அட்மின் அண்ணா மற்றும் தோழிகளே உங்கள் பதில்காக காத்திருகிறேன்

அட்மின் அண்ணா எனக்கு google Adsense la சம்பாதிக்க முடியுமான்னு சொல்லுங்க...
ஹாய் தோழிகளே நீங்கள் யாராச்சும் google Adsense la work பண்ணிருக்கிங்கள.. அதுல சம்பாதிக்க முடியுமா... யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க ப்ரிண்ட்ஸ்... ப்ளீஸ்!!!!

இதற்கு முன்பும் இது குறித்து மன்றத்தில் பேசி இருக்கின்றோம்.

google adsense ல சம்பாதிக்கலாமா என்கிற கேள்விக்கு நேரடி பதில் - சம்பாதிக்கலாம்.

ஆனால், அது ஏதோ ஒரு பிஸினஸ் என்று எண்ணிவிட வேண்டாம். Google adsense என்பது ஒரு ad agent மாதிரி. ஓரிடத்தில் விளம்பரங்களை பெற்று, அதற்காக ஒரு தொகையும் வாங்கி, அந்த விளம்பரங்களை உங்கள் தளத்தில் வெளியிட்டு, அதற்காக உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் தொகை கொடுக்கின்றார்கள். உங்களிடம் நல்ல ட்ராபிக் வரக்கூடிய இணைய தளம் இருந்தால், அதில் கூகிள் விளம்பரங்களை வெளியிடலாம். Google adsense , komli, adsforindians, adbrite .. இப்படி நிறைய ad agents இருக்கின்றார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் google adsense சற்று அதிக தொகை கொடுக்கின்றார்கள்.

இந்திய மொழி தளங்களில் கூகிள் விளம்பரங்களை கொடுப்பதில்லை. அவர்கள் Supported languages என்று ஒரு லிஸ்ட் வைத்திருக்கின்றார்கள். அந்த மொழி தளங்களில்தான் அவர்கள் விளம்பரங்கள் வரும். உங்கள் தளம் தமிழில் இருந்தால் விளம்பரம் கிடைப்பது கடினம். பிறகு அறுசுவையில் எப்படி என்கிறீர்களா? அறுசுவை மாதிரியான ஓரளவிற்கு ட்ராபிக் அதிகம் உள்ள உள்ளூர் மொழி தளங்களை, தற்போது பரிசோதனையில் வைத்திருக்கின்றார்கள். அதனால் ஒரு சில விளம்பரங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் வரும். உங்களது தளம் ஆங்கிலத்தில் இருந்தால், நல்ல விளம்பரங்கள் கிடைக்கும்.

அவர்களது இணைய தளத்திற்கு சென்று அவர்களுக்கு உங்கள் தளம் குறித்து தெரியப்படுத்தினால், அதை பரிசோதித்து உங்களுக்கு பதில் கொடுப்பார்கள். நல்ல தளமாக இருந்தால் அனுமதி எளிதில் கிடைத்துவிடும்.

எந்த விளம்பரத்திற்கு எவ்வளவு கிடைக்கும், அவர்களுக்கு எவ்வளவு, நமக்கு எவ்வளவு என்ற எந்த விபரங்களையும் google வெளியிடுவதில்லை. அந்த விளம்பரங்களை மற்றவர்கள் கிளிக் செய்து, அந்த தளத்திற்கு சென்று பார்த்தால் உங்களுக்கு ஒரு சிறிய தொகை (very few cents) கிடைக்கும். அந்த கிளிக் உண்மையானதா, இல்லை வேண்டுமென்றே கிளிக் செய்யப்பட்டதா என்பதையெல்லாம் கண்டறிய அவர்கள் மிகச் சிறந்த சிஸ்டம் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் போலியாக கிளிக் செய்யும் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கிளிக் செய்யுங்கள், காசு தருகின்றோம் என்று கூறி முன்பு நிறைய ஏமாற்று வேலைகள் எல்லாம் நடந்தன. தற்போது அவர்கள் மிகவும் உஷாராகிவிட்டார்கள். எனவே ஏமாற்று என்பதெல்லாம் நடக்காது.

கூகிள் ஆட்சென்ஸில் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்.

உங்களிடம் நிறைய பேர் பார்வையிடக்கூடிய தளம் இருக்க வேண்டும். பிறகு google க்கு தெரியப்படுத்தி, விளம்பரம் வெளியிட அனுமதி பெற வேண்டும். விளம்பரத்தை வெளியிட்டுவிட்டு அதைப் பற்றி கவலைக்கொள்ளாமல் உங்கள் வேலையை பார்க்க வேண்டும். :-)

நீங்கள் அப்படி செய்தால் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம், இப்படி செய்தால் கோடி, கோடியாக சம்பாதிக்கலாம் என்று இணையத்தில் கதை விடும் ஆயிரம் தளங்கள் இருக்கும். எதையும் நம்ப வேண்டாம். நீங்கள் நிறைய சம்பாதிக்க வேண்டுமென்றால் உங்கள் தளத்தை நிறைய பேர் பார்க்க வேண்டும். பார்ப்பதோடு மட்டுமில்லாமல், அந்த விளம்பரங்களைப் பார்த்து, கவரப்பட்டு அதை அவர்களாக கிளிக் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு வருமானம். உங்களது தளம் எந்த அளவிற்கு பாப்புலர், எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்ற விபரங்கள் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். யாரும் வராத தளத்தை வைத்துக் கொண்டு, நீங்களாகவே ஆட்களை வைத்து கிளிக் செய்ய செய்தீர்கள் என்றால், உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இணையதளம் பிரபலமாக வேண்டும். தினமும் இலட்சக்கணக்கானோர் பார்வையிட வேண்டும். அப்படி உள்ள தளங்களில்தான் நிறைய சம்பாதிக்கின்றார்கள்.

அப்படி ஒரு தளம் உங்களிடம் இருந்தால், நீங்கள் கூகிள் விளம்பரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடி விளம்பரங்களை பெறலாம். அவைதான் மிகவும் லாபகரமானவை. மொத்த தொகையும் நமக்கு கிடைக்கும். மிக அதிகமாகவும் கிடைக்கும். அறுசுவைக்கு கூகிள் விளம்பரம் மூலம் கிடைக்கும் தொகை server rent க்கு கூட போதவில்லை என்பதுதான் உண்மை. ஒன்றுமில்லாத இடத்தில் ஏதோ ஒரு வருமானம் என்ற அளவில் வைத்துக்கொள்ளலாம்.

எனவே கூகிள் ஆட்சென்ஸ் என்று இலக்கெல்லாம் வைத்துக் கொள்ளாமல், பாப்புலர் இணைய தளம் உருவாக்கினால், சம்பாதிக்க வழி இருக்கின்றது. (அந்த நம்பிக்கையில்தான் நானும் ஓ(ட்)டிக் கொண்டிருக்கின்றேன். :-))

ஹாய் அட்மின் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா. எனக்கு தெளிவான பதில் கொடுத்ததுக்கு.... உங்களின் பதில் எனக்கு ரொம்ப usefula இருந்துச்சு....

///இதற்கு முன்பும் இது குறித்து மன்றத்தில் பேசி இருக்கின்றோம்\\\

அட்மின் அண்ணா.. இந்த தலைப்பில் மன்றத்தில் தேடி பார்த்தேன்.. எனக்கு கிடைக்கவில்லை... உங்களுக்கு தெரிந்தால் எனக்கு அந்த லிங்க் இங்கு தர முடியுமா.. friends நீங்களும் தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்

அட்மின் அண்ணே!! நல்லதொரு விளக்கம் :) இணைய தளத்தில நிறைய இடங்களில் மினுக் மினுக் னு வாங்க வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்னு சொல்றாங்களே!! அதைப்பற்றியும் விளக்கம் கொடுத்துபோடுங்க புண்ணியமா போகும் :) தெரியாம கிளிக் பண்ணினா கூடவே பிசினாட்டம் ஒட்டிக்கும், அப்பரம் அசினே வந்தாலும் போகாது ( ஸாரி அசின் எதுகை மோனையோட இருக்கத்தான் உங்க பேரை யூஸ் பண்ணிட்டேன்)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Super cmd அருட்செல்விசிவபிரகாசம்

மேலும் சில பதிவுகள்