மறந்துபோன விளையாட்டுகள்

இன்றைய காலக்கட்டத்தில் வளரும் குழந்தைகள் கேரம், செஸ், கிரிக்கெட், டென்னிஸ், புட்பால், பூப்பந்து, வீடியோ கேம்ஸ், இப்போ எல்லாத்தையும் நகர்த்தி விட்டுட்டு ஏதோ ப்ளே ஸ்டேஷனாகும்(play station) அது வேற பத்தாததுக்கு வந்துவிட்டது. இன்னும் சற்று அதிகமாக கேரம், செஸ், கிரிக்கெட், புட்பால், பூப்பந்து இதுபோன்ற விளையாட்டுகளில் விளையாட அதிகம் ஆர்வமுள்ள குழந்தைகள் சிறு வயதிலிருந்து இதற்கான பயிற்சியையும் மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய மனநிலையும் அவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் கலந்து பல பரிசுகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இருக்கும். சரி விஷயத்துக்கு வரேன். காலங்கள் மாறினாலும் பசுமையான நினைவுகள் நம்மை விட்டு நிச்சயம் அகலாது. அதுவும் அவரவருடைய சிறுவயது பற்றி பேச சொன்னால் நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிரம்பி வழியும்ல, அதனால் நம்ம சின்ன வயசுல விளையாடிய விளையாட்டுகளை பற்றியும் அப்போது நடந்த சுவாரஸ்யமான, நகைச்சுவையான நிகழ்வுகள் பற்றி பகிர்ந்துக்கலாமா தோழிஸ்.

நல்லாருக்கீங்களா? நான் சென்னைல தான் படிச்சதெல்லாம் அங்க இருக்கும் போது மூக்கிள்ளி, டப்பாக்களி(கண்ணாமூச்சி), சர்ச் கலர்(கலர் கலர் வாட் கலர் டூ யூன்னு சொல்லி விளையாடரது), கில்லி, கோலி, பம்பரம், தாயம் எல்லாம் விளையாடுவோம்... பரமபதம் விளையாடும் போது தப்பு செய்யரவங்க பாம்புல கடி வாங்குவாங்கன்னு சொல்லி எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டு ஒவ்வொரு முறையும் தாயத்த உருட்டரது செம த்ரில்...

லீவ்க்கு எப்பவும் அம்மா ஊரு ஊட்டிக்கு போய்ருவோம்... ஒரு வழி ஆக்கிட்டு தான் சென்னை வருவோம். அங்க போய் எங்க காட்டுல இருக்க கேரட்ட விட்டுட்டு பக்கத்து காட்டு கேரட்ட பறிச்சு கொண்டுவந்து எங்க காட்டுல உக்காந்து சாப்டுவோம்... கேரட் பறிச்ச காட்டு காரர் நீங்க மெட்ராஸ் போரதுக்குள்ள உங்க அப்புச்சி(அம்மாவோட அப்பாவ அப்படி தான் கூப்பிடுவோம்) காட்ட தீத்துருவீங்க போலருக்குன்னு சொல்லுவாரு ஆனா எங்களுக்குல்ல தெரியும் யாரு காடு தீர போதுன்னு? அப்பறம் பிக்கீஸ்-னு ஒரு பழம் அத பறிக்க எங்கல்லாம் ஓடுவோம். திருட்டு பேரிக்காவ கூட மறக்கவே முடியாது.

அங்க ஒரு பாய் கடை இருக்கு பாய்பொண்ணு எங்க கூட்டாளிங்கறதால கூட்டாஞ்சோறு சமைக்க எந்த பொருளுக்கும் நாங்க மெனக்கெட்டதே இல்ல... சாப்பிட முடியாத மாறி சமச்சு சூப்பரா இருக்குன்னு சாப்பிடுவோம். அங்க தான் பல்லாங்குழியும், கல்லாங்கா(ரீம் சொன்னாங்கல்ல அஞ்சு கல், நாலு கல்) அதெல்லாம் விளையாட கத்துக்கிட்டேன். சென்னை போய் எல்லா தெருலயும் தேடி கூட கல்லு கெடக்கவே இல்ல. அதனால அவ்வளவா அது விளையாடுனது இல்ல.

அப்பறம் சைக்கி்ள் ஆமினா அக்கா சொன்னது போல ஒரு ஹவர்க்கு ரெண்டு ரூபா குடுத்து காயம் பட்டு கத்துக்கிட்டோம். இன்னும் நிறைய இருக்கு... சொல்லிக்கிட்டே போகலாம்...

பழைய நினைவுகளோடவே இப்ப தூங்க போறேன் கனவுல அதெல்லாம் வந்தாலும் வரும்... நாளை பேசலாம்.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய்,
நீங்கள் கூறிய என்ன கலர், கல் , கில்லி போன்ற விளையாட்டுகளுடன் உயிர் கொடுத்தல், கடைசி உயிர், கல்லா மண்ணா, ஜோடி சேர்தல், டீச்சர் விளையாட்டு போன்றவைகளும் விளையாடுவோம். மக்குன்னு ஒரு கேம் பலால முதுகுல அடிக்கனும். இப்போ என் மகன் கன் , கம்ப்பூட்டர், ஆஃபிஸ், பிட்சா பாய் இப்படி தான் விளையாடுகிறான்.

self-confidense is the key to open the door of happiness in your life

இந்த விளையாட்டு பேர் சரியா தெரியல. குதிகாலை(மையப்புள்ளி) மண்ணில் அழுத்தி ஒரு ஆள் நிற்க்கும் அளவுக்கு வட்டம் வரைய வேண்டும். 4 அல்லது 6 வட்டங்கள் போட வேண்டும். 4 வட்டம் என்றால் 5 பேர் இருக்க வேண்டும். 4 பேர் ஒவ்வொறு வட்டத்திலும் நிற்க வேண்டும்.ஒருவர் வெளியே சுத்திக்கொண்டே வர வேண்டும். வட்டத்தில் நிற்பவர்கள் வெளியே ஓடுபவர் இடம் பிடிப்பதற்க்குள் மாறிக்கொள்ளலாம். அப்படி மாறும் போது சட்டென்று உள்ளே நுழைந்தால் அந்த பெண் தோற்றவள். தோற்ற பெண் சுற்ற வேண்டும்.

இப்போ கோ-கோ கூட மறக்க கூடிய விளையாட்டாக போகிறது என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.கபடியும் கூட இப்போது அபூர்வமாய் கிராமங்களில் விளையாடுகிறார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமாம்ல ஆமீனா சொன்னதும் தான் நியாபகம் வருது, சின்ன வயசுல சைக்கிள் கத்துக்க ஒரு மணி நேரத்துக்கு வாடகைக்கு எடுத்து ஓட்டினத மறக்கவே முடியாது. அப்போ விழுந்து அடிப்பட்ட வடுலாம் கூட இன்னும் மாறல. எங்க மாமா தான் எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுத்தாங்க அப்போ இடுப்ப வளைக்காத இடுப்ப வளைக்காதன்னு அடிலாம் வாங்கி இருக்கேன். நிறைய பேர் மேல போய் விட்டு திட்டுலாம் விழுந்துருக்கு.
ரீம் நாங்களும் அப்படி தான் சொல்லுவோம் ஐஸ் பாய்னு கொஞ்சம் மாற்றம். அதுவும் எங்க தெருவுல ஒரு சின்ன கோவில் இருக்கும் அதுக்கு சித்திரை மாதத்துல திருவிழா அப்ப எங்க தெருவுல இருக்குற பசங்களுக்கு தான் கொண்டாட்டமா இருக்கும் அப்போ தான் இந்த ஐஸ் பாய் விளையாடுவோம்.
கல்லா மண்ணா, கிச்சு கிச்சு தாம்பாலம், தாயம், சில்லு கோடு, நாடு புடுச்சி இப்படி நிறைய விளையாண்டு இருக்கோம்.

கௌரி லெட்சுமி..... நீங்க இடுப்ப வளைக்காதேன்னு அடி வாங்குனது போலவே நானும் “ஏத்தாப்ல என்ன வருதுன்னு பாரு.எதுக்கு டயர பாக்குற,அத பாத்தா ஓட்ட முடியாது”என என் தாய்மாமா ரோட்டில் எல்லாருக்கும் முன்னாடி திட்டுனாரு. அந்த ரோஷத்துல தான் நானா தனியாவே சைக்கிள் ஓட்டி பழகுனேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அப்படியா ஆமீனா, ரொம்ப ரோஷக்காரங்களா நீங்க? எல்லாருடைய பழைய நினைவுகளையும் படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா இப்ப இருக்குற தலைமுறையினர் இது எல்லாம் ரொம்பவே மிஸ் பண்றாங்களோன்னு ஒரு கவலையா இருக்கு.

இவ்வளவு விஷயத்த சொல்றேன். சின்ன புள்ளைல எவ்வளவோ விளையாடிற்கேன். ஆனா நானே என் மகனை இந்த மாறி அனுமதிப்பேனான்னு தெரியாது. பக்கத்துல இருக்குற சில்ரன்ஸ் பார்க் கூட நான் தான் கூடிட்டு போறேன். அவன் பின்னாடியே அலஞ்சுட்டே இருக்கேன். விழுந்தா உடனே தூக்கிட்டு அவன் அழுகுறது பாத்து நானும் அழுகுறேன். ஒரு வாரத்துக்கு அதையே நெனச்சுட்டு அந்த பூங்கா பக்கமே தல காட்ட மாட்டேன். இப்படியெல்லாம் நம்ம அம்மா,அப்பாக்களும் நெனச்சு இருந்துற்ந்தா நமக்கு இந்த சந்தோஷம் ஏது?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் லெக்ஷ்மிஸ்ரீ நலமா? //நிறைய நிறைய விளையாட்டுகள் விளையாண்டு இருக்கோம்// கொஞ்சம் விளையாட்டு பேரு தான் சொல்லி இருக்கீங்க. இன்னும் உங்களுக்கு தெரிஞ்ச விளையாட்டுகள் பேரு என்ன என்னனு சொல்லுங்க. நாங்களும் தெரிஞ்சுபோமல. ஜோடி புறா ஒக்கே, பே பே இந்த விளையாட்டுடோட பேரு வித்தியாசமா இருக்கு. இந்த விளையாட்டு பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க.

ஹாய் ரீம், நலமா? தட்டாங்கல்லு விளையாடிய ஞாபகம். பேருதான் தெரியாம இருந்துச்சு. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். ரீம் london game நானும் கேள்வி பட்டது இல்ல.

அதை தான் நான் கூட இப்ப கேக்க வந்தேன். வினோஜா நீங்களே கேட்டுட்டீங்க. சஸ்பென்ஸ் தாங்க முடியல சொல்லுங்க ரீம். லண்டன் கேம்னா என்ன?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஓரு ஆள் திரும்பி நின்று கொண்டு L-O-N-D-O-N ENDRU 3MURAI SOLLA VENDUM பின்னால் நிற்கும் பசங்க எல்லொரும் ஒவ்வொரு போஸ் கொடுத்து நிற்க வேண்டும்.இவன் அவர்களை சிரிக்க வைக்க வேண்டும் கிச்சுகிச்சு மூட்டக்கூடாது தொடவும் கூடாது.செம காமெடியாக இருக்கும்.மற்றபிள்ளைகலின் போஸ் பார்த்தலே நம்மை அறியாமல்சிரிப்பு வந்து விடும்.இதை எழுதும் போது என் தம்பி ஞாபகம் வருகிற்து.அவன்குரங்கு சேட்டை செய்து எல்லோரையும் ஒரு நிமிடதில் சிரிக்க வைத்து விடுவான்

மேலும் சில பதிவுகள்