திருப்பூர் - பின்னலாடை நகரம்

திருப்பூர் - பின்னலாடை நகரம் :

அன்பு அறுசுவை தோழிகளே .. நம் சீதாலட்சுமி கேட்டுக் கொண்டதற்காக இந்த இழை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆடைகள் பற்றி ஒரு குறிப்பு :

ஆடைகளில் ஊவன் (woven) மற்றும் நிட்டேட்(Knitted) என இருவகை உள்ளது. அதில் நிட்டேட் என்ற பின்னலாடையில் முக்கியத்துவம் பெற்றது தான் திருப்பூர். ஆடைகள் எவ்வாறு முறைப்படி உருவாகுகிறது என சுருக்கமாக கூறுகிறேன்.

* முதலில் நன்றாக பதமாக முற்றிய பருத்தி செடியில் இருந்தது பறிக்கபடுகிறது.
* பருத்தியில் இருந்தது கொட்டைகள் மற்றும் பஞ்சுகள் தனித்தனியாக நீக்கப்படுகின்றன.இதன் பெயர் ஜின்னிங்.
* பின்பு பஞ்சுகள் பல கெமிக்கல் ட்ரிட்மன்ட்டில் புகுத்தப் பட்டு வெண்மையாக மாற்றப்பட்டு நூலாக திரிக்கப்படுகின்றன. இந்த முறை பெயர் ஸ்பின்னிங்.
* நூலானது நிட்டிங் மெஷினில் துணியாக வெளிவருகிறது. இதன் பெயர் நிட்டிங்.
* வெளிவந்தத் துணியை வேண்டிய நிறத்தில் சாயமேற்ற டையிங் என்ற ப்ராசஸ் பயன்படுகிறது.
* பின்பு வாஷிங் செய்து பேட்டன் மேக்கிங், கட்டிங், ஸ்டிச்ங், செக்கிங்,அயர்னிங்,பேக்கிங் மற்றும் எக்ஸ்போர்ட் செய்யபடுகிறது.
இதில் இன்னும் மிக விரிவாக கூறப்பட வேண்டியவை உள்ளன. ஆனால் நான் மிக மிக சுருக்கமாகவே விவரித்துள்ளேன்.

ஆடை மிக அத்தியாவச தேவையில் ஒன்று என்பதால் என்றுமே வேலை:

திருப்பூரில் என்றும் ஆட்கள் தேவை என எங்கும் இருக்கிறது. மூனாயிரதிற்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. பெண்களும் பணிபுரிய கூடிய முறையில் எளிதான தைக்கும் தொழில். பல மாநிலங்களில் இருந்தும் பல ஊர்களில் இருந்தும் வந்து பணிபுரிகின்றனர் . ஒரே வாரத்தில் கற்றுக் கொள்ள முடிகிற எளிதான வேலை. ஒரு நாளுக்கு 250 ல் இருந்தது 350 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். தீபாவளி , பொங்களில் போனஸ் லீவு என எல்லா வசதியும் தொழிலாளியை தக்க வைக்க கொடுக்கப்படுகிறது . குடும்பத்துடனும், தனித்தனியாக தங்கவும் ஹாஸ்டல் வசதி. அந்தந்த ஊருக்கே சென்று கேன்வாஸ் செய்து அழைத்து வருகின்றனர். இப்போது எல்லா ஊர்களிலும் பேக்டரி தொடங்கப்பட்டு வருகிறது. எனவே திருப்பூரில் என்றும் ஆள் பற்றாக்குறை.

எவர் கிரீன் தொழிலாக இருந்தாலும் மார்கெட் சரிவு இதிலும் இருக்கும். எகனாமிக் க்ரைசிஸ் காரணமாக யூஸ் அன் த்ரோ ஆக வெளிநாட்டவரால் பயன்படுத்தப்பட்டு வந்த பனியன் துணிகள் அடிக்கடி உபயோகப்படும் ஆடையாகவும் மாற்றப்பட்டுவிட்டது.

வெளிநாட்டவர் எதிர்பார்க்கும் விலையில் நம்மால் முடிந்த வரை செய்து கொடுக்க முடிகிறது. திருப்பூர் மக்கள் மிகை நேர வேலை செய்து சம்பளம் பெற நினைப்பார்கள். தொடர்ந்து 24 மணி நேரமும் உழைப்பார்கள். ஆனால் சென்னை பெங்களூர் போன்ற பகுதியில் மாலை ஐந்தரை மணிக்கு மேல் வேலை செய்ய தயங்குவார்கள். இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். காஸ்ட் ஆப் லிவிங் குறைவு ஒப்பிடுகையில்.

மற்ற வெளிநாடுகளில் ஆர்டர்கள் செய்ய முடியாது எனில் கண்டிப்புடன் பையரிடம் (Buyer or client) சொல்லிவிடுவார்கள். .. ஆனால் நாம் எப்படியும் செய்து கொடுக்க நினைப்போம். எனவே திருப்பூரில் ரேட் கொடுத்து கட்டவில்லை என்றால் ஒழிய சீனா பங்களாதேஷ் நேபால் துபாய் போன்ற நாடுகளுக்கு ஆர்டர் செல்வதில்லை . அனைவரையும் வாழ வைத்து அழுக்காக மாறிக்கொண்டு இருக்கும் ஊர். டாலர் சிட்டி எனவும் அழைக்கப்படுகிறது.

இன்னும் நிறைய உள்ளது. என் பதிவில் சில தவறான கணிப்பும் இருக்கலாம். இதை பற்றி தெரிந்த மற்ற தோழிகள் பகிர்ந்தது கொள்ளலாம். உரையாடலாம். தெரிந்த்தவரை சொல்கிறேன் ;-)

நல்ல இழை.... டெக்ஸ்டைல் பத்தி நல்லா தெரிஞ்சுக்கலாம்... நான் கூட திருப்பூர் பக்கத்துல தான்... ஆனா இவ்வளவு details தெரியாது.... ரொம்ப interesting-ஆ இருக்கு... இன்னும் நிறைய தகவல்கள் குடுத்தீங்கனா இன்னும் நல்லா இருக்கும்....

வித்யா பிரவீன்குமார்... :)

நல்ல விஷயம். தொடர்ந்து எழுதுங்கள்.

முடிந்தால் இந்த தொழிலில் உள்ள சள்லேன்கேஷ், பிரச்சனைகள், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மத்திய மாநில அரசுகளின் ஈடுபாடு பற்றியும் எழுதுங்கள்

அன்புடன்,
இஷானி

நாங்கல்லாம் பனியன் வாங்கனும்னா திருப்பூர் பனியந்தான் வாங்குவோம்.
அந்த அளவுக்குதான் திருப்பூர் பற்றி அறிந்திருக்கோம். உங்க இழையின்மூலம்
நிரைய விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடியும்.

நன்றி இஷானி, உமா,வித்யா...

கண்டிப்பாக எனக்கு தெரிந்தவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.. :-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா தெரியாத பல விஷயங்கள் இப்பதான் தெளிவாச்சு. எனக்கு தெரிந்து எங்கள் கிராமத்தில் இருந்து அங்கு போய் நிறைய பேர் வேலை செய்து இருக்கிறார்கள் அவர்களின் வாழ்வாதரத்தையே உயர்த்தி இருக்கு ரம்யா இந்த டாலர் சிட்டி. இன்னும் தெரியாத பல செய்திகளை எங்க கூட பகிர்ந்துக்க்கோங்களேன் நேரம் கிடைக்கும் போது.

லக்ஷ்மி
நன்றி..இன்னமும் இந்த நகரம் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டுதான் உள்ளது.

திருப்பூரில் அனைவரும் பனியன் வாங்குவேன் என்று சொல்வார்கள். அது பையர் 10,000 பீஸ்களை கேட்டால் நாம் 3% அதிகமாக முன்னெச்சரிக்கையுடன் தைப்போம். ஏதெனும் ஒரு பீஸ் தவறாகிவிட்டாலும் பையர் கேட்ட எண்ணிக்கையை கொடுக்க வேண்டுமே. அதனால் மிஸ்டேக் ஆன எச்சு பீஸ்களை தான் திருப்பூரில் விற்பனை செய்கிறார்கள். அதில் மிக நுணுக்கமாக விஷயம் தெரிந்தவர் பார்த்தால் இருக்கும் தவறு தெரிந்துவிடும். அவையெல்லாம் பையரால் ரிஜக்ட் செய்யப்படும் பீஸ்.

ஆனாலும் சில கம்பெனிகள் டொமஸ்டிக் மார்க்கெட் என தரமான துணிகளையும் விற்பனை செய்து அவர்களின் சொந்த பிராண்டை வைத்திருப்பார்கள். ;-)

மிஸ்டேக் துணியாக இருந்தாலும் ஒரளவு நன்கு உழைக்கும்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு ரம்யா

ரொம்ப நன்றி ரம்யா, இந்த மாதிரி ஒரு சுவாரசியமான இழை தொடங்கி இருப்பதற்கு.

இந்த இழையில் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள விருப்பமாக இருக்கு.

நீங்க தகவல்களை சீக்வென்ஷியலாக சொல்ல வரிசைப்படுத்தியிருக்கீங்களா, நாங்க இடையிடையே கேட்கும் கேள்விகள் தொந்தரவாக இருக்காதுன்னு நினைக்கிறேன்.

ஜின்னிங் பகுதியில் வேலை பாக்கிறவங்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கா?

சாயக் கழிவு பிரச்னை மிகவும் பேசப் படுகிறதே, திருப்பூரின் மொத்த தண்ணீர் பிரச்னை எப்படி இருக்கிறது?

சாதாரணமாக இவ்வளவு ஏற்றுமதி வாய்ப்புகள் இருக்கும்போது, நிறைய டிரக், லாரிகள் வந்து போகும் இல்லையா, டிராஃபிக் பிரச்னையை எப்படி கையாளுகின்றார்கள்?

இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள ஆசை. தொடர்ந்து சொல்லுங்க.

அன்புடன்

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலக்ஷ்மி

ஆமாம் ..வரிசைப்படுத்தி தான் கூறியுள்ளேன்.அதனால் ஒன்றும் இல்லை. உங்கள் கேள்வியை கேட்கலாம்.முடிந்தவரை கூறுகிறேன்.

நீங்கள் கூறியது மிக சரி. ஜின்னிங் பிரிவில் பஞ்சுகளின் நடுவில் வேலை செய்வதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரக்கூடும். ஜின்னிங்கில் மட்டுமில்லை ஸ்ப்பின்ங்கிலும் இதே நிலைதான். அதனால் ஒவ்வொரு ஸிஃப்ட் முடிந்ததும் தொழிலாளர்களுக்கு பனங்கற்கண்டு கொடுப்பது வழக்கம்.

ஒருமுறை கொடுக்கபடும் டீ வறட்டீயாக கொடுக்கப்படும். இது எல்லாம் (ISO) ஐ எஸ் ஓ ( இன்டர்நேஷனல் ஸ்டேன்டர்ட்ஸ் ஆர்கெனைசேஷன்ஸ்) (SA 8000) சோசியல் அக்கவுன்டபிலிடி அல்லது(WRAP) வோல்ர்வைட் ரெஸ்பான்சிபில் அக்கிரிடேட் ப்ரொடக்ஷன்ஸ் போன்ற ஸர்டிஃபிகேட் வாங்கிய கம்பெனிகள் செய்யும். மற்ற கம்பெனிகள் செய்யாவிடினும் கேட்க ஆள் இல்லை.

ஸ்பின்னிங்கில் ஸ்பிண்டில் ஓடும் போது கை தெரியாமல் விட்டால் கையே கட் ஆகும் விளைவு கூட ஏற்படும். ஜின்னிங்கில் பிளோய்ங் என்ற ரூம் இருக்கும். அதிலும் தேவையான பாதுகாப்பும், அனுபவமும் இல்லை எனில் உயிர் போகும் நிலை கூட உள்ளது. இது எல்லாம் கொஞ்சம் கிரிட்டிக்கல் ஆன டிப்பார்ட்மெண்ட் தான்.

கட்டிங்கில் மெட்டல் கிளொவ், பிரிண்ட்டிங்கில் ஏப்ரான் மற்றும் ஃபேஸ் மாஸ்க், தைக்கும் போது ஃபேஸ் மாஸ்க் போன்றவை அவசியம். எம்பிராய்டரி பிரிவில் முடியை அப்படியே விடாமல் தலைக்கு கேப், கெமிக்கல் துறையில் கிளொவ்ஸ், கண் கண்ணாடி போன்றவை பயன்படுத்தப்பட வேண்டும் .

சாய பிரச்சனைக் காரணமாக ஆற்றில் தண்ணீருக்கு பதில் சாயம் தான் சென்றுக் கொண்டுள்ளது. நொய்யல் எனப்படும் ஆறு இங்கு ப்ரசித்திப் பெற்றது. இப்போது சாயத்திற்கு பெயர் பெற்று உள்ளது..தண்ணீர் பிரச்சனை சில இடங்களில் அதிகமாக இருக்கும். நல்ல அரசு அதை சீர்செய்து சரி செய்ய வேண்டும்..

ட்ராஃபிக் பிரச்சனையைப் பற்றி கூறவே வேண்டாம். ஒரு கருத்து இங்கு எப்போதும் இருக்கும். திருப்பூரில் வண்டி ஓட்டி கற்றுக்கொண்டால் விமானமே ஓட்டிவிடலாம் என்று. சிறிய ஊர். அதனால் இட நெருக்கடி அதிகம் இருக்கும். இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் சிறிய ஓட்டை கிடைத்தாலும் சென்றுவிடுவார்கள். ;-). பெரிய வண்டி வைத்திருப்பவர்கள் தான் பயப்பட வேண்டும். இப்போதுதான் சாலைகளை அகலப்படுத்தும் பணி மெதுவாக சென்றுக் கொண்டுள்ளது. ;-) அதுவும் செம்மொழி மாநாடுக்காக நடந்த கண்துடைப்போ என்னவோ..அதிகமான மக்களும் வெளியூர்களை சேர்ந்தவர்கள். எனவே தீபாவளி பொங்கல் என்றால் ஊரே துவைத்து எடுத்ததை போல பளிச் தான்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்