கேப்பை (கேழ்வரகு) சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

அன்புள்ள தோழிகளே
கேப்பை (கேழ்வரகு) சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எனக்கு உதவி செய்யுங்கள்.

கேப்பை சாப்பிட கூடாது என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் குழந்தை ஒல்லியாக இருக்கும் போது அதை கொடுத்து தான் குண்டாக்குவார்கள். இது என் கருத்து. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

THANKS AMINA

கேப்பைங்கறது ராகி தானே!. கூழ் மாதிரி குடிக்காம ரொட்டி மாதிரி சாப்பிடலாம். ஏன்னா கூழ்ல நிறையா தண்ணிக் கலக்கிறதுனால சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். திருப்பியும் நல்லா பசி எடுக்கும். அப்போ அடுத்த நேரத்து உணவை அதிகமா எடுத்துக்குவோம். ரொட்டி நல்லா நேரம் எடுத்து ஜீரணம் ஆகும். அதனால பசி குறைவா எடுக்கும். அடுத்த நேரத்து உணவை குறைவா சாப்பிடுவோம். சரியா தோழிகளே!.

Don't Worry Be Happy.

anbu soms keppai, gothumai,cholam anaithilum arisiyil vulla athe alavu carbohydratthan vullathu.aanal ricel illatha fibre keppail vullathu.athanalthan diet seypavargal keppai,gothumai yeduthukolgirargal.keppai sappiduvathal viraivil pasiyeduppathilai.kuozh vadivil sappittalthan keppaiyin alavu kammiyagavum athe neram vayirum nirayum.nature cure centrel yennakku sonnathai ingu pathivu seythullen. vidamuyarchy vetriyai tharum.

THANKS SUNDARI MADAM

MY NAME IS ALSO SUNDARI. FULL NAME SOMASUNDARI. weight eppadiyavathu kuraikkanum athan ketten.

thanks jeya lakshmi madam

ungala madam sollalennu koba patrathinga amina madam.

தமிழில் பதிவுகள் எழுதுங்கன்னு இங்க எல்லாரும் கெஞ்சாத குறையா கேட்டுக்கிட்டு இருக்கோம். ஆனா இன்னும் நிறையபேர் தங்கிலீஷ்லதான் எழுதுவேன்னு அடம் புடிக்கறீங்களே நியாயமா? தங்கிலீஷ்ல டைப் பண்றதை அப்படியே எழுத்துதவி பெட்டியில் டைப் செய்தா மேல உள்ள பெட்டியில் அழகு தமிழில் வரப்போகிறது. அதை கட் செய்து இங்க வந்து பதிந்தால் போதுமே. முதலில் எழுத்துப் பிழைகள் வந்தாலும் முயற்சி செய்தால் பிழையில்லாமல் எழுத முடியும். முயற்சியாவது செய்யுங்களேன்.
சுத்த தமிழில் எழுத வேண்டும் என்பதில்லை. பேச்சுத்தமிழில் தமிழ் எழுத்துக்களில் எழுதினால் எல்லோருக்கும் படிக்க வசதியாக இருக்கும். இல்லேன்னா நீங்க எவ்வளவு நல்ல கருத்துக்களைப் பதிந்தாலும் அதைப் 90%பேர் படிக்க மாட்டார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உண்மை தான் கவிசிவா.... என்னதான் நாம் கெஞ்சினாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது... அறுசுவையின் அழகே போய்ட்ட மாதிரி இருக்கு... நான் கூட ஆங்கிலத்தில் அல்லது தங்கிலிஷில் எழுதியிருந்தால் படிக்கவே மாட்டேன்... படிக்க பிடிக்க மாட்டேங்குது....

வித்யா பிரவீன்குமார்... :)

தயவு செய்து தமிழில் பதிவுகள் போடுங்கள். படிப்பதற்க்கு மிகவும் சிரமமாக இருக்கு

அன்புடன்
ஜெயா

மேலும் சில பதிவுகள்