இயற்கையான பொருட்களை வைத்து முழுமையான ஒரு facial

முழுமையான ஒரு facial இயற்கையான பொருட்களை வைத்து செய்ய முடியுமா? (only from the things which we get from the kitchen)

potato,tomato,curd,milk,vellarikai,turmeric powder,sugar,add to mixy

can we do cleanse , scrub & pack seperately?

Lalitha

அன்பு விமலா செந்தில்

இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு கலந்து, நன்றாகக் குழைக்கவும். முகத்தில், கழுத்தில் பூசி, உலர விடுங்கள். பிறகு சாதாரண தண்ணீரில் கழுவினால் போதும். இது உலர்ந்த சருமத்துக்கு. எண்ணெய்ப் பசையுள்ள சருமமாக இருந்தால், பச்சரிசி மாவுக்குப் பதிலாக கடலை மாவு சேர்க்கலாம். அல்லது பச்சரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் தயிருடன் கலந்து ஃபேசியல் பாக் ஆக உபயோகிக்கலாம்.

பால் காய்ச்சிய பாத்திரத்தின் அடியில் இருக்கும் பால் ஆடையையும் இத்துடன் சேர்த்து, குழைத்துப் பூசலாம்.

ஃபேசியல் பாக் முகத்தில் இருக்கும்போது, முகத்தை அசைக்காமல் இருக்க வேண்டும். அது நன்றாக உலர்ந்த பின் கழுவ வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு நாட்களிலேயே வித்தியாசம் தெரியும். முகம் பளிச்சென்று இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

உருளை கிழங்கை அரைத்து கண்ணின் கருவளைய பகுதியில் போட்டு அரை மணி நேரத்திற்க்கு பின் கழுவவும். தொடர்ந்து செய்து வர கருவளையம் நீங்கும்.

கஸ்தூரி மஞ்சள்,வெட்டிவேர்,பூடாங்கிழங்கு முதலியவற்றை முதல்நாள் இரவில் ஊற வைத்து காலையில் குளிக்க போகும் முன் உடல் முழுவது தடவி(கொஞ்சம் காந்தும்) காய்ந்ததும் குளித்தால் மேனியில் அழகு கூடும். இழந்த பொழிவு,கலர் கிடைக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

1. கிளன்சிங்க்கு சுத்தமான காய்ச்சாத பாலை பஞ்சில் தொட்டு முகத்தை கிழிருந்து மேலாக துடையுங்கள்.

2.டோனிங்க் நல்ல பனீரை லைட்டாக முகத்தில் தடவுங்கள்.

3.ஷ்கரபுக்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரையை சிறிது வெண்ணெயில் குழைத்து கைவிரல்களால் சிறிது அழுத்தம் கொடுத்து வட்ட வடிவில் கிழிருந்து மேலாக1 லிருந்து 2 நிமிடம் மசாஜ் செய்யவும்.

4.மசாஜ் செய்ய நன்கு பழுத்த பப்பாளி பழம்,வாழைப்பழம் உபயோகப்படும்.

5.பேக்கிற்கு பச்சைபயிரு மாவு 1 டேபிள் ஸ்பூன், பாலாடை 1 டேபிள் ஸ்பூன், லெமன் ஜூஸ் 1/2 டேபிள்ஸ்பூன் எடுத்து ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 5 நிமிடங்கள் கழித்து பஞ்ஜினால் தண்ணீர் தொட்டு மெல்ல துடைத்து எடுங்கள்.

செலவில்லாமல் வீட்டிலேயே அட்டகாசமான் ஃபேசியல் செஞ்சாச்சு.

Don't Worry Be Happy.

Thanks to everyone

Lalitha

Shall we do facial daily using butter + raw rice powder
as per your suggestion?

பரிமளா..

எந்த ஒரு பொருள் எனினும் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை உங்களின் ஸ்கினை பொறுத்து யூஸ் பண்ணலாம்.. தினமும் பயன்படுத்துவது அத்தனை நல்லது அல்ல.. இயற்கையான பொருளாக இருந்தாலும்..;-)

பட்டர் தினமும் பயன்படுத்தினால். ஆயில் அதிகம் வந்து பரு வர வாய்ப்பு உள்ளது. குளிர்ந்த நீரில் அடிக்கடியும், க்ளீன் அன்ட் க்ளியர் ஃபேஷ் வாஷை காலை மாலை பயன்படுத்தலாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

THANK YOU VERY MUCH MADAM, FOR CLEARING MY DOUBT.
ONE MORE QUESTION MADAM, DOCTOR SUGGESTED ME TO TAKE FISH OIL CAPSULE
(ICOSA) ONE DAILY.WHAT ARE THE USES IN FISH OIL?
MY SKIN IS DRY SKIN. I SUFFERED BY JOINT PAIN & PSORIYASIS AND NOW I AM
FULLY CURED FROM THEM BY TREATMENT.

மேலும் சில பதிவுகள்