஸ். கருவா என்றால் என்ன? தெரிந்தால் சொல்லுங்களேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

கமலா மேடம்,
சமைத்து பார்த்து விட்டு அறுசுவையில் போடுங்க
நாங்களும் தெரிந்து கொள்கிறோம்

என்றும் அன்புடன்,
கவிதா

மேடம் எல்லாம் வேண்டாமே. கிருத்திகா என்றே கூப்பிடுங்க.ஏதோ எனக்கு ரொம்ப வயசான மாதிரி இருக்கு. :P கண்டிப்பா அறுசுவை ல போட ட்ரை பண்றேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

இலவங்கப்பட்டையைத்தான் கறுவா/ கறுவாப்பட்டை என்பார்கள்.
ஆங்கிலத்தில் cinnamon.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்