Dindigul

Dindigul தோழிகள் இருக்கிறீர்களா?

திண்டுக்கல் சொந்த ஊர் இல்லை என்றாலும் அடிக்கடி வருவேன். பேகம்பூரில் சொந்தங்கள் அதிகம். யாருக்காவது திருமணம் அப்படின்டு ஒரு வார்த்தை சொன்னா போதும் உடனே பறந்து வந்துற்வேன். திண்டுக்கல் பிரியாணி அவ்வளவு புடிக்கும்.
மலைகோட்டை 2 முறை ஏறி இறங்குவதற்க்குள் 4 கிலோ வெய்ட் கொறச்சுட்டென்.ஆனா ஊருக்குள்ள இருக்குற ரோடு தான் ரொம்ப மோசம். என் கணவரின் அண்ணா அங்கு தான் உள்ளார்.
அன்னாந்து பார்த்தா மலைகோட்டை, எதிரே பார்த்தா சிருநீர்மலை. ஏசியே தேவை இல்லை. குளிர் சீசனில் கொடைக்கானல் தொத்துரும். வெயில் நேரத்தில் சிறுநீர் மலை காத்து. மழை நேரத்தில் எல்லா அணையும் நெறஞ்சுரும். ப்ரஷான காய்கறி, ஜிகர்தண்டா, ரிலையைன்ஸ் மால், சிறுவர் பூங்கா,......இப்படி எனக்கு புடிச்சதுன்டு நிறையா சொல்லிகிட்டே போகலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

naan dindigul thaan, neengal entha uru, ungalai patri sollavum

திண்டுக்கல் காரங்கல்லாம் சேந்துட்டீங்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இப்பதான் திருநெல்வெலியில் இருந்தீங்க அதற்குள் மதுரை பிற்கு திண்டுக்கல்லா,யெப்படிப்பா இது முடியுது.பரீச்சைக்கு படிப்பீர்காலா மாட்டீர்காளா(சும்மா விளையட்டிற்குபா)வுங்க குழந்தை மட்ரும் கனவர் யெப்படி இருக்கிறார்கள்.

ஏங்க பரிட்சைய பத்தி பேசுறீங்க?
இப்ப தான் அந்த கண்டத்துல இருந்து தப்பிச்சு வந்துற்கேன்.
இனிமே அதுத்த மே தான் பரிட்சை.
பையன் எந்த தொந்தரவும் பண்ணுரது இல்ல(ஹிந்தில நாலு வார்த்தை கத்து குடுங்கன்டு பக்கத்து வீட்ல விட்டுற்க்கேன்), ஹஸ்ஸும் ரொம்ப ரொம்ப நல்லவர். பொண்ட்டாட்டி பாவம் வீட்ல தனியா வேலைக்காரி மாறி வேல பாக்குறார்ன்டு மனசுலையே நொந்துக்குருவாரு.ஆபிஸ் போனா மதியத்துக்கு பிறகு நைட் 10 மணிக்கு தான் வருவார். சீரியல் பாத்து அழுகுறது பிடிக்காது. அதுனால தான் மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் அப்டின்டு சுத்த முடியுது.

ஆல் ரவுண்டர் அப்டின்டு வனிதா அக்காவுக்கு ஏற்கனவே பட்டம் கொடுத்தாசு. நீங்க என்னைய சொன்னா யாராவது சண்டைக்கு வந்துற போறாங்க. அதுக்கு முன்னாடி வெட்டி அப்டின்டு வேணா சேத்துக்கோங்க. இன்னும் நெறையா சுத்த வேண்டி இருக்கு. பை பை.........

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்னப்பா இது... மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி'னு கட்சி பிரிஞ்சு கெடக்கு அறுசுவை.... இதுல திருநெல்வேலி'கு உள்ளவே இருக்க கடையநல்லூர் தனி இழை. :(( என்ன நடக்குது இங்க???!! அறுசுவை குடும்பத்துக்கு உள்ள ஒவ்வொருத்தரும் தனி தனி சமையல் ஆரம்பிக்கறீங்க??? அறுசுவை குடும்பத்தில் ஒரே அடுப்படி தான். இப்படி தனி தனியா இழை ஆரம்பிச்சு எல்லாம் 200, 300 பதிவாகாம பழையபடி அரட்டை ஒன்னு ஆரம்பிச்சு நடத்துங்கப்பா.... தப்பா நினைகாதிங்க... 1 மணி நேரத்துல ஒரு இழையே உள்ள போகுது... மேல இருக்க இழை முழுக்க ஊர் பேரு தான் தெரியுது. தமிழ்நாட்டில் ஒரு ஊர் பேரையும் விடல நீங்க. விட்டா "கொட்டாம்பட்டி தோழிகள் வாங்க...", "அம்மன் கோவில் தெரு யாராது இருக்கீங்களா" வரை வந்துடும் போல. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இதை நினைத்தேன், இப்பவே மதுரை 2 ஆச்சு அடுத்து 3 4 ஆகும். தோழிகள் இதை கைவிட்டு ஒரு இழையே பயன்படுத்தலாம்

வனித்து...

கரெக்ட்... நானும் இதையேத்தான் நினைத்தேன். நீங்க இதை பற்றி பதிவு போடாமல் இருந்திருந்தால் நானே போட்டு இருப்பேன்.

அதென்ன மதுரை தோழி, கன்னியாகுமரி தோழி, திண்டுக்கல் தோழிண்ட்டு...ஏன் மற்ற ஊர் தோழினா பழகமாட்டீங்களா?
உங்க தோழிக்கிட்ட மட்டும் தான் பழகுவிற்களா? வெரி வெரி பேட்..

இங்கதான் யார் என்ன கெட்டாலும் முடிந்த அளவு பதிலும் நட்பும் கிடைக்கிறதே. சிவாஜியில் ரஜினி சொன்னாலும் சொன்னார் சும்மா அதையே புடுச்சுட்டு பழகலாம் வாங்கனு...;-).. ஒரு தடவை சொன்னால்தானே சுவாரஸ்யம் இருக்கும்,, வரும் அனைவரும் அதே வார்த்தயை பயன்படுத்தாமல் இருக்கலாம் இல்லயா?

தவறாக யாரும் எண்ண வேண்டாம்...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

unga varthaiya mathichu thanapa oru title aramichuruken athuku yen yarum vara matreenga ma

தமிழில் அழையுங்கள்... வருவாங்க. இழை துவங்க அடிச்ச மாதிரியே தான்.. அதே தான். அப்படியே இங்க பதிவுக்கு அடிங்கோ. சமத்து. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்