வரமே! வரம் தா!! - இஷானி

வரமே! வரம் தா!!

வீடு நுழைகையில்
ஓடி வந்து நீ தரும்
உன் முத்தத்திற்காகவே
ஒவ்வொரு முறையும்
வெளியே செல்கிறேன்

உன் முத்தம் பெறும் நோக்கே
நம் ஒவ்வொரு விளையாட்டின்
விதியமைப்பும்.
சதி அறிந்தோ என்னவோ!
வென்றாலும் தோற்றாலும்
வீம்புக்கென்றே முத்தம் தவிர்ப்பாய்.
வெறுப்பேற்றும் நோக்குடன்
அம்மாவிடம் அதை அளிப்பாய்.
போராடிக் கொடுத்தாலும்
பொசுக்கென்று துடைத்தெறிவாய்.
பின்
பொய்ச் சோகம் எனில் கண்டு
போதுமட்டும் அளித்தமர்வாய்.

இதழ் குவித்து மழலை பேசும் உனக்கு
கருவறைக் காலமும் சேர்த்து
வயது நான்குதான்
அதற்குள்...
என் மொத்த ஜீவனும் நீதான்.

ஜென்மம் கடந்து
இப்பந்தம் தொடர
வரமே! ஒரு வரம் தா!!

- இஷானி

ishani
 

Comments

இஷானி,
உங்கள் கவிதையும் அழகு. அமர்ந்திருக்கும் கவிதையும் அழகு. ;)
பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ஓ...நீங்கள் கவிஞரா?அப்பொழுதே சந்தேகப்பட்டேன்.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டபொழுதே எனக்குள் ஒரு சந்தேகப்பொறி.அருமை.உங்களின் வாசகன்,முதல் ரசிகன் நான்.நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கவிதை மிகவும் அழகு இந்த கவிதைக்கு அழகூட்ட அமர்ந்திருக்கும் பாப்பாவும் மிகவும் அழகு

இஷானி கலக்கிட்டீங்க........

"அதற்குள்...
என் மொத்த ஜீவனும் நீதான்"

இந்த வரியை மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கிறேன். இன்னும் பல முறை ரசித்துக்கொண்டே இருக்க போகிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாவ் இஷானி

நல்ல கவிதை.. எப்படிங்க இவ்ளோ நல்ல கவிதைகள் எல்லாம் எழுத முடியுது.. நானும் ஹ்ம்ம் யோசிக்கறேன் வரமாட்டேன் என அடம் பிடிக்கிறது.. ;-)

நிறைய படைப்புக்கள் எழுத வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முதலில் இக்கவிதையை வெளியிட்ட அட்மினுக்கு எனது நன்றிகள்.

இமா - கவிதை(களை)யைப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி. உங்களைப் போன்ற ஜாம்பவன்கிட்ட இருந்து பாராட்டு கிடைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அடிக்கடி இமாவின் உலகம் வருவதுண்டு.

ஷேக் - பாராட்டுக்கு ரொம்ப நன்றி. மற்றபடி வாசகன், ரசிகன் எல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர். அறுசுவைக்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாட்டாமை ஆகிட்டீங்க. நல்ல கதை, கவிதைகள் எழுதி கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.

அனாமிகா - நாம இது வரைக்கும் பேசினதே இல்லைன்னு நெனைக்கிறேன். பாராட்டுக்கு மிகவும் நன்றி.

அமினா - புடிச்சிருந்துதா. ரொம்ப சந்தோசம். இவ்வளவு நாள் கவிசிவா-வோட தமிழ் வளர்க்கும் பொறுப்பை எடுத்திருந்தீங்க . இப்போ தப்பு செய்றவங்கள பென்ச் மேல ஏத்துற கூடுதல் பொறுப்ப வேற ஏத்துகிட்டு இருக்கீங்க. கலக்குங்க. பாராட்டுக்கு மிக்க நன்றி.

பாராட்டுக்கு நன்றி ரம்யா. உங்களை மாதிரி தனித்திறமை உள்ளவர்கள் மிகக்குறைவு. ஒரு விஷயத்தை ரொம்ப சுலபமா analyze பண்ணி ஆலோசனை கூறிடுறீங்க. தமிழும் நல்லா எழுதுறதால நல்ல கட்டுரைகள் உங்களால் படைக்க முடியும். இதுவரை எழுதியதில்லை என்றால், முயற்சி பண்ணிப் பாருங்க.

அன்புடன்,
இஷானி

அன்பு இஷானி ஏனோ தெரியலை உங்களை எனக்கு ரொம்ப இஷ்டம்.இந்த கவிதை ரொம்ப அழகு...என் மகளுக்கும் 4 வயது தான் அதனால் கவிதை இன்னும் பிடித்திருக்கிறது...அவள் என்னிடம் கதை சொல்லி கேட்பாள்...அதை சீக்கிரம் சொல்லி முடித்து திரும்ப சொல்ல சொல்வேன்...கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகாக மழலை மாறாமல் கதை சொல்வாள்..அருமையான கவிதை..உங்கள் செல்லத்துக்கு எனதன்பு முத்தங்கள்

இஷானி உங்கள் கவிதை அழகென்றால் பக்கத்தில்
உக்காந்து இருக்கும் குட்டிக்கவிதை அதை விட அழகோ அழகு.
வாழ்த்துக்கள்.

உங்கள் கவிதை மிகவும் அருமை.

வுங்கள் கவிதை மிகவும் அருமை. தாய்மை வுணர்வை வுனர்த்தியிருக்கிறது.என் மகள் குழந்தையில் செய்தது நியபகம்வருகிறது.

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. எத்தனை திறமை உங்களுக்கு. இப்படி ஒரு கவிதாயினியை இத்தனை நாள் எங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தாம இருந்துட்டீங்களே. கவிதை மாதிரியே அந்த குட்டிப் பாப்பாவும் கொள்ளை அழகு. அந்த 4 பல் சிரிப்பை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. யார் இந்த குட்டிப் பாப்பா?

கவிதை ரொம்ப அருமையா இருக்கு...பாப்பாவும்தான்....!
அகஸ்தீஸ்வர குட்டிராணிக்கு என் அன்பு முத்தங்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்.....
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் பதிவைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. மகள் பிறந்து சிறிது காலம் கழித்து தான் நான் அறுசுவை உறுப்பினரானேன். உதவிக்கு அப்போது யாரும் இல்லை. நானும் என் கணவரும் மட்டுமே. அப்போது குழந்தை வளர்ப்பில் உள்ள நிறைய சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைத்தவர்களில் நீங்கள் மிகவும் முக்கியமானவர். நன்றாக நினைவு இருக்கிறது, அப்போதெல்லாம் யார் மகப்பேறு அல்லது குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக கேள்விப் பதிவு போட்டிருந்தாலும் உங்கள் பதில் தான் முதலில் இருக்கும். உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்,
இஷானி

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி mrs. Komu, சுஜாதா சுதாகர், மற்றும் சுந்தரி அர்ஜுன்.

அன்புடன்,
இஷானி

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி தேவா மேடம்.

//எத்தனை திறமை உங்களுக்கு.// நீங்க வேற யாரையோ சொல்றீங்கன்னு நெனைக்கிறேன்.

உங்க அழகுக் குறிப்ப பார்த்துதான் கொஞ்சம் கொஞ்சமா make-up பத்தி கத்துகிட்டு வாரேன்.

அன்புடன்,
இஷானி

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி இளவரசி. இந்த டிசம்பர்-லதான் ஊருக்கு போயிட்டு வந்தோம். ரொம்ப enjoy- பண்ணினாள். தமிழ் பேசுறதுல நிறைய மாற்றம். நிறைய புதுப் புது வார்த்தைகள் பேச ஆரம்பிச்சிட்டா. நம்ம ஊர் பக்கம் போனாலே ஒரு சந்தோசம்தான்.

அன்புடன்,
இஷானி

எப்படி இருக்கீங்க உங்க கவிதை சூப்பராக இருக்கு. எனக்கு கவிதை என்றால் ரெம்ப பிடிக்கும். கவிதைக்கு பொய்தான் அழகு. இந்த கவிதையில் உணமை அழகோ அழகு.

நல்ல கவிதை இஷானி! ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க... பக்கத்தில இருக்கும் குட்டி கவிதையும் சூப்ப்பர்!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இஷானி..

ரொம்ப பாராட்டிடிங்களே. கட்டுரை எழுதுய காலமெல்லாம் வேலை சுமை காரணமாக விட்டுவிட்டேன். கண்டிப்பாக நீங்கள் கூறியதற்காக மீண்டும் முயற்சி செய்கிறேன் இஷா.. ;-) ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி கதீஜா. உண்மைதான், பொய்ய பொய்யின்னு தெரிஞ்சும் நம்ம அதிகம் ரசிக்கிறது கவிதையிலதான்.

அன்புடன்,
இஷானி

பாராட்டுக்கு நன்றி இலா. இப்ப எல்லாம் ரொம்ப அபூர்வமாதான் பதிவு போடுறீங்க. அடிக்கடி வாங்க.

அன்புடன்,
இஷானி

அன்பு இஷானி,

ரொம்ப அழகாக, மழலைச் சொல்லின் இன்பத்தை, உணர்ந்து, ரசித்து, அனுபவித்து, சொல்லி இருக்கீங்க.

மிகவும் ரசித்தேன், மீண்டும் மீண்டும் ரசித்துக் கொண்டு இருக்கிறேன் - கவிதையை, கவிதை தந்த கவிதையையும்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

இஷானி அருமையாக இருக்கு உங்க இரண்டு கவிதைகளுமே. நிச்சயம் உண்மை நீங்கள் உங்க கவிதையில் வர்ணித்து இருப்பது. இது கவிதை அல்ல இஷானி ஒவ்வொரு பெற்றோர்களும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஒரு சுகமான இன்பம்.

ஹாய் இஷானி "ஜென்மம் கடந்து
இப்பந்தம் தொடர" இரண்டு வரிகளில் நிறைய அர்த்தம் உங்கள் கவிதையை போலவே உங்கள் குட்டி(கவிதையும்) குழந்தையும் அழகு, மழலை சொற்க்கள் என்பது அறிது அதற்க்கு நாட்களும் குறைவு, இருக்கும் நாட்களில் அதை ரசித்து பதிவு செய்து வையுங்கள் உங்கள் தேவதை வளர்ந்தபின் அதை அவர்களுக்கு பரிசு அளிக்கலாம். இது என்னுடைய ஆசையும் நானும் ஆண்டவன் அருளிய பின்பு செய்வேன்.

உங்களுக்குள் ஒரு கவிஞர் ஒளிந்திருப்பது இப்போதுதான் தெரியும். மகள் பற்றீய கவிதை மிக அருமை. என் மகளுக்கு வயது 2 1/2. அவள் பிஞ்சு இதழால் முத்தம் பதிக்கும் போதும், கதை சொல்லி அவள் திரும்ப சொல்லும் போதும், அந்த அழகை ரசிப்பதற்கு இந்த ஒரு ஜென்மம் போதாது இஷானி. உங்கள் கவிதையும் அதையே சொல்வதால் மிகவும் பிடித்து இருக்கு. யார் இந்த செல்ல சிட்டு. ரொம்பவே க்யூட்டா இருக்காங்க இஷானி.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இஷானி மேடம்,
தினமும் உங்கள் கவிதையை படிக்கிறேன்
எனக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை
ஆரம்பம் முதலே இறுதி வரை அழகு
மேலும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சீதாலட்சுமி மேடம் - வந்து, படித்து, ரசித்து, வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி.

கௌரிலக்ஷ்மி - ரொம்ப நன்றி. //இது ஒவ்வொரு பெற்றோர்களும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஒரு சுகமான இன்பம்// உண்மைதான். இது ஒரு பொன்னான காலம். காலம் முழுவதும் பசுமையாக நினைத்துக் கொண்டிருக்க நிறைய சுகமான அனுபவங்களை இந்தப் பருவம் கொடுத்து விடும்.

தனிஷா - ஆமாம். இது எல்லா பெற்றோர்களும் அனுபவிக்கும் நிகழ்வுகள்தான். குழந்தைகளின் மழலைப் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் . அதுவும் இந்த வயதில் கொஞ்சம் அதிகமாவே பேசுறாங்க

கவிதா - பாராட்டுக்கு ரொம்ப நன்றி. உங்களுக்கு இக்கவிதைப் பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
இஷானி

//ஜென்மம் கடந்து
இப்பந்தம் தொடர
வரமே! ஒரு வரம் தா!!//

இஷானி... நான் அறுசுவையில் நுழையாத பக்கம் கவிதைகள் பக்கம். காரணம் சில கவிதைகள் நம் மனதில் சந்தோஷத்தையும், சில நேரத்தில் வேதனையையும் அதிகப்படுத்துவாதாக ஒரு எண்ணம். காரணம் எனக்கு கவிதைகள் பிடிக்கும். உங்க கவிதையை தற்செயலாக படித்தேன்... மனதை தொட்டது. பின்னூட்டம் தராமல் எப்படி போக... அத்தனை அருமையாக உள்ளது. சிறந்த படைப்புகளை வாழ்த்தாமல் இருக்க முடிவதில்லை. சூப்பர்... ரொம்ப சூப்பர். காதலை பற்றி எழுதுவதை விட, குழந்தைகள் பற்றி எழுதும் போது படிக்க ஆனந்தம்!! படிக்க படிக்க ஆனந்தம் தான்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இஷானி..,எப்படி இருக்கீங்க..?
இதுதான் உங்களிடம் முதல் தடவை பேசுவது என நினைக்கிறேன்.
உங்கள் கவிதையை ரசித்து படித்து சுவைத்தேன்.
உங்கள் குட்டி கவிதையை அதை விட ரசித்தேன்.அழகான சிரிப்பு.
வனிதா சொன்னது போல் கவிதை என்றாலே காதலை பற்றி என்று இருந்து வரும் நிலையில்,அழகாக குழந்தையினிடையே இருக்கும் உறவை பற்றி சொல்லி இருக்கும் நடை மிக அருமை.
இஷானிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பாராட்டுகளுக்கு நன்றி.

//காதலை பற்றி எழுதுவதை விட, குழந்தைகள் பற்றி எழுதும் போது படிக்க ஆனந்தம்!! படிக்க படிக்க ஆனந்தம் தான்!!! // உண்மைதான். காதலைப் பற்றிய கவிதைகளில் சோகக் கவிதைகளும் நிறைய அடங்கும். குழந்தைப் பற்றிய கவிதைகளில் அந்தப் பிரச்சனை இல்லை. நல்ல கவிதையாக இருந்தால் மனதுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கும். படித்து பின்னுட்டம் தந்ததற்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
இஷானி