எனது சமையலறை - இமா

இமாவின் சமையலறை


இது 'என்' சமையலறை அல்ல. எங்கள் சமையலறை. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் (சமயங்களில் என் பிள்ளைகளின் தோழர்களுக்கும்) பொதுவான சமையல் இடம். இதனால் எதையும் நான் நினைத்தது போல் இடம் மாற்ற முடிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் அது அதற்கு என்று குறிப்பிட்ட இடம் இருக்கும். அவரவர் தன் தன் நேரத்தில் சமைத்துக் கொள்வோம். கூட்டுச் சமையலும் நடக்கும். ஆனால், எந்தப் பாத்திரத்தில் என்ன சமைக்கலாம், என்ன சமைக்கக் கூடாது என்பதற்கு எழுதப்படாத விதிகள் அமுலில் உள்ளன. ;)

வீடு கட்டப் பட்டது 1996 ல். வாடகைக்கு விடும் நோக்கில் மட்டும் கட்டப்பட்ட வீடு. 4M x 4M அளவானது. வரவேற்பு அறையையும், சமையலறையையும், படுக்கையறைகளையும் பிரிக்கும் விதமாக இரண்டு கதவுகள் உள்ளன. வீட்டை வாங்கிய சிறிது காலத்தில், இடப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், சமையல் மேடையில் தண்ணீர் குழாயின் மேலாக இந்த அலமாரியை அமைத்துக் கொண்டோம். என் கணவரும் பிள்ளைகளுமாக இதனை அமைத்துக் கொடுத்தார்கள்.

my kitchen
 

மேசைகள் பயன்படுத்த வேண்டி இருப்பதால் எப்போதாவது எடுக்க வேண்டிய பொருட்கள் மட்டும் இதனுள் இருக்கின்றன. வலது புறம் கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களும் நத்தார் காலங்களில் பயன்படுத்தும் பாத்திரங்கள், டவல், ஏப்ரன் போன்றவையும் இருக்கும். மேலே உள்ள இரண்டு நடுப் பிரிவுகளிலும் கேக் அலங்காரத்துக்கான விசேட பொருட்களும், சில விசேட சமையல் உபகரணங்களும் உள்ளன. இடது பக்கம் முழுவதாக மின்சார சமையல் உபகரணங்கள் வைத்து இருப்போம். அடித்தட்டு ரைஸ்குக்கர் & டீப்ஃப்ரையர் வைக்கக் கூடிய விதமான அளவில் அமைந்துள்ளது. நாங்களே அமைத்துக் கொண்டதால் இடம் சிறிதும் வீணாகாதவாறு அமைப்பு இருக்கிறது.

my kitchen
 

இந்த அலமாரி அமைத்ததில் சமையல் மேடை அளவு சிறிதாகி விட்டது. அதற்கு ஈடு செய்யும் விதமாக மைக்ரோவேவ் குக்கரை ஒரு மேடை அமைத்து ஏற்றி வைத்து இருக்கிறோம். ஸ்டவ் எலிமன்ட்களை இதுபோல் மூடி வைப்பது சமையல் உள்ளே சிதறுவதை தவிர்க்கிறது. இதனால் அடுத்த தடவை பயன்படுத்தும் போது எரிந்த வாடை வருவதும் தவிர்க்கப்படுகிறது. அனாவசியமாகச் சுத்தம் செய்யும் வேலையும் மிச்சம். பார்க்கவும் அழகாக சுத்தமாக இருக்கிறது.

my kitchen
 
மேலதிகமாக இடம் தேவைப்பட்டால் ஒரு இழுப்பறையை இப்படிப் பலகை போட்டுப் பயன்படுத்திக் கொள்வோம்.
my kitchen
 

சமையலறையை அடுத்து சாப்பாட்டு இடம். வலது பக்கம் குளிரூட்டியும், பான்ட்ரி கப்போர்டும் மட்டும் வைப்பது போல இடம் இருக்கிறது. மறு பக்கம் கூடம்.

my kitchen
 

கப்போர்ட் உள்ளேயும் மேலதிகமாகச் சில தட்டுகள் சேர்த்திருக்கிறோம். எங்கள் சமையலறையில் மேசைகள் கதவுகள் எல்லாம் வெண்மையாக இருப்பதுவும் பலகைகள், வேலைப்பாடுகள் எதுவும் இல்லாமல் தட்டையாக இருப்பதுவும் எனக்கு மிகவும் பிடித்த விடயம். கறை படிந்தால் சட்டென்று தெரிந்து விடும். சுத்தம் செய்வது சுலபம்.

my kitchen
 

Comments

இமா... ரொம்ப அழகு உங்க சமையல் அறை. :) இவ்வளவு அழகா இருந்தா நான் வெளிய வரவே மாட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா! ;) முதல் ஆளாக வந்து பதிவு போட்டு இருக்கிறீங்க. நன்றி. ;) எல்லாம் வெள்ளை வெளேரென்று இருப்பதாலும் கமரா இடக்குப் பண்ணியதாலும் படம் திருப்தியாக வரவில்லை.
என் கொடுமை பொறுக்க இயலாமல் கமரா இத்தோடு தற்கொலை செய்துகொண்டது. ;)

என் சமையலறையை அழகாக வெளியிட்ட அட்மின் & டீமுக்கும் என் நன்றிகள். ;)

‍- இமா க்றிஸ்

இமா மேடம் உங்கள் சமையலறை ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. இந்த மாதிரி சமையலறை இருந்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சமைச்சுட்டு இருக்கலாம்.

நலமா? இவ்வளவு அழகான சமையலறையா இதை விட்டு வர யாருக்கு தான் மனசு வரும். பொதுவான சமையலறைனாலும் அதையும் ரொம்ப சுத்தமாவும் பார்க்கவே ப்ளசண்ட்டா வைத்து இருக்கீங்க. அதுவும் கலர் தான் வெண்மையா இருக்குறது இன்னும் நல்லா இருக்கும் இமா.

மேடம் எல்லாம் வேண்டாம் வினோஜா. ;)
//இந்த மாதிரி சமையலறை இருந்தால்// இதில் பெரிதாக ஒன்றும் இல்லையே!! ;) பாராட்டுக்கு நன்றி. ;)

ஹாய் ஹரிகாயத்ரி,
எப்படி இருக்கிறீங்க? நான் நலம். பேசி நாளாகி விட்டது. ;)
உங்கள் பதிவு பார்த்ததும் எனக்குப் பிறந்தநாள் த்ரெட் ஆரம்பித்து வைத்தீர்களே, அது நினைவு வருகிறது. ;)) உங்கள் பாராட்டு.. சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி ஹரிகாயத்ரி. ;)

‍- இமா க்றிஸ்

இமாம்மா மனசு மாதிரியே அவங்க சமையலறையும் வெள்ளை :). அழகா காம்பேக்டா இருக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நலமா இமா? உங்க சமையல் அறையை அழகாக வைத்திருக்கீங்க இமா.

இமா உங்க சமையல் அறை அழகா இருக்கு. நல்லா வைச்சிருக்கறீங்க. வெள்ளை நிறத்தில் பளிச்சினு இருக்கு.சமையல் அறையில் அதிக வேலைபாடு இருப்பது எனக்கும் பிடிக்காது.ஏன்னா சுத்தம் செய்வது சிரமம்.உங்களுடையது தட்டையா வேலைபாடு இல்லாம இருக்கறது சிறப்பான விசயம்.நல்லா கவனிச்சு செஞ்சுருக்கறீங்க.அழகா காம்பாக்டா இருக்கு.உங்க பான்ட்ரி கப்போர்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

எப்படிங்க...?உங்க சமயலறையை ஏரியல்ல குளுப்பாட்டுவீங்களோ...இல்லே உஜாலா ஒரு சொட்டா...:-)

எல்லாமே வெண்மை..எனக்கு மிகவும் பிடித்த கலர்..!!!

அடுப்பில் ஃபாயில் போட்டு மூடியிருப்பது நல்ல யோசனை....:-)

டிராவில் மேடை போட்டு வசதியாக காய் வெட்டும் ஐடியாவும்தான்...
:-)

நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் பார்க்க நிறைவாய் இருக்கிறது..:-

எனக்கும் சொட்டு நீலம் பார்சல் பண்ணுங்கோ..இல்லாட்டா அப்புறம் நான் கோல்கேட் பேஸ்ட் பயன் படுத்த வேண்டியிருக்கும் :-

அருமை...அருமை

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இமா, உங்கள் சமையல் அறை சூப்பரோ சூப்பர். மணிரத்னம் படத்தில் வரும் வெண்மை போல அப்படி ஒரு பிரகாஷம். நல்ல சுத்தமாகவும் வெளிச்சமாகவும் இருக்கு.
வாணி

இமா...

உங்க சமயல் அறை ரொம்ப அழகா சுத்தமா இருக்கு. சினிமா மாதிரி..வெண்மையா இருப்பதால மெய்ன்டன் பண்றது கஷ்டம் இல்ல..;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இமா சூப்பரா வச்சிருக்கீங்க சமையலறையை.... உங்க சமையல் அறையில் நான் சக்கரை தானே .... ரொம்ப கிரியேட்டிவ் ஐடியாக்கள் இருக்கு...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கவிசிவா, ஜில்லென்று இருக்கு உங்க பதிவு பார்த்ததும். ;) நன்றி.

அம்முலுவுக்கும் என் அன்பான நன்றிகள். ;) பிஸியா!! காணவே முடிவதில்லையே!

ஹாய் திவ்யா அருண்,
//வெள்ளை நிறத்தில் பளிச்சினு இருக்கு.// பாராட்டுக்கு நன்றி. ;)
//விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.// அழகான வாசகம்.

ஹாய் இளவரசி,
// உஜாலா // ;) ஆளாளுக்குக் கிண்டல் பண்றீங்க. ;) உங்க கிச்சன் எப்ப போடுறீங்க?
//அடுப்பில் ஃபாயில் // இப்போதெல்லாம் சரியான அளவில் எனக்குப் பிடித்த விதமாகக் கிடைப்பதில்லை. இங்கு நான் குறிப்பிட்டிருப்பது 'எலிமன்ட்' மூடி இருக்கும் வெள்ளைத் தட்டுகளைத் தான்.
//டிராவில் மேடை // இது சின்ன வயதில் ஒரு புத்தகத்தில் படித்தது. இப்போ பயன்படுகிறது.
//கோல்கேட் பேஸ்ட் // சரி, சரி. நடத்துங்கோ. ;)))

பாராட்டுக்கு நன்றி வாணி. எப்படி இருக்கிறீங்க? //வெளிச்சமாகவும் இருக்கு.// சமயத்தில் அளவுக்கதிகமா இருக்கும். ;)

ரம்யா,
//நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும்...// ம். B-)
//சினிமா மாதிரி.// B-) எல்லாரும் காமடி பண்றீங்க. B-)
//வெண்மையா இருப்பதால மெய்ன்டன் பண்றது கஷ்டம் இல்ல.// அது உண்மைதான்.

ஹாய் இலா, ;)
ஹலோ!! நான் முன்னாலயே சொல்லி இருக்கிறேன், உப்பும் முக்கியம் சர்க்கரையும் முக்கியம். ;)) நீங்க நிச்சயம் சர்க்கரைதான். ;)

‍- இமா க்றிஸ்

இமா மேடம்,
உங்க சமையலறை அற்புதமா இருக்கு
உங்களுடைய பாயில் ஐடியாவை உடனே அமல் படுத்திட்டேன்
என் வீட்டிலும் சமையலறை வெள்ளையாதான் பெயிண்ட் பண்ணி இருக்காங்க
அருமையா வச்சிருக்கீங்க
நீங்க எப்படி கிளீன் பண்ணறீங்க ?
கொஞ்சம் உங்க ஐடியாக்களை ஷேர் பண்ணுங்க
உங்க சமையல் அலமாரி ஐடியா ரொம்ப புதுமையா இருக்கு உங்க கப்போர்டிலும் சின்ன ஸ்லாட் அமைத்து இருப்பது எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இமா அம்மா உங்கள் சமையல் அறை சூப்பர் ஆக இருக்கு எனக்கு ஒரு சந்தேகம் இந்த போட்டோ எல்லாம் இப்ப எடுத்ததுதானே .. பார்த்தா அப்படியே புதுசு மாத்ரி இருக்கு :) வீடு கட்டினப்போ எடுத்ததோ .. மீ தி எஸ்கேப் :)

இமா அவர்களே நலமாக இருக்கின்றீர்களா..?
அப்பப்பா வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டே இருந்தேன்.
ரொம்ப அழகா யோசிச்சு சமையலறையை அமைத்திருக்கீங்க.
சாமான்கள் அடுக்கி இருக்கும் அந்த கபோர்ட் ரொம்ப அழகா இருக்கு.
வனிதா சொன்னா மாதிரி நானும் தான் இப்படி ஒரு இடம் அமைஞ்சதுனா அங்கேயே இருந்துடுவேன்.
நல்லா பளீச்...பளீச்...பளீச்சிடும் வெண்மை.இவ்வளவு நன்றாக டிசைன் அமைத்து அதன் அழகை மெயிண்டைன் செய்யும் இமா உங்களுக்கு ஒரு பெரிய கைத்தட்டல்.
எந்த ஊரில் இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா...?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அன்பு இமா,

சூப்பராக இருக்கு உங்க சமையலறை.

ஒரு சின்ன சந்தேகம். பொதுவாக வெண்மை நிறம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் சிறிது பழுப்பாக(டல் லுக்) ஆகும்னு நினைச்சுட்டு இருந்தேன், அந்த மாதிரி எதுவும் கலர் மாறாமல் எப்படி பராமரிப்பது?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி கவிதா மேடம். ;))
//கிளீன்// பற்றி தனியாக பதிவு போட்டு விடட்டுமா! ;)
//கப்போர்டிலும் சின்ன ஸ்லாட் // உண்மையாகவே உபயோகமாக இருக்கிறது.

ஹாய் அனாமிகா, நலமா? முதலில் பாராட்டுக்கு நன்றி.
//போட்டோ எல்லாம் இப்ப எடுத்தது// அதுதான் போட்டோ //புதுசு மாதிரி இருக்கு// :)) வீடு... யார் கட்டினதெண்டு தெரியாது. நாங்கள் ஆறு வருஷம் முன்னாலதான் வாங்கினோம்.

அப்சரா அவர்களே! என்னையா அழகு என்கிறீங்க. தாங்ஸ். ;)) இமா நலம். ஒரே பாராட்டு மழையாக இருக்கே! மகிழ்ச்சி. நன்றி.
திருகோணமலையில் எங்கள் வீட்டில் எல்லாம் பார்த்துப் பார்த்துக் கட்டினோம். ஒன்றையும் அனுபவிக்காமல் விட்டுவிட்டு வந்தாயிற்று. இப்போது இருப்பது Auckland, நியூசிலாந்தில். இருப்பதற்கு ஏற்றபடி வாழப் பழகியாயிற்று. இருந்த சமையலறையில் இடம் போதவில்லை, தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டோம்.
//பளீச்...பளீச்...பளீச்// ;) கனேடியத் தமிழ் வானொலியில் வரும் விளம்பரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ;))

‍- இமா க்றிஸ்

supper

all is well

உங்க வீட்டு கிச்சன் ரொம்ப அழகா இருக்கு. பளிச்சுன்னு சூப்பரா வெச்சிருக்கீங்க. நாங்கள் முன்பு குடி இருந்த வீட்டு கிச்சனும் இதே வெள்ளை நிறம்தான். நீங்க சொன்ன மாதிரி சின்ன அழுக்கு இருந்தாலும் ஈசியா கண்டுபிடிச்சு சுத்தமாக்கிடலாம். உங்களோட ரசனை உங்க வீட்டு கிச்சனிலும் தெரியுது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எப்படி இருக்கும் இடத்தை அழகா யூஸ் பண்ணி கட்டணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். தண்ணீர் குழாய்க்கு மேலே உள்ள இடத்தில் உள்ள ஷெல்ப் இதுக்கு நல்ல உதாரணம். இப்ப புது வீட்டில், கிச்சனை ரென்வேட் பண்ண நினைச்சுட்டு இருக்கோம். அதுக்கு இந்த ஐடியாவை சரியான நேரத்தில் சொல்லிட்டீங்க. நன்றி. செபா அம்மாவுக்கு என்னுடைய வணக்கங்களை சொல்லிடுங்க.

good design

this can be done only in foreign countries

கவிதாவுக்கும் சீதாலக்ஷ்மிக்குமாக இந்தப் பதில். ;)

மேசைகளைச் சுத்தமாக வைத்து இருக்க, பெரிதாக ஒன்றும் செய்யத் தேவை இல்லை. கூடுமானவரை மேசைகள் ஈரமாகாமல் பார்த்தாலே போதும். ஏதாவது சிந்தினால் உடனடியாகத் துடைக்க வேண்டும். எப்பொழுதும் இதற்கென்று தனியே ஒரு ஸ்பஞ் / டவல் சமயலறையில் வைத்துக் கொள்ளுவது நல்லது.

வேலை முடிந்ததும் ஒரு 'ஸ்ப்ரே & வைப்'. வார இறுதியில் மூலை முடுக்கு எல்லாம் துடைப்பேன். மேசை சுவரோடு இணையும் இடத்தில் ஒட்டுவதற்கு என்று ஸ்டிக்கி டேப் (L வடிவில்) விற்கிறது. அதை ஒட்டிவிட்டால் ஈரம் உள்ளே போகும் என்ற பயம் இல்லாமல் சுத்தம் செய்யலாம். நுணுக்கமான இடங்களைச் சுத்தம் செய்வதற்கு ஒரு டூத்ப்ரஷ் நல்லது. நேரமும் மிச்சம்.

காப்பி தேனீர்க் கோப்பைகளை நேரடியாக மேசையில் வைப்பதைத் தவித்தால் நல்லது. அதுபோல் மஞ்சள் இருக்கும் பாத்திரங்களை வைக்கும் போதும் ஒரு தட்டு அல்லது 'மாட்' மேல் வைத்தால் மேசையில் கறை படியாது தவிர்க்கலாம். தவறுதலாகப் பட்டால்... இங்கு Mr Muscle (விம் லிக்விட் போல) பாவிக்கிறோம். சிரமம் இல்லாமல் கறை நீங்கி விடும்.

கத்தி, 'கான் ஓப்பினர்' போன்ற கூரான பொருட்களை நேரடியாக மேசை மேல் வைக்க வேண்டாம். விழும் கீறல் கூட அழுக்கு போன்று தோன்றும்.
~~~~~~~~~~~~
அன்பு சீதாலக்ஷ்மி,
முதலில் பாராட்டுக்கு மிக்க நன்றி. தாமதமாகப் பதில் கொடுப்பதையிட்டு மன்னிக்க வேண்டும். ;)

//கலர் மாறாமல் எப்படி பராமரிப்பது?// என்று கேட்டு இருந்தீர்கள். 'டல் கலர்' நிச்சயம் கறைகள்தான். இங்கு எதுவும் வெண்மை மாறவில்லை.

சுவருக்கு எமல்ஷன் பெய்ன்ட் அடித்திருக்கிறோம். 'எக்ஸாஸ்ட் சிஸ்டம்' இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லாததால் சமைக்கும் பொழுது முடிந்தவரை யன்னல்களைத் திறந்து வைத்து இருப்போம்.

சமையலில் அதிகம் எண்ணெய் சேர்ப்பது இல்லை. எப்போதாவது பொரிக்கும் வேலை வந்தால் 'டீப் ஃப்ரையரைப்' போட்டு யன்னல் அருகே வைத்து விடுவோம். ஆவி வெளியே போய் விடும். மழை / குளிர் காலத்தில் யன்னல் திறக்க முடிவதில்லை. டீஹ்யூமிடிஃபையர் (dehumidifier) போட்டு வைக்க வேண்டி இருக்கிறது.

கேத்தல் ஆவியும் சுவரில் படுவது போல வைக்கக் கூடாது. சுவரெல்லாம் அழுது 'வடிந்தது' போல் இருக்கும். ;)

ஸ்டவ் பின்னால் இருக்கும் சுவரில் எண்ணெய்த் துளிகள் தெரிந்தால் 'கிச்சன் ஸ்ப்ரே அண்ட் வைப்' ஏதாவது ஸ்ப்ரே செய்து துடைத்து விடுவேன். இத்தனைக்கும் பிறகும் 'டல் லுக்' வருவது உண்டு. இது சமையல் முறையைப் பொறுத்தது என்று நினைக்கிறேன்.

சுவரையும் கூரையையும் சுத்தம் செய்யும் போது, அங்கும் இங்குமாகத் துடைத்தால் அடையாளம் தெரியும். இருப்பதை விட மோசமாகி விடும். முழுவதையும் ஒரே சமயம் சுத்தம் செய்தால் சுலபம். முதலில் படிந்து உள்ள தூசு எல்லாம் துடைத்து விட்டு மெல்லிய சுடுநீரில் ஏதாவது டிடர்ஜன்ட் கலந்து நீளமான கைபிடி உள்ள மொப் கொண்டு துடைக்க வேண்டும். (தரைக்குப் பயன்படுத்தும் மொப் பயன்படுத்த வேண்டாம். தூசு விடும்.) பிறகு உலர்ந்த துணியால் ஈரம் போகத் துடைக்க வேண்டும். (ப்ளீச் பயன்படுத்துவதானால் தோலில், கண்ணில், துணிகளில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.)

விளிம்புகளுக்குக் கொஞ்சம் சிரமம் எடுத்து ஒரு பழைய டூத் ப்ரஷ்ஷை அதே தண்ணீரில் தொட்டு மெல்லிதாகத் தேய்த்து எடுத்து உடனே உலர்ந்த துணியால் துடைத்தால் போதும்.

தண்ணீர்த்தொட்டியின் கீழ் உள்ள கதவுகளைப் பற்றி அதிக கவனம் எடுக்க வேண்டும். வடியும் நீரை உடனே துடைத்து விடாவிட்டால் நாளடைவில் பலகை ஊறிப் போய் கெட்டு விடும். கதைவைத் திறந்து மேல் விளிம்பு, கதவின் கீழ்ப் பகுதியையும் துடைக்க வேண்டும். இவைதான் அதிகம் பாதிக்கப் படும் இடங்கள். மேடையைப் போல் இதுவும் தினமும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

ஏதாவது விடுபட்டிருந்தால் பின்பு இணைத்து விடுகிறேன்.

‍- இமா க்றிஸ்

பாராட்டுக்கு நன்றி தேவா. ஆனால்... நான் சொல்லிக் களைத்து விட்டேன். ;) எல்லோரும் இன்னும் மேடம் போடுறாங்க. ;))
இங்குள்ள தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் மகிழ்ச்சிதான். அழகாகக் கட்டி முடியுங்க. உங்கள் சமயலறை இதைவிட அழகாக இருக்கும். விரைவில் இங்கு எதிர்பார்க்கிறேன். ;)
செபாம்மாவிடம் உங்கள் விசாரிப்பினைச் சொல்லி விட்டேன்.

‍- இமா க்றிஸ்

நன்றி சுந்தரமதி & nisathiagu. ;)

தமிழ் 'எழுத்துதவி'க்கான தொடர்பு தேவையாயின் இதோ - http://www.arusuvai.com/tamil_help.html புதுவரவுகளுக்கு உதவியாக இருக்கும். ;)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அன்பு சுஜாதா ஜேசுராஜன்,
இங்கு படத்தில் உள்ளது சாதாரணமான சமையலறைதான். இலங்கையில் பத்து வருடங்கள் முன்பே நவீன சமையலறைகள் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் சென்னையில் இதை விட அழகாக மாட்யூலர் கிச்சன் செய்து எடுக்கலாம். ;) தேடிப் பாருங்கள்.
http://www.google.com/search?ie=UTF-8&oe=UTF-8&sourceid=navclient&gfns=1&q=modern+kitcen+in+chennai

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகாக இருக்கிறது...

வெண்மையாக இருப்பதால் கறைகள் படிந்தால் சுலபமாக தெரிந்துவிடும்....இது சுத்தம் செய்வது சுலபம் என்று சொல்லும் உங்களைப் :( போன்ற சுறுசுறுப்பானவர்களுக்குப் பொருந்தும்....
ஹி...ஹி..ஹி...எனக்கு.... :)

ஸ்பைஸ் ரேக் பான்ட்ரி கப்போர்ட் கதவிலா இருக்கிறது?(கடைசிப் படம்)...

கேபேஜ்...என்னாச்சு...

எப்போது செபா அம்மாவின் கிச்சன் படம் எடுப்பீர்கள்?(அடுத்த காமரா வாங்கியாகி விட்டதா?)

கேட்டுக் கேட்டு இருந்து விட்டுக் கடைசியாக வந்து பார்க்கிறீர்கள் தேன். ;)) நன்றி.
நலம்தானே?

அப்படி இல்லை தேன்மொழி. கண்ணுக்குத் தெரியாவிட்டால் எங்கே என்று இல்லாமல் எல்லா இடமும் சுத்தம் செய்ய வேண்டும். வெண்மையாக இருந்தால் சுலபம்தான். நேரமும் மிச்சம்.

ஆமாம், அது கதவில்தான் இருக்கிறது. மூடினால் எதிலும் இடிக்காத விதமாகப் பார்த்து மாட்ட வேண்டும். கதவில் கூடவே பிடித்த முக்கியமான குறிப்புகளும் ஒட்டி இருக்கிறது. ;)

கோவா சம்பல் போட்டுச் சாப்பிட்டாயிற்று. ;)

அம்மா ஒரு ப்ளாட்டில் (1/12) வாடகைக்கு இருக்கிறாங்க. வீட்டில் சமையலறை என்று பெரிதாக இல்லை. அது ஒரு ஸ்டூடியோ ஸ்டைல் வீடு. மிகப் பழய கட்டிடம். நின்று படம் எடுக்க இடைஞ்சலாக இருக்கிறது. பார்க்கலாம். முயற்சிக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா, நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்வையிடுகிறேன். உங்கள் சமையலறை கலைக் கூடம் போல் உள்ளது. மிகவும் அழகாக வைத்து இருக்கிறீர்கள்.

ஆஹா! வானதி, உங்க சமையறையை விடவா! ;)
இது அதற்குக் கிட்டவும் வராது. சும்மா சொல்லாதீங்கோ. ;))

‍- இமா க்றிஸ்