மறந்துபோன விளையாட்டுகள்

இன்றைய காலக்கட்டத்தில் வளரும் குழந்தைகள் கேரம், செஸ், கிரிக்கெட், டென்னிஸ், புட்பால், பூப்பந்து, வீடியோ கேம்ஸ், இப்போ எல்லாத்தையும் நகர்த்தி விட்டுட்டு ஏதோ ப்ளே ஸ்டேஷனாகும்(play station) அது வேற பத்தாததுக்கு வந்துவிட்டது. இன்னும் சற்று அதிகமாக கேரம், செஸ், கிரிக்கெட், புட்பால், பூப்பந்து இதுபோன்ற விளையாட்டுகளில் விளையாட அதிகம் ஆர்வமுள்ள குழந்தைகள் சிறு வயதிலிருந்து இதற்கான பயிற்சியையும் மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய மனநிலையும் அவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் கலந்து பல பரிசுகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இருக்கும். சரி விஷயத்துக்கு வரேன். காலங்கள் மாறினாலும் பசுமையான நினைவுகள் நம்மை விட்டு நிச்சயம் அகலாது. அதுவும் அவரவருடைய சிறுவயது பற்றி பேச சொன்னால் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிரம்பி வழியும்ல, அதனால் நம்ம சின்ன வயசுல விளையாடிய விளையாட்டுகளை பற்றியும் அப்போது நடந்த சுவாரஸ்யமான, நகைச்சுவையான நிகழ்வுகள் பற்றி பகிர்ந்துக்கலாமா தோழிஸ்.

ஹாய் வினோஜா

நல்ல தலைப்பு. இப்ப இருக்குற குழந்த்தைகளுக்கு கண்ணாம்பூச்சி விளையாடுவது தெரியுமா? என்று தெரியவில்லை. சிறுவயதில் பவர் கட் ஆனாலோ,தினமும் மாலை பொழுதிலோ,விடுமுறை நாட்களிலோ விளையாடுவோம். தெருவே கலைகட்டும். எல்லாருடைய அம்மா,அப்பாவும் வாசலில் உக்கார்ந்த்து தத்தம் தன் பிள்ளைகளின் விளையாட்டை ரசித்துக்கொண்டும், அதட்டி கொண்டும் இருப்பார்கள். இரவு 10 மணி ஆன பின்பு கூட விளையாட்டுக்கள் தொடரும். சில பெற்றோர்கள் தானாகவே பிள்ளைகளை அதட்டி,அடித்து கூட கூடிட்டு போவார்கள். சில பெற்றோர்கள் வரும் போது வரட்டும் என்று விட்டு விடுவர்(ஆனா வீட்டுக்கு போனா கண்டிப்பா அடி உண்டு).

இப்ப எங்கே? ஸ்கூல்,டியூசன், லொட்டு லொசுக்குன்னு பசங்களுக்கு அதிகமா வேலை வந்துச்சு. பரிச்சை லீவ்க்கு கூட ஏதாவது க்ளாஸ்ல சேத்துவிடுறாங்க. 8 மணிக்கு டியூசன் விட்டு வந்து விளையாட அப்ப தான் வாசல்ல காலடி எடுத்து வைப்பாங்க.உடனே “காலைல 4 மணிக்குலாம் படிக்க எந்திரிக்கணும்ல.வந்து படு” என்று ஒரு அதட்டல் வரும்.

கிட்டி,கோலி, நொண்டியாட்டம்,பல்லாங்குழி,தாயம்,பம்பரம் இதெல்லாம் இந்த காலத்து பசங்களுக்கு என்னன்னு கூட தெரியாது. அப்பல்லாம் யாராவது ஒரு விளையாட்டை ஆரம்பித்தால் போதும் அந்த சீஸன் முழுவதும் அது தான் விளையாடுவாங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பழைய நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்.தாயம்,பல்லாங்குழி,தட்டாங்கல்லு,பச்சகுதிரை,நிறையவிளையாட்டுகள் இருந்தது.இப்போ பசங்க பாவம் படிப்பதிலும் tuitonபோவதிலுமே நேரம் சரியாக இருக்கு.

ஹாய் ஆமினா நீங்க சொல்லறது சரிதான் இந்த காலத்து பசங்களுக்கு அதிகமா வேலை வந்துடுச்சு. அவங்களுக்கு இந்த விளையாட்ட பார்க்கும்போது புதுசா இருக்கும். நீங்க சொன்ன விளையாட்டு எல்லாம் ஒரு தெருவுல உள்ள பசங்க விளையாட ஆரம்பிச்சா போது அடுத்த தெரு வரைக்கும் பரவி இருக்கும். சின்ன சின்ன கடை வச்சு வியாபாரம் செய்யறவங்களும் விளையாட்டுக்கு சீஸனுக்கு தகுந்தாற் போல பொருள வாங்கி வச்சுப்பாங்க. எப்போ எங்க கிட்டி, கோலி, பம்பரத்துல்லாம் பார்க்க முடியறதுல்ல. அப்புறம் உங்களுக்கு வேற என்ன விளையாட்டு பேரு எல்லாம் தெரியும்.

நல்ல தலைப்பு ஆரம்பிச்சு இருக்கீங்க வினோஜா நானும் நினைச்சுட்டு இருந்தேன் இதுப் போல ஆரம்பிக்கலாம்னுட்டு. இப்ப இருக்குற நிறைய பிள்ளைகளுக்கு ஸ்கூல், டியூசன், extra curricular activities இப்படியே நேரம் போய்டுது அப்பறம் எங்க விளையாடுறது அப்படியே நேரம் கிடைச்சாலும் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் தான் விளையாடுறாங்க.
இப்ப உள்ள பிள்ளைகளுக்கு கண்ணாமூச்சினாலே தெரியல ஹைட் அன்ட் சீக் குனு சொன்னாதான் தெரியுது. நான் சின்ன வயசுல நிறைய விளையாட்டுகள் விளையாடி இருக்கேன். ஆமீனா சொன்னது போல கரண்ட் போய்ட்னா நாங்களும் கண்ணாமூச்சிதான் விளையாடுவோம். ஆஹா அந்த நிலவு வெளிச்சத்துல விளையாடுறது அவ்வளவு ஜாலியா இருக்கும். அப்பறம் "பல்லாங்குழி" ரொம்ப ஜாலியா இருக்கும் சோலி வச்சு விளையாடும் போது. "ஊதுகாய்" நிறைய புளியங்காய் வச்சிகிட்டு ஊதி விட்டு மற்ற காய் மேல கைப்படாமல் எடுக்கனும். "பரமப்பதம்" இது ஜாலியா இருக்கும் விளையாடவே. அப்பறம் நாங்களே செய்வோம் இதற்கான தேவைகளை அதுத்தான் TRADE ஆனா இப்போ அதுவே செய்து விக்குறாங்க BUSINESS னு சொல்லிட்டு. ஆஹா அப்படியே என்னுடைய சின்ன வயசு அப்படியே நினைவலைகள் வந்துட்டு இருக்கு எல்லாரும் சேர்ந்து ஒரு வீட்டுல ஒண்ணா சேர்ந்து விளையாடும் போது சின்ன சின்ன சண்டைகள் கோபங்கள் பின்னர் சமாதானம் இப்படி நிறைய நடந்தது உண்டு. வினோ உங்களுக்கு தான் நன்றி இப்படி பழைய நினைவுகள நினைவுப்படுத்தியதற்கு.

ஹாய் reem உங்களோட பழைய விளையாட்டு நினைவு எல்லாம் வந்துடுச்சா. தட்டாங்கல்லு, பச்சகுதிரை அது என்ன விளையாட்டு நான் இதுவரைக்கும் கேள்வி பட்டதுல்ல. அதப்பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?

நிறைய நிறைய விளையாட்டுகள் விளையாண்டு இருக்கோம், எங்க ஊர்ல எங்க தெருவுல ஒரு பெரிய கேங்கே இருப்போம் அப்பப்பா நாங்க போடுற ஆட்டத்துக்கு அளவே இல்ல. அப்ப விளையாண்டதுலாம் நாடு புடுச்சி, ஜோடி புறா, போலீஸ் திருடன், சில்லு கோடு, பே பே (அதாங்க 7 ஸ்டோன்ஸ்). அடடா அது ஒரு நிலாக்காலம் அதை நினைச்சு பார்த்த சந்தோஷம் மட்டுமே மனதில் இருக்கும்.

ரீம் நாங்களும் தாயம், பல்லாங்குழி, பச்சைகுதிரைலாம் விளையாண்டு இருக்கோம். ஆமா அது என்னங்க தட்டாங்கல்லு.

ஆமாம் ரீம்.
தட்டாங்கல்லும் விளையாடுவோம். அப்பலாம் ஸ்கூல்ல ‘ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்’ அப்படின்னு அறிவிப்பு வந்தாலே போதும். காய்ச்சல் என்றாலும் ஸ்கூலுக்கு போவோம். 7 கல் வச்சு,9 கல் வச்சு ஒரு குரூப்பா விளையாடுவோம். இப்ப கூட எப்பவாவது அதெல்லாம் விளையாடனும்ன்னு நினைப்பு வந்து கல் பொறக்குனா போதும் உடனே “இதெல்லாம் தர்த்தினியம்”அப்படின்னு அம்மா பயங்கரமா திட்ட ஆரம்பிச்சுர்வாங்க. தாயத்துக்கும் தடா. மாமியார் வீட்டில் மட்டும் தான் இதெல்லாம் விளையாட முடியும்(அங்கு பிள்ளைகள் அதிகம் என்பதால்).

ஆற்றில் அணை திறந்தால் போதும் ஆற்றங்கரையில் உக்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். நிறைய பேர் நீச்சல் அடிக்குற அழகோ அழகு. அம்மா,அப்பாவுக்கு தெரியாமல் ஊருக்கு வெளியே உள்ள குளங்களில் நீச்சல் அடிக்க போவோம். நீச்சல் அடிக்கறவங்கள 4 தடவ கவனிச்சா போதும். நமக்கும் பழகிறும். இப்ப குளமும் இல்லை. ஆற்றில் நீர் வருவதும் இல்லை. அதுவும் இல்லாமல் நீச்சல் பழக இப்ப குளம் தேட வேண்டிய அவசியமே இல்லை. காசு கட்டுனா நீச்சல் சொல்லி தறதுக்கு ஆள் இருக்காங்க. ஆனா அந்த அனுபவங்கள் நாலு சுவர்களுக்குள் இருக்கும் 'ஸ்விம்மிங் பூல்'லில் கிடைக்காது.ஞாபகம் வந்தா மறுபடியும் வந்து சொல்லுறேன் வினோஜா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் கெளரி நன்றி. நீங்க சொல்லறப்பவே தெரியுது இந்த விளையாட்டு எல்லாம் விளையாடும்போது எவ்வளவு எஞ்சாய் பண்ணி இருப்பீங்கனு. //"ஊதுகாய்" நிறைய புளியங்காய் வச்சிகிட்டு ஊதி விட்டு மற்ற காய் மேல கைப்படாமல் எடுக்கனும்.//நீங்க சொன்ன பிறகு தான் இந்த விளையாட்டு பத்தி ஞாபகம் வருது. அப்படியே உங்க சின்ன வயசு நினைவலைகள இன்னும் என்ன என்ன விளையாட்டு இருக்குனு எழுதுங்க.

தட்டாங் கல்லு என்றால் ஐந்து கல்லு இருக்கும் ஒரு கல்லை மேலே தூக்கி போட்டு கீழேகிடக்கும் கல்லை ஒவ்வொன்றாகீழேகிடக்கும் கல்லை ஒவ்வொன்றா எடுக்கவேண்டும்.பிற்கு 2 _2சேர்thu எடுக்கவேண்டும்.3_1last4 .பச்சகுதிரை என்றால் ஓரு ஆள் குனிந்து நிற்கணும் மற்றவர்கள் அவனை தாண்டணும் மெதுவாக உயரம் கூடும்.jump பன்னும் போது ஒவ்வொருpositionkku ஒரு பேர் சொல்லி கொண்டேபன்னும்.சில பசங்க நம்மளை விழ வைப்பதிலே குறியாகஇருப்பாங்க.

நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது சைக்கிள் கடைல ஒரு மணிநேரத்துக்கு 2 ரூபாய் சைக்கிள் வாடகைக்கு வாங்கி ஓட்டுவோம். சைட் ஸ்டாண்ட்,பெல்,ப்ரேக் எதுவும் இருக்காது.ஒரு 10 பேரா சேந்து க்ரவுண்ட்க்கு போவோம்.பழகி கொடுக்க ஆள் இல்லாததால் நாங்களாவே கத்துக்கணும். எத்தன தடவை விழுந்தாலும் வலிக்காது. எப்படியாவது கத்துக்கணும்னு ஒரு வைராக்கியம்(அந்த வயசிலேயே). இப்ப கூட காலில் அந்த தழும்புகளை பார்க்கும் போது பழைய நினைப்புகள் வரும். நல்லா சைக்கிள் ஓட்டி அப்பாகிட்ட காட்டினதுக்கு அப்பறம் தான் புது சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க. கஷ்ட்டப்படாம ஏதுவும் கிடைக்காது.ப்ரேக் இல்லாததால் ரோட்டில் போறவங்க மேலலாம் மோதி திட்டுவாங்கியதுலாம் ஞாபகத்துல இருக்கு.

இன்னும் என் மகன்க்கு சைக்கிள் பத்தியே தெரியாது. ஆனா அவனுக்கு 2 சைக்கிள். அவன் வளந்த பிறகு வெளிய விடுவேனான்னு சந்தேகம் தான். அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்