ஊர் பெருமை

நாம் எல்லாருக்குமே சொந்த ஊர் என்பது உண்டு.அது சின்ன கிராமமா இருந்தாலும் அதில் உள்ள விசயங்களை மனம் விட்டு கொடுப்பதில்லை.திருவிழா,ஆறு,சந்தை,கோயில், வயல்கள், கம்மாய், மலைகள், தட்பவெட்பம், இதெல்லாம் பற்றி பேசலாம். அதாவது அவரவர் அவர்களின் ஊரின் அருமை பெருமைகளை சொல்ல வேண்டும். மற்றவர்கள் அதை ரசிக்கலாம். சொந்த ஊர் என்பது மட்டுமில்லாமல் பிடித்த ஊர், இப்போது வசிக்கும் இடத்திலுள்ள பல விசயங்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.

வாங்க.....வாங்க.....
நம் ஊரின் பல விசயங்களை பகிர்ந்துக்கொள்ள வாங்க...........:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமின்..

என் ஊர் பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. ஈரோடு தான் என்னுடைய ஊர். பெரியார் பிறந்த ஊர் என்பதிலேயே அனைத்து பெருமையும் வந்துவிட்டது. அவர் வாழ்ந்த வீடு இருக்கும் ஊர்.;-)

மஞ்சளுக்கு பெயர் போன ஊர்.. அதன் பக்கத்து ஊரான பவானி ஜமக்காலத்திற்கு பெயர் பெற்றது.

ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோவிலும், திண்டல் மலை முருகன் கோவிலும் ப்ரசித்திப் பெற்ற கோவில்கள்.

ஊர் பெருமை பற்றி வனியின் ஒரு இழையில் பார்த்ததாக நியாபகம்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் அதை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.மன்னிக்கவும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா.

இதில் சாரி எதற்கு,. அதனால் தான் அதிகப் பதிவுகள் இல்லை என நினைக்கிறேன்.. ஆனாலும் நல்ல தலைப்புதான். புதிய உறுப்பினர்களுக்கு பயன்படும். ;)..பதிவு இல்லை என சின்ன பெண் வருந்தக் கூடாது என கூறினேன்.

நான் உங்களுக்காக ஈரோட்டைப் பற்றி கூறியுள்ளேன்..அதை பார்க்காமல் நீங்கள் சாரி கேட்கிறீர்களே ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமீனா... இந்த திரட்டை இப்பத்தான் பார்த்தேன்..... நான் பிறந்த ஊர் ஸ்ரீரங்கம்...... இதுக்கு "கோவில்கள் நகரம்" என புனைப் பெயரும் உண்டு.....
முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்..... தென்னிந்தியாவின் மிக உயந்த கோபுரம் என்ற பெருமையை பெற்றது...சுமார் 152(தோராயமாக) சுற்றளவில் உள்ளது.....

அடுத்து திருவானைக்கோவில் இங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது... சிவ திருத்தலங்களில் ஒன்று.... மிகவும் பிரசித்தி பெற்றது..

அடுத்து மலைக்கோட்டை பிள்ளையார் கோவில்..... திருச்சியின் அழகை ரசிக்க மிகச் சிறந்த இடம்.... மனதுக்கு அமைதி தரும் இடம் .....

அப்புறம் ஸ்ரீரங்கத்தைச் சுற்றி உறையூர் நாச்சியார் கோயில், வெக்காளிஅம்மன் கோவில், உத்தமர் கோவில், சமயபுரம் மாரிஅம்மன் கோவில், உத்தமர் கோவில், திருவெள்ளறை கோவில்........ லிஸ்ட் நீள்கிறது......

அப்புரம் காந்தி மார்க்கெட், பாலக்கரை, உறையூரில் உள்ள தர்காக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை....

அதேபோல் மலைக்கோட்டை அருகில் உள்ள சர்ச் அதன் கட்டடக்கலை அதி அற்புதமானது.....

காஜாமலையில் உள்ள சர்ச்சில் உள்ள தர்காவின் அமைப்பு மிகச் சிறந்தது என தோழி கூறி இருக்கிறாள்...ஆனால் இதுவரை பார்த்ததில்லை......

இங்குள்ள கோவில், தர்கா, சர்ச் என அனைத்தின் கட்டடக் கலை என்னை மிகவும் கவர்ந்தது...

வெளி மாநிலங்களில் இருந்து படிக்க அதிகம் வருபவர்கள் திருச்சிக்குத் தான்.... ஏனெனில் இங்கு படிப்புக்கு ஆகும் செலவு கம்மி (மற்றதை ஒப்பிடுகையில்) என வட மானிலத்தில் இருந்து வந்து என்னுடம் படித்த எனது தோழி கூறி இருக்கிறாள்...... எனது காலேஜில் பாதி அளவு வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்கள்......

வேற்றுமையில் ஒற்றுமை நமது தமிழ்நாட்டில் அனைத்து இடங்களில் இருந்தாலும்.... எனது ஊரில் கண்டிப்பாக அது கடைபிடிக்கப்படுகிறது.... என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.....

எல்லாவற்றிற்கும் மேலாக..... காவிரி என்னால் மறக்க முடியாத ஆறு.... எனது வீட்டிற்குப் பக்கத்தில் காவிரி.... தினமும் காலை காவிரியில் சென்று குளிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்..... இன்னும் நிறைய இருக்குப்பா..... அப்பப்ப சொல்றேன்....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நல்ல இழை ஆரம்பித்த ஆமிக்கு பாரட்டுக்கள். எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்.சுற்றி மலைகளும், வயல்வெளிகலும் நிறைந்த அழகான ஊர்.இங்கு வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணீய சுவாமி குடைவரை கோவில் உள்ளது.குகையை குடைந்து அதற்குள் கோவில் மிக அருமயாக இருக்கும்.திருநெல்வேலிக்கும்,நாகர்கோவிலுக்கும் நடுவில் இருப்பதால் வள்ளியூர் நிரய பேருக்கு தெரிந்திருக்க வாய்பிருக்கிறது.வள்ளியூரை சுற்றி நிறய சுற்றுலா தலங்கள் உள்ளது.மணிமுத்தாறு,பாபனாசம்,குற்றாலம்,கன்னியாகுமரி,சுசீந்தரம்,விஜயாபதி,திருசெந்தூர் இன்னும் பல இடங்கள், எங்கள் ஊரை சுற்றி உள்ளது.

எங்கள் மாவட்டதில் மற்றுமொரு சிறப்பு அல்வா.இங்கு அல்வா ரொம்ப ஃபாமஸ்.
பனை மரத்திலிருந்து நம்மக்கு கிடைக்கும் பதனீர்,நொங்கு,பனைவெல்லம்,பனம்கற்கண்டு, இங்கு அதிகம் கிடைக்க கூடிய பொருட்களாகும்.
இங்கு உள்ள பாதிமா சர்ச் மிகவும் பழமைவாய்ந்தது.

இன்னும் யெங்க ஊரை பற்றி சொல்லிக்கொண்டேபோகலாம்.நம் ஊரை பற்றி சொல்லும் போது நம்மயும் அறியாமல் சந்தோஷம் வந்துவிடுகிறது

நான் பிற்ந்தது,வசிப்பது சென்னையில், வளர்ந்தது upto 5th படித்தது ஈரோடு, எனக்கு மிகவும் பிடித்த ஊர் , மாரியம்மன் கோயில் திருவிழா, கோட்டை கோயில், சங்கரமடம், திண்டல்,( என் அத்தை வீடு ) .
விடுமுறை நாள் எப்ப வரும் என்று காத்திருப்பேன். ஆனா இப்ப போயி ரொம்ப.....................நாளகுது(varuthamairukku)

shanthi79
karthik

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

எனக்கும் சொந்த ஊர் ஈரோடுதான்.. காவிரிக்கரை ஓரமாக அமந்துள்ள ஈரோட்டை சுற்றிலும் வயல்வெளிகளும் விவசாயமும் இருப்பதைப் போல் டெக்ஸ்டைலும் இங்கு முக்கிய வியாபாரமாக உள்ளது.. இங்கு தயாராகும் டவல்,ஹாண்ட் டவல், ஆகியவற்றிற்கு வட இந்தியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது.

மிகவும் பிரபலமான சக்தி மசாலா நிறுவனம் ஈரோட்டைச் சேர்ந்ததே!

ஆமினா உங்களுக்குமட்டும் எப்படி இப்படியெல்லம் தோனுது,
உட்கார்ந்து யோசிப்பிகளோ!....................

வாழும் எந்த ஊராஇருந்தாலும், மகிழ்ச்சியுடன் வாழ்.

shanthi79
karthik

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

my native place kandanur near by karaikudi. in our place having sivan temple.its build around 200 yrs back. pillaiyarpatti vinayagar temple,vairan temple spl for sirpangal,karaikudi koppudayanayaki amman its one the important temple in 108 amman temples in tamilnadu.kundrakudi murgan kovil, in famous kugai kovil in thirumayam perumal, chettinadu palace,kambun mandapum. etc....

Am invite to all vist our chettinadu & you will get an joyfull&peaceful moments

welcome to all

மேலும் சில பதிவுகள்