முதல் சமையல்

அறுசுவை தோழிளே ! உங்களின் முதல் சமையல் அனுபவங்களை (சொதப்பல்ஸ்) இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.

அம்மா வீட்ல இருந்த வரைக்கும் சமையல் என்றால் எதுவும் தெரியாது. மாமியார் வீட்டில் தான் தோசை சுடுவதும், இட்லி அவிப்பதும் தெரிந்துக் கொண்டேன்.

தனி குடித்தனம் வந்த பிறகு பால் காய்ச்சி முடிந்ததும் எல்லாரும் போய்ட்டாங்க. முதல் நாள் வெளியே சாப்பிட்டால் நல்லா இருக்காதுன்டு நானே சமைக்கலாம் என்று முடிவு பண்ணி அடுப்படி நுழைந்தேன்.சாம்பார் என் கணவர்க்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதையே சமைக்கலாம் என்று முடிவு செய்து குக்கரும் கையுமா நின்டா துவரம் பருப்பு யூஸ் பண்றதா இல்ல கடல பருப்பு யூஸ் பண்றதான்டு தெரியல. என் கணவர் தான் து.பருப்பு என்று சொன்னார். நான் அதற்கும் ஒரு படி மேல போய் இதுல எது துவரம் பருப்பு என்று கேட்டதிலேயே என் கணவர் நொந்து போய்ட்டார். அப்பறம் என்ன கடல பருப்பில் தான் சாம்பார். இதை விட பெரிய கொடுமை மளிகை சாமான் வாங்கி கொடுத்தவர்கள் காய்கறி வாங்காததால் வெறும் வெங்காயம் தக்காளி போட்டு சாம்பார்.

அப்ப ரசுச்சு சாப்ட்டாரு. இப்ப கறிவேப்பிலை சேக்கலன்டா கூட சண்ட போடுவார்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்ல திரியை ஆரம்பித்து இருக்கீங்க
நான் என் பாட்டி வீட்டிற்கு செல்லும் போது என்னுடைய cousins உடன் சேர்ந்து கூட்டான்சோறு சமைப்போம் அதுதான் முதல் அனுபவம்
அப்புறம் தனியாக சமைத்தது என்னுடைய 8 வகுப்பு படிக்கும் போது முதன் முதலில் செய்து பார்த்தது maggi noodles நன்றாக வந்தது
அதை தொடர்ந்து என் தம்பியுடன் சேர்ந்து உப்புமா செய்து என் அம்மாவின் புடவையை எரித்து உதய் வாங்கியது அடுத்த கதை
அதற்கப்புறம் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது அம்மாவுடன் சேர்ந்து சமைத்து,சொதப்பி எதோ கொஞ்சம் கற்று கொண்டேன் என் தம்பி தான் சரியாக சொல்வான்
மாமியார் வீட்டில் சமைத்ததே இல்லை முதலிலேயே தனி குடித்தனம் தான் அதனால் அவங்க தப்பிசுட்டங்க
என் கணவர் ஒரு நாள் கூட குறை சொல்ல மாட்டார் போட்டதை சாப்பிட்டுவிட்டு போய்டுவார் உங்க வீட்டில் எப்படி கல்பனா ? என் கோ-சிஸ்டர் பெயரும் கல்பனா தான்

என்றும் அன்புடன்,
கவிதா

சின்ன வயதில் அம்மா ஊருக்கு போகும் போது சமைத்திருக்கிரேன்.திருமணமனவுடன் ஐதராபாதில் தனிக்குடித்தனம்.முதலில் சமைத்தது தக்காளி தொக்கு கொஞ்சம் காரம் அதிகம் சேர்த்துவிட்டேன். ஆனாலும் என் கணவர் ஒன்றும் சொல்லவில்லை.காரம் வுப்பு அதிகம் சேர்த்து சமையலில் தப்புகள் பல செய்து இப்பொழுது சமையலில் தேரிவிட்டேன்.இப்பொழுதும் சமயலில் தவறு நடந்தால் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்(பொறுமையின் சிகரம் அவர்

என்க்கு முதல்ல சமையல் கத்து கொடுத்தது எங்க அண்ணன் தான் தோசை தான் முதல்ல செஞ்சேன்.

கல்யணத்துக்கு முன்னாடி சமையல்கட்டே தெரியாது, அப்புறம் மாமியரின் சமையல்,என்னா நான் படிச்சுட்டு இருந்தேன். ஒரு நாள் மாமி ஊருக்கு போய்டாங்க அன்று நான் செய்த சமையல்ல என் கணவர் நோந்துட்டார், வெறும் தாலித்த சாதம் அதுக்கு எந்த எண்ணைய் தெரியாம ஏதோ ஒரு எண்ணயில சமைச்சென் அதையும் என் கணவர் ரசித்து சாப்பிட்டர்

ஹாய் மஹா

நீங்க செஞ்ச மாதிரி நானும் ஒரு நாள் அம்மா இல்லாதப்போ லெமன் ரைஸ் செய்றேன்னு சொல்லி தெரியாம விளகெண்ணை ஊத்தி செஞ்சுட்டேன். அதற்கு அம்மா திட்டினதுக்கு ஆமா சாமி ரூம்ல இருக்க வேண்டிய எண்ணைய ஏன் இங்கே வெச்சேனு பழிய அவங்க மேல தூக்கி போட்டுட்டேன். அப்றம்தான் தெரிந்தது பருப்பு வேக வைக்கும் போது விளக்கெண்ணை யூஸ் பண்ணுவாங்கனு.. ஓ மாத்திடாங்களானு கேட்டு சமாளிச்சேன். இப்பவும் நான் சமயல எல் கெ ஜி தான்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நாங்க தனி குடித்தனம் வந்த புதுசுல என் அம்மா எங்க கூட 4 நாள் இருந்தாங்க... அம்மா போனதுக்கு அப்புறம் எனக்கு கண்ண கட்டி காட்டுல விட்ட மாறி இருந்துச்சு...வாழ்க்கைல முதல் முறையா சமையல் கட்டுக்கு என்னமோ போருக்கு போற effect-டோட போனென்..முதல் தடவ இட்லி பண்ணப்போ , கீழ் தட்ட மேலயும்,மேல் தட்ட கீழையும் மாத்தி வச்சு சொதப்பினேன்... அப்புறம் ,சாம்பார்-கு பருப்பு வேகாமா வெத வெதய இருக்குற மாதிரி செஞ்சு சொதப்பினேன்... என் அன்பு கணவருக்கு ரொம்ப பிடிச்ச உப்புமா செஞ்சு கொடுக்குளாம்னு நல்லா கருக்கி வச்சு எல்லாத்தயும் குப்பைல தான் கொட்டுனேன்...ஹ்ம்ம்ம்...இப்படி நிறையா இருக்கு... இப்போ சமையல்ல 7 மாசம் அனுபவம்... எல்லா தப்பயும் சரி செஞ்சிட்டு என் அன்பு கணவரோட பாராட்டுக்கள் மட்டுமே இப்போ வாங்குறேன்... :)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

Hi dear friends,,,,,,,,,,,,,naan thirumanamaagi vanthu 4 varudangal aagiyum en kanavarukku aasaiyai en maamiyaar eyhuvum seyya vida maatanga.avanukku athu pidikaathu ithu pidikkaathu ipdi seithal pidikaathu apdi pidikathunu solliduvanga.avar ondrumsollamal sapittaal kooda ivargalethavathu kurai solluvanga,ithanaleyae ennakku samayal seiya bayam.idhu than ippayum en samayal anubhavam.

எல்லோருக்கும் வணக்கம் , அறுசுவையில் இது தான் என்னுடைய முதல் பதிவு. இந்தியாவில் இருக்கும் போது அம்மா இலங்கை போய் விட்டா, சமையல் அறையில் எங்களின் திருகு தாளங்கள் தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாள் சமைக்க வேண்டும் . என்னுடைய முதல் சமையல் உருளை கிழங்கு கறி.அம்மா கறி வைக்கும் போது சிவப்பாக இருக்கும் ஆனால் நான் கறிக்கு கூட்டி மிளகாய் தூள் போடும் போது சிவப்பகவில்லை என்று நிறைய தூள் போட்டேன். அது வாயில் வைக்கமுடியாத அளவு உறைப்பு. என் அக்காவும் தங்கையும் தான் பாவம். பிறகு என்ன செய்வது தண்ணீரும் தயிரும் விட்டு சாப்பிட்டது தான். என் தங்கை உருளை கிழங்கை தண்ணீரில் கழுவி தான் சாப்பிட்டா. என்றும் அதை சொல்லி சிரிப்பார்கள்.

ரொம்ப சந்தோஷம் மேடம். உங்களுடைய இந்த முதல் பதிவு பார்த்தால் நீங்கள் புதிய உறுப்பினரா என சந்தேகம் கொள்ள தோன்றுகிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பகுதிகளில் உங்கள் திறனை வெளிபடுத்த வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்