Congo thozhigal

Congo-vil yaaravathu arusuvai thozhigal irunthaal varungal. ungal thozhi Kalpana azhaikiral.

காங்கோவில எங்களுக்கு தெரிஞ்சு நீங்க மட்டும் தானுங்க அம்மணி... எனக்கு ஆப்ரிக நாடுகள் பத்தி தெரிஞ்சுக்க ஆசை... காங்கோவில பல வைர சுரங்கங்கள் இருக்காமே... நீங்க எப்படி காங்கோவுக்கு சென்றீர்கள்...
தமிழ் எழுத்துதவி கீழே இருக்கு பாருங்க..அதன் மூலம் உங்கள் தங்கிலீஷை தமிழாக படிக்கலாம்

Hello Devagi, eppadi irukkenga? US-la enge irukkenga? neenga congo-va pathi romba thappa purinju vachirukkenga polirukku. inge vanthu paarunga oru Chinna India-ve irukku. kalyanam aana puthusula naan kuda ungala maathiri thaan ninaichen. ippa inge vantha piragu India poga pidikkala. naan oru iyarkai virumbi athanalo ennavo enakku congo-vai romba pidichu. pothuvagave Africa-vai black continent-nu solluvanga, aana inge irukkira Architecure namma India-la irukkuma-nu theriyala. enakku innum intha idathoda per ellam theriyathu, naan ennoda hubby-kitta ella idathoda perrum kettukittu appuram congo-vai pathi soldrenga.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

காங்கோவில் தட்பவெப்பம் எப்படி உள்ளது? உஙக நேரம் எப்படி போகுது? உங்களுக்கு ஆப்பிரிக்க தோழிகள் / தோழர்கள் உள்ளனரா? நீங்கதான் அங்கு சிகப்பாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்களுக்கு குழந்தை உள்ளதா?

ஜானகி நீங்கள் காங்கோவில் இல்லையென்றாலும், காங்கோவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களுடைய ஆர்வத்திற்கு என் முதல் வணக்கம். எனக்கு இரட்டை குழந்தைகள் (ஆண் & பெண்) நான் காங்கோ வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இங்கு தட்பவெப்பம் அடிக்கடி மாறும். எனக்கு இங்கு தோழிகள் யாரும் இல்லை. இங்கு பிரெஞ்ச் & லிங்காலா மொழி பேசுகிறார்கள். காங்கோவை பற்றி நேரம் கிடைக்கும் போது விரிவாக சொல்கிறேன் ஜானகி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

I Heard congo is in black list, is it true?
அங்கே illegal activities லாம் அதிகம்னு சொன்னங்க உண்மையா?

அன்பு கல்யாண் அவர்களே நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு இதுபோல் கேட்பது விந்தையாக உள்ளது. நம்ம நாட்ல நடக்காத அநியாயமாங்க இங்க நடக்க போகுது. என்ன ஒரு வித்தியாசம் நம்ம ஊர்ல படிச்சு தப்பு பண்றாங்க, இங்க படிக்காம தப்பு பண்றாங்க அதுதான் வித்தியாசம். நம்ம வழியில நாம போனா எந்த பயமும் இல்லை. நம்ம ஊர்ல நாம ஒரு புகாரை எடுத்துட்டு காவல் துறைக்கு போனோம்னா அங்கே நமக்கு எங்கே கிடைக்கும் நீதி? பதவி பலம், பண பலம் இருப்பவர் பக்கம் தானே இருக்கும் நீதி. சட்டம் ஒழுங்கு எல்லாம் இருந்தே நம்ம ஊர்ல துரு பிடித்து போய் உள்ளது.அதனால தான் இங்கே சட்டம் ஒழுங்கு அப்படின்னு எதுவும் கிடையாதாம். யார் வேண்டுமானாலும் சட்டத்தை கையில் எடுத்து கொள்ளலாமாம். நீங்கள் சொல்வது போல இல்லீகல் ஆக்டிவிடீஸ் ஏதோ ஒரு மூலை முடுக்கில் நடக்கலாம். நாங்கள் இருக்கும் இடத்தில் நான் கேள்விப்பட்ட்து இல்லை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என் பெயரை போட மறந்துட்டேன், என் பெயர் ஆஷிக்.
Congo வைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது, நான் கேள்விபட்டதை உங்ககிட்டே தெள்வாக்கிகொள்ள கேட்டேன்,
Thanks for your reply :)
அன்புடன்
ஆஷிக்

நீங்கள் மிகவும் சரியாக சொன்னீர்கள். நமது ஊரில் ஏழைகள் என்றாலே கஷ்டம் தான்.

சகோதரர் ஆஷிக் அவர்களே நான் தங்களுக்கு அளித்த பதில் உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நீங்கள் என்று இல்லை என்னிடம் பலரும் கேட்கும் முதல் கேள்வி இவை தான், அந்த ஊரில் கற்பழிப்பு அதிகமாமே, சண்டைகள் அதிகமாமே, எய்ட்ஸ் அதிகமாமே, வன்முறை அதிகமாமே நீங்கள் எப்படி அந்த ஊர்ல இருக்கபோறீங்கனு. நம்ம ஜனங்க தங்களோட முதுகை ஒரு நிமிடம் பார்த்திருந்தால் இந்த கேள்வியை கேட்க மாட்டார்கள்.சென்னை சட்டக்கல்லூரி வாசலில் மாணவர்களுக்குள் நடந்த மோதலில் ஒரு மாணவரை இன்னொரு மாணவர் மரண அடி கொடுப்பதை நம்முடைய மதிப்பிற்குரிய காவல் துறை நண்பர்களும் எதுவும் செய்யாமல் கண்டுகளிக்கவில்லையா? அதற்கு பெயர் அஹிம்சையா? கன்னியாகுமரியில் பெற்ற தந்தையே தான் பெற்ற மகளையே ஒரு மிருகத்தைவிடவும் கேவலமாக இறங்கி தன்னுடைய காமவெறிக்கு பலியிடவில்லையா? எய்ட்ஸில் நம்முடைய பெருமைமிகு நாடு மூன்றாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறதாம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நம் நாடும் ஒரு காங்கோவானால் ஆச்சர்யபடுவதற்கில்லை. நான் இங்கே என் மன ஆதங்கத்தை கொட்டினேன் தவறாக நினைக்கவேண்டாம். இங்கே நல்ல விஷயங்களும் நிறையவே இருக்கு. நான் அதையெல்லாம் நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

No Problem..No Problem..
அன்புடன்
:)ஆஷிக்

மேலும் சில பதிவுகள்