கடையநல்லூர்-அச்சம்புதூர்-தென்காசி மற்றும் ராஜபாளையம்

யாராவது கடையநல்லூர் அல்லது அச்சம்புதூர் இருக்காங்களா?
ஐயம் FROM DUBAI
அன்புடன்
ஆஷிக்

yen near place na pesa mattingala. i am Sankarankoil (Near Rajapalayam)

ஏன் எங்கலோட பேச மாட்டீங்களா?

வுங்கள் ஊர் தென்காசி, குற்றாலம் பக்கமா?திருநெல்வேலிக்கு யெப்பொழுதாவது வந்திருக்கிறிர்களா? வுங்கள் குடும்பத்தை பற்றீ கூறவும்.

ஹாய்,
எனக்கு தென்காசி. நான் கடையநல்லூருக்கு ஒரு தடவை வந்திருக்கிறேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஹாய் கிருத்திகா நல்லா இருக்கீங்களா? ரெம்ப நன்றீங்க உங்கள் பதிலுக்கு.
அப்பாட ஊர்க்காரங்கள பாத்தவுடன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு,
நீங்க எங்கே இருக்கீங்க ஊர்லேயா அல்லது இங்கே துபாய்லேயா.
இங்கே என்னுடன் நிறைய தென்காசி ஃப்ரெண்ட் இருக்காங்க. என்னுடைய FRIENDS நிறைய பேர் தென்காசியில் திருமணம் முடித்து இங்கே குடும்பத்துடன் இருக்காங்க,
அவர்கள் பெயர் விபரம் கேட்டு அடுத்த POST ல் போடுகிறேன்.
அன்புடன்
ஆஷிக்

ஆமா, எங்கள் ஊர் குற்றாலம் பக்கம்தான், FROM கடையநல்லூர் TO Tenkasi 18 கிமீ, அப்படியே ANOTHER 3KM போகின் குற்றாலம்.
ம்ம்..நெல்லை வந்திருக்கேன் 8th, 9th & 10th திருநெல்வேலியில் ஹைகிரவுண்ட் ரஹ்மானியா ஸ்கூலில்தான் படித்தேன்.
எங்க வீட்டில் 10பேர் 5ஆன், 5பென், ஒரு தங்கை இறந்து விட்டது, ஒரு அன்னன் பிறந்த சில தினங்களில் இறந்து விட்டது, நான் எட்டாவது, ரெண்டு அன்னன், ஒரு தம்பி, 4அக்கா.
ஒரு அக்காவுக்கு சங்கரன்கோவிலில் மனம்முடித்துள்ளது, இன்னொரு அக்கா திருநெல்வேலி சாந்திநகர், மற்றொரு அக்கா கேரளாவில் எங்க மாமா மகனுக்கு,
கடைசி அக்கா ராமநாதபுரம்.
அண்ணனுக்கு திருநெல்வேலியில் சமாதானபுரத்தில், இன்னொரு அன்னனுக்கு உள்ள்ளூரிலேயே, எனக்கு போன வருஷம் அதுவும் உள்ளூரில், இனி என் தம்பி மட்டும், அவனுக்கு பொன்னு நீங்க யாறாவது பாருங்க :))
ரெண்டு அன்னனும் தனியா போய்ட்டாங்க, அத்தா வீட்டை பார்த்துக்கொண்டும் அம்மா அவரை பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். எதோ இறைவன் கிருபையால் அயம்தான் துபாயில் இருந்துகொண்டு அணவரையும் பார்த்துகொண்டு இருக்கிறேன். போதுமா detail. அப்பாடா போங்கப்பா..மூச்சு வாங்குது
அன்புடன்
ஆஷிக்

”ஆமா பேசமாட்டோம், எங்க ஊரு காரங்க இருக்கும்போது நான் ஏன் மத்தவங்கிட்டே பேசனும், யாரும் இல்லேனா மத்தவங்ககிட்டே பேசுவோம்
இல்லேனா அவங்கள திரும்பிகூட பாக்கமாட்டோம், எங்களுக்கென்ன தலையெழுத்தா எல்லார்கிட்டெயும் பேசனும்னு வேற வேலை இல்லையா எங்களுக்கு” இப்படியெல்லாம் சொல்லமாட்டோம்
எல்லார்கிட்டேயும் அன்பா பேசுவோம் ஏன்னா நாங்க திருநெல்வேலி.
BY THE WAY சங்கரன்கோவிலில் "NEW CENTRAL STUDIO" தெரியுமா? அது எங்க மச்சான் STUDIO தான் எங்க பெரிய அக்கா husband. அங்கே போனா அவரைப்பார்க்கலாம் அங்கேதான் அவரு ஈ ஓட்டிகிட்டு இருக்காரு. அந்த ஸ்டுடியோ ஆரம்பிச்சு 20 வருஷத்துகிட்டே ஆச்சு இப்பவும் அதுக்கு பேரு NEW CENTRAL STUDIO வாம்.
அன்புடன்
ஆஷிக்

ஏங்க..ஊர்க்காரங்கல தேடுவது குத்தமா. நீங்க தேடமாட்டீங்களா. யாரும் யார்கிடேயும் பேசமாட்டேனு சொல்லமாட்டங்கப்பா எல்லாரும் எல்லார்கிட்டேயும் பேசவே ஆசைப்படுவார்கள். ஊர்க்கார்ங்களா கண்டா கொஞ்சம் அன்னியோன்யமா இருக்கும், ஆளு ஆளுக்கு மதுரை, கோயம்பத்தூர்னு ஆரம்பிச்சிருக்காங்க, நான் ஆரம்பிச்சது மட்டும் என்ன தேச விரோத செயலா. அவங்களையெல்லாம் விட்டுட்டு எங்கிட்ட மட்டும் ஏன் சண்டைக்கு வறீங்க
கோபத்துடன்
ஆஷிக்

நான் US ல இருக்கேன். கண்டிப்பா அடுத்து போஸ்ட் போடுங்க. உங்களை பற்றி சொல்லுங்க.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

(((((இன்னுமா....))))), மூச்சு புடிச்சு முக்கா மணி நேரம் சொல்லியிருக்கேன் இதுக்கு மேலேயும் சொல்லனுமா? அம்மாடி நம்மளால முடியாதும்மா!!!
களைப்புடன்
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்