ஹேர் ஸ்ட்ரைட்னிங் - urgent reply please

அன்பு தோழிகளே அனைவருக்கும் எனது வணக்கம். அனைவரும் நலமா?
எனக்கு ஒரு முக்கியமான பிரச்சனை முடி சிக்குவது. நன்றாக சிக்கு எடுத்து வாரினாலும் அடுத்து ஒரு மணி நேரத்தில் மறுபடியும் சிக்கல் தான். இவ்வளவுக்கும் நான் முடி அவிழ்த்து பொட மாட்டேன். தலைக்கு ஷியக்காய் தான் யூஸ் பன்ரேன்.
முடி சிக்கல் போல் தான் உன் வாழ்க்கையும் சிக்கலாக உள்ளது என என் அம்மா, கணவரின் சகோதரர்களின் மனைவிகலும் பேசுகின்றனர். எனக்கு கொஞ்சம் கர்லி ஹேர். ரொம்ப நாளாகவே என் கணவர் ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்து கொள்ள சொல்கின்றார். அதற்கு எவ்வளவு செலவு ஆகும். அதனால் முடி க்கொட்டுமா? உங்களுக்கு தெரிந்த பார்லர் உள்ளதா? விபரமாக சொல்லுங்கல் ப்ளீஸ்.

hi fathima
assalamu alaikum
எப்படி இருக்கிங்கே,உங்க கூட பேசி ரொம்ப நாளாயிடுச்சே.வீடு shifting எல்லாம் முடிந்து விட்டதா.உங்களுக்கு மெயில் அனுப்பினேன் கிடைத்ததா.என்னுடைய முடியும் curling தான்.எனக்கும் straightening பண்ண ரொம்ப ஆசை ஆனால் நமக்கு curlingஆ இருப்பதில் ஒரு plus முடி அடர்த்தியாக காட்டும்.straighteningசெய்வதால் சடை போட்டால் ஒல்லிகுச்சியா தெரியும் இது என்னுடைய கருத்து. நிறைய பேரை பார்த்து உள்ளேன்.முடி விரித்து போடுவது என்றால் ஓகே மேலும் தோழிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.முடிக்கும் வாழ்க்கைக்கும் என்னப்பா சம்பந்தம்.அதையெல்லாம் காதில் வாங்காதீர்கள்

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய்
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். straightening செய்தால் கண்டிப்பாக முடி கொட்டும். எனக்கும் curl ஹர் தான். shariz சொன்னது போல் எனது மெல்லியது முடி சிறிதாவது அடர்த்தியாக தெரிவதால், நான் straightening செய்யவில்லை. மேலும் உங்களுக்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் செய்து கொள்ளலாம். மற்றும் எவ்வளவு பெரிய parlour ல் செய்தாலும், international அல்லது ஹெர்பல் products use செய்தாலும் முடி கொட்டதான் செய்யும். மற்றும் parlour ல் சொல்லும் அனைத்தும் follow செய்ய வேண்டும், அவர்கள் சொல்லும் shampoo, oil எல்லாம் முறையாக பின்பற்ற வேண்டும். இதனது செலவு நீங்கள் செல்லும் parlourரை பொறுத்து உள்ளது.Rs 1000(temporary)-10000(permanent) வரை range உள்ளது.it depends on the hair length also. Good Luck to u....

நான் 5 years கு முதல் பண்ணி இருகிறன்.கொஞ்சம் முடி கொட்ட தான் செய்யும்.தலைமுடியை அவிழ்த்து விடுவது என்றால் ஓகே இல்லை என்றால் எவ்வளவு தான் அடர்த்திய இருந்தாலும் கொஞ்சம்முடி மெலிதாக தெரியும்.பண்றதுக்கு முதல் ஏன் ஹேர் ரொம்ப softஆக இருந்துது அப்புறம் rough achu.நான் temporaryஆக தான் பணிணன்.one இயர் ஆச்சு என் ஹேர் நார்மலுக்கு வர.எனக்கு தலைக்கு குளிக்க கமி ஆகிட்டே வந்துது.

பாத்திமா மேடம்,
இந்த தளங்களை போய் பாருங்க straightening எப்படி பண்றாங்கன்னு தெரியும்
http://www.youtube.com/watch?v=K9_IbdUI7YM
http://www.youtube.com/watch?v=6BHQ_JJCLpM&feature=related
http://www.youtube.com/watch?v=dSiN5y6qCmk&feature=channel
எந்த நூற்றாண்டில் நீங்க இருக்கீங்க? பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் நம்பாதீங்க (சாரி! கொஞ்சம் உரிமை எடுத்து கிட்டேன்)
எனக்கு பயங்கர சுருட்டை முடி சிக்கே எடுக்க முடியாது எல்லாரும் straighten பண்ண சொல்றாங்க நான் பண்ணவே இல்லை சுருட்டை முடி ஒரு பரிசு போல முடியை அடர்த்தியா காட்டும்
அது மட்டும் இல்லை என்னோட cousin 7000 ரூபாய் கொடுத்து பண்ணி ஒரு வருஷம் வரை எந்த பிரச்சினையும் வரல ஆனால் அந்த products ,ஷாம்பூ,ஸ்ப்ரே இதெல்லாம் கொஞ்சம் விட்ட உடனே பயங்கரமா முடி கொட்டி போச்சு.இதனாலேயே straighten பண்ணவே கூடாது என்று முடிவு பண்ணிட்டேன்
இத்தனைக்கும் உயர்தரமான parlour ,products தான் உபயோகிச்சாங்க.பார்த்து செய்யுங்க.

என்றும் அன்புடன்,
கவிதா

இதிலென்னங்க அவசரமா பதில் போடணும்... முடி நேரா இல்லைன்னா கொஞ்சம் தேங்காயெண்ணை போட்டு நல்லா வழிச்சி சீவி இருக்கி சடை போட்டுகிட்டு போகலாம்.... அம்மா.. என்னைய அடிக்க வராதீங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

I did hair straightening during my india trip recently.i was charged Rs.6000/-my hair looks fantastic...YES my hair is falling quite more..but u can control hair falling by maintaining well..but i won't it do again:)

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

மேலும் சில பதிவுகள்