முட்டை பற்றிய சந்தேகம்

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சேர்த்துக்கொள்ளலாம்? , ஒருவேளை முட்டை சேர்த்து சமைக்கும் போது எத்தனை முட்டை சேர்க்கலாம்?

ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடலாம். குழந்தை பருவம் என்றால் 2 கூட கொடுக்கலாம். ஆனா பட்டிளங்குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை சேர்ப்பதே நல்லது. பெரியவர்களுக்கு வாயு தொந்தரவுகளை உண்டாக்குவதால் முடிந்த வரை தவிற்ப்பது நல்லது. இரவு நேரத்தில் சாப்பிடுவதை அனைத்துவயதினரும் தவிற்த்தல் நலம். மதிய உணவுக்கு சேர்க்கும் போது கூட(முட்டை பொரித்தால்) மிளகு சேர்க்க வேண்டும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு தோழி அமினா,

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

தோழிகளே நான் அடிக்கடி முட்டையை சமையலில் சேர்த்து கொள்வேன். என் கணவருக்கு வெஜ் நூடுல்ஸ் பிடிக்காது..
அடிக்கடி முட்டை நூடுல்ஸ் செய்வேன்.. ஒரு மாதத்திற்கு மேல் நான் முட்டை நூடுல்ஸ் செய்த போது முட்டை நாற்றம் எடுத்தது..
நான் தான் பக்குவம் சரியாக பன்னவில்லை என்று நினைத்து விட்டு விட்டேன்.
இன்று முட்டை பொறியல் செய்தேன் அதுவும் துர்நாற்றம்..
முட்டை பொறியல் செய்தால் நன்கு வாசனையாக இருக்கும்.. ஏன் இப்போது முட்டை இப்படி நாற்றம் அடிக்கிறது..
உண்மையில் பிளாஸ்டிக் முட்டையா?குழப்பமாக உள்ளது..
என் அம்மா வீட்டில் இதே போல் பொறியல் செய்தேன் நாற்றம் வரவில்லை..

//முட்டை நூடுல்ஸ் செய்வேன்.// முட்டை போட்டுச் சமைத்த‌ நூடுல்ஸைச் சொல்கிறீர்கள், எக் நூடுல்ஸை அல்ல‌, சரிதானே!

//ஒரு மாதத்திற்கு மேல் நான் முட்டை நூடுல்ஸ் செய்த போது முட்டை நாற்றம் எடுத்தது.// முட்டையை எப்படிச் சமைத்தீர்கள்?

//முட்டை பொறியல் செய்தேன் அதுவும் துர்நாற்றம்.// ஒவ்வொரு முட்டையாக‌ தனித் தனியே ஒரு கிண்ணத்தில் உடைத்து சரியாக‌ இருக்கிறது என்று நிச்சயித்தபின் மீதிப் பொருட்களோடு சேர்க்க‌ வேண்டும். பொரியலானாலும் கேக் செய்வதானாலும் இப்படிச் செய்வது நல்லது. ஒவ்வொரு முட்டையாக‌ இப்படி சோதித்துப் பார்த்துச் சமையலில் சேர்த்தால் ஒரு முட்டையினால் மீதி உணவு அனைத்தும் கெட்டுப் போகாது. ஒன்று கெட்டு இருப்பதாகத் தெரிந்தால், அந்தக் கிண்ணத்தைக் கழுவப் போட்டுவிட்டு அடுத்த‌ முட்டையை உடைப்பதற்கு புதிதாக‌ ஒரு கிண்ணத்தை எடுங்கள்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் முட்டையை இறக்குங்கள். முட்டை அடியில் போய்த் தங்கினால் அது உண்பதற்கு உகந்தது. மிதந்தால் வீசிவிடலாம்.

//முட்டை பொறியல் செய்தால் நன்கு வாசனையாக இருக்கும்.// :‍) முட்டை வாசனையாக‌ எங்கே இருக்கிறது! பிடித்தவர்களுக்கு மட்டும் தான் அது வாசனை. முட்டை பிடிக்காதவர்களுக்கு, அது எப்போதுமே வாடை தான். புல்ஸ் ஐ போட்டால், முட்டை சாப்பிட்ட‌ தட்டு கழுவினாலும் சுலபத்தில் வாடை போவதில்லை.

//உண்மையில் பிளாஸ்டிக் முட்டையா?// :‍) ப்ளாஸ்டிக் முட்டையை உண்ணவே முடியாது இந்துஷா. விளையாட்டுப் பொருளாகவோ அலங்காரப் பொருளாகவோ வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ப்ளாஸ்டிக்... அறை வெப்பநிலையில் திண்மமாக‌ இருக்கும். அதை எப்படி சட்டியில் 'ஊற்றிப்' பொரிக்க‌ முடியும்!! ப்ளாஸ்டிக்கை அவிக்க‌ முடியாது. அது வெப்பத்திற்கு உருகுமே தவிர‌ இறுகாது. திரும்ப‌ இறுகிய‌ பின் கோதை நீக்குகிறோம் என்று வைத்தாலும் அது கடிபடும் விதத்தை வைத்து நம் நாக்கு நமக்குக் காட்டிக் கொடுத்துவிடாதா!

//என் அம்மா வீட்டில் இதே போல் பொறியல் செய்தேன் நாற்றம் வரவில்லை.//
அம்மா முட்டையைக் கொள்வனவு செய்த‌ இடம் வேறு; நீங்கள் கொள்வனவு செய்த‌ இடம் வேறு. வழமையாக‌ வாங்கும் இடத்தில் வாங்காமல் வேறு கடையில் வாங்கிப் பாருங்கள்.

நீங்கள் ப்ரொஃபைலில் வசிக்கும் இடத்தைக் குறிப்பிடவில்லை. இந்தியா! அதிலும் வெப்பப் பிரதேசத்தில் வசிக்கிறீர்கள், அல்லவா? எங்கே முட்டை வாங்குகிறீர்கள்? எப்படிச் சேமிப்பீர்கள்? எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை வாங்குகிறீர்கள்?

சேவல் இல்லாத‌ வளர்ப்பிடங்களிலிருந்து கிடைக்கும் முட்டைகளில் முளைய‌ வளர்ச்சி இராது. கெட்டுப் போவதற்கான‌ சாத்தியங்கள் குறைவு.
நாட்டுக் கோழி முட்டை என்று தேடி வாங்கினால்... அனேகம் சேவலுடன் சேர்த்து வளர்ப்பதாகத் தான் இருக்கும். அந்த‌ முட்டைகள் சுற்றாடலிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு முளைய‌ வளர்ச்சியை ஆரம்பித்து விடும். பிறகு வெப்பம் போதாமற் போக‌ வளர்ச்சி தடைப்படும். ஓரிரண்டு நாட்களில் இந்த‌ முட்டைகளில் நாற்றம் வரலாம்.

முட்டைகளை வாங்கி வரும் போது நேரடியாக‌ வெயில் படாதபடி மூடி எடுத்து வாருங்கள். வீட்டிற்கு வந்ததும் குளிரூட்டியில் வைப்பது நல்லது. அன்றன்று இட்ட‌ முட்டைகள் கெட்டுப்போய் இராது. நாட்பட‌ வைத்து உண்பதைத் தவிர்க்கப் பாருங்கள். முட்டை ஓட்டில் வெடிப்பு / துவாரம் இருந்தாலும் விரைவில் கெட்டுப் போகலாம்.

‍- இமா க்றிஸ்

நாட்டுக்கோழி முட்டை கெட்டு போனால் சிறிது இரத்தம் உள்ளே இருக்கும்.. அதை வைத்து கண்டு பிடித்து விடுவேன்.
இப்போது நீங்கள் கொடுத்த டிப்ஸ் படி செய்து பார்க்கிறேன்.
நான் பத்து நாட்களுக்கு ஒருமுறை முட்டை வாங்குவேன்..வாங்கியதும் குளிர்பெட்டியில் வைத்து விடுவேன்..

முட்டை நூடுல்ஸ் செய்யும் போதும் பொறியல் செய்யும் போதும் வெங்காயம் வதங்கியதும் போடுவேன்..
நான்கு ஐந்து முறை கவனித்து பார்த்ததில் உதிரியாக முட்டை வரவில்லை கடுகை விட சிறிய அளவில் உருண்டை உருண்டையாக குருணை மாதிரி வருகிறது..
அப்படி வந்தால் துர்நாற்றம் வந்து விடுகிறது..

இனி பரிசோதனை செய்து சமைத்து பார்க்கிறேன்..
உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிங்க..

athu keathu pona muttaiya erukum

மிக்க நன்றி..
நேற்று வாங்கி வந்த முட்டை. கடையிலும் காலையில் ஸ்டாக் இல்லை மதியம் தான் வாங்கினார்.. எப்போதும் ப்ரெஷாக வாங்கும் கடை தான்..

//முட்டை கெட்டு போனால் சிறிது இரத்தம் உள்ளே இருக்கும்.// அப்படி சிவப்பாக‌ இருக்கும் எல்லா முட்டைகளும் கெட்டுப் போனவை அல்ல‌. கரு உயிரோடு இருந்தால் சாப்பிடலாம். மஞ்சட்கரு ஆரோக்கியமான‌ மஞ்சளாகத் தெரிந்தால் சாப்பிடலாம். கெட்டுப் போன‌ முட்டையின் கரு மங்கலாக‌ / கலங்கலாக‌ / பளிச்சென்று இல்லாமல் இருக்கும். உடைத்ததும் ஒரு தடவை முகர்ந்து பாருங்கள். சந்தேகமாக‌ இருந்தால் பயன்படுத்த‌ வேண்டாம். (இந்த‌ முட்டைகள் செடிகளுக்கு நல்ல‌ உரம். வீணாக்காமல் செடிகளின் அடியில் புதைத்து விடுங்கள்.)

இனி பார்த்து வாங்குங்க‌. முட்டையை உற்பத்தி செய்யும் எல்லோரும் அன்றன்று கடைக்குக் கொடுப்பது இல்லை. பெரும்பாலும் நிறைய‌ முட்டைகளை உற்பத்தி செய்பவர்கள்தான் அன்றன்று கொடுப்பார்கள். சேர்த்து வைத்துக் கொடுக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

பத்து நாட்கள் வைத்திரும் போது முட்டைக்கு பதினந்து நாட்கள் வயதாகி இருக்கலாம். :‍) ஒரு காலம் முட்டைக் கோழிகள் வளர்த்திருக்கிறேன். கோழிகள் கொத்தி வைக்கும் முட்டைகள் வீட்டுப் பாவனைக்கு. நல்ல‌ முட்டைகளைச் சேகரித்ததும் பென்சிலால் தேதியைக் குறித்து வைப்பேன். வாங்கும் கடைக்காரர் ஒருநாள், 'அப்படி எழுத‌ வேண்டாம்,' என்றார். :‍)

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி உங்களுக்கு.. நான் இதுவரை மங்கிய கலரில் மஞ்சள் கரு பார்த்து உள்ளேன். ஆனால் அது கெட்டு போனது என்று எனக்கு தெரியவில்லை.
முட்டை கெட்டு போனால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்டேன்.

இனி எச்சரிக்கை உ
டன் சமைக்கிறேன்

மேலும் சில பதிவுகள்