கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?

கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?

பெண்களுக்கு தான் கோபம் அதிகமாக வருகிறது.

இதை ஆண் பெண்ணுன்னு பிரிக்க முடியும்னு எனக்கு தோனல. அது தனிப்பட்ட நபரைப் பொறுத்தது.

அன்புடன்,
இஷானி

எங்கள் வீட்டில் நடப்பதை சொல்கிறேன். எனக்கு அடிக்கடி கோபம் வரும்.... ஆனால் அது சின்ன கோபம் தான். என் கணவருக்கு எப்போதாவது தான் கோபம் வரும் ஆனால் severeயாக இருக்கும். இஷானி சொல்வது போல், மனிதர்களை பொறுத்து உள்ளது.

பெரும்பாலும் பென்களுக்கு வருவது கோபம் இல்லை, அது ரோஷம்
ஆன்களுக்குத்தான் அடிக்கடி கோபம் வரும்
ஆஷிக்

அண்ணா சூப்பர்

அது எப்படி பெண்களுக்கு வருவது ரோஷம். ஏன் எங்களுக்கெல்லாம் கோபமே வராதா?
கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பெண்களுக்கு தான் அதிகம் கோபம் வருகிறது.இது என் கருத்து. ஆண்களுக்கு எப்பொழுதாவது வருவது ,நமக்கு எப்பொழுதும் வுள்ளது அது என்னவென்றால் கோபமே (என் வீட்டை பொறுத்த வரை என்னக்கு தான் கோபம் அதிகம் வரும் )பெரும்பாலும் பெண்களுக்குத்தான் என்பது என்கருத்து.

கோபம் பெண்களுக்கு தான் அதிகம் வரும். பெண்களுக்கு பொறாமை குணம் இருப்பதால் கோபம் அதிகம் வரும். பெண்கள் தங்களின் கனவர் தங்கலுகே சொந்தம் என நினைத்து அவரது தாய், தந்தையிடம் கூட அதிக பழக விடாமாட்டார்கள். அப்படி தான் தாயும் தன் மகனுக்கு திருமனம் ஆனதும் வந்த மருமகள் எங்கே தன்னயும் தன் மகனயும் பிரித்துவிடுவாலோ என்ரு மருமகலோடு சன்டை போட அரபித்து விடுவர்.ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. எதயுமெ விளையாட்டாக எடுத்து கொல்வர்.

ஹலோ ஆமினா,
நான் சொன்னது பென்களைப்பத்திதான் உங்களைப்பத்தி இல்லை
அதானே,எங்கே வராம போயிருவீங்களோனு பாத்தேன்
வரும் கோபம் வரும்,பயங்கரமா வரும் அது உங்களுக்கு
ஆனா பென்களுக்கு அவ்வளவா வராது,
நேர்மையுடன்
ஆஷிக்

ஆஷிக் மனிதனை கடவுள் படைக்கும் போது எல்லா குணங்களையும் சமமாக தான் கொடுத்து படைப்பார். அதில் பெண்களுக்கு மட்டும் குறைவு ஆண்களுக்கு அதிகம் என்று எந்த வறைமுறையும் இல்லை. மற்றவர்களின் நடத்தையை பொறுத்தது.
ஆண்களுக்கு எப்போதும் ஒரு கம்பீர தோரணை இருப்பதால் அவர்களை அடுத்தவர்கள் சீண்டுவது அரிது. அதனால் அவர்களிடம் கோபம் அளவாக தான் வரும்.
ஆனால் பெண்கள் எளிய தோற்றம் கொண்டதிணால் அவர்களை ஆண்கள் அதிகமாக சீண்டுகிறார்கள்(நீங்கள் என்னை சீண்டுவது போல்). அத்தகைய சூல்நிலைகளில் கோபப்படாமல் இருக்க முடியாது. ஆண்கள் மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை.சுற்றியுள்ளவர்களும் தான்.

கோபம் மனித பிறவிக்கு உரிய குணம். அதில் ஆண்களுக்கு அதிகமா? பெண்களுக்கு அதிகமா என்று எப்படி சொல்ல முடியும்?

என்னை கேலி செய்வதினால் ஒரு நன்மையும் இல்லை. பெண்களுக்கு ரோசம் தான் அதிகம் வரும் என்று சொன்னீரே அது எப்படி என்று கேட்டதற்கு பதிலே இல்லையே?
ரோஷத்தின் அடுத்த பிரதிபலிப்பு கோபம் இல்லையா?
அப்படியென்றால் ஆண்களுக்கு ரோஷம் என்பதே இல்லையா?

உண்மையுடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்