உங்கள் சகோதரி போல் நினைத்து விடை கொடுங்கள்

என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் , அவரது வேலையை என்னை செய்ய சொல்லி வர்ப்புரித்தினார் நானும் செய்து தருவதாக சொல்லி இருந்தேன் அதர்க்குல் அடிக்கடி கேட்டு கொண்டே இருந்தார். எங்க மானேஜர் விடுப்பில் சென்று இருந்தார். அவர் வருவதர்குள் செய்து தருகிரேன் என்று சொன்னேன். இன்று எங்க மானேஜர் வந்து விட்டார். திரும்பவும் கேட்டார் நான் அவர் சொன்ன வேலையை முடித்து கொடுத்து அவர் table லில் வைத்து விட்டேன் அவரும் அருகில் இருந்தார். அவர் வேலையில் இருக்கும் போது என்ன சொன்னலும் காதில் வாங்கவே மாட்டார் எனவே நான் ஒன்ரும் சொல்லாமல் அமைதியாக வந்து விட்டேன். அவர் என்னிடம் கேட்டார் சொல்லாமல் ஏன் வைத்து சென்ராய் என்று நீங்கள் வேலையில் இருந்திர்கள் சொன்னலும் கவனிதிருக்க மாட்டிர்கள் என்று சொன்னேன். உடனே அவர் எலுந்து வந்து என்னை திட்டி விட்டார். முஞ்ஜியை சுலித்து கொன்டு எனக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம் நீ செய்த பேப்பரை கிலித்து விடுவேன் என்ரும் மிக அதிகமாகவும் பேசி விட்டார். நான் எங்க மானேஜரிடம் கூரிவிட்டேன்.அவரது வேலை என்னை செய்ய சொன்னதோடு அல்லாமல் என்னை அதிகம் பேசிவிட்டார். நான் செய்தது சரியா தவரா கூர்ங்கல் தோலியரே.இந்த பிரச்சனை செய்த நபர் . என்னிடம் ஏலசீட்டு போட்டுள்ளார். இது 2 ம் மாதம் போன மாதமே சீட்டு காசை பாதி பாதியாக காலம் தாழ்த்தி தந்தார், இந்த மாத சீட்டு என்னுடையது இருப்பினும் அவருக்கு ஒரு தேவை என்று கேட்டார் நானும் தருகிரேன் என்று சொல்லிருந்தேன்.அவர் என்னுடன் சன்டை போட்டதை பார்த்தால் சீட்டை எடுத்துவிட்டு நிமிர்ந்து விடுவார் போல் தெரிகிரதுஎனவே அவரது ஒரு மாத பணத்தை திருப்பி தந்து விடலாம் என்று நினைக்கிரேன். ஆனால் அவரிடம் என்ன காரனம் சொல்வது என்று தெரியவில்லை. மீண்டும் சன்டை போட்டால் என்ன பேசி சமளிக்க என்று சொல்லுங்கள் தோளிகளே

வளர்..

அனைவரும் அவசரத் தேவைக்காகதான் சீட்டு போடுகின்றனர். திடீரென எப்படி பணத்தை திருப்பி கொடுக்க முடியும்.ஆனால் நீங்கள் உங்கள் கணவர் கூறுவதைத்தான் செய்யமுடியும். அப்படி திருப்பி கொடுத்துவிட்டு எப்படி ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு அலுவலகத்தில் ஒன்றாகப் பணிபுரிய முடியும்.?

சீட்டு சேர்க்கும் போது நம்பிக்கையான நபரா எனப் பார்த்துதானே சேர்ப்பீர்கள்? உங்களுக்கு சந்தேகம் எனில் கடைசியாக பணத்தை கொடுங்கள். அவரின் தேவையை விட மற்றவரின் தேவை அதிகம் என கூறிப் பாருங்கள்.ஆனால் ஏலம் கூறினால் வேறி வழி இல்லை.

இல்லை பணத்தை கொடுத்துவிட்டு அவர் ஏமாற்றினாலும் உங்கள் கணவர் துணைக் கொண்டு சண்டை போட்டு வாங்க முடியும் என்றால் கொடுத்துவிடுங்கள். ;-).. முடிந்தவரை அவரிடம் சுமூக நட்பை தொடரப் பாருங்கள். நீங்கள் மேலிடத்தில் கூறாமல் பிரச்சனையை நீங்களே தீர்த்து இருக்கலாம் இந்த சீட்டு என்ற புலி வாலை பிடித்திருக்கும் பட்சத்தில்.ஹ்ம்ம்ம்

நீங்கள் மேலிடத்தில் கம்ப்ளைன்ட் செய்தது அவருக்கு தெரியுமா..? இன்னும் தெரியாது என்றால் மேனெஜரிடம் அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம் என பாலிஷாக கூறி விடுங்கள். நட்பினை தொடருங்கள். மேலும் கணவர் ஆலோசனைப்படி செய்யவும்.அது மிகவும் முக்கியம். ;-).

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்