மூக்கு மற்றும் காது பராமரிப்பு

மூக்கு காது பராமரிப்புBeauty tips

மூக்கை பராமரித்தல்

இந்த வாரம் மூக்கின் பராமரிப்பைப் பற்றியும், மேக்கப் பற்றியும் பார்ப்போம்.

கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.

ப்ளாக் ஹெட்ஸ் - ஒயிட் ஹெட்ஸ்

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு.

Nose care

மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலிலேயே எந்த இடத்தில், எந்த பக்கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரியாக மார்க் செய்து கொண்டு செயல்படுவது முக்கியம். காது போல அல்லாமல், தவறான இடத்தில் துளை போட்டுவிட்டால் முகத்தின் அழகை பாதிக்கும். துளையை மறைப்பதும் மிகவும் கடினம். மூக்கு குத்தப் பிடிக்காதவர்கள் கல்யாணத்துக்கு என்று ட்ரெடிஷனல் மேக்கப் செய்யும்போது மூக்கில் கல் ஸ்டிக்கர் கூட ஒட்டிக் கொள்ளலாம். மூக்கு குத்தாமல் செய்யப்படும் ட்ரெடிஷனல் அலங்காரங்கள் ஒரு வித முழுமையடையாததுபோல இருக்கும். அதனால் கல்யாணத்துக்கு மேக்கப் செய்பவர்கள் மிகவும் (மூக்குத்தி போடப் பிடிக்காதவர்கள்) ட்ரெடிஷனலான மேக்கப்பைத் தவிர்த்து, கொஞ்சம் மாடர்ன் லுக்கில் மேக்கப் செய்தால் அந்த குறை தெரியாது. அதே போல் கல்யாணங்களில் புல்லாக்கு (நரசிம்மா படத்தில் " ரா ரா நந்தலாலா" பாட்டு ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் போட்டிருப்பதுதான் புல்லாக்கு. அந்த அளவாவது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடைவெளி தேவை) போடும்போது நமக்கு அதற்கேற்ற முக அமைப்பு இருக்கிறதா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும். சரியான முக அமைப்பு (மூக்கிற்கும் வாய்க்கும் இடையே உள்ள தூரம்) இல்லாவிட்டால் மூக்கு ஒழுகுவது போல தோற்றம் ஏற்பட்டுவிடும்.

மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சில டெக்னிக்குகளை பொதுவாக இங்கே சொல்கிறேன். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.

இப்படி டார்க் ஷேட் ரூஜைக் கொண்டே மூக்கின் ஷேப்பினை அழகாக்கிவிட முடியும். ஆனால் இந்த வித மேக்கப் போடும்போது அடிக்கடி செய்து பார்த்து பழகிக் கொள்வது அவசியம். புதிதாக எங்கேயாவது செல்லும்போது திடீரென்று ட்ரை செய்து பார்ப்பது பல சமயங்களில் காலை வாரிவிடும். மேக்கப் செய்து பார்த்து, போட்டோ எடுத்துப் பார்த்தால் நமது மேக்கப்பின் குறைகளை நாமே கண்டுபிடித்துவிடலாம். ரூஜ் பளபளப்பில்லாத மேட் லுக் ரூஜாக இருப்பது அவசியம். ஜெல் டைப் இதற்கு சரி வராது.

காதுகளை பராமரிப்பது எப்படி?

அடுத்து காதுகள் பராமரிப்பினைப் பார்ப்போம். குழந்தைகளுக்கு காது குத்தும்போதே, மூக்கிற்கு சொன்னதுபோல் சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம். பலருக்கு வயதானால் தோடுகளை பட்டன் இன்றி போட இயலாது. அதிக கனமுள்ள தோடுகளைப் போடுவதால் துளைகள் பெரிதாகிவிடும். இதனை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மருத்துவரை அணுகினால் அவர், இப்படி பெரிதாக உள்ள துளைகளில் லேசாக கீறிவிட்டு தைத்துவிடுவார். லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதால் வலியெல்லாம் இருக்காது. சில நாட்களில் துளைகள் சேர்ந்துவிடும்.

நம்ம ஊரில் இந்த ட்ரீட்மெண்ட் பொதுவாக எல்லா பொது மருத்துவர்களும் செய்வார்கள். அதிக எடையுள்ள தோடு மட்டுமின்றி வளையங்களை அணிபவருக்கும் இந்த பிரச்சணை ஏற்படும். தூங்கும்போது இந்த வகை தோடுகளை கழட்டி வைத்துவிடுவது நல்லது. அதேபோல் சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள். இதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.

அடுத்து முக்கியமான விஷயம் காதுகளை சுத்தம் செய்வது. தரமான பட்ஸை உபயோகித்து காதுகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். நம் ஊர்களில் கடை வாசல்களில் பரிதாபமாக தோற்றமளிக்கும் சின்ன பிள்ளைகள் விற்கும் பட்ஸினை ஒரு போதும் வாங்காதீர்கள். அவர்களிடம் பரிதாபம் ஏற்பட்டால் பணமாக வேண்டுமானால் சும்மா கொடுங்கள். ஆனால் பொருள் வாங்கி உதவி செய்கிறேன் என்று வியாதிகளை வாங்கிக் கொள்ள வேண்டாம். அதிக விலை இருந்தாலும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தரமான பட்சுகளை வாங்கி உபயோகியுங்கள். பஞ்சும் அப்படியே. குழந்தைகளுக்கு சின்ன பருத்தி துனியினைக் கொண்டு காதுகளை க்ளீன் செய்தால் போதுமானது அல்லது குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக உள்ள பட்ஸினை உபயோகிக்கலாம். இந்த வகை பட்ஸ்கள், முனை பெரிதாக காது உள்பக்கம் வரை போக முடியாமல் இருக்கும். எனவே பயப்படாமல் உபயோகிக்கலாம்.

காதுகளை அழகுபடுத்துதல்

காதுகளுக்கு அழகுப் படுத்துதல் என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டெஷன், பவுடர் தடவுங்கள். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும். நிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம். ஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல்(கண்ணுக்கு தெரியாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தினையும், அழகையும் கொடுக்கும்.

Comments

நல்ல டிப்ஸ்...நல்ல பிசியா?

தேவா,ஒயிட் ஹெட்ஸ் பிரச்சனை வராமல் இருக்க ஆரஞ்சுதோல்,தக்காளி தோல் போன்று ஏதும் உபயோகித்தால் பலனிருக்குமா?

ரிமூவரில் எடுக்கும்போது முழுவதுமாய் எடுக்க முடியவில்லை..சில இடங்களில் விட்டு போய்விடுகிறது.எனக்கென்னவோ ரிமூவரைவிட கட்டைவிரல் உபயோகிப்பது எளிதாக வருவதுபோல் தோன்றுகிறது...:-)
அப்படித்தான் செய்கிறேன்...பிறகு மூக்கின் அளவு பெரிதாக இருந்தால் அதை குறைத்து காட்ட நீங்கள் மேலே சொன்ன முறையில் பவுண்டேஷன் உபயோகித்தால் சரிவருமா என் கொஞ்சம் சொல்லுங்களேன்.

மற்றுமொரு சந்தேகம் பட்ஸ் உபயோகிப்பது நல்லதல்ல என்று எங்கோ டாக்டர் சொல்லி கேட்ட ஞாபகம்..ஈர டர்க்கி டவல் வைத்துதான் துடைப்பது..சிலவேளை திருப்திபடாவிட்டால் மட்டும்தான் பட்ஸ் உபயோகிப்பது..

முடியும்போது பதிலை போடுங்கள்..:-

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

எப்படி இருக்கீங்க? அட, இங்கே மட்டும் ஒரு வருஷத்துக்குள்ள பதில் அடிச்சுட்டீங்க போலிருக்குன்னு ஓட்டாதீங்க :-). வேலையைத்தான் சாக்கா சொல்ல வேண்டியிருக்கு. ஆரஞ்சுத் தோல், தக்காளி போன்றவை முகத்தின் பளபளப்பிற்கு துணை புரியுமே தவிர ஒயிட் ஹெட்ஸை நீக்கும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் இப்படிப்பட்ட ஒயிட் ஹெட்ஸ் அதிக எண்ணெய்ப்பசையால் வருகிறது. இந்த எண்ணெய்ப் பசையை நீக்க நல்ல ஃபேஸ் பேக்கிங்தான் அவசியம். வேண்டுமானால் அந்த பேஸ் பேக்கில் இந்த பழச்சாறுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ரிமூவிங் ஸ்ட்ரிப்ஸ் ரெகுலர் யூஸுக்குதான் சரி. மற்றபடி நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு நான் சொன்ன ஆவி பிடித்தலும், பேஷியல் கிட்டில் உள்ள பிளாக் ஹெட் ரிமூவரும்தான் சரிவரும். அதில் எல்லா வகை கடினமான பிளாக் ஹெட்ஸும் வந்துவிடும். கட்டை விரல் ஓக்கேதான். ஆனால் மூக்கு சிவந்து, சில சமயம் நகம் கீறி அதனால் காயம் வரவும் வாய்ப்பிருக்கிறது.பெரிய சைஸ் மூக்கிற்கு இரண்டு பக்கமும் டார்க் ஷேட் ரூஜும், புருவத்துக்கு இடைப்பட்ட அளவுள்ள நடுப்பகுதிக்கு லைட் ஷேடும் உபயோகித்தால் மூக்கு பெரிதாக தெரியாது. நடிகை சுகன்யாவின் மேக்கப் இதற்கு நல்ல உதாரணம்.

காது பட்ஸ் தரமானதாக இருந்தால் பயப்பட வேண்டியதில்லை. இங்கே என் கணவரின் ஹாஸ்பிடலிலும் இப்படித்தான் ஒரு ENT மருத்துவர் பட்ஸ் உபயோகிக்காதீர்கள் என்று வீக்லி ப்ரெசெண்டேஷன் மீட்டிங்கில் சொன்னாராம். ஆனாலும் மற்ற டாக்டர்கள் வீட்டில் உபயோகிப்பதை நிறுத்தவில்லை :-). நான் அதற்காகத்தான் ஜான்சனில் வரும் பேபி பட்ஸை உபயோகிக்க சொல்லி எழுதி இருக்கிறேன். அது காதிற்குள் போகவே போகாது. ஏனென்றால் அடிப்பகுதி காது ஓட்டையை விட பெரிதாக இருக்கும். டவலை விடவும் காதை நன்றாகவே சுத்தம் செய்யும். பட்சால் அடிக்கடி காதை குடைவதும், காதின் அடிவரை சென்று க்ளீன் செய்கிறேன் என்று உள்ளே குத்திக் கொள்ளும் அளவு உபயோகிப்பதும்தான் தவறு. என் மகனை இந்தியாவுக்கு அனுப்பியபோது அவன் காதை பட்ஸ் கொண்டு க்ளீன் செய்ய பயந்து என் அம்மா தினமும் டவல் கொண்டு க்ளீன் செய்து, அவனுக்கு காதில் கசடுகள் உள்ளே அதிகம் சேர்ந்துவிட்டிருக்கிறது. இங்கே வந்ததும் காது வலியால் ஜூரமும் வந்துவிட்டது. பிறகு ஹாஸ்பிடல் கொண்டு சென்று சக்ஷன் முறையில் காதுகளில் இருந்த கல் போன்ற வேக்ஸை எடுத்தோம். அதிகம் தோண்டாமல், வாரம் ஒரு முறையாவது பட்ஸ் கொண்டு லேசாக க்ளீன் செய்வது அவசியம் என்பது என் அபிப்ராயம். தலை குளிக்கும்போது சேரும் ஈரத்தை நீக்க மட்டும் வெளிப்புறமாக நான் டவலை உபயோகிப்பேன். ஸ்விம்மிங் செல்லும்போது பேகில் ஒரு செட் பட்ஸ் கொண்டு போவதும் நல்லது. உடனடியாக ஈரத்தை துடைத்துவிடலாம்.

உபயோகமான டிப்ஸ்க்கு நன்றி...

என்ன என் கணவர் சொல்லும்போது(பட்ஸ்

பற்றி) ஒத்து கொள்ள மறுத்த மனம் நீங்கள் சொன்னவுடன் ஏற்று கொள்கிறது..

:-)

மற்ற எல்லாவற்றுக்கும் பதிலை இந்தியா செல்லுமுன் எதிர்பார்க்கலாமா?:-)

பேஷியல் கிட் நல்ல பிராண்ட் எதுவும் சொல்லுங்களேன்...முடிந்தால்..
நான் St.Ives facial scrub plus Garnier facial mud pack பயன்படுத்தறேன்...

கடந்த ஒரு வருடங்களாக...எனக்கு எண்ணைய்ப்பசை சருமம்..அதற்கு mudpack தவிர வேறு ஏதும் நல்ல பேக் இருக்கிறதா..

உங்கள் குறிப்பில் உள்ளபடி பேக் செய்ய சில பொருட்கள் கஸ்தூரி மஞ்சள் போன்று இங்கு கிடைக்கவில்லை....அதான் கேட்கிறேன்...

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இததான் தேடிகிட்டு இருந்தேன் தேவா, எங்க அறுசுவைல கண்டுபிடிக்கிறதுன்னு, எனக்கே எனக்கா போட்ட மாத்ரி இருக்கு. நன்றி தேவா. ஆமாம் தேவா எனக்கு ப்ளாக் ஹெட்ஸ் இருக்கு, என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் இருந்தேன், யாருக்கும் கிட்டபோய் பேசவே ரொம்ப சங்கோஜமா இருக்கும். நிச்சயம் இத ட்ரை பண்றேன் தேவா. என்கிட்ட கிட் இல்ல ஸ்பூன்ல தான் ட்ரை செய்யபோறேன்.

அப்பறம் எனக்கு ஒரு டவுட் என்கிட்ட ரோஸ் ஆயில் இருக்கு அதவச்சி மசாஜ் செய்துக்கலாமா?

ரோஸ் ஆயிலைவிட எதாவது க்ரீம் இருந்தால் உபயோகியுங்கள்.எளிதாக பிளாக் ஹெட்சை எடுத்துவிடலாம். ஆயில் கொஞ்சம் வழுக்கிக் கொண்டு இருக்கும். ரெகுலர் உபயோகத்துக்கு வேண்டுமானால் ஆயில் உபயோகிக்கலாம். முதல் முறை எடுப்பதற்கு க்ரீமே உகந்தது.

பட்ஸ் பத்தி சொல்லி நல்லா உங்க வீட்ல டோஸ் வாங்கப் போறேன்னு தெரியுது. நீங்கள் சொல்லி இருக்கும் ஸ்க்ரப்பும், மட் பேக்கும் நல்ல சாய்ஸ். இந்தியா செல்லும்போது நான் சொன்ன பொடியினை தயாரிச்சுக்குங்க. அதுக்குள்ள மெயில் அனுப்பிடுவேன்:-).

அன்பு தேவா

தொடர்ந்து இந்தப் பகுதிகளைப் படிச்சுட்டு வருகிறேன்.

மூக்கில் பிளாக் ஹெட் ரிமூவ் செய்யறதுக்கு பாண்ட்ஸ் ஸ்ட்ரிப் இங்கே இந்தியாவில் முன்பு கிடைத்தது. இப்போ அது கிடைப்பதில்லை. வேறு பிராண்ட் எதுவும் கிடைக்குமா? ஹெல்த் அன் குளோவில் கேட்டுப் பார்த்தோம், இல்லைன்னு சொன்னாங்க. பியூட்டி சலோன்களில் கேட்டுப் பார்க்கலாமா?

பட்ஸ் பற்றி எப்போதுமே ரெண்டு எக்ஸ்ட்ரீம்லயும் கருத்துகள் சொல்லிட்டு இருந்தாங்க, இப்போ நீங்க யூஸ் பண்ணலாம்னு சொன்னதும் நிம்மதியாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஹலோ தேவா அக்கா,

நான் புதிய உறுப்பினர். எனக்கு புருவம் ட்ரிம் பண்ண சில நாட்களிலேயே வளர்ந்து விடுகிறது. இதை தடுக்க என்ன செய்யலாம். பதில் சொல்லுங்க

அன்புடன்,
தமிழ் செல்வி

நீங்கள் சொன்ன மாதிரி நம்ம ஊரில் பாண்ட்ஸ் நோஸ் ஸ்ட்ரிப்தான் அப்போதெல்லாம் மிகவும் பிரபலம். இப்போதெல்லாம் அந்த விளம்பரத்தையே பார்க்க முடிவதில்லை. அவர்கள் இப்போது தயாரிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஷோஹான் (Shohan) என்ற பிராண்ட் இப்போது சில பார்லர்களில் உபயோகிக்கிறார்கள். இதைத் தவிர பெஸ்ட் பிராண்ட் என்று சொன்னால் Biore' Ultra Cleansing Pore Strips தான். ஃபவுண்டன் பிளாசாவில் உள்ள கடைகளில் கிடைக்கலாம். அல்சா மாலில் லக்மேவின் ஷோரூம் ஒன்று இருக்கிறது. மற்றவர்களின் தயாரிப்புகளும் இங்கே கிடைக்கும். இது தவிர வெளிநாட்டு காஸ்மெட்டிக் அயிட்டம்ஸ் விற்கும் கடைகளில் நிச்சயம் Biore' கிடைக்கும். இசஃபானி, ஸ்பென்சர்களில் உள்ள கடைகளில் கிடைக்காமல் இருக்காது. இங்கு முயற்சி செய்து கிடைக்காவிட்டால் பார்லர்களில் கேட்டால் விலைக்கு கிடைக்கும்.

நன்றி தேவா. என்னிடம் க்ளீன் அண்ட் க்ளியர் க்ரீம் இருக்கு அத வச்சி மசாஜ் செய்து பார்க்குறேன்.

தேவா மேடம்,
உங்களுடைய குறிப்பு ரொம்ப அருமையாக இருக்கு
எனக்கு மூக்கின் மீது லேசான கோடுகள் மாதிரி இருக்கு அது மட்டும் வித்தியாசமா தெரியுது எனக்கு black heads எல்லாம் கிடையாது இதை எப்படி க்ளியர் பண்றதுன்னு சொல்லுங்க ப்ளீஸ்

என்றும் அன்புடன்,
கவிதா

Devakku Oru Hip hip oorraaayyy.....ஹ்ய்யா, நானும் Brissy le தான் இருக்கென்,ரொம்ப சந்தொஷம்,என் பையன் பேரு அனிருத்,2 1/2 வயசு ஆச்சு.பொன்னு பேரு தக் ஷா.6 மாசம்..உங்க பதில்கள் எல்லாம் எல்லொருக்கும் மிகவும் பயன் உள்ள்தா இருக்கு.நானும் light aana வேலை தான் பாக்கலம்னு இருக்கேன்.அதுக்கு என்ன பன்னலாம்,வெலை வாய்ப்பு எப்படினு சொல்றிங்களா,2011ல எதாவது 6மாசம் course படிக்கலாம்னு இருக்கிறென்.என்ன பன்னாலம்னு சொல்லுங, April le ஊருக்கு போய்ட்டு இப்பொ தான் வந்தென்.6 மாசம் இருக்கலம்னு பொய்ட்டு வெயில் தாங்க முடியாம ஒடி வந்தாச்சு

Sorry for my delayed reply,My kids keep me busy all the time.I feel little difficult to type in tamil,i think i need some more practice.I was working in .NET but nw I dont want to go in programming field bcz i forgot everything,it has been more than 3 years.I hve to brush up again but no time.Can u pls give me more details abt Tech. nd project documentation.Is there any course for that in southbank nd qld university.I m in Springfield.wat abt u?
I m looking for some courses in springfield university also.
I m interested in web designing.Its very confusing me to choose the course.I hve to take care of my 2 kids so i m looking for light job not hectic one.

What is office suite? Wat kind of qualifications i needfor that?can u pls explain more?

Ur way of answering is really superb.I hve been reading arusuvai since 2007 but its new look dragging me to register myname.
HATS OFF To DEVA & TO ARUSUVAI

Elloorum ennai mannikkavum,I dont know where to insert my answer to the latest one.Sorry

//கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை // - தார் ரோட்டை விட்டுட்டீங்க. என் தங்கை என் மூக்கை அப்படி தான் சொல்வா. ;) ரொம்ப அழகா தெளிவா எல்லாம் சொல்லி இருக்கீங்க தேவா. வழக்கம் போல் "சூப்பர்". பாராட்டுக்கள்... தொடருங்க இன்னும் பல அசத்தல் குறிப்புகளோட.

உங்க வலி குறைந்திருக்கா?? நலமா இருக்கீங்களா??? சிரியா பகுதியில் மாலே பற்றி கேட்டிருந்தீங்க... அதே மாலே தான். :) அங்கு தான் அடுத்த 3 வருடம் வேலை என்னவருக்கு. நீங்க அங்க என்ன செய்தீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ungal le yaravathu Dallas, TX le erukingala................

இந்த ரூஜ் மட்டும் இதுவரை பயன்படுத்தியதே இல்லை..அதனால் எது ,என்ன வாங்குவது என தெரியவில்லை....எதுவும் நல்ல பிராண்ட் சொல்லுங்களேன்..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

hi deva akka
thank u for ur wonderful tips.. am a student.. I want to know the simple makeup style with normal natural look... pls tell me the good brand name too... waiting for ur reply...

உங்க மூக்கு மேலே இருக்கும் கோடுகளுக்கு நல்ல ஆண்ட்டி ரிங்கிள் க்ரீமை உபயோகியுங்கள். உங்கள் வயது 30 க்கும் மேலே என்றால் மட்டும் Anti Ageing - Anti Wirnkle Cream ஐ யூஸ் பண்ணுங்க. லோரியல் பிராண்ட் மிகவும் நன்றாக இருக்கும். அடுத்ததாக ஓலே அல்லது கார்னியர். இது தவிர முகத்துக்கு எப்போதும் மாய்ஸ்சுரைசிங் லோஷன் தடவுங்கள். குறிப்பாக தூங்கும்முன் முகம் கழுவி ஆண்ட்டி ரிங்கிள் க்ரீம் அல்லது தரமான (ஜான்சன்ஸ்) பேபி லோஷனை தடவுங்கள். மூக்கில் நன்றாக அழுத்தம் கொடுக்காமல் மசாஜ் செய்யுங்கள். விரைவில் கோடுகள் தெரிவது குறையும்.

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி வனிதா. உங்களுக்கு பதில் சிரியா பகுதியிலேயே கொடுத்திருக்கேன். உங்களுக்கு கை, காலே இவ்வளவு அழகா இருக்கு. முகம், மூக்கு நிச்சயம் அழகா தான் இருக்கும். நானும் என் அம்மாக்கிட்ட, அக்கா என்னை விட நல்லா இருக்காளே, எனக்கு மட்டும் நீங்க சரியா தலையை பின்னி விடல, பவுடர் அடிக்கலன்னு கலைச்சு விட்டுக்கிட்டு, திருப்பி பின்னுங்கன்னு சொல்லி நல்லா அடி வாங்குவேன். பத்தாததுக்கு நான் வயித்துல இருக்கும்போது மட்டும் நீங்க வேணும்னே நாகப்பழம் தின்னு என்னை கலர் கம்மியா பெத்துட்டீங்க, அவளுக்கு, தம்பிக்கெல்லாம் அப்படி பண்ணலன்னுலாம் சொல்லி சண்டை போடுவேன். தினமும் ஸ்கூலுக்கு காலையில் கிளம்பும்போது என் அம்மாவுக்கு என்னோட போராட்டம்தான். என் அக்காவுக்கு அப்ப முடியை மடிச்சு இரட்டை ஜடை பின்னலே இடுப்பு வரை இருக்கும். ரொம்ப அடர்த்தியா ஆனா ஸ்ட்ரெய்டா இருக்கும். அவ தலைக்கு எண்ணெய் வெச்சு கொண்டை போட்டாலே நீ சாமியார் மாதிரி சடைமுடி வெச்சிருக்கன்னு சொல்லி சொல்லி அழ வெச்சிருக்கேன். ஆனால் என் அக்கா என் தங்கச்சிதான் ரொம்ப அழகுன்னு எல்லார்க்கிட்டயும் சொல்லி பெருமைப் பட்டுப்பா. என்னோட சுருட்டை முடியை என் அம்மாவே பின்னறதுக்கு கை வலிக்குது, அடர்த்தி அதிகமாயிருகேன்னு சொல்லும்போது அவதான் எனக்கு விதவிதமா ஹேர்ஸ்டைல் செய்வாள். இப்படி நல்லவங்களா அக்காங்க இருந்தா தங்கச்சிங்க இப்படித்தான் இருப்பாங்க போலிருக்கு. என்ன நீங்களும் உங்க வீட்டில் (அக்கா) அப்படித்தானா?

ரூஜ் வாங்க ரெவ்லான் பிராண்ட் நல்லா இருக்கும். அதையும் விட, நமது சரும கலரைவிட இரண்டு ஷேட் குறைந்த பவுண்டேஷனைக்கூட உபயோகிக்கலாம். ரூஜைவிட அது ரொம்ப நேச்சுரலாக இருக்கும். ஆனால் நிறைய முறை செய்து பார்த்து பழகிட்டுதான் வெளியில் செல்ல மேக்கப் போடணும். கொஞ்சமே கொஞ்சம் பொறுமை இருந்தால் போதும். தனியா இந்த மாதிரி அப்ளிகேஷனுக்குன்னே ஷேட் குறைத்து வாங்கணும். இதற்கு பவுடர் டைப் பவுண்டேஷன் (மினரல் மேக்கப்) நல்லா இருக்கும்.

உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி. இந்த பதிவினைப் பாருங்கள்.இதில் ஈசி மேக்கப் பற்றி எழுதியிருக்கேன்.

http://www.arusuvai.com/tamil/node/3688

பிராண்டுகளுக்கு இந்த பதிவினைப் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/3747

இந்த பதிவுகளில் உள்ள கேள்வி பதில்களைப் பார்த்தாலே உங்களுக்கான விளக்கமும் கிடைத்துவிடும்.

நன்றி தேவா...நீங்க சொன்னது டிரை பண்ணி பார்க்கிறேன்.
அப்புறம்..ஹேர் ரிமூவிங்க்கு வீட்/நாயர் யூஸ் பண்ணுவேன்...உங்க எபிலேட்டர்

ஐடியா பார்த்து டிரைபண்ணி பார்க்கலாமின்னு தேடிபார்த்தா கிடைக்கல..
அதுக்கும் கொஞ்சம் நல்ல ப்ராடக்ட் என்ன எப்படி வாங்கணுமின்னு சொல்லுங்களேன்...

இதெல்லாம் சந்தேகமா கேட்கறோமேன்னுதான் இருக்கு..ஆனா முயற்சி செய்து கிடைக்கல அதான் கேட்டேன்....

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் பதிலுக்கு நன்றி... மிகவும் பயன் உடையதாக இருந்தது...

எப்படி இருக்கீங்க? வீட்டில் குட்டீஸ் நலமா? எபிலேட்டரில் Braun Silk Epil தி பெஸ்ட். எந்த தொல்லையும் கொடுக்காம 10 வருஷமா இருக்கு. வாங்கும்போது சாப்ட் ப்ரிஸில்ஸ் உள்ளதா வாங்குங்க. அப்பதான் சின்ன ஹேரும் வரும். வலிக்கவும் செய்யாது. அதிலேயே படிச்சுப் பார்த்தா தெரியும். பேசிக் டைப் வேண்டாம். அடுத்து பிலிப்ஸ் நல்லா இருக்கும்.

ஹெலோ தேவா,
எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், முகத்தில் உள்ள கரும்ப்ள்ளிகள் நீங்க எதாவது டிப்ஸ் கொடுங்கள். அதுவும் எனது மூக்கின் மீது அதிகமான கரும்புள்ளிகள் உள்ளன

என்னுடைய முகம் ரொம்ப கருத்து, எண்ணெய் வழிவது போல் உள்ளது. முன்பு இப்படி இல்லை. குழந்தை பிறந்த பின்பு தான் இப்படி உள்ளது. இதற்கு என்ன செய்ய?

அன்புடன்
மகேஸ்வரி

தேவா..

என் மாமா பெண்ணிற்கு நவம்பர் மாதம் திருமணம்.. அவள் கலராக இருப்பாள், ஆனால் வாயை சுற்றி மட்டும் தாடையை சேர்த்து ஒரு 5% டோன் கலர் குறைந்து கொஞ்சம் கருமையாக உள்ளது..

மேலும் அவளின் கைகளின் முழங்கையில் சிறிது சொரசொரப்பாகவும் உள்ளது..

இவை இரண்டிற்கும் ஏதாவது வழி உள்ளதா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

daily nose strips Biore இங்க கிடைக்கல.puredrum வாங்கினேன்..இது வீக்லி ஒன்ஸ்தான் பயன்படுத்த முடியுது...டெய்லி பயன்படுத்தற வேற ப்ராண்ட் தெரிஞ்சா சொல்லுங்க...

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹலோ தேவா,
நலமா? நான் ரொம்ம்ம்ம்ப... நாள் கழித்து இன்றுதான் அறுசுவைக்கு விஸிட்! சம்மர் ஹாலிடேஸ் என்பதால், பசங்களை அழைத்துக்கொண்டு ஒரு சின்ன ஊர்சுற்றல் ‍ வெஸ்ட்கோர்ஸ்க்கு, அதான்!

வழக்கம் போலவே இந்த பகுதியும் ரொம்ப அருமையா, தெளிவா எழுதியிருக்கிங்க தேவா. வாழ்த்துக்கள் & நன்றி!
எனக்கு முகத்துக்கே ஒழுங்கா மேக்கப் போட்டுக்கத்தெரியாது. நீங்க, ஒவ்வொரு மூக்கு ஷேப்புக்கும் டிப்ஸ் கொடுத்து கலக்கிட்டிங்க போங்க. நான் அதிகபட்சம் என் முக்கிற்கு/முகத்திற்கு செய்வது, நிங்க சொன்ன அந்த நோஸ் ஸ்ட்ரிப்ஸ் கொண்டு ப்ளாக் ஹெட்ஸ் ரீமூவ் செய்வதுதான். அப்புறம், அப்பப்ப, வாரம் ஒரு முறை, ஸ்கிரப்பிங் க்ரீம் போட்டு முகத்த்தை ஸ்கிரப் செய்வதுண்டு. அவ்வளவே! : )

அப்புறம் தேவா, எனக்கு இரண்டு கேள்விகள்:

1. நீங்க சொன்னபடி எபிலேட்டர் வாங்க தேடியதில், இதை கண்டுபிடித்தேன். Braun 5270 Silk-épil X'elle Body System Epilator. ‍அமேசான் சைட்டில் ஆர்டர் செய்து இது வாங்கலாமென்று நினைத்திருக்கிறேன். நீங்க சொன்னபடி ந‌ல்ல‌ ரெவீயுஸ் போட்டிருக்கு. அதற்கு முன், இதுதானா நிங்க சொன்னது என்று கன்பர்ம் பண்ணிக்கொள்ளலாமென்று நினைத்தேன். கொஞ்சம் சொல்லுங்கள் தேவா.

2. இந்தியா போயிருந்த‌‌ போது, ந‌ல்ல‌ க்ரீம், யூஸ் ப‌ண்ண‌லாமென்று SHAHNAZ Herbal Face Treatment க்ரீம் வாங்கி வந்தேன். அதை ஜ‌ஸ்ட் போட்டு ம‌சாஜ் செய்து கொள்ள‌வேண்டுமா? உபயோகப்படுத்த ச‌ரியான‌ முறை என்ன? உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, முடியும்போது சொல்லுங்க‌ள் தேவா.
ந‌ன்றி, மீண்டும் பிற‌கு பேச‌லாம்.

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் Deva Madam,
என்னுடய skin சென்சிடிவெ +combination ச்கின்.upper part is oily
முகிர்கு அப்புரம் dry
1).நான் என்ன
face wash
moisturiser
cream use panuvathu
எப்படி முகதை பரமரிபது என்டு சொலவும்.

2)Oily skin உடைய gents என்ன cream use pannalaam entu pls sollavum

with wishes,,
regi

Hi Deva madam,
This is first time i am enter this page.my skin is very oily and appear black.what i do.Then next u told some skin colouring powder .Pls tell me once more how to prepare this powder.sorry i don't know tamil typing.