கிட்ஸ் இனிப்பு இடியாப்பம்

தேதி: July 13, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

இந்த இடியாப்ப காம்பினேஷன் குழந்தைகளுக்கென்றால் முக்கியமாய் மெலிந்த தேகமும், முடி வளர்ச்சியும் குறைந்த குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. பெரியவர்களுக்கென்றால் கொழுப்பு சத்து மிகுந்துள்ளதால் எப்போதாவது மட்டும் சாப்பிடலாம்.

 

இடியாப்ப மாவு - 3 கப்
நீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பாயாசம்செய்ய:
தேங்காய் துருவல் - ஒரு கப்
வறுத்த பாதாம் - கால் கப்
சர்க்கரை - அரை கப் (சுவைக்கேற்ப)
பால் - ஒரு கப்


 

முதலில் இடியாப்பம் செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். பின்னர் இடியாப்ப மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.
தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதை சலித்த இடியாப்ப மாவுடன் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி விடவும்.
மாவை நன்றாக கலந்துக் கொண்டு அதை இடியாப்பம் பிழியும் அச்சியில் வைத்து நிரப்பவும்.
அதன் பிறகு இட்லி தட்டில் இடியாப்பத்தை ஒவ்வொரு குழியிலும் பிழிந்து விடவும்.
பாயாசம் செய்ய: மிக்ஸியில் தேங்காய், பாதாம், சர்க்கரை மூன்றையும் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அதே சமயம் பாலோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சவும்.
காய்ச்சியபாலில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
மாற்று முறை: இதில் விருப்பப்பட்டால் பாதாமுக்கு பதில் முந்திரி சேர்க்கலாம். பிடிக்குமென்றால் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம். சர்க்கரைக்கு பதில் வெல்லமும் சேர்க்கலாம்.
சுவையான கிட்ஸ் இனிப்பு இடியாப்பம் ரெடி.
இந்த சுவையான குறிப்பினை நம்முடன் பகிர்ந்துக் கொண்டவர் திருமதி. இளவரசி அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இளவரசி... சூப்பர் குறிப்பு, கடைசியில் சூப்பர் சுட்டி. யார் அந்த சுட்டி?? உங்க மகனா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போதுதான் குறிப்பை உங்கள் பின்னூட்டத்துடன் பார்க்கிறேன்...

அந்த சுட்டி என் மகன் .......

என் குழந்தைகளுக்கு இந்த காம்பினேஷனில் கொடுத்தால் கொள்ளை இஷ்டம்....
உங்க யாழினிக்கு இடியாப்பம் எந்த காம்பினேஷனில் கொடுத்தால் பிடிக்கும்?

உங்க பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

விரைவில் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி!!

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி மேடம்,
அருமையான குறிப்பு
என் மகளுக்கு இதை செய்து கொடுக்க இருக்கிறேன்
17 மாதங்கள் ஆகிறது..தரலாமா?
இல்லையென்றால் நான் சாப்பிட்டு விடுவேன் :-))
மேலும் பல நல்ல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

இளவரசி, சூப்பர் குறிப்பு. நானும் செய்து பார்க்க வேண்டும். குட்டி சூப்பராக போஸ் குடுக்கிறார்.
வாணி

17 மாதங்கள் என்றால் பாதாம் ரெண்டு பருப்புகள் அல்லது பாதாம் சேர்க்காமல் கொடுங்கள்.....பாதாம் பருப்பு மூன்று வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு ஜீரணம் ஆக அதிக நேரம் எடுக்கும்....என் மகனுக்கு 3 வயது நாங்கு மாதங்கள்
நீங்கள் சாப்பிடுங்கள்...:-) கொஞ்சமாக..;-)

தங்கள் பதிவிற்கு நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றிங்க...உங்களைப்போல் நிறைய குறிப்புகள் கொடுத்திருக்கும் சீனியர்ஸ்
வாழ்த்துவதே...மகிழ்ச்சி...தான் எனக்கு

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி, என்னை இப்படி சீனியர்ஸ் லிஸ்டில் சேர்த்து விட்டீர்களே?? என் குறிப்புகள் அறுசுவையில் மிக மிக குறைவு என்று சொல்வேன். ஒரு சிறுகதை, என் சமையல் அறையில் இந்த இரண்டுமே இங்கு இடம் பெற்றுள்ளன. என் ப்ளாக்கில் நிறைய எழுதுகிறேன்.

அன்புடன்,
வாணி

இடியாப்பம் குறிப்புக்குப் பாராட்டுகள். ;) குட்டியர் ஸ்வீட்.

‍- இமா க்றிஸ்

இந்த ரெசிப்பி நல்லாயிருக்கும்னு பாஸ்கர் ரொம்ப ரசிச்சு சாப்பிடறதைப் பார்த்தாலே தெரியுது. அழகா சிரிக்கறான். ஊட்டி விடறது நீங்களா? இது என்னோட பேவரைட் அயிட்டம். இந்த எப்போதாவது சாப்பிடறது, குறைச்சலா சாப்பிடறது வேலையெல்லாம் இந்த டிஷ்ஷில் நிச்சயம் எனக்கு ஒத்துவராது. தினமுமே மூணு வேளையும் இடியாப்பம் மட்டும் இருந்தால் போதும் எனக்கு. ஆனால் வித் ஸ்வீட் காம்பினேஷன் ஒன்லி. இந்த குருமா,குழம்புன்னு காம்பினேஷன் எதுவும் பிடிக்காது. நீங்க சொல்லி இருக்கற மாதிரியும் செஞ்சுப் பார்க்கிறேன். நல்ல ரசனையா சமைக்கறீங்க.

இமா பாராட்டுக்கு நன்றிங்க..

தேவா.....எனக்கும்கூட இடியாப்பத்திற்கு இனிப்பு காம்பினேஷன் சாப்பிட்டால்தான் நிறைவாய் இருப்பதுபோல் தோன்றும்..:-)
மலேசியாவில் கிடைக்கும் "செந்தோல் " என்றால் எனக்கு கொள்ளை இஷ்டம்...நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா..
?
உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மலேஷியாவில் ABC, புபுர் சாச்சா, பீசங் கோரேங் எல்லாமே பிடிக்கும்னாலும் செண்டோல்தான் பர்ஸ்ட் சாய்ஸ். இங்கேயும் கிடைக்குது. ஆனாலும் மலேஷியா டேஸ்ட் இல்லை. அடுத்ததா உபி பெங்கா(மரவள்ளிக்கிழங்கு கேக்) ரொம்பவே பிடிக்கும். கவுனி அரிசியில் செய்ய்ற ந்யோன்யா குவேயும் பிடிக்கும். அதையெல்லாம் வீட்டிலேயே செஞ்சுடுவேன். செண்டோல் செய்ய என்னைக்குமே ஏனோ தோணல. நீங்க சொன்ன பிறகு செஞ்சுப் பாக்கணும்னு தோணுது. பால் கொழுக்கட்டை எப்பவும் வீட்டில் எல்லாருக்கும் பிடித்தமான இனிப்பு. அதனால எங்க வீட்டில் எல்லாருக்குமே செண்டோல் பிடிக்கும்.