வெங்காய சப்பாத்தி

தேதி: June 30, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

கோதுமை மாவு - ஒரு கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 3 கப்
எலுமிச்சை பழம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தை தூளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
அதனுடன் கோதுமை மாவை சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழிந்து மாவை நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
அதனுடன் அரை கப் அளவு தண்ணீரை மேலே தெளித்து விட்டு பிசைந்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி சூடுப்படுத்தவும். ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி ஒரு சிறிய எலுமிச்சை அளவு உருண்டையை வைத்து தட்டவும்.
அதை தோசைக் கல்லில் போட்டு மேலே எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான வெங்காய சப்பாத்தி ரெடி.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எலுமிச்சம்புளி சேர்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. அடுத்த தடவை சமைக்கும் போது முயற்சித்துப் பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ஜெயலக்ஷ்மி மேடம்,
ரொம்ப எளிதாகவும்,புதுமையாகவும் இருக்கு
மேலும் நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஜெயலக்ஷ்மி மேடம்,
செய்வதற்கு மிகவும் சுலபம்மாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது.