6 மாத குழந்தை தவழ

உங்கள் அனைவருக்கும் ப்ரியாவின் அன்பான வணக்கம்,

நான் துபாய் இல் வசிக்கிறேன். என் பையன் our own English High Scool KG2 படிக்கிறான். எனகு 2 வது பெண் குழந்தை. என்னக்கு ஒரு கவலை Normala குழந்தை எதனை மாதத்தில் தவழ ஆரம்பிக்கும். இப்புளுது குப்புற நன்றாக விழுகிறது. மேலும் head இன்னும் நன்றாக நிற்கவில்லை. எனக்கு இது பற்றி தான் மிகவும் கவலையாக இருக்கிறது. யாராவது இது பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்.
நன்றி
பிரியா.

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் லேட்டா தான் தலை நிக்கும். உங்கள் குழந்தை பற்றி தெரியவில்லை.இருந்தாலும் இதை செய்து பாருங்கள்.

*வெறும் தரையில் பாயின் மீது தலையணை இல்லாமல் படுக்க வைக்கவும்.

*குளிக்க வைக்கும் முன் ஆலிவ் எண்ணையில் மசாஜ் செய்துவிட்டு பின் குளிக்க வைக்கவும்.

*குழந்தையை அதிகமாக தூக்க கூடாது.

*நீங்க தாய் பால் கொடுப்பவர் என்றால் ஆட்டு தலைகறி சாப்பிடுங்கள்.(தலைகறி தின்டா சீக்கரமா தல நிக்கும்டு என் மாமியார் அடிக்கடி சொல்லுவார்.)

*குழந்தைக்கு தலை நன்றாக நின்ட பிறகு தான் தவழும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பிரியா,
குழந்தைங்க வளர்ச்சி ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபாடு இருக்கும். குழந்தை எடை குறைவா இருந்தா சீக்கிரமா தவழும்.சீக்கிரமா நடக்கவும் தொடங்கும்.சாதரணமா 7 மாதத்தில் தவழ ஆரம்பிக்கும்.இல்லாட்டி கொஞ்சம் லேட்டாகும்.சில குழந்தைங்க 8 மாதத்தில் முயற்சி செய்து 9 மாதத்தில் நல்லா தவழுவாங்க.சில குழந்தைங்க தவழாமலே நடக்க ஆரம்பிச்சிடுவாங்க.அதனால கவலைபடாதீங்க.

உங்க குழந்தை இப்ப குப்புற விழுந்து தலைய பேலன்ஸ் பண்ண கத்துகிட்டு இருக்கா.குப்புற விழுந்த பிறகு தலைய தூக்கி பார்க்க அவங்களுக்கு சிரமமா இருக்கும்.கொஞ்ச நாள் போனா தலைய பேலன்ஸ் பண்ண கத்துக்குவாங்க.அப்புறமா தான் நல்லா வேடிக்கை பார்த்துகிட்டு கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல இருக்கறத தொட முயற்சி செய்வாங்க.சீக்கிரமா தவழனும்னா அதிகமா தூக்கி வைக்காம தரையில ஏதாவது விரிப்பு போட்டு(பாய் மாதிரி போடுங்க துணி மாதிரி போட்டா தவழ சிரமமா இருக்கும்)அவங்களை விளையாட விடுங்க. தவழ முயற்சிக்கும் போது நல்லா உற்சாகப்படுத்துங்க.குழந்தைய விட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துட்டு உங்க கிட்ட வர சொல்லி உங்க கை நீட்டி கூப்பிடுங்க.விளையாடும் போது அவங்களுக்கு பிடிச்ச பொம்மைகளை அவங்ககிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி(தூரமா வைச்சா வர மாட்டாங்க) வைங்க.சீக்கிரமா தவழ கத்துக்குவாங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

பால பிரியா... உங்க குழந்தை பிறந்ததும் அழுததா?? அப்படி அழாமல் போயிருந்தால் அதை "பெர்த் ஆஸ்பீசியா" என்பார்கள். அந்த குழந்தைகள் பொதுவாக எல்லாமே மற்ற குழந்தைகளை விட தாமதமாக தான் செய்யும். அதே போல் குறை மாதம் என்றாலும் அப்படி தாமதமாகும். உங்கள் குழந்தை பற்றிய போதுமான தகவல் இல்லை. உடனே டாக்டரை பாருங்கள். சில நேரத்தில் பிசியோ குடுத்தா போதும் நடக்க துடங்கிடும். கவலைபட வேண்டாம். உங்க குழந்தைக்கு விரைவில் எல்லாம் சரியாகி நடக்க இறைவனை பிராத்திக்கிறேன். பாருங்க சீக்கிரம் நடந்து, ஓடுவா உங்க மகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டியர் ஆல்,
எப்படி இர்ருகிரீர்கள். உங்கள் அனைவருடைய அல்லோசனைகும் மிக்க நன்றி.

அன்புடன்,
இப்படிக்கு பிரியா.

மேலும் சில பதிவுகள்