காராச் சேவு

தேதி: March 27, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கடலைமாவு - ஒரு கிலோ
டால்டா - 200 கிராம்
பச்சரிசிமாவு - 100 கிராம்
சோடாஉப்பு - ஒரு சிட்டிகை
மிளகாய்வற்றல் - 15 கிராம்
வெள்ளைப்பூண்டு - ஒன்று
மிளகு - 10 கிராம்
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சுடுவதற்கு


 

முதலில் மிளகாய் வற்றல், பூண்டு, பெருங்காயம் மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். மிளகைப் பொடி செய்துக் கொள்ளவும்.
கடலைமாவு, அரிசிமாவுடன், டால்டா, சோடா உப்பு, அரைத்து வைத்திருக்கும் விழுது மிளகுத்தூள் சேர்த்து உப்புத் தண்ணீர் தெளித்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் காராச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறு தேங்காய் அளவு மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துக் கொள்ளவும்.
மற்றொரு கண்கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். இதே போல் எல்லா மாவையும் சுட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்